தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2

தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை, இரண்டு கை போதாது அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பானாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்கல வாழ்த்துரை செய்து திருப்பாவையை முடிக்கிறாள் ஆண்டாள்.

View More தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2

தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1

ஆண்டாள் இயல்பாகவே பெண்ணாக இருப்பதால், இறைவனைத் தன் காதலனாக எண்ணி அவனை காதலனாக நினைத்து கசிந்து உருகி பக்தி செய்ய முடிந்தது. இதைக் கண்ட மற்ற ஆழ்வார்களெல்லாம், எவ்வளவு எளிதாக பக்தி செய்து இச்சிறுபெண் கண்ணனை அடைந்து விட்டாள்! பெண்ணாக இருந்தால் இறைவனை எளிதாக அடைந்து விடக் கூடுமோ என்று எண்ணி ஆண்டாளை உதாரணமாகக் கொண்டு அவர்களும் பெண் பாவனையில் கண்ணனைக் காதலித்தல், ஊடல் கொள்ளுதல், பிரிந்து வருந்துதல், தூது விடுதல், மடலூர்தல் என்று விதவிதமாக நாயகி பாவத்தில் கண்ணனை பக்தி செய்து அனுபவித்தனர் போலும்

View More தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1

தேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்

மந்திர கேசரி மலைகள் அச்சு: சூரிய சந்திரர் சில்லுகள்: ஷட்ருதுக்கள் சந்திகள்: பதினான்கு உலகங்கள் தட்டுகள்: ஆகாச ஆசனம்: நதிகள் கொடிகள்: மோட்ச உலகம் மேல்விரிவு: யாகங்கள் சட்டம்: நாள் திதி நட்சத்திரம் போன்றன குறுக்கு மரங்கள்: அஷ்ட பர்வதங்கள் தூண்கள்: அஷ்ட திக்கஜங்கள் தாங்கும் ஆதாரங்கள்: ஏழு கடல்கள் திரைச்சீலைகள்: உபவேதங்கள் மணிகள்: வாயுக்கள் படிகள்: நால்வேதங்கள் குதிரைகள்;: உச்சிக்குடை பிரம்மரந்திரம்: கலசம் சோடஷாந்தத்தானம்: ஆக தேரானது சிவரூபம்…

கோயில் தோத்திருவிழாவில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்குப் பெரியோர் வழங்கும் காசினை ‘தேர்க்காசு’ என்று வழங்குவதனூடாக ஆலயத் தேர்விழா ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். இது போலவே தனது மாப்பிள்ளைக்கு இவ்விழாவை ஒட்டி மாமனார் அளிக்கும் சன்மானம் ‘தேரடிச்சம்பாவனை’ என்றும் கூறப்படும்.

View More தேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்