மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4

முன்தோற்றமற்றது என்றால் என்ன? இதற்குமுன் எதுவும் தோன்றவில்லை, இதுவேதான் இருந்துவருகிறது, இதை யாரும் படைக்கவில்லை, உருவாக்கவில்லை, இதுவும் தோன்றவில்லை. “தோன்றவில்லையா, அப்பொழுது இது எப்படி இருக்கமுடியும்?” என்ற கேள்வி எழுகிறது. நமது வெளியுலக உணர்வுப்படி நோக்கினால் — ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள்? அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா? முடியாதே! அதனால் அப்பரம்பொருள் தோற்றமற்றது, துவக்கமற்றது. அது எப்பொழுதும் இருக்கிறது.

இது முடிவும் அடையாதது: முடிவு என்று ஒன்று இருந்தால் அதற்குத் துவக்கம் என்றும் ஒன்றும் இருக்கவேண்டும் அல்லவா! எனவே, துவங்காத ஒன்று முடிவும் அடையாது.

அது வெளியிலும் இல்லை என்றால் என்ன? எல்லாமே அதுதான், அப்பரம்பொருள்தான்! எனவே எதுவும் அதற்கு வெளியில் இருக்கமுடியாது.

அறிவியல்படி நோக்கினால், பெருவெடிப்புக்குமுன் அண்டமே இல்லை, அண்டத்தில் இருக்கும் எதுவுமே இல்லை. அண்டமே அண்டத்தில், பரம்பொருளுள் அடங்கி இருந்தது. அந்நிலையில்தான் நிர்குணப் பிரம்மமும் இருக்கிறது.

தனித்தன்மை வாய்ந்தது: இப்படிப்பட்டது எதுவும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்டது தனித்தன்மை வாய்ந்த ஒன்றுதானே!

View More மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4

பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1

அறிவுக்கு பொருந்தும் பயம் ஏற்படுகையில் மனித உடல் ஆபத்திலிருந்து தப்பிக்க உத்வேகம் பெறுகிறது. ஆனால் அதே பயம் உயிர் ஆபத்திற்காக அல்லாது மற்ற காரணங்களுக்காக ஏற்படும்போது உடல் செயல்பட மறுக்கிறது. தவறான முடிவுகளையும் எடுக்கிறது… உலகையே கலக்கி கொண்டிருக்கும் ஒரே பரபரப்பு அறிவியல் இதுதான்…

View More பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1

பிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்

அசித்துவிற்கும் சித்துவிற்கும் இடையே ஆன ஒத்ததன்மை அற்ற நிலை ஏற்படாமல் இருந்து இருந்தால் இன்று விரிந்துகொண்டே இருக்கும் பிரபஞ்சம் ஆனது ஒளியால் தொகுக்கப்பட்ட, நம் அறிவுக்கு எட்டாத ஏதோ ஒன்றாக இருந்திருக்கும். அப்போது வான்-இயற்பியலாளர்கள் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள்…. இந்த 12 வேறுபட்ட தனிமங்களே கிரகங்களையும் அதன்மேல் உயிரினத்தையும் இயற்ற வழிவகுத்தது. இந்தத் தனிமங்கள் வரவிருக்கும் எல்லாத் தொல்லைகளுக்கும் காரணமாக இருந்தது. இவைகள் அந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேயே இருந்திருந்தால் இன்று எனக்கும் இதை எழுதவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. நீங்களும் இதைப் படித்து, தலை கிறுக்குப்பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய் இருக்கும்.

View More பிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்