சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்

இல்லறத்தில் இருப்பவர்கள் மோக்ஷமே வாழ்வின் இறுதியான நோக்கம் என்பதை மறவாமல் இருக்கவும், அதற்காக படிப்படியாகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவுமே ஐயப்ப தெய்வ வழிபாடு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆணும் பெண்ணுமாய், கணவன் மனைவியாய், தாயும் தந்தையுமாய் குடும்பமாய் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோலம் எல்லா கோயில்களிலும் நாம் காணுவது. அது இல்லற வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவது. ‘ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்’ எனும் துறவியல் தத்துவத்தைக் காட்டுவது சபரிமலை ஐயப்பன் எழிற்கோலம்.. முறைப்படுத்தப்பட்ட காமம் ஆக்கசக்தியாகிறது. கட்டுப்படுத்தப்படாத காமம் அழிவுசக்தியாகிறது. ஆண்கள் உடலையும் மனத்தையும் காமத்தையும் வெல்லும் பயிற்சியாகவே ஐயப்ப விரதம் இருக்கிறது. இது ஆண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. (மாதவிடாயுள்ள பருவத்தில் இருக்கும்) கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களுக்கென விரதங்கள், வழிபாட்டு முறைகள் – விசேஷமாகப் பெண்களுக்கே உரியனவாக – நமது பண்பாட்டில் பல உள்ளன. அதுவே அவர்கள் மனக்கட்டுப்பாட்டுக்குப் போதுமானது…

View More சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்

எழுமின் விழிமின் – 22

“ஒவ்வோர் இயக்கமும் தனக்கே உரிய ஒரு சிறப்புத் தன்மையினால் வெற்றி அடைகிறது. அது வீழ்ச்சி அடையும் போதே பெருமைக் குரிய அதே சிறப்புத் தன்மை அதனுடைய பலவீனத்துக்கும் முக்கியமான காரணமாக ஆகி விடுகிறது. புத்த பகவான் – மாந்தருள் மாணிக்கம், அசாதாரணமான ஒற்றுமை நிர்மாண சக்தி வாய்ந்தவர். இதன் மூலம் அவர் உலகமே தம்மைப் பின்பற்றும் படி செய்தார். ஆனால் அவரது சமயம் மடாலயத் துறவு வாழ்க்கை நிலையை அடிப்படையாகக் கொண்ட சமயமாகும். ஆகையால் இந்த சமயத்தில் பிக்ஷுவின் ஆடையைக் கூட மதித்துப் போற்றும் ஒரு தீய விளைவு ஏற்பட்டது. மடாலயங்களில் துறவியர் கூட்டம் கூட்டமாகக் கலந்து வாழும் முறையை முதன்முதலில் புத்தரே ஏற்படுத்தினார். ஆனால் அந்த மடங்களில் ஆண்களை விட பெண்களுக்குத் தாழ்ந்த நிலை தராமலிருக்க அவரால் முடியவில்லை. மடத்துத் தலைவிகள் எவ்வளவு உயர்ந்தவரானாலும் சில ஆண்தலைவர்களது அனுமதியின்றி எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஏற்பாடு தற்காலிகமாக புத்த சமயத்தின் ஒற்றுமையை உறுதிப் படுத்தியது என்றாலும் அதன் நீண்ட கால விளைவுகள் குறை கூறிக் கண்டிக்கத் தக்கதாகி விட்டன!”

View More எழுமின் விழிமின் – 22