காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்

பாரதப்பிரதமர் தொடங்கி வைத்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்தும் காசிக்கு காலகாலமாக அறிஞர்களும் பக்தர்களும் பயணித்திருக்கிறார்கள்… இலங்கையின் பல பாகங்களிலும் காசி விஸ்வநாதருக்கு பேராலயங்கள் உள்ளன. புனித யமுனை நதி நீரை எடுத்து வந்து நல்லூரில் யமுனா ஏரியில் அந்த தீர்த்தத்தை சேர்த்ததாகவும் ஐதீகம்… காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளோடு கூட, காசிக்கும் இலங்கை சைவ தமிழர்களுக்கும் உள்ள தொடர்பும் கூட இவ்வேளையில் சிந்திக்கப்பட வேண்டும்…

View More காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்

பாரதியாரும் காசியும்

பாரதி கல்லூரி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கங்கா நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு கவிதைகள் புனைவதிலும், இயற்கையழகை அனுபவிப்பதிலும், நண்டர்களுடன் படகில் உல்லாச யாத்திரை போவதிலுமாகப் பொழுதைக் கழிப்பார். அந்தணருக்கேற்ற ஆசாரமின்றி எல்லா ஜாதியாருடனும் கைகோர்த்துக் கொண்டு உலாவுவதும், நியம நிஷ்டையில்லாது எப்போதும் கோட்டும் சட்டையும் தலையில் முண்டாசும் காலில் பூட்ஸும் அணிந்திருப்பதும்… பாரதியின் காசி வாசம் மொத்தம் ஐந்தே ஆண்டுகள் தான். காசி வாசத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், திறப்புகளும், தரிசனங்களுமே எட்டையபுரத்தில் ‘இளசைச் சுப்பிரமணியன்’ என்று சம்பிரதாயமாக தமிழ்ப் பண்டித நடையில் கவிதை எழுதிக் கொண்டிருந்த சுப்பையாவை, மகத்தான இலட்சியங்களும், தேசிய உணர்வும், சுதந்திர சிந்தனைகளும் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற நவீனத் தமிழ்க் கவிஞராகவும், எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும் மாற்றின…

View More பாரதியாரும் காசியும்

காசியின் ஞானவாபி: மகத்துவமும், ஆக்கிரமிப்பும், மீட்சியும்

1664ல் பரமேஸ்வரனின் மூலஸ்தானம் இருந்த முக்தி மண்டபம் கர்ப்பக்ரஹம் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே ஔரங்கசீபினால் மசூதி உருவாக்கப்பட்டது.. கண்ணுக்கு நேராக பார்த்தாலே தெரிகிறது. ஆனால் அதை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இத்தனை வருடங்கள் இழுத்தடித்ததே நம் தேசத்தின் சாபக்கேடு… நிச்சயமாக இந்த அரசாங்கத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும். தைரியமாக இந்த விஷயத்தை முன்னெடுத்து மேற்கொண்டு ஆய்வுகளை செய்ய நடவடிக்கைகளை எடுத்தது. ஆய்வுக்குழு, ஞானவாபி மசூதி வளாகத்தில் கிணறு போன்ற அமைப்பின் உள்ளே சிவலிங்கத்தை கண்டுபிடித்துள்ளார்கள். வஸுகானா என்ற, அவர்கள்கை கால்களை சுத்தப்படுத்தும் குளத்தின் உள்ளே சிவலிங்கம் இருந்தது என்று மனம் பதைக்கும் செய்தி வருகிறது…

View More காசியின் ஞானவாபி: மகத்துவமும், ஆக்கிரமிப்பும், மீட்சியும்

புதிய காசி விஸ்வநாதர் ஆலயம்: நேரடி அனுபவம்

விஸ்வநாதர் கோவிலில் அதன் விஸ்தீர்ணத்தையும் அதன்
விரிவாக்கத்தையும் மிகத் தெளிவாக காண முடிந்தது. ஏற்கனவே நான் வந்த கோவில் போலவே இது இல்லை. ஏதோ புதிய கோவிலுக்கு வந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ஆலய விரிவாக்கத்தின் போது சுற்றியிருந்த பல கடைகளுக்கு உள்ளாக ஒளிந்து கொண்டிருந்த, வீடுகளுக்குள் மறைந்திருந்த பல புராதன ஆலயங்கள் வெளிப்பட்டிருக்கிறது.. இன்று இவ்வளவு பிரம்மாண்டமான ஆலயம் உருவாகிவிட்ட பின்பும், நந்தி பரிதாபமாக ஞானவாபி மசூதியை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது என்னை மீறி கண்ணீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது…

