நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1

இந்தியாவை பின்னாட்களில் கவியப் போகும் ஒரு பேரிருளைக் குறித்த முக்கிய முன் அறிவிப்பாக இந்த கடிதத்தை கருத வேண்டும். எந்த அதிகாரத்தையும் நாடியவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. எந்த அரசியல் சார்பையும் சார்ந்தவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. அவர் வெறும் தேசபக்தர். எளிமையான நேரடியான தேசபக்தர். அவர் மனது ஒரு விஷயத்தை தெளிவாக உணர்கிறது. பிழைக்கத் தெரியாமல் இறுதிவரை தன்னை பிணித்தொறுக்கிய நோய்க்கு மருந்துக்குக் கூட பிறரிடம் மன்றாடி வாழ்ந்த காலகட்டத்திலும் பாரத அன்னைக்கு கோவில் எழுப்ப விரும்பிய அந்த அப்பாவி தேசபக்தரின் வார்த்தைகளை கவனியுங்கள்….

View More நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1

ஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க!

ஐயா இளவரசரே, உங்கள் பாட்டியோ, உங்கள் தந்தையோ கொலை செய்யப்பட்டதற்கு இந்த நாடே கண்ணீர் விட்டு அழுதது. உங்களுக்குத் தெரியாது, பாவம், நீங்கள் அப்போது சின்ன பாப்பா. இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்த குற்றவாளிகள் யார் என்பதையெல்லாம் காவல்துறை, புனலாய்வுத் துறை இவை தூண்டித் துருவி கண்டுபிடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டு விட்டது… தம்பி! இது என்னவோ பள்ளிக்கூடத்து நாடகம் இல்லை. இது ஒரு பெரிய நாட்டின் வரலாற்று நிகழ்வு. இந்த அரசியலில் வெற்றி, தோல்வி, நாட்டின் முன்னேற்றம், எதிர்கால திட்டங்கள் இவை அனைத்துமே உள்ளடங்கியிருக்கின்றன…. உங்களையெல்லாம் மூட்டை முடிச்சோடு வண்டி ஏற்றிவிட மக்கள் தயாராகி விட்டார்கள். பாவம், வீட்டுக்குப் போய், உங்கள் அம்மா, அக்கா குடும்பத்தாருக்கு நல்ல நாடகமாகப் போட்டு நடித்துக் காண்பியுங்கள். அவர்களாவது மனம் மகிழ்ந்து இருக்கட்டும். இந்த நாடும் ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விடும்.. .

View More ஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க!

பிரார்த்தனைகளின் சங்கமம்

அல்லி தடாகம், அழகான பூச்செடிகள், அருமையாகப் பராமரிக்கப்படும் புல்வெளி என்ற அந்தச் சூழ்நிலையை ரசித்த வண்ணம் வெளியே வரும் நம் கண்ணில் படுவது, உள்ளே வரும்போது பார்க்கத் தவறிய, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பாறையும் அதில் நேர்த்தியாகப் பொருத்தப் பட்டிருக்கும் பட்டயமும்தான்.

View More பிரார்த்தனைகளின் சங்கமம்