தலைதூக்கும் அல்-காய்தா பயங்கரவாதம்

இந்தியாவில் அல்-காயிதாவின் அமைப்பு துவங்கப் படவில்லை என்பது உண்மையாகும். ஆனால், அல்-காயிதாவினால் பயிற்சி பெற்றவர்கள் ஏற்கனவே அதிக அளவில் உள்ளார்கள். இந்தியாவில் உள்ள ஜிகாதி அமைப்பான, லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன், சிமி, ஜெய்-இ-முகமது போன்ற அமைப்புகளும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்குகின்ற பிரிவினைவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது…. இந்தியன் முஜாஹிதீன் மீது தேசிய புலனாய்வு பிரிவினர் தாக்கல் செய்த 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையில், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், மகாராஷ்டரா மற்றும் கோவாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயனிகளை தாக்கும் நோக்கத்தில், ராஜஸ்தானில் புதிதாக இஸ்லாமியர்களை சேர்க்கும் பொறுப்பை அல்-காயிதாவினர் யாசின் பட்கலுக்கு உத்திரவிட்டதாக தெரிவித்தார்கள். இந்த தகவல்கள் 2500 இன்டர்நெட் செய்தி பரிமாற்றங்களை ஆய்வு செய்த்ததில் கிடைத்தாக குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்….

View More தலைதூக்கும் அல்-காய்தா பயங்கரவாதம்

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17

2001ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை பல்வேறு கால கட்டங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களும், இது தொடர்பான காவல்துறையினரின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தால், மற்ற மாநிலங்களை காட்டிலும் டெல்லியில் அதிக அளவில் இவர்களின் செயல்பாடுகள் நடந்துள்ளன என்பது நன்கு தெரியும். கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் நடந்த சம்பவங்களை முழுமையாக கூறுவதற்கு பதில் முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து கொடுத்தால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நோக்கமும், அரசு சிறுபான்மையினருக்கு காட்டப்படும் சலுகையின் காரணமாக பாரத தேசம் படும் வேதனைகளையும் இனம் கண்டுகொள்ள ஏதுவாக இருக்கும். பாரத தேசத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகளை ஆய்வு செய்யும் போது, பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் நாடுகளைச் சார்ந்த முக்கிய இஸ்லாமிய தலைவர்களின் நோக்கம் வேறுமாதிரியாக இருந்தது. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தொடர்ந்து செயல்படுத்துவதின் நோக்கம் மெல்ல வெளியே கசிய தொடங்கியது.

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16

பாரத தேசத்தின் தலைநகர் டெல்லி என்பதால் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளின் முக்கியத் தலைவர்களும் தங்களுக்குத் தேவையான அனைத்து விதமான தகவல் பெறுவதிலும், அந்தத் தகவல்களை முறைப்படி யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்புவதற்கும், உரிய இடமாக டெல்லியை மாற்றி வைத்திருந்தார்கள்….1997-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் பல்வேறு இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையில், தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் உள்ளது. ஆனால் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை டெல்லியில் மட்டும் 200க்கும் மேற்பட்டது. . கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே பயங்கரவாதிகள் அதுவும் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள், மற்றவர்கள் அப்பாவிப் பொது மக்கள் என்பதை மறந்து விட இயலாது.

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16