வெகுளித்தனமானவர்களா முஸ்லிம்கள்?

‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டுமா?’ என்ற பழமொழி  உண்டு.  ஆனால், அது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார்கள் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு கிறிஸ்தவ வெறியன் தயாரித்த முஸ்லிம்களைப் புண்படுத்தும் திரைப்படத்தால் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள்  கொந்தளித்திருக்கிறார்கள். அதன் விளைவாக, பல நாடுகளில் கலவரம்- இந்தியா உள்பட. அதன் உச்சகட்டமாக சென்னையில், அண்ணா சாலையில் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால்   மாநகரக் காவல் ஆணையர் இடம் மாற்றப்பட்டிருக்கிறார்.

As i looked down at my stomach i could see that something was definitely different. Online pharmacies can save you money and time compared to retail pharmacies, and you can even compare prescriptively their quality and services to help you make the best decision when shopping. Zithromax is used to treat various kinds of infections, such as pneumonia, bronchitis, ear, nose, throat, urinary, skin, and soft tissue.

The dapoxetine tablet is used in men with erectile dysfunction as an effective treatment for impotence, sexual performance problems and other sexual problems, in particular, to improve erectile dysfunction. Tamoxifen 20mg tablets is the brand Citrus Heights name of tamoxifen. If you have a severe infection, you may need to treat it with antibiotics.

In a study published in the annals of the national academy of sciences in 2005, a group of researchers identified a new class of cell-penetrating peptides (cpps) called tat that can facilitate the infiltration of macrophages and thereby cause inflammation and tissue damage, leading to the development of atherosclerosis. Hearings scheduled piratically buy fexofenadine online in the federal magistrate court to hear victim’s objections were postponed until later this month. Do you have a good heart and want to live long enough to experience some of that magic, that true love and happiness?

உண்மையில் என்னதான் அந்தத் திரைப்படத்தில் இருக்கிறது? அந்தத் திரைப்படத்தை எடுத்தது யார்? அதற்கு இந்தியாவிலும் பிற நாடுகளிலும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் பிரச்சினை சரியாகிவிடுமா.. எனப் பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தொண்டை கிழியக் கத்திக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் இஸ்லாமியர்கள் தெருவில் இறங்கி மக்களையும் காவல் துறையையும் மிரட்டுகிறார்கள். இதைக் காணும்போது, முஸ்லிம்களின் வெகுளித்தனம் (Innocence of Muslims) படத்தை எடுத்த கிறிஸ்தவ  வெறியனுக்கு இருக்கும் உள்நோக்கம் போலவே, அதை எதிர்த்துப் போராடுவோருக்கும் ஏதோ ஓர் உள்நோக்கம் இருப்பது தெளிவாகவே தெரிகிறது.

இந்த விவகாரம் ஏதோ கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினை என்று நம்மால்  வாளாவிருக்க முடியாது. ஏனெனில், சென்னை, அண்ணா சாலையில் கடந்த செப். 18-ஆம் தேதி இஸ்லாமியர்கள் நடத்திய கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நம்மைப் போன்ற பொதுமக்கள் தான். திருநெல்வேலியிலும், ஸ்ரீநகரிலும், மும்பையிலும், உத்தரப் பிரதேசத்திலும் நடக்கும் முஸ்லிம்களின் அடாவடிச் செயல்களைக்   காணும்போது, இந்தியா வேடிக்கை பார்க்கும் நாடாக இருக்க முடியாது என்பது புலப்படும்.

முதலில் இந்தப் படத்தை எடுத்தவர்களின் உள்நோக்கம் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் படத்தைத் தயாரித்தவன் பெயர் ‘சாம் பாசிலி’ என்று முதலில் கூறப்பட்டது. தான் ஒரு 52 வயதான இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்றும், இதற்காக 5  மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை 100 யூதர்கள் திரட்டிக் கொடுத்ததாகவும் அவனே அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு’   தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தான். அதாவது, முஸ்லிம்களை கேவலப்படுத்தி எடுத்த படத்தின் பழியை யூதர்கள் மீது போட்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கத் திட்டம் தீட்டப் பட்டிருக்கிறது. இதிலிருந்தே இந்த அபாயமான படத்தைத் தயாரித்தவர்கள் சாதரணமானவர்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

