அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்

அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து அரசியல் பொறுப்புணர்வுகள் மக்களை நடக்கவைக்கவேண்டும். இந்தப் புத்தகம் அப்படியான விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியிலேயே எழுதப்பட்டுள்ளது.. அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது… இந்தப் புத்தகத்திற்கு அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஜே.சாய் தீபக் ஆகிய இரண்டு சிந்தனையாளர்களும் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளனர். புத்தகத்தின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசும் அந்த இரண்டு முன்னுரைகளையும் கீழே தருகிறோம்..

View More அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்

அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?

உண்மையான எதிரிகளைப் பந்தாடினால்தான் இந்த உள் முரண்கள் விலக வழி பிறக்கும். இது தொடர்பாக மத்தியிலிருந்து எந்தவொரு பெரிய முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. மத்திய பாஜக செய்யும் ஐந்தாவது தவறு இது… இந்த விளையாட்டுக்கு அண்ணாமலை தயாராக இல்லை. இது மிகவும் நியாயமான விஷயம் தான். தலைமைப் பதவிக்கு எந்தவித அரசியலும் செய்யாமல் நேரடியாக வந்தவர் அப்படியான நிமிர்வுடன் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை… இதில் ஒரே ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால், கூட்டணி பற்றிய விவாதம் உள்ளரங்கில் நடக்கவேண்டியது. எதனால், யாரால் பொதுவெளிக்கு வந்தது?…

View More அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?

திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடு

தமிழக அரசியல் வரலாறு குறித்த முக்கியமான நூல் சுப்பு எழுதிய திராவிட மாயை (2010) நூலின் ஆங்கிலப் பதிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இன்றைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாஜக மையமாகப் பேசக்கூடிய விஷயங்களுக்கான கருத்தியலை 10-12 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்ஹிந்து இணையதளம் வளர்த்தெடுத்து வந்திருக்கிறது..

View More திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடு

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அண்ணாமலை: ஒரு பார்வை

கடந்த 10 வருடங்களில் இலங்கைத் தமிழர் பிரசினை குறித்து இவ்வளவு தீர்க்கமான, விசாலமான, ஆழமான அரசியல், வரலாற்றுப் புரிதல்களை கொண்டதாக, இந்திய தேசிய நலனையும் ஈழத்தமிழர் மீது உண்மையான, பாசாங்கற்ற பரிவையும் ஒருங்கே உள்ளடக்கியதாக இப்படி ஓரு நேர்மையான பேச்சு தமிழ் மண்ணில் பேசப்பட்டிருக்கிறதா?..

View More முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அண்ணாமலை: ஒரு பார்வை

பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்

ஆக, பல்லக்கு தமிழக அரசியல் களத்தில் சூடான விவாதப் பொருளாகி விட்டது. அச்சொல் பர்யங்க – பல்லங்க என்ற சம்ஸ்கிருத மூலம் கொண்டது. அதற்கான பழைய சொல் சிவிகை. சம்பந்தர் அழகிய சிவிகையில் அமர்ந்து காட்சி தருவதையும், ஏறி இறங்குவதையும் ஏகப்பட்ட இடங்களில் சேக்கிழார் பரவசத்துடன் வர்ணித்துச் செல்கிறார். அறத்தின் பயன் இது என்று நீட்டி முழக்கிச் சொல்லவேண்டாம்; சிவிகையில் அமர்ந்திருப்பவனையும் தூக்குபவனையும் பார்த்தாலே போதுமே என்கிறது குறள்…

View More பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்

சிங்கக்கொடி நாட்டில் சிங்கம்: இலங்கையில் தலைவர் அண்ணாமலை

அண்ணாமலையின் பயணம் அரசுமுறைப் பயணம் அல்ல. இக்கட்டான நிலையில் இருக்கும் இலங்கையில் என்ன நடக்கிறது என்று நேரில் அறிந்து வரவும், ஆறுதல் சொல்லவும், அபயக்கரம் நீட்டவும். அதன் பின்னான அரசியல் ஆக்கங்களைச் செய்யவும் ஓர் அருமையான வாய்ப்பாக இந்தப் பயணம் அவருக்கு அமைந்திருக்கிறது. இப்படி ஒரு அழைப்பை திமுக ஏற்படுத்திக் கொள்ள முடியாதா? உள்மனது சொல்லுகிறது, முடியாது. அங்கே அவர்களுக்கு வரவேற்பு கிடைக்குமா அல்லது வேறு ஏதும் கிடைக்குமா என்பது எனக்கு ஐயமாக இருக்கிறது..

View More சிங்கக்கொடி நாட்டில் சிங்கம்: இலங்கையில் தலைவர் அண்ணாமலை

ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?

ஊழலற்ற நிர்வாகத்துக்காக, நல்ல சாலைகள் கிடைத்திட, நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட, தன் வசதிக்கேற்ப மொழிவெறி, சாதிவெறி, மதவெறியைத் தூண்டி அதில் குளிர்காயாமல் இருக்க… ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது? ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது? இத்தேர்தலில் பாஜக வெல்லுமா?…

View More ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?