என்னுள்ளில் மார்கழி

மேலப்பட்டி கிருஷ்ணன் கோவிலில் பூஜை முடித்து, அங்கிருந்து பஜனைப் பாடல்களோடு துவங்கும்குழு, நேராக தார் ரோடின் வழியாகவே ஊர் எல்லை வரை சென்று, அங்கிருந்து ஊருக்குள் நுழைந்து, பின் தெரு வழியாக வந்து, வழியில் சிறு சிறு கோவில்களிலெல்லாம் நின்று பூஜை முடித்து, மறுபடியும் பாடிக்கொண்டே, சன்னதி தெருவைத் தாண்டி ஓடைப்பட்டியில் நுழைந்து.. முத்தியாலம்மன் கோவில் தாண்டி, மறுபடியும் கோவில் வந்துசேரும்போது வெளிச்சம் வந்திருக்கும். பல்லாண்டும், பாவையும் பாடி மறுபடி ஆராதனை முடித்து ப்ரசாத விநியோகம். சிறுவர்கள் கூட்டம் அதிகமிருக்கும். பெரும்பாலும் அரையாண்டுத் தேர்வு முடிந்திருக்கும்… ஹேமலதா மட்டுமல்ல, வகுப்பிலிருக்கும் எல்லா பெண் நண்பர்களும் மார்கழியில் கூடுதல் அழகாகி விடுவார்கள். நட்பு கூட இன்னும் அழகாகி விட்டது போல்தான் இருக்கும்…

View More என்னுள்ளில் மார்கழி

அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்

அரபு தேசங்களான பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கதார், சவுதி அரேபியா, துருக்கி, அரபு எமிரேட்ஸ் நாடுகளிலிருந்து ஒன்றுகூடி ஓர் ஹிந்து ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது உண்மையிலேயே பரபரப்பு செய்தி தான்.. பல இஸ்லாமியர்கள் 7வது நூற்றாண்டில் கடைபிடித்த கொள்கைகள் அப்படியே 21வது நூற்றாண்டிலும் கடைபிடிப்பது நாகரீகம் இல்லை என்று தெளிவு பெற்று வருகிறார்கள். எப்படி இவற்றை வெளிப்படையாக அறிவிப்பது என்பதில் தயக்கமாக உள்ளனர். பிரசாந்தி நிலயத்திற்கு வந்த அரேபிய முஸ்லீம்கள் அப்படிப் பட்டவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்கள்….

View More அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்

அஞ்சலி: பாபா உனக்கேது மரணம்?

Help Ever Hurt Never… Love All Serve All” என்ற வாசகங்கள் மட்டுமே என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்பால் ஈர்த்தது… பசியோடிருப்பவனுக்கு ஆன்மிகம் எதற்கு? அவனுக்கு உணவைத் தா… கடவுளுக்கு ஏது தீட்டும் சடங்கும்? கடவுளுக்கு ஏது மதமும் சாதியும்?… பாபா உனக்கேது மரணம்?…

View More அஞ்சலி: பாபா உனக்கேது மரணம்?

பணிப்பொன்

ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

View More பணிப்பொன்

நம்மைத் தேடி வரும் இறைவன்

நமக்கேற்ற இறைப்பணி ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைச் செய்யும்போது அதில் சந்தேகம் மட்டும் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அப்படிச் சந்தேகம் வந்தால் அதைப் போக்குவதிலும் சற்றே காலவிரயம் ஆகலாம்….

கடவுள் எங்கும் உள்ளார், அருள் எப்போதும் உண்டு என்று நாம் கேள்விப்பட்டாலும், அது நமது அனுபவமாக ஆகும்வரை நமக்குப் பல விதமான சந்தேகங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அவை அனைத்தையும் தீர்ப்பதுபோல் நிகழ்வுகள் நடக்கும்போது, நமது சந்தேகங்கள் ஆச்சரியமாக மாறலாம். நல்ல வேளையாக எனக்குச் சந்தேகங்கள் பெருத்த அளவில் இல்லாததாலோ என்னவோ, அனுபவங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

View More நம்மைத் தேடி வரும் இறைவன்

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2

ஒரு மனிதன் தனக்காகவென்று தனியாகச் செய்கின்ற சாதனமன்று காயத்ரீ. ‘நம்முடைய அறிவை எப்பொருள் தூண்டுகிறதோ’ என்று அது பன்மையில் துவங்குகிறது. ‘அப்பெரிய பொருளை தியானிப்போமாக’ என்று பன்மையில் முடிகிறது. ஆத்மசாதகன் தனித்திருந்து சாதனங்கள் பயிலுகின்ற இடத்தும் எண்ணத்தால் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்துக் கொள்ளவேண்டும் … புறத்திலுள்ள சூழ்நிலை அறிவைத் தூண்டுவதற்கு ஏதுவாகிறது. தூண்டுதல் உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரண்டு நிலைகளிலும் நிகழ்கிறது.

View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2

கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை

இலங்கையில் தேராவாத பௌத்தம் இனவெறியாக மாறித் தமிழர்களைக் கொன்றுபோடுகிறது. ஆனால், அங்கிருக்கும் ஒரு துறவியை இந்துமதம் அன்பினால் கவருகிறது… “ஹிந்து மதத்தின் மீது எனக்கு ஒரு ரகசிய ஈர்ப்பு ஏற்பட்டது. நமக்குப் பிடித்தமான ஒன்றில் லயித்து, அதனோடு ஒரு உறவை வளர்க்கும் ஆர்வமானது அடிப்படையான மனித இயல்பு. என்னைக் கவர்ந்தாள் காளி…கிருத்துவ மதத்தை முற்றிலும் கைகழுவினேன்.”

View More கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை

ஆஸ்திரேலிய இந்துக் குழந்தைகளுக்கான ஒருநாள் முகாம்

ஆஸ்திரேலிய இந்து இளைஞர் அறக்கட்டளை (Hindu Youth Foundation) குழந்தைகளுக்கான பகல்நேர முகாம் ஒன்றை 2009 ஜனவரி 10ம் நாளன்று நியூ சௌத்வேல்ஸில் உள்ள நார்த் கார்லிங்போர்டில் நடத்தியது. புராதனமான இந்துக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தமது குழந்தைகளும் பெற்றுச் சிறக்கவேண்டும் விரும்பிய பெற்றோர்களின் முனைப்பால் இந்த முகாம் உருவானது.

View More ஆஸ்திரேலிய இந்துக் குழந்தைகளுக்கான ஒருநாள் முகாம்