கலிதோஷம் போக்கும் கந்தபுராணம்: நூல் வெளியீடு

முருகனின் விரத நாட்களில் கந்தபுராணம் முழுவதும் 10,500க்கும் மேல் உள்ள பாடல்களை பாராயணம் செய்துவந்தனர் நமது முன்னோர்கள். இன்றைய நிலையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் உள்ள பாடல்களை பாராயணம் செய்வது அரிதாக உள்ளது. எனவே கந்தபுராண பாராயணத்தை மீள் எழுச்சி செய்யும் நோக்கில் அனைவரும் பாராயணம் செய்வதற்கு வசதியாக 351 பாடல்களாக சுருக்கி, கலிதோஷம் போக்கும்கந்தபுராணம் என்ற இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது…

View More கலிதோஷம் போக்கும் கந்தபுராணம்: நூல் வெளியீடு

திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடு

தமிழக அரசியல் வரலாறு குறித்த முக்கியமான நூல் சுப்பு எழுதிய திராவிட மாயை (2010) நூலின் ஆங்கிலப் பதிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இன்றைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாஜக மையமாகப் பேசக்கூடிய விஷயங்களுக்கான கருத்தியலை 10-12 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்ஹிந்து இணையதளம் வளர்த்தெடுத்து வந்திருக்கிறது..

View More திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடு

பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள் : வீர சாவர்க்கர் நூல் வெளியீடு

வீர சாவர்க்கர் எழுதிய முக்கியமான வரலாற்று நூல் பத்மன் அவர்களின் புதிய மொழிபெயர்ப்பில் விஜயபாரதம் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.. பாரதத்தின் வரலாற்றை ஆழ்ந்து பயின்றவர் வீர சாவர்க்கர். அவர் எழுதிய “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு.தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர்…

View More பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள் : வீர சாவர்க்கர் நூல் வெளியீடு

சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

தமிழகத்தை வாழ்விக்க வந்த  தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 – 1985).  சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது.  யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள  ‘வேதாந்தம் தந்த வீரத்துறவி – சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு’ என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது.  மூன்று பாகங்களாக,  1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும்  விரிவாக இந்த நூல் விளக்குகிறது…

View More சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே

திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது.. மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.. வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூல் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது…

View More திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே

தமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு

தடாகமலர் பதிப்பகம் வீர சாவர்க்கர் எழுதிய இரண்டு புத்தகங்களைத் தமிழில் வெளியிடுகிறது. இந்துத்துவத்தின் அடிப்படைகள் (தமிழில்: எஸ்.ராமன்) மற்றும் அந்தமானிலிருந்து கடிதங்கள் (தமிழில்: ஓகை நடராஜன்). முன்பு வெளிவந்த 1857 முதல் சுதந்திரப் போர் அல்லது எரிமலை என்ற புத்தகத்தையும் இப்பதிப்பகம் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. மேலும் விவரங்கள் கீழே…

View More தமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு

வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு

தொல்லியல் ஆராய்ச்சியாளரும் அறிஞருமான டாக்டர் ஆர்.நாகஸ்வாமி எழுதிய “Tamil Nadu – The Land of Vedas” என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 12-ம் தேதி சென்னையில் நடந்தது. “தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தான். சிறப்பு வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டிற்கு வேதத்தின் பங்களிப்பு அளவிலடங்காது. என்னுடைய இந்த நூலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தில் தமிழகத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் வேதங்கள் ஆற்றிய பங்கை தமிழ் இலக்கியங்களின் சான்றுகள் மூலமாக நிறுவியுள்ளேன். புறநானூறு முதற்கொண்டு சங்ககால இலக்கியங்களில் ஆரம்பித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆராயந்து சொல்லியிருக்கிறேன். இரண்டாம் பாகத்தில் கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள் மூலம் தமிழகத்துக்கு வேதத்தின் பங்களிப்பையும் நிறுவியுள்ளேன். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும் ஆதாரங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை” என்றார் டாக்டர் நாகஸ்வாமி….

View More வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு

ஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழா

இன்று (12 ஜூலை 2014) ‘ஆழி பெரிது’ நூல் நண்பர்களின் ஒரு சிறிய…

View More ஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழா

மறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு

சென்னை திருவான்மியூரில் நடைபெறும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து அரங்கில் பா.ஜ.க.…

View More மறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு

ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு

கடந்த பிப்ரவரி 19 முதல் 24 வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின்…

View More ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு