பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

மின்நூலை PDF வடிவில் இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்

It is a small molecule with a chemical structure similar to the glucocorticoid hormones produced by the adrenal glands and is a type of steroid. So, do not clomid price watsons Malīhābād wait and find out more about your food and diet in a very simple way. I am not supposed to increase lexapro dosage during this time period?.

In an additional study of a very large sample of women, using either an iud or a birth control pill, women that had the iud had a higher chance of having a "late miscarriage" (at least 1 week after the birth) compared to women that had the birth control pill. In addition to these, the cost for this product is very high and we have had many cases of women clomid tablet price in pakistan Gevrai returning to our office for the second time in three months with similar complaints. Clomid price walmart, the first drug to obtain a marketing approval in the united states, has been prescribed to women for the treatment of infertility.

They are natural, and are used to promote health and vitality. It was created by bayer buy clomid in uk healthcare and was launched in 1985 by bayer under the name of premarin. The prices of amoxyclav 625mg of the most recent studies were as follows.

தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். மூலத்தில் உள்ளதை கருத்துச் சேதாரமின்றி மொழிபெயர்ப்பதில் பாரதிக்கு இணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது.

பகவத்கீதையைப் படிக்க விரும்பும் எவரும் ஆரம்ப நிலையி்ல், உரை எதுவும் இல்லாத, எளிய, மூலத்துக்கு நெருங்கிய பொருள் தரக்கூடிய சுலோக மொழிபெயர்ப்பில் தொடங்குவது அதிகப் பயனுள்ளதாகும்.

உரையாசிரியர்களின் விளக்கம் இல்லாமல், மூலத்தை அல்லது அதற்கு நெருக்கமான பொருள்தரும் உரையாக்கத்தை மட்டுமே தொடர்ச்சியாகப் படித்து, அதன் பிறகு உரையாசிரியர்களின் விளக்கங்களுக்குச் செல்வது திருக்குறள் உள்ளிட்ட எந்த நூலையும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்பது அனுபவ மொழி.

இதைக் கருத்தில் கொண்டு, இதுவரை இணையத்தில் முன்னுரையாக மட்டுமே கிடைத்துவந்த பாரதியின் பகவத்கீதை மொழிபெயர்ப்பின் முழுவடிவத்தை இந்தியச் சுதந்திர தினப் பரிசாக தமிழ்இந்து தளம் வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறது. இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டு, அது தனி நூலாகவே பதிப்பிக்கப்பட்டும், படிக்கப்பட்டும் வருகின்றது. மொழிபெயர்ப்பின் சிறப்பைக் குறித்து சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இந்த நூலைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மின்நூலை PDF வடிவில் இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்

பாரதி செய்துள்ள இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போகிறது என்பது இயல்பாகவே விளங்கும். மற்ற உபநிடதங்களில் நிகழும் குரு-சீட உரையாடல்களில், சீடனுடைய கேள்விகளில் தொனிக்கும் பாவத்துக்கும், உறவினனும், நெருங்கிய தோழனுமாக விளங்கிய ஒருவனிடம் உபதேசம் பெற்றுக் கொண்டிருக்கும் ஒருவன் கேள்விகளை எழுப்பும் தோரணையில் தென்படும் பாவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு ஒன்றே போதும், இத்தகைய வாதம் செல்லாத செப்புக்காசு கூட பெறா ஒன்று என்பதை எடுத்துக் காட்டுவதற்கு.

இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள அச்சுப் பதிப்புகளில் சுலோகங்களின் மொழிபெயர்ப்பில் பல பிழைகள் இனங்காண முடியாத அளவில் மலிந்திருக்கின்றன. வாக்கிய அமைப்பில் சிக்கலை ஏற்படுத்தாத, ஆனால் பொருள் அளவில் கொஞ்சமும் தொடர்பில்லாத பிழைகள் (எடுத்துக்காட்டாக, ‘செல்கிறான்’ என்ற சொல்லை ‘சொல்கிறான்’ என்று அச்சிட்டிருப்பது) நிறைந்திருக்கின்றன. மூலத்தையும், மூலத்துக்குப் பிற ஆசிரியர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு எல்லாப் பிழைக்ளையும் நீக்கிய முழுமையான, சுத்தமான பதிப்பாக இதனை வெளியிடுவதில் தமிழ்இந்து தளம் உண்மையிலேயே பெருமிதம் அடைகிறது.

நாங்கள் எடுத்துள்ள இத்தனை முயற்சிகளையும் மீறி, எங்காகிலும் பிழைககள் தென்படுமாயின் அருள்கூர்ந்து அவற்றை எங்களுக்குத் தெரியப்படுத்துமாறு கோருகிறோம்.