சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

அதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா? முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா? நிர்பந்தங்களால் அரசியலிலிருந்தே ஒதுங்குவாரா? எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கறையாகவே இருக்கும்.

காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம்.

View More சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்

மக்களின் நம்பிக்கை, வழிபாடு, சமயம் சார்ந்த செயல்பாடுகள் இவற்றில் வழிகாட்டும் பொறுப்பில் இருக்கும் ஒரு மடத்துக்கு எந்த குற்றச்சாட்டோ அல்லது குறைபாடுகளோ இல்லாத நபர் தலைமை ஏற்பதுதான் பொருத்தமாக இருக்கும்… சிவ தீட்சை பெற்ற சிலர் அவர்கள் ஆதீன கோயில்களில் கட்டளைத் தம்பிரான்களாகப் பல காலம் பணியாற்றித் தங்களை பக்குவப் படுத்திக் கொண்டு அவர்களில் தகுதி அடிப்படையில் அந்த ஆதீனத் தலைமை பண்டாரமாக நியமிக்கப் பெறுகின்றனர், முதிய வயதில் கூட அந்தத் தலைமை கிடைக்காமல் போனவர்களும் உண்டு… பல சடங்குகள் இருக்க திடீர் சாம்பார் போல திடீர் மடாதிபதியாக ஆவது எப்படி என்பது புரியாத புதிராக இருக்கிறது…

View More மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்