இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன் தமிழாக்கம்      : எஸ்.…

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 29

வால்மீகி இராமாயணத்தில் எழுதியிருக்கும் போர் முறைகளும், தளபதிகள் வகுக்கும் வியூகங்களும், சண்டையில் நடக்கும் பேச்சுக்களும் வாள் வீச்சுக்களும், ஆயுதங்கள் பற்றியும் அவைகளைக் கையாளும் விதமும் என்று விதவிதமாக விவரங்கள் இருப்பதும், அதை அவர் விவரிக்கப் பயன்படுத்தும் வார்த்தைகளும் அவரைப் போரில் ஒரு கை தேர்ந்த கலைஞர் என்றுதான் காட்டுகிறது. அவரது சொற்களும், விவரிப்புகளும் ஒரு பத்திரிக்கையின் போர் நிருபரையே பிரமிக்க வைக்கும் அளவு இருக்கின்றன…. இராமாயணக் காலத்திலிருந்து இன்றைய போர் முறைகள் வெகுவாகவே மாறியிருந்தாலும், போர் புரிய வேண்டிய மனோநிலை, வேண்டிய தைரியம், திறன், முயற்சி, பொறுமை என்ற எல்லாக் குணங்களும் இன்றும் போருக்கு வேண்டிய முக்கியமான தேவைகள்தான். எடுத்த காரியத்தை முடிக்கும் போர் வீரர்களைச் சித்திரம் வரையாத முறையில், வால்மீகி தன் எழுத்துக்களாலேயே நன்றாக வரைந்து காட்டுகிறார். விவரமான அந்த போர்க் குணங்கள் இன்றும் வீரர்களிடம் நன்கு காணப்படுகின்றன. அவர் எழுதியிருப்பதைப் படிப்பவருக்கு, தான் ஏதோ போர்க்களத்திலேயே இருப்பதாகவும் ஒரு பிரமை ஏற்படும் என்று சொன்னால் அது மிகையே அல்ல…

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 29

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27

தன் உடன் பிறந்தவர்களின் சாவுக்குப் பழி வாங்க வேண்டும் என்று அதிகயா துடித்துக்கொண்டு இருந்தான். அவன் தேரில் ஏறிப் போர்க்களத்துக்குப் போகும் வழியிலேயே பல வானரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே போனான். லக்ஷ்மணன் அவனைத் தடுத்து நிறுத்தித் தன்னுடன் மோதுவதற்குச் சவால் விட்டான். போர் புரிய வக்கில்லாச் சிறுவன் என்று லக்ஷ்மணனை ஒதுக்கிவிட்டு அதிகயா போனான். மேலும் லக்ஷ்மணன் உடலைத் தன்னுடைய அம்புகளால் துளைத்து அவன் நிற்கும் பூமியை ரத்தக் களம் ஆக்குவேன் என்றும் அவன் சொல்லிக்கொண்டே போனான். வெறும் வார்த்தைப் பந்தல்களே   அதிகயாவை வீரனாக்கிவிடாது என்று அதற்கு லக்ஷ்மணன் பதிலடி கொடுத்தான்.

ஒரு சண்டையில் எதிரியை வெல்ல ஒருவனுக்கு மோதவும், கொல்லவும் அதற்கான உணர்ச்சிகள் தூண்டிவிடப்பட வேண்டும். அதனால் சவால்கள் விடப்படும் போது எதிரியின் வலிமையைப் பற்றி காரசாரமாகவும், கீழ்த்தரமாகவும் தூற்றிப் பேசுவார்கள். அதுவே அவர்களை ஆக்ரோஷமாக மோதத் தூண்டிவிடும். முன் காலத்தில் நடந்த மாதிரி இப்போதெல்லாம் எவரும் நேருக்கு நேர் மோதாததால், சண்டைக்கு முன் நடந்த நேரடியான சவால் பேச்சுக்கள் எல்லாம் இக்காலத்தில் கேட்கப்படுவதில்லை. அதெல்லாம் இலக்கியத்தில்தான் காணப்படுகின்றன. ஒரு போருக்கு முன் நாம் பத்திரிகைகள், மற்றும் ஊடகங்கள் வாயிலாகக் கேட்கும் மறைமுகத் தாக்குதல்கள் மட்டும் தான் இப்போதெல்லாம் நடக்கின்றன. போர் நடக்கும் போதோ போரின் வழிமுறைகள் தெரிந்து விடக்கூடாதே என்பதால் அவைகள் பொதுவாக இருட்டடிக்கப்படுகின்றன; அல்லது பொய்ச் செய்திகள் திரித்து விடப்படுகின்றன.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

