சொல்லுங்கள் மகாத்மாவே

உன் அஹிம்சா மூர்த்தங்களின் அபிஷேகத்துக்கு எம் மக்களின் ரத்தம்தானா கிடைத்தது? உன் அதீத அன்பின் பிரார்த்தனைகளுக்கு எம் மரண ஓலமா மந்திரங்கள்? உன் பெருங் கருணையின் யாகத்துக்கு எம் உடல்களா சமித்துகள்?.. சொல்லுங்கள் மகாத்மாவே நீங்கள் அவதாரமா.. அரிதாரமா?.. காலின் கீழ் போட்டு மிதித்தவனிடம் ஏன் காவு கொடுத்தாய் உன் கிராம ராஜ்ஜியக் கனவுகளை? உன்னை நம்பி உன் பின் திரண்ட ஆவினங்களை எதற்காக ஒரு மாட்டு வியாபாரியிடம் விலை பேசி விற்றாய்?.. கொடு நரகமாக இருந்த சிறைச்சாலைகள் எல்லாம் நீங்கள் போர்க்களம் புகுந்ததுமே பூஞ்சோலைகளாகியது எப்படி? இடுப்பில் விலங்கு பூட்டி இழுக்க வைக்கப்பட்ட கல் செக்குகள் எல்லாம் காணாமல் போனது எப்படி? சிறையில் இருந்தபடியே நீங்கள் சுய சரிதம் எழுதிக் குவிக்க உங்களுக்கு எப்படிக் கிடைத்தன சித்திர எழுதுகோல்கள்..

View More சொல்லுங்கள் மகாத்மாவே

சொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களே

நாதுராம் கோட்÷ ஒரு மத வெறியன் ஒரு முட்டாள் மாபெரும் குற்றவாளி – மனிதருள் மாணிக்கங்களே நீங்கள் சொல்லுங்கள் – நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்அவனிடத்தில் நீங்கள் இருந்திருந்தால் – உங்கள் தாயும் மனைவியும் மகளும் கதறக் கதற உங்கள் கண் முன்னே கற்பழிக்கப்படுகிறார்கள் – முதியவர் தன் ஊன்றுகோலால் இருவரையும் எட்டித் தள்ளிவிட்டு, சற்று தொலையில் ஹூக்கா குடித்துக்கொண்டுகண்களில் மதம் மின்ன சற்றே களைப்புடன் சாய்ந்திருப்பவன் முன் சென்று நிற்கிறார்…

View More சொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களே

அதிகாரத்தின் முகமூடி

காந்தி தீவிர அரசியல்வாதி. அவர் ஒரு யதார்த்தவாதியும் கூட அவருடைய முக்கிய தாக்கம் கிறிஸ்தவம். அப்படி இருக்க அவரை எப்படி ஆழமான சூழலியலின் பிதாமகர் என சொல்லலாம்? அது அவருக்கு முழுக்க முழுக்க தகுதி இல்லாத ஒன்று. இப்படி காந்தியின் சூழலியல் சார்ந்த சிந்தனைகளாக முன்வைக்கப்படுபவை நிராகரிக்கப்படுகின்றன. காந்தியை குறித்து இந்துத்துவர்கள் வைக்கும் விமர்சனம் என்ன? காந்தியின் குரல் எந்த அளவு முக்கியத்துவம் கொண்டது?…. குஹா காந்தியை எத்தனை படோடபமாக முன்வைத்தாலும் அவர் உண்மையில் முன்வைப்பது நேருவைத்தான். நேரு எனும் அதிகார மைய அரசியல்வாதியின் அரசியலுக்கு குஹா அளிக்கும் ஒரு முகமூடிதான் காந்தி….

View More அதிகாரத்தின் முகமூடி

நேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2

கிழக்கு வங்க அகதிகளில் பெரும்பாலானோர் நாமசூத்திரர் எனும் தலித் வகுப்புகளை சார்ந்தவர்கள். அங்குள்ள வனவாசி சமுதாயங்களை சார்ந்தவர்கள். நேருவுக்கு இவர்கள் பெரிதாகப்பட்டிருக்க மாட்டார்கள். நேரு அரசாங்கம் கிழக்கு வங்க அகதிகளை வெறுப்புடன் நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ரசாக்கர்கள் கன்னியாஸ்திரீகளை கொன்றால் முகம் சிவக்க சினந்த நேருவுக்கு ரஸாக்கர்கள் தொடர்ந்து இந்துக்களை கொன்றும் சூறையாடியும் வந்தது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதை பாருங்கள். இதைத்தான் நேருவின் நாஸி மனநிலை என்றது… இந்த மனநிலை இன்றைக்கும் நீடிக்கிறது. நேருவிய நாளேடான தி இண்டு ஹிந்துத்துவர்களை கொன்ற போலீஸ் பக்ருதீன் கைதானதும் அவனது தாயார் குறித்த உருக்கமான கதையை அடுத்ததாகவும், அவனது காதல் கதையை அடுத்ததாகவும் வெளியிடுகிறது. கொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளுக்கு அங்கே இடமில்லை….

View More நேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2

நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1

இந்தியாவை பின்னாட்களில் கவியப் போகும் ஒரு பேரிருளைக் குறித்த முக்கிய முன் அறிவிப்பாக இந்த கடிதத்தை கருத வேண்டும். எந்த அதிகாரத்தையும் நாடியவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. எந்த அரசியல் சார்பையும் சார்ந்தவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. அவர் வெறும் தேசபக்தர். எளிமையான நேரடியான தேசபக்தர். அவர் மனது ஒரு விஷயத்தை தெளிவாக உணர்கிறது. பிழைக்கத் தெரியாமல் இறுதிவரை தன்னை பிணித்தொறுக்கிய நோய்க்கு மருந்துக்குக் கூட பிறரிடம் மன்றாடி வாழ்ந்த காலகட்டத்திலும் பாரத அன்னைக்கு கோவில் எழுப்ப விரும்பிய அந்த அப்பாவி தேசபக்தரின் வார்த்தைகளை கவனியுங்கள்….

View More நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1