View More புதிய காசி விஸ்வநாதர் ஆலயம்: நேரடி அனுபவம்

ஒரு காசிப் பயணம்

இது நாள் வரை காணாத காட்சி. காணாத பிரம்மாண்டம். என்னுடன் வந்தவர்கள் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஆற்றில் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கம்…. கங்கையும் ஏமாற்றியது. காசி விஸ்வநாதரும் ஏமாற்றினார். ஒன்று, சரித்திரம் வாங்கிய பழி. இன்னொன்று நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பது. இரண்டு பாதகங்கள் பற்றியும் நமக்கு பிரக்ஞை இல்லை….இது கோயிலாக, கர்ப்பக் கிரஹமாக இல்லை. விஸ்வநாதர் ஏதோ நீண்ட தூர பயணத்தில் தாற்காலிகமாக இங்கு ஒரு அறை எடுத்து விஸ்ராந்திக்காக, பயணக் களைப்பு போக தங்கியிருக்கிறார். இன்று மாலையோ நாளைக் காலையோ இந்த அறை விட்டு தன் பயணத்தைத் தொடங்குவார் என்பது போலிருந்தது…..

View More ஒரு காசிப் பயணம்

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19

2004 வரை இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் அரசியல்வாதிகள் மீதும், அரசாங்க நிறுவனங்கள் மீது மட்டுமே பெரும்பாலும் இருந்தது. அதற்குப் பிறகு, இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதும், இந்துப் பண்டிகைகளின் போதும் தாக்குதல் நடத்தி, உள்ளுர் மக்களிடம் அதிக அச்சத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டங்களை மாற்றினர், வாரணாசி குண்டு வெடிப்பு இதன்படி நடந்த ஐந்தாவது சம்பவமாகும்… அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்ட இ-மெயிலில் பயங்கரவாதிகள் தங்களை கஜினி முகமது, கோரி முகமது, ஔரங்கசீப் ஆகிய படையெடுப்பாளர்களின், ஆக்கிரமிப்பாளர்களின், கொடுங்கோலர்களின் வாரிசுகளாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர்…

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18

இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக உத்திரபிரதேசம் விளங்குகிறது. இந்தியாவில் எந்தப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தாலும், புலன்விசாரனையில் சந்தேகப்படும் நபர் உத்திரபிரதேசத்தை சார்ந்தவராக இருப்பார் அல்லது உத்திரபிரதேசத்தில் தஞ்சம் புகுந்திருப்பார். 1985லிருந்தே உ.பி.யில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை தூக்கியது. சிமி துவக்கப்பட்ட இடமான அலிகார், அதிக அளவில் பயங்கரவாதிகள் உருவான மாவட்டம் ஆஸம்கார், அடிக்கடி கலவரம் நடக்கும் கான்பூர்… உ.பி. தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்தே தங்களது பிரச்சார உத்திகளை வகுக்கிறார்கள்….

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18

ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்

இந்த ஜீவநதியில் வந்து சேரும் உயர்வு தாழ்வு என்னும் கழிவுகளை இது பலவிதத்தில் கழித்துக்கொண்டே இருக்கிறது. ஜாதிகளின் உயர்வு தாழ்வுகள் பேதிக்கப்பட்டதாகவும் மற்றும் ஒருங்கிணைந்து ஒளிரும் ஹிந்து ஸமூஹத்தின் ஒரு முகமாகவும் பரிச்சயம் தெரிவிக்கும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட மற்றும் பார்த்து ரசித்த தக்ஷிண பாரதத்திலிருந்து உத்தர பாரதம் வரைக்குமாய் என் அனுபவங்கள் [..]

View More ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்