தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்

வியாளம் – மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. எஸ்.வேலாயுதம் அந்தக் கலைஞனின் பெயர்…. இளங்கலை வரலாறு படிக்கும் மாணவருக்கு கருஞ்சுழி நாடகத்தில் ஒளிப் படிமங்கள் வாழ்க்கையின் பாதையை நிச்சயித்து விடுகிறது. அலைமோதும் மன நிலையில் பல உணர்வுகள் கொட்டி அலைக்கழிக் கின்றன. மாட்டுத் தொழுவத்தில் தாத்தாவின் முறுக்கேறிய அழுகையில் புதிதாகப் பிறக்கும் பாடல்களின் குரல் வலிமை தனக்குக் கிடைகாதா என்று ஏங்கி தொழுவத்தைச் சுற்றிச் சுற்றி வந்ததாகச் சொல்கிறார் வேலாயுதம். க அபூர்வமான சோகத்தின் கனம் நிறைந்த கணங்கள் அவை… அவர் பயிற்றிவிப்பாளராகவே இன்றோ நாளையோ என்ற தவிப்பிலேயே வாழ்ந்தவர். வாழ்ந்தவரா, சாவை ஒத்திப்போடும் தன் வல்லமையைச் சோதித்துக்கொண்டிருந்தவரா? நாடகத் துறையில், இளம் முனைவர் பட்டத்துக்கான மாணவராக மறுபடியும் ஒரு முயற்சி….

View More தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்

புதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்

“பின்னையும் அந்தக் கோவிலிலே நடத்தின ஆபாசத்தைக் காகிதத்திலே எழுத முடியாது. வாயினாலேயும் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் நடப்பித்தவர்கள் என்ன பலனை அனுபவிப்பார்களோ நான் அறியேன். ஆனால் இன்றைய தினம் தமிழரெனப்பட்டவர்களுக்கு எல்லாம் லோகாஷத்தமானமாய்ப் போறாப் போலே இருந்தது. பாதிரிகளுக்கும், தமிழ்க் கிருத்துவர்களுக்கும், துரைக்கும், துரை பெண்சாதிக்கும் ஆயிசிலே காணாத மகிழ்ச்சியாய் இருந்தார்கள். இனிமேல் அனுபவிக்கப் போறத் துக்கத்தினை யோசனை பண்ணாமல் இருந்தார்கள்.”

View More புதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்

மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.

ஜனநாயகத்தில் தேர்தல்கள் வகிக்கும் பேரிடத்தை உணர, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைக் காண வேண்டும்… புத்ததேவை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துவிட்ட மக்களுக்கு, பாஜகவை திரும்பிப் பார்க்கவும் நேரமில்லை… மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும். அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டுவிட்டன… ராகுலின் பிரசாரமே இடது முன்னணிக்கு இறுதிநேர ஆசுவாசமாக அமைந்தது… பாஜக, ஜெயலலிதாவை எதிர்த்தும் பிரசாரம் செய்திருக்க வேண்டும்…

View More மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.