2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

மோடி எப்படியாவது ஒழிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே குறி. அதற்காக எவருடனும் கூட்டணி வைக்கவும் எதைச் செய்யவும் சோனியாவும், கம்னியுஸ்டுகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது மோடி அகற்றப் பட வேண்டும், எவர் வந்தாலும் தங்கள் கொள்ளைகளைக் குறையாமல் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸும், இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து பலவீனப் படுத்த விரும்பும் அத்தனை நாசகார சக்திகளும் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றன… ஒருவேளை மோடியும் பிஜேபியும் அழியுமானால் என்னென்ன நடக்கப் போகின்றன? வலிமையற்ற கொள்ளைக்காரர்களினால் சீன பாக்கிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை உருவாக்கும். இந்தியா சகல துறைகளிலும் பல பத்தாண்டுகளுக்கு பின்னால் தள்ளப் படும். இந்தியா முழுக்க மீண்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தாக்கப் படும். குண்டுகள் வெடிக்கும். அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாவார்கள்.. அபாயகரமான, மோசமான, பயங்கரமான சக்திகள் இன்று ஒன்று கூடி வருகின்றன. இவர்களை எப்படி நாம் எதிர் கொள்ளப் போகிறோம்? இதில் இருந்து மோடி அரசை மட்டும் அல்லாமல் இந்தியாவையும் நம் எதிர்காலத்தையும் எப்படி பாதுகாக்கப் போகின்றோம்? நாம் என்ன செய்ய வேண்டும்?…

View More 2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

ஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும். காங்கிரஸ், அன்று மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது. இப்போது இந்துக்களை வஞ்சித்து மைனாரிட்டிகளை திருப்தி படுத்துகிறோம் என்று நாட்டை நாசப் படுத்தி வருகிறது. நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.. ஓ ஹிந்து சகோதர, சகோதரிகளே இன்னுமா காங்கிரசிர்கு ஒட்டு போட வேண்டும் என்கிறீர்கள்? அப்படி என்றால் நீங்கள் நமது நாடு குழிதோண்டப் படுவது பற்றியும் உங்கள் குழந்தைகளும் உங்களது பேரக்குழந்தைகளும் இரண்டாம்தரக் குடிகளாக வாழ்வதை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம்!

View More காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்?

View More ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்

எப்படி ஏமாற்ற முடியும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒரு உண்மையான, தேர்தல்களில் பயன்படுத்தப் பட்ட EVM இயந்திரத்தை வைத்தே நிரூபித்துக் காட்டியது. இந்த இயந்திரம் தன் கைக்கு எப்படிக் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட ஹரி பிரசாத் மறுத்து விட்டார்…இந்த வழிமுறைகளில் சில வீடியோவில் செய்து காட்டப் பட்டும் உள்ளன… எழுந்துவர வாய்ப்பில்லை என்று எழுதிவைத்து விட்ட காங்கிரஸ் வியக்கத் தக்க வகையில் தேர்தல் வெற்றிகள் பெற ஆரம்பித்தது ஒட்டுமொத்தமாக EVM மூலம் வாக்குப் பதிவுகள் நிகழ ஆரம்பித்த பின்பு தான்…

View More மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்