பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்

பி.ஆர்.ராஜமய்யர் வெறும் 26 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தார் என்ற மாபெரும் வரலாற்றுத் துயரம் இந்தப் புத்தகத்துடன் என்றென்றைக்கும் இணைந்து இதற்கு மேலும் ஒரு காவியத்தன்மையை அளித்து விடுகிறது. காதல் மனங்களின் துள்ளல், குயுக்தியும் சிறுமையும் கொண்ட பாத்திரங்களின் நடத்தைகள், வலிந்து புகுத்தப்பட்ட செயற்கைக் கதைப்போக்கு சம்பவங்கள், இறுதியில் வேதாந்தத்தை நோக்கிய திருப்பம் அனைத்தின் பின்னும் அந்த வாழ்க்கையின் துயரத்தின் சுமை படிந்துள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை… அவ்வளவு சிறுவயதில் ஷெல்லி, பைரன், கீட்ஸ், கம்பர், தாயுமானவர் என்று உலகப் பெருங்கவிஞர்களின் கவிதையில் ஆழ்ந்து தோய்ந்த ஒரு மனம். தன் கலைத் திறனால் சிகாகோவையும் லண்டனையும் மூச்சடைக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்ட ஒரு தமிழ் மனம்…

View More பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்

மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்

உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் மகாபாரதம் எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த உணர்வு. ஆழ்ந்த பித்து என்றே சொல்லலாம்…மகாபாரதத்தை மூலமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகள், எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு soft corner உண்டு. அப்படிப்பட்ட எல்லா இலக்கிய/கலை முயற்சிகளையும் ஒரு பட்டியல் போட வேண்டும் என்று எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசையும் உண்டு. இவை சுருக்கங்களாக இருக்கலாம், இந்திய மொழிகளில் பாரதத்தைக் கொண்டு போகச் செய்த முயற்சிகளாக இருக்கலாம், மறுவாசிப்புகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு பட்டியல் போடும் முயற்சியே இந்தக் கட்டுரை…

View More மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்

அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2

அவரது உரைநடை எவ்வகையிலும் அடங்காதது. கவிதை, சங்கீதம், ஓவியம், சிற்பம் எல்லாமாகவும் தோற்றமளிக்க்க் கூடிய மாயத்தைத் தன்னுள் பொதிந்து வைத்திருப்பது… நவீன இலக்கிய பிரதிகளுக்கு இருந்தாக வேண்டிய வரலாற்று பிரக்ஞை, சமூக பிரக்ஞை, கலாசார பிரக்ஞை ஆகியவை லாசரா எழுத்தில் மிகக் குறைவாக இருக்கிறது, சமயங்களில் இல்லாமலே போய்விடுகிறது…கண்கள் பிரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாமிருதம் நம்மைக் கேட்கக் கூடும் – ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா?…ஒரு கலைஞர் என்ற வகையில், லா சராவின் இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலைவணங்கியே ஆக வேண்டும்…

View More அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2

அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1

இந்தப் பாத்திரங்கள் பிரக்ஞை நிலையில் வெறி பிடித்தது போல நடந்து கொள்வதால் தான், சாதாரண காட்சிகள் நாடகீயமாக ஆகின்றன, காவிய ரூபம் கொள்கின்றன. சாதாரணப் பெண் சன்னதம் வந்த நிலையில் காளியாக மாறுவது போல… கடற்கரை மணலில் கால்பட்ட இடமெல்லாம் சங்கும் சிப்பியும் இடறுவது போல, எழுத்தெங்கும் படிமங்கள் இறைந்து கிடைக்கும் வெளி லாசராவின் எழுத்து… மீண்டும் மீண்டும் ஒருவித லயத்தில் வரும் உச்சாடனங்கள் போன்ற சொற்கள் – மந்திரமாகின்றன… உன்னதமாக்கப் பட்ட காமம் தான் லா.ச.ரா படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது. இந்த நிலைக்கு வருவதற்காக தத்தித் தாவி மோதும் முயற்சியே அவரது சிருஷ்டிகர செயல்பாட்டின் பல வடிவங்களும்…

