தெஹல்கா பாலியல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்

தங்கள் வாழ்க்கை மற்றும் உடல்களை தாமே அழுத்தந்திருத்தமாக அடக்கியாளும் உரிமையும் ஆற்றலும் பெற வேண்டி பெண்கள் மேற்கொள்ளும் கடுமையான முயற்சி நிச்சயமாக அரசியல் தன்மை உடையது தான். ஆனால் பெண்ணீய அரசியலும் அதன் தன்மைகளும் நமது அரசியல் கட்சிகளின் குறுகிய உலகத்தை விட பரந்தது… கற்பழிப்பு என்பது காமம் அல்லது கலவியைக் குறித்த விஷயம் அல்ல. மாறாக அது பெண்களின் ஆற்றல், சிறப்புரிமை மற்றும் அதிகாரபூர்வமான உரிமை ஆகியவற்றை பாதிக்கக்கூடியது என்பது குறித்து நாம் காலம் காலமாக பேசி வந்துள்ளோம்… இத்தருணத்தில் மௌனமாக வாளாவிருக்க நான் விழைந்திருந்தால்,என்னால் என்னையே நேரிட்டிருக்க முடியாது என்பது மாத்திரம் அல்ல, தலைமுறைகளாக முழு முனைப்புடன் செயல்பட்டு பெண்ணீய இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று புதுப்பிக்கும் அந்த நெஞ்சுரம் கொண்ட பெண்களையும் எதிர்கொள்ள முடியாமல் போயிருக்கும்…

View More தெஹல்கா பாலியல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்

காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

வெறியாட்டம் சம்பிரதாய நாடக வடிவிலோ, அல்லது நவீன நாடகங்கள் என்று சொல்லப்பட்டு வந்த நாடகங்கள் போன்றோ இல்லை. ஒப்பாரியிலேயே நாடக நிகழ்வு முழுதையும் மேடையேற்றியிருந்தார் ராமானுஜம். நடு நாயகமான பாத்திரம் ஏற்று நடித்த காந்தி மேரியின் நடிப்பு தோரணைகளும் சரி, பெருந்தேவியும் சரி எல்லாமே பொருத்தமாகத் தான் இருந்தன. முதல் முயற்சியே சிறப்பாக வெற்றி பெற்றது தான்… இப்போது காந்தி மேரி ஒரு நாடகாசிரியராக நம் முன் பொம்மக்காவின் மூன்று பெண்கள் என்னும் நாடகத்துடன் வருகிறார். ஆண்கள் விதித்துள்ள வரம்பிற்கு அடங்கி கடைசியில் குரல் எழுப்புவது பெண்ணியக் குரல், எதிர்ப்புக் குரல் அல்ல. பொம்மக்கா நாடகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறார்கள். இது ஒரு இயல்பான எதிர்ப்புக் குரல், பெண்ணீயக் குரல்… ஃபாஷன் அல்லாத ஒரு காரியத்தைச் செய்துள்ள, ஊரோடு ஒட்டி வாழ மறுத்துள்ள காந்தி மேரிக்கு என் வாழ்த்துக்கள்…

View More காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

விருதுக் கொலை [சிறுகதை]

செல்வி ஏன் தூக்கில தொங்கினா… “இந்தச் சமுதாய மக்கள் தங்களைக் குறித்துக் கூறும் கருத்துகளை ஓர் ஆராய்ச்சியாளர் அப்படியே உண்மையென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நான் இந்தச் சமுதாயத்தில் வெல்லம் அம்மனாக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்தேன்”…. “எனவே ரீனா சிந்தாமணியை, பொய் ஆவணங்கள் உருவாக்கியது, தலித் சமுதாயத்தை மோசமாகச் சித்தரித்தது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பெண் குழந்தையை மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு ஆளாக்கியது ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என இந்த அறிக்கை கோருகிறது…

View More விருதுக் கொலை [சிறுகதை]