இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் சரி சமமாக வைத்து, காலம்காலமாக சிறிதும் மாறாத அந்த ஓரகப் பார்வை பார்க்கும் மேலை நாடுகளின் கண்ணோட்டமே நோபல் பரிசுக் குழுவின் விளக்கத்தில் தெரிகிறது.. இந்த இரண்டு நபர்களின் போராட்டங்களுக்கு இடையே எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் அமல்படுத்த வேண்டி சத்யார்த்தி போராடினார். ஆனால் மலாலா என்ற பாகிஸ்தான் பெண்ணோ, அவர்களது மதமும், அந்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார். சத்யார்த்தி தனது தாய் நாடான இந்தியாவில் இருந்துகொண்டு போராடுகிறார். மாலாலாவோ தன் தாய் நாட்டில் தங்கியிருக்க முடியாது, பாதுகாப்பு வேண்டி அடைக்கலம் புகுந்து இங்கிலாந்து போன்ற நாட்டில் தங்கிச் சேவை செய்யும் நிலையில் தான் இருக்கிறாள்….

View More இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம், வளங்களின் கலவையைக் கொண்டுள்ளோம். நாம் நான்கு கண்டங்களைப் பிரதிபலிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டு அளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம்… உலகின் எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது “உலகம் முழுவதுமே ஒரே குடும்பம்” என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை மாபெரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். வளரும் உலகத்தின் நம்பிக்கைகள். விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்….

View More உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை