தமஸோ மா… – 1

“மிகவும் அப்பாவியாக இருக்கிறீர்கள் சாமுவேல்… இது ஞாயிற்றுக்கிழமை விவிலிய வகுப்பு கதை அல்ல. இது சரித்திரம். எல்லா பிரிட்டிஷ் வன்முறைக்கும் ஒரு பண்பாட்டு நியாயம் இருக்கும் அல்லது கற்பிக்கப்படும்… பெருமளவு உலகத்தின் வரலாற்றை, சர்வ நிச்சயமாக இந்த தேசத்தின் வரலாற்றை எழுதும் கடமையை கர்த்தர் நம்மிடம்தான் கொடுத்திருக்கிறார். இதோ இந்த பாவப்பட்ட இந்திய மக்களின் வரலாற்றையும் நாம்தான் எழுதி அவர்களுக்கு அளிப்போம்.. பஞ்சாபின் இந்த கிணற்றுக்கும் ஒரு பண்பாட்டு நியாயம் உண்டு. அதை நாம் அவர்களுக்கு சொல்வோம்… பின்னர் அவர்களின் வரலாற்றாசிரியர்களே அதை அவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கற்பிப்பார்கள்… இதுவும் விவிலிய வகுப்புகளின் கதைகளாகும் நாள் வரும். அப்போது அது நல்லொழுக்கமும் இறையச்சமும் ஊட்டும் சுவையான கதையாகவே இந்த நாட்டுக்கு இருக்கும். கவலைப்படாதீர்கள்… சாமுவேல்… இந்தியாவின் வரலாறு எப்போதுமே அதை வெற்றி கொண்டவர்களால்தான் எழுதப்பட்டு வந்துள்ளது, இந்தியர்களால் அல்ல”

View More தமஸோ மா… – 1

தமஸோ மா… – 2

“நான் ராஜபுதனத்தை சார்ந்தவள் சாம்… மீராவின் ஊர்… ஆனால் என் பள்ளியில் பாதிரிகள் பக்த மீராவை பித்து பிடித்த ஒரு காமாந்த காரி என சொல்லி கொடுத்தார்கள்… என் வீட்டிலோ இந்துக்கள் அஞ்ஞானிகள் என்று சொன்னார்கள்… அதை நம்பி வளர்ந்தவள் நான் … சாம்… முதன் முதலாக மீரா பஜன்களை நான் கேட்ட போது எதனை நான் இழக்க வைக்கப்பட்டேன் என்பதை உணர்ந்தேன்… எனவே எனக்கு கிடைத்த விசுவாசம் அதை விட மேலானது என எனக்கு நானே சொல்லி கொண்டேன்… என் மேல் சுமத்தப்பட்ட விசுவாசத்தை கர்த்தருக்கான சிலுவையாக என் வாழ்நாளெல்லாம் சுமந்து கொண்டிருப்பேன் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்… ” பஞ்சாப் படுகொலைக்கு பிறகு …அந்த கிணற்றில்தான் எத்தனை குழந்தைகளின் சடலங்கள்… அதை லாலாஜி நம்மிடம் விவரித்தாரே… ஆனால் உங்கள் பிரிட்டிஷ் நண்பர் அந்த பிஷப் அதற்கு ‘நீதியின் தேவனின் செயல்’ என்ற போது… என் விசுவாசத்தின் உள்ளே இருக்கும் ஆண்டவனின் கொடூர முகம் எனக்கு முதன் முதலாக தெரிந்தது…

View More தமஸோ மா… – 2