சாதி அரசியல் செய்கிறாரா மோதி?

“மோதியை எப்படி வேண்டுமானாலும் எதிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் எனது சாதியை வைத்து, கீழ் சாதிகளில் பிறக்க நேர்ந்து விட்ட மக்களை (நீசீ ஜாதி மே பைதா ஹுயே லோக்) அவமதிக்காதீர்கள்” என்று மோதி பதிலடி கொடுத்தார்.. பிரியங்கா நேரடியாக சாதியைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லாத போது, மோதி வலிந்து இதில் சாதியை நுழைக்கிறார் என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. “நீச்” என்ற சொல் உடனடியாக ஹிந்தி பேசும் பாமர ஜனங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு எப்படிப் பட்டது என்பதை மேல்தட்டுகளிலேயே புழங்கிய பிரியங்கா அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், மக்களோடு மக்களாக புழங்கிய மோதி உடனடியாக அறிந்து கொண்டு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்…

View More சாதி அரசியல் செய்கிறாரா மோதி?

உத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்

2004ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை மத்தியில் ஆட்சியில்
இருக்கின்ற கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. 2004ல் கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றி உள்ளார்களா என்பதைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால் இவர்களின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும். விலைவாசி
உயர்ந்து கொண்டே போகிறது, விலைவாசியைக் குறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதைப் பற்றி ராகுல்
காந்தி விளக்கமளிக்க வேண்டும்.

View More உத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்

காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை

தீபிகா படுகோன் இவரைத்தான் இளைஞர்களுக்கான மிகச்சிறந்த முன் உதாரணம் என்றார். அழகிய சிவந்த தோற்றம். வழு வழுப்பான கன்னங்கள். அறிவாளி என்று பறை சாற்றும் கண்ணாடி அணிந்த பார்வை. நேரு – இந்திரா – ராஜீவ் என்ற அரச பாரம்பரியம். நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதற்கொண்டு எல்லோருடைய பாராட்டும் புகழ்ச்சியும் சொரியப் படும் ஆளுமை. ராகுல் காந்தியை ஏறக்குறைய எல்லோருமே பிரதமர் ஆவார் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த பிம்பத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர் யார்?

View More காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை