இந்திய குற்றவியல் சட்டங்களில் மோதி அரசு கொண்டுவரும் மாபெரும் சீர்திருத்தங்கள்

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதே மூன்று புதிய சட்டங்களின் ஆன்மாவாக இருக்கும், அவற்றின் நோக்கம் தண்டிப்பது அல்ல, நீதி வழங்குவது.. இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் பரவலான மாற்றத்தைக் கொண்டுவரும் இந்தச் சட்டத்தின்படி அதிகபட்சமாக எந்த வழக்கிலும் 3 ஆண்டுகளுக்குள் எவரும் நீதியைப் பெற முடியும்… பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் காவல்துறை தங்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முடியாது… நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜீரோ எஃப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படும். வழக்கு குறிப்பேடு, குற்றப் பத்திரிகை முதல் தீர்ப்பு வரை முழு செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது…

View More இந்திய குற்றவியல் சட்டங்களில் மோதி அரசு கொண்டுவரும் மாபெரும் சீர்திருத்தங்கள்

தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்

பதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்… பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்கும் குற்றத்தை பாஜக மீண்டும் மீண்டும் செய்யும் என்கிறேன்….

View More தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்

அமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்

கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் மாநில சட்டப்படி தான் குற்றம் என்பதால் மாநில நீதிமன்றங்களிலேயே பிரச்சினை முடிந்துவிடும். இங்கிருப்பது போல் காசு இருக்கிறது என்பதற்காக உச்சநீதிமன்றம் வரைக்கும் போய் வழக்கு நடத்தும் பஜனை எல்லாம் கிடையாது… இங்கிருப்பது போல் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிப்பார்கள். அரசு வக்கீல் வாதாட மட்டும் வருவார் என்ற நிலை அங்கே கிடையாது. நீதித்துறையின் கீழ் தான் போலீஸும் மற்றைய துறைகளும் மாநில, மத்திய அளவிலே இயங்கும். நீதித்துறைக்கு தலைவராக ஒரு வக்கீல் இருப்பார். மாநில அளவில் அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்…. ஒரு சட்ட மீறல் நடக்கிறது என்றால் (உதா: ஒரு கம்பெனி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறது), உடனே அமெரிக்க மத்திய வியாபார கமிஷன் நடவடிக்கை எடுக்கும்.அவர்களாகவே தானாகவே முன்வந்து நீதிமன்றத்திலே அந்த கம்பெனி மேல் வழக்கு தொடுப்பார்கள்…

View More அமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்

சூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்

சோனியா மன்மோகன் மாஃபியா நியமித்த அத்தனை கேரள ஜட்ஜுகளுமே ஊழல்வாதிகளாகவும் கறை படிந்தவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் கடவுளுக்கும் மேலான அதிகாரம் கொண்டவர்களாக நீதிபதிகள் இருக்கிறார்கள். முதலில் கோடிக்கணக்கான வழக்குகள் தேக்கத்தில் இருக்கும் பொழுது உடனடியாக மோடியின் அரசு இவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த லீவுகளை ரத்து செய்து இவர்களையெல்லாம் 24X7 ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். மக்களின் வரிப்பணம் இவர்கள் தின்று விட்டுத் தூங்குவதற்காக வீணாவது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். குரியனுக்கு அப்படியே கட்டாயமாக கேரளத்தில் போய்தான் ஈஸ்டர் கொண்டாட வேண்டும் என்று இருந்தால் அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்று சொல்லி விட்டுப் போயிருந்திருக்கலாம். தத்து தடுத்திருக்கப் போவதில்லை. சோனியா ஆட்சியில் பொத்திக் கொண்டிருந்து விட்டு இப்பொழுது மோடியின் ஆட்சியில் மட்டும் அவதூறு சொல்வது திட்டமிட்ட சதி. உள்நோக்கம் உடையது அயோக்கியத்தனமானது மட்டுமே….

View More சூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்