நெருக்கடி நிலை யாருக்கு?

தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. ஆனால், 1975-77-இல் இந்திராவின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன?…..

View More நெருக்கடி நிலை யாருக்கு?

சோ: சில நினைவுகள் – 1

கிட்டத்தட்ட 46 வருடங்களாக என்னுடன் தொடர்ந்து நெருக்கமாக வருபவர் சோ. என் சிந்தனைகளை கருத்துக்களை ஆளுமையை இன்று நான் எழுதுவதை அனைத்தையுமே ஆக்ரமித்தவர் சோ… ஆரம்ப காலங்களில் அவர் எழுதிய வாஷிங்டனில் நல்லதம்பி போன்ற தொடர்கள் தி மு க வின் முட்டாள்களையும் ஊழல்களையும் கிழிப்பவையாக இருந்தன. வட்டம், மாவட்டம் என்று தோளில் ஆட்டுக்கள்ளன் துண்டுடன் இரண்டு தலைக்குப் பதிலாக மூளையில்லாத தலைகளைக் குறிக்கும் வகையில் இரண்டு வெறும் முட்டைகளுடன் கார்ட்டூன்கள் வரும். ஆரம்ப இதழ் துவங்கி கழுதை துக்ளக்கில் அட்டைப் படம் முதல் உள்ளே உள்ள கார்ட்டூன்கள் வரையிலும் இடம் பெறும்.எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதியை விமர்சிக்க சோ மறுத்து விட்டார். என்று இந்திராவை விமர்சிக்கும் சுதந்திரம் எனக்கு கிடைக்கிறதோ அன்று நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று சொல்லி விட்டார்…

View More சோ: சில நினைவுகள் – 1

எமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்

தனது கொள்கைக்கு நேர் மாறான ஜனசங்கத்தைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களிடம் உதவி கேட்க ஜெ.பியால் முடிகிறது. தாய்நாட்டிற்கு முன்னால் வேறு எதுவும் பெரியதில்லை என ஜெ.பியின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறார் வாஜ்பாய்…அடுத்த கிங்மேக்கரான மூப்பனார் முதல் இன்றைய தங்கபாலு மற்றும் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன்வரை எல்லோரும் நேரு, காந்தி பரம்பரைக்கு கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததைப் போல நடந்துகொண்டுள்ளனர்…

View More எமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்

நெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி

அவரைப் பார்த்து புன்னகைத்த அத்வானி, ‘எப்படி இருக்கிறீர்கள்? என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்’ என்றார். அதற்கு அந்த வயோதிகர், ‘எனக்கு 65 வயதாகிறது. அவர் (இந்திரா காந்தி) செய்வது எனக்கு அறவே பிடிக்கவில்லை. என்னால் இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாது. இதற்கு ஏதாவது செய்தாகவேண்டும் என துடிக்கிறேன். நான் இனியும் தொடர்ந்து வாழவிரும்பவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். நான் சாகத்துணிந்துவிட்டேன். நான் நேரே சென்று அவரை சுட்டுக்கொல்லவும் தயாராகவும் இருக்கிறேன்’ என்று கூறினார்.

View More நெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி