ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட வரலாறு காணாத போராட்டம் அதன் இலக்கை எட்டிவிட்டது. ஜனநாயகத்தில் மக்கள் சக்தியே மதிப்பு மிக்கது- இறுதியானது என்பதும், சட்டங்களுக்காக மக்கள் அல்ல- மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் போராட்டக் களத்தில் இடையிடையே ஒலித்த தேச விரோத கோஷங்களும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களும், இந்தப் போராட்டம் குறித்த மீள்பார்வையை அவசியமாக்கியுள்ளன.

View More ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை

இரக்கமற்ற இளஞ்சிவப்பு

வாழ்நாள் முழுவதும் விவசாயிக்காக உழைத்துக் களைத்த மாடுகளே கசாப்புக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இறைச்சி ஏற்றுமதியின் புள்ளிவிவரத்தை கூட்டி இருக்கின்றன. இது ஒருவகையில் சுய அழிவே ஆகும். இந்தியாவின் பெருமிதமிக்க பாரம்பரிய மாட்டு ரகங்கள் தற்போது அருகி வருகின்றன. இளஞ்சிவப்புப் புரட்சி அதன் உச்சத்தை தொடும்போது, நாட்டில் அடுத்து வெட்டுவதற்கு கால்நடைகளே மீதம் இருக்காது. ஏனெனில் இறைச்சிக்காக மாடு வளர்ப்பது நமது நாட்டில் இன்னும் தொழில்ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை… நன்றியற்ற மனிதகளாகிய நாம் சூழ்நிலைக் கைதிகளாகி, அடிமாடுகளை கசாப்புக்கு அனுப்பும் வரை, ஜல்லிக்கட்டு நடத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுவே நீதிபதிகள் மறைமுகமாகக் கூறியுள்ள கருத்து…

View More இரக்கமற்ற இளஞ்சிவப்பு