மீனாட்சி என்னும் இன்பமாகடல்

அன்னைக்குப் பூஜை முடிந்ததும் தீபாராதனை எடுக்க வைத்திருந்த கற்பூரத்திலிருந்து இரு கட்டிகளை எடுத்தார். தனது கண்களில் வைத்துக் கொண்டு அதில் நெருப்புச் சுடரையும் வைத்தார். ஆஹா! கண்கள் பொசுங்கின! பார்வை பறிபோயிற்று! “அம்மா, தாயே, மீனாட்சி,” எனப் புலம்பினார் தீக்ஷிதர்… வீரர்கள் சொன்ன செய்தியால் ஆச்சரியம் அடைந்தார் மன்னர் திருமலை நாயக்கர். திரை மறைவில் இதைக் கேட்டபடி இருந்த மகாராணி, இப்போது தைரியமாக மன்னர் முன் வந்தாள்… . தீக்ஷிதருக்குக் கண்கள் பொசுங்கியதால் தாம் படும் வருத்தத்தையும் வலியையும் விட, மன்னர் படும் துயரம் தாங்கொணாததாக இருந்தது. அடுத்து 61-வது ஸ்லோகத்தைப் பாடுகிறார் “இயற்கை அழகு வாய்ந்ததும், எல்லாவற்றிற்கும் மேலானதும், அறிவுக்கு எட்டாததும், பரம மங்களமானதுமான உனது அழகிய தாமரை மலர் போன்ற பாதத்தை நீ என்மீது இரங்கி எனக்குக் காண்பிப்பாய் என்றாலும், அதைத் தரிசிக்க எனக்கு (புறக்)கண்கள் இல்லையே தாயே!… “

View More மீனாட்சி என்னும் இன்பமாகடல்

சிவபிரான் சிதைத்த சிற்றில்

சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள்… வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்…

View More சிவபிரான் சிதைத்த சிற்றில்

இராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை

கிராமத்தில் இந்துக்கள் முஸ்லீம் ஜமாத்திற்கு வரி செலுத்திதான் தொழில் செய்ய முடியும் என்கிற நிர்பந்தம். காவல் துறையினர் உள்ளிட்ட மாவட்ட அரசு நிர்வாகங்கள் அனைத்தும் ஜமாத் மூலமாகத் தான் செயல்படுகின்றன.. கண்ணன் எனும் ஆட்டோ டிரைவர் ஜமாத்திற்கு மாதக் கட்டணம் செலுத்தமாட்டேன் என்று போராடத் துவங்கினார், இஸ்லாமிய மதத் வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். சுந்தர்ராஜ் எனும் நாட்டுப்படகு மீனவர் முஸ்லீம் மதம் சார்ந்த விசைப் படகு மீனவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

View More இராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை

ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்

… எல்லா இஸ்லாமிய படையெடுப்பு, கொள்ளை, கொலைகளையும் போல மதுரை சூறையாடப்பட்டது;ஒரு முறை அல்ல. இருமுறை அல்ல. நாயக்கர் காலம் வரை. சரித்திரம் முழுதும். இதே சரித்திரம் வெவ்வேறு ரூபங்களில் இன்னமும் நம்மை அலைக்கழிக்கிறது. சரித்திரம் பற்றியும் மனித இயல்பு பற்றியும் ஒன்று சொல்வதுண்டு. சரித்திரத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்வது இல்லை என்பதைத் தான் சரித்திரத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒரே பாடம்.

View More ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்

ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா

[உ.வே.சாவின் கட்டுரை, படங்களுடன்] “குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவயோகம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம பக்தராகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டன ரென்றும் கூறுவர்.”

View More ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா

பெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்

பாண்டிய நாட்டின் அரசியாக ஆட்சி புரிந்த தேவி மீனாட்சி முதல் மதுரையை ஆண்ட பெண்ணரசிகள் பலர் இருந்திருக்கின்றனர். இந்துமதத்தில், கலாசாரத்தில் பெண்கள் ஒருநாளும் சிறுமை அடைந்திருக்கவில்லை. பெருமையாகவே இருந்திருக்கின்றார்கள்…

View More பெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்