ஆனால், அமெரிக்க ஊடகங்கள் நம்மூர் ஊடகங்கள் போல அவ்வளவு கேனைகள் அல்ல. அங்கு உண்மையிலேயே மக்களின் நலம் கருதும் பத்திரிகையாளர்கள் இருப்பது இந்த விவகாரத்தில் வெளிப்பட்டிருக்கிறது. அசோசியேட் பிரஸ், இந்தக் கீழ்த்தரமான படத்தின் பின்னணியில் இருப்பவனைத் தோலுரித்தது. உண்மையில் ‘சாம் பாசிலி’ என்ற நபரே கிடையாது என்பதும், கலிபோர்னியாவில், செரிட்டாஸ் என்ற இடத்தில் வசிக்கும் ‘நகோலா பாசிலி’ (Nakola Bacile) என்ற அமெரிக்கன் தான் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்தவன் என்பதும், அவன் பேசிய தொலைப்பேசி எண்ணைப் பின்தொடர்ந்து  புலனாய்ந்ததில் கிடைத்த தகவல்கள்.

எகிப்தின் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் படித்த நகோலா, பிற்பாடு அமெரிக்காவில் குடியேறியவன். அது மட்டுமல்ல, போதைப்பொருள் தயாரிப்பு, நிதி மோசடிக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவன்தான் இந்த நகோலா. ஓராண்டு சிறையில் கழித்தபின், அந்த வழக்கில் ஜாமீனில் வெளியாகிய நகோலா, தனது கிறிஸ்தவத் தொடர்புகளைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் பணக்காரனாக முயற்சித்ததன் விளைவே ‘முஸ்லிம்களின் வெகுளித்தனம்’ என்ற இந்தத் திரைப்படம். என்.பி.சி. நியூஸ் சேனலும் நகோலாவின் தந்திரங்களை அம்பலப்படுத்தியது. தற்போது, நகோலா  அமெரிக்கப்  புலனாய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தகவல்.

இந்த நகோலா, எகிப்து நாட்டில் உள்ள காப்டிக் கிறிஸ்தவர் (Coptic Orthodax Church of Alexandria) என்ற தீவிர பழமைவாதப் பிரிவைச் சேர்ந்தவன். இந்த மதப்பிரிவு கத்தோலிக்க மதத் தலைமைக்குக்  கட்டுப்படாதது. கி.பி. 451-இல் புனித  மார்குவால் (St.Mark) தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் காப்டிக் கிறிஸ்தவப் பிரிவுக்கு அலெக்சாண்ட்ரியா போப் தான் தலைவர். மத்தியக் கிழக்கு நாடுகளிலும், எகிப்திலும் இந்த மதப்பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கணிசமாக உள்ளனர். இந்த மதத்தினர் எகிப்தில் சிறுபான்மையினர். அங்கு இஸ்லாமியர்களால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டதால்,  அதற்குப் பழி வாங்கவே இந்தப்படத்தைத் தயாரித்ததாக நகோலா இப்போது கூறி இருக்கிறான்.

அடுத்து இந்தப் படம் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் உள்ளது. ஏனெனில், இதுவரை, ஒரேமுறை மட்டுமே, அதுவும் 8 பேர் மட்டுமே பார்த்த முன்னோட்டக் காட்சி  மட்டுமே, லாஸ் ஏஞ்சல்சில், ஹாலிவுட் திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்டுள்ளது. அப்போது இந்தப் படத்தின் பெயர் ‘பாலைவனப்  போராளி’ (Desert Warrior) என்பதுதான்! இதை வெளியிட ஒருநாள் அனுமதி பெற்றவர்கள்  கலிபோர்னியாவில் உள்ள ‘மீடியா ஆப் கிறிஸ்ட்’ என்ற அமைப்பினர்!