View More அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2

மனித முயற்சிக்கும் அப்பாற்பட்ட காவியம் ஒன்றைப் படைப்பதற்கு எது நடந்தாலென்ன என்றதொரு துறவு மனமற்று, சுற்றுமுற்றும் பார்த்து உள்ளம் கனிந்து உருக வேண்டிய நிகழ்ச்சி ஒன்று தேவைப்பட்டது. அதுவும் வால்மீகி முனிவருக்குத் தானாகவே அமைந்தது… ராம ராஜ்யத்தில் அதிகாரிகள் மட்டுமல்லாது மக்கள் அனைவருமே ராமரைப் போலவே நீதி, நேர்மையுடன் வாழ்வதால் அரசு என்றோ அரசாங்கம் என்றோ ஒரு அதிகாரத்துடன் கூடிய அமைப்பு கூடத் தேவை இல்லாத நிலை உருவாகும்… அரசு அலுவல்களின் ஒரு பகுதியாக தானம் செய்யவேண்டிய அதிகாரிகளுக்கு, வசிஷ்ட மகாமுனிவர் அவர்கள் எத்தகைய மனப்பான்மையுடன் தானம் அளிக்கவேண்டும் என்று கூறுகிறார்…

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2

நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்

பல இடங்களில் கிட்டத்தட்ட கண்ணீர் உகுத்துவிடுவேனோ என்ற நிலைக்கு என்னைக் கொண்டு சென்றது கதை. ”சுயத்தை மற்றும் வாழ்க்கையைத் தேடும்” நாஞ்சில் நாடனின் முயற்சி முதல் நாவலிலேயே சாத்தியமாகியிருக்கிறது. .. முன்னணி இலக்கிய அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதிவாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இந்த விருது வழங்கப் படுவது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது…

View More நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்

ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

இந்த இரண்டரை நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதையின் பல வீச்சுக்களையும், பரிமாணங்களையும் வண்ணத் தீற்றல்களாக அனுபவிக்க முடிந்தது… விவாதம் சூடாகி, உரத்த குரல்கள், கூச்சல்கள் ஒருசில சமயங்கள் எழுந்த போதும்… சில இலக்கிய விவாதங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதுவும் ஒரு நல்ல திகில் அனுபவமாகவே இருந்தது… இந்தக் கருத்துக்களை ஏற்கனவே பலமுறை ஜெ.மோவே எழுதியுள்ளார் என்றாலும், இத்தகைய தொகுப்பு நோக்கில் நேரடியாக, வாய்மொழியாக அதனை விளக்கியது சிறப்பாக இருந்தது…

View More ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3

ஒரு ஜப்பானிய கவிதை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் அந்த க்ஷணத்தில் படிக்கப் படிக்க, அதே தன் நடனத்திற்கான பதமாக எடுத்துக்கொண்டு ஒருவர் ஆடுவார். ஆடமுடியும் என்பது யார் சிந்தனையிலும் உதிக்காத ஒன்று. எல்லோருக்கும் எதிர்பாராது கிடைத்த பரிசு போல ஒரு குதூகலம்… இவை எல்லாவற்றையும் மீறி எழும் நாம் உள்ளூர உணரும் மாயம் (mystique) தான் நடனம். அந்த மாயம் (mystique) அடவுகளிலோ, அபிநயங்களிலோ, முத்திரைகளிலோ, ஜதிகளிலோ இல்லை. சங்கீதத்திலும் இல்லை. இவையெல்லாவற்றையும் தரும் நடன கலைஞரிடம் தான் இருக்கிறது என்றால் அது சரிதானா?..

View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3

நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்

ஆனாலும், இன்னமும் வல்லிக்கண்ணனைப் புரிந்து கொண்டதாகச் சொல்லமுடியவில்லை. “கோயில்களை மூடுங்கள்” என்னும் பிரசார சிறுபிரசுரத்தில் காணும் வல்லிக்கண்ணனைத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து மேலே ஈ.வே.ரா.விலிருந்து கருணாநிதி வரை அத்தனை திராவிட இயக்கத் தலைவர்களையும் 1963-லேயே கிண்டலும் கண்டனமுமாக, எங்கே இடம் கிடைக்கும், எழுதவேண்டுமே என்று எழுதிய வல்லிக்கண்ணன்தானா, ஈ.வே.ரா, சின்னக்குத்தூசியிடம் பாராட்டு பெற்ற வல்லிக்கண்ணன் என்பதும் தெரியவில்லை. அந்த வல்லிக்கண்ணன், 40 வருட காலம்…

View More நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்

வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள் ….

View More வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்