ராவணன் ஒரு மகாவீரன் மட்டும் அல்லாமல் ஒரு கைதேர்ந்த போர்த் தலைவன் ஆனதால், அரக்கர்களின் மூர்க்கமான தாக்குதலால் வானரர்கள் பக்கம் சரிவு ஏற்பட்டு பலத்த இழப்பு நேர்ந்தது. ஒரு கட்டத்தில் இராமரே வானரர் படையை முன்னின்று இயக்கி, ராவணனையும் நேருக்கு நேர் சந்திக்கலாமா என்று யோசித்தார். ஆனால் ராவணனுடன் நேரடித் தாக்கலில் தானே ஈடுபட விரும்புவதாக லக்ஷ்மணன் தெரிவித்தான். அதற்கு ஒத்துக்கொண்ட இராமர் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தவும், தன் பலவீனத்தை எதிரி பயன்படுத்தாது இருக்குமாறும் போர் புரிய வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு அறிவுறுத்தினார். எதிர்பாராமல் இருக்கும்போது எதிரிக்கு அடிகொடுக்கும் அதே சமயம், எதிரி எளிதில் தாக்கவோ, காயப்படுத்தவோ தன்னைக் காட்டிக்கொள்ளாதபடி இருக்கவும் சொன்னார்.

விழிப்புடன் இரு! கூர்மையாகக் கவனித்துக்கொண்டு, வில்லில் நாணேற்றும் போது வேகமாகச் செய்து எதிரி மேல் அம்பைச் செலுத்துவதில் முந்திக் கொள். எதிரியின் ஆயுதங்களிலிருந்து எட்டி இருந்து அவை உன்னை அடையாதபடி காத்துக்கொள்.

போர்க்களத்தில் யார் வேகமாகத் தன் தாக்குதலைச் செய்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும். ஒரு இமைப்பொழுது என்றாலும், அது ஒருவருக்கு வாழ்வா சாவா என்பதை நிச்சயிக்கும். கவனிப்பதிலோ, எய்வதிலோ, தாக்குவதிலோ எதையும் எவரால் வேகமாகச் செய்ய முடியாதோ அவருக்குப் போர்க்களத்தில் எந்த உத்திரவாதமும் இல்லை; அதனால் அவர்க்குப் போர்க்களம் ஒரு கொடுப்பினையே அல்ல.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25

வானரர்கள் இலங்கை மாநகரைத் தாக்குவதற்குத் தயாராக முதலில் அதைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களின் தளபதிகள் மேலிடத்தில் இருந்து வரவேண்டிய ஆணைக்குக் காத்திருக்க, போர் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தன. அப்போதும் இராமர், ஒரு வேளை மனம் மாறி தனக்கும் தன் வீரர்களுக்கும் போரினால் வரக்கூடிய அழிவுகளைத் தவிர்ப்பதற்காகவே, ராவணன் திருந்துவானா என்று கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சிறிது காத்திருந்தார். அனாவசியமான போர்ச் சேதங்களையும், கொலைகளையும் தடுப்பதற்காக அந்நாளில் எதிரிகளுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்த பின்பே போர்கள் தொடுக்கப்படும். இங்கு அங்கதன் மூலம் இராமர் அனுப்பிய செய்தியும் அந்தப் பண்டைய வழக்கத்தை ஒட்டியதுதான். எதிரிக்கு அவகாசம் ஏதும் கொடுக்காமல் திடீரென்றும், இலை மறைவு காய் மறைவு ஏற்பாடுகளுடன் இரவோடு இரவாகவும் சரித்திரத்திலும், சமீப காலத்திலும் காணப்படும் சில போர்களில் இருந்து இது வித்தியாசமானவை.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25