இதுவரை வெளியாகியுள்ள காட்சிகள் அனைத்துமே, துண்டு விளம்பரப் படக் காட்சிகள் (Trailors) மட்டுமே. அதுவும், கடந்த ஜூலையில் இணையத்தின் யூ-டியூபில் இப்படத்தின் துண்டுக் காட்சிகள் வெளியிடப்பட்டன. அப்போது இதன் பெயர் ‘முகமதுவின் உண்மை வாழ்க்கை’ (Real Life of Muhammad) என்பதாகும். இதனை யூ-டியூபில் வெளியிட்டவரும்,  மோரிஸ் சாடக் என்ற காப்டிக் கிறிஸ்தவரே. இவர் ஒரு எகிப்து-அமெரிக்க பிளாக் எழுத்தாளர். அப்போதெல்லாம்  இந்தப்படம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தவில்லை. இந்தப் படத்தின் அராபிய மொழிபெயர்ப்பு செப்டம்பர் 8-ஆம் தேதி அதே  யூ-டியூபில்  வெளியானபோது தான் பிரச்னை உருவானது.

இதில் இஸ்லாமியர்களின் இறைதூதரான முகமது நபியைப் பற்றி கேவலமாகச்   சித்தரித்து இருப்பதைக் கண்ட முஸ்லிம்கள் கண்டனம் தெரிவிக்கத் துவங்கினர். அதனை, எகிப்து நாட்டில் உள்ள– ஏற்கனவே மத வெறுப்பைத்  தூண்டியதற்காக  தடை செய்யப்பட்ட– தொலைக்காட்சி சேனலான  ‘அல் நாஸ்’  ஒளிபரப்ப,  தீ பற்றிக் கொண்டது. எகிப்தில் துவங்கிய இஸ்லாமியர்களின் ஆர்ப்பாட்டம், அரபு நாடுகள், முஸ்லிம் நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள்  என்று பரவி, இப்போது, ஆசிய நாடுகளிலும் (சீனா தவிர) பிரச்சினையை ஏற்படுத்திக்  கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது? முழுப் படமும் பார்க்க யாருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், இணையத்தில் வெளியான துண்டுப் படங்களில் இருந்து, முகமது நபியை வக்கிரமாக சித்தரித்திருப்பது தெரிகிறது. முஸ்லிம்களின் இறைத் தூதரான நபியை பெண் பித்தராகவும், ரத்தவெறி பிடித்த கொடியவனாகவும், வக்கிரமானவராகவும் காட்டுகிறது படக்காட்சி. குறிப்பாக பெண்களிடம் கீழ்த்தரமான   பாலுறவு கொள்ளும் முகமதுவை இரு பெண்கள் செருப்பால் அடிப்பதும், கழுதைக்கு முஸ்லிம்களை உவமைப்படுத்துவதும் கேவலமான  சித்தரிப்புகள் என்பதில் சந்தேகம் இல்லை. தவிர, இந்தப் படமே மிகவும் நாடகத் தனமாக (Amechur) இருக்கிறது. ஒரே அறைக்குள் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளின் பின்புலத்தில் கிராபிக்ஸ் ஒட்டு முறையில் பாலைவனக் காட்சிகளைச் சேர்த்திருக்கிறார்கள். படத்தில் காணப்படும் வாயசைப்புக்கும் குரல் பதிவுக்கும் எந்த ஒட்டுதலும் இல்லை.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும், இஸ்லாமியர்களின் கொலை மிரட்டலுக்கு அஞ்சி, இப்போது சுய வாக்குமூலம் அளிக்கத் துவங்கி இருக்கின்றனர். ‘பாலைவனப் போராளி’ என்ற பெயரில் படம் தயாரித்துவிட்டு, அதில் தாங்கள் பேசிய வசனங்களை நீக்கிவிட்டு, இயக்குனர் மத வெறுப்பைத் தூண்டும் விதமாக ஒலித் திருத்தம் (Dubbing)  செய்திருக்கிறார் என்று படக் குழுவினர் பலரும் கூறி இருக்கிறார்கள்.  துண்டுப் படங்களைக் காணும்போது, அவர்கள் சொல்வது உண்மை என்றே தெரிகிறது. முதலில் எடுத்த மூலப்படத்தில் ஜார்ஜ்  என்ற கதாபாத்திரமாக நடித்தவர் தனது பாத்திரம் தான் முகமதுவாக மாற்றப்பட்டிருப்பதாகக் கூறி இருக்கிறார். ஆக, இந்தப் படம் முழுவதுமே ஒரு சதித் திட்டத்துடன்தான் எடுக்கப்பட்டுள்ளது என்பது புலனாகிறது.

இந்தப் படத்தின் பின்னணியில் என்ன சதி இருக்க முடியும்? ‘முஸ்லிம்களின் வெகுளித்தனம்’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அதன் பின்விளைவு நன்றாகத்  தெரிந்தே இருந்திருக்கிறது. அதனால் தான், முதலில் இப்பழியை யூதர்கள் மீது போட முயற்சி நடந்தது. படத் தயாரிப்பின் துவக்கம் முதலே அனைத்து விஷயங்களும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் நடித்தவர்களுக்கும்கூட அவர்கள் நடிக்கும் படத்தின் அபாயமான திருத்தங்களோ, அதன் பின்விளைவுகளோ தெரியாமல் ரகசியம் பேணப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எடுத்தவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது. உலகில் இஸ்லாமியர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அது. அதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதன் பின்புலத்தில் அதிதீவிர கிறிஸ்தவ மதவெறி உள்ளது.

இந்த கிறிஸ்தவ மத வெறியர்களின் கருத்து, ”உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் வெகுளித்தனமானவர்கள்; அவர்களது வெறி பிடித்த மதமே அவர்களை மிருகம் ஆக்குகிறது” என்பதுதான். படத்தின் தலைப்பே அதுதானே? அதை நிரூபிக்க  அவர்கள் எடுத்த படம் அதன் பலனை அடைத்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் காட்டுமிராண்டித்தனமானவர்கள் என்பதை தங்கள் பதிலடியால் நிரூபித்திருக்கிறார்கள். அதாவது ‘முஸ்லிம்களின் முரட்டுத்தனம்’ (Arrogance Of Muslims) என்று இந்தப் படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம் என்று தங்கள் வன்முறையால் நிலைநாட்டி இருக்கிறார்கள்.

இரு செமிட்டிக் மதங்களிடையிலான  மோதலில் உலகம் பற்றி எரிகிறது. ஆனால், இரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தாங்களே  உலகின் ரட்சகர் என்று கூறிக்கொண்டு உலகைக் கூறு போடுகிறார்கள். சிலுவைப்போர்கள் இன்னமும் முடியவில்லை; அதன் ஆயுதங்கள் மட்டுமே மாறி இருக்கின்றன என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இப்போதும் கூட, ”இந்தப் படத்தை எடுத்ததற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று ‘ரேடியோ சாவா’ என்ற வானொலிக்கு அளித்த பேட்டியில்  கூறி இருக்கிறான்   நகோலா.  அவனுக்கென்ன கூறிவிட்டான், அகப்பட்டவர்கள் நாமல்லவா?

இந்தப் படத்தின் உடனடி விளைவாக, எகிப்திலும் லிபியாவிலும் அமெரிக்கத் தூதரகங்கள் தாக்கப்பட்டுள்ளன. லிபியாவில் அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்சன் உள்பட 4 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதல் சரியாக செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்திருப்பதில் இருந்தே இது கோபத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பல்ல; திட்டமிட்ட தாக்குதல் என்பது வெளிப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட செப்டம்பர் 11, 2001 ஆம் தேதி நினைவிருக்கிறதா? அதே நாளில் லிபியாவில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்படுவதில் பயங்கரமான சதி இல்லாமல் வேறென்ன வாய்ப்பிருக்கிறது?

அதுவும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரவுள்ள சூழலில், அங்குள்ள அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துவரும் நிலையில், சர்வதேச அரசியலை அமெரிக்கத்  தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தும் ராஜதந்திரமே கூட ஏன் சதியாக உருவாகி இருக்கக் கூடாது? இன்னமும் இந்தக் கீழ்த்தரமான படத்தை எடுத்த கிறிஸ்தவ வெறியன் நகோலாவை அம்பலப்படுத்தாமல் மூடி மறைப்பது அமெரிக்க அரசு மீது பழி கூறவே வழிகோலும்.

அது போகட்டும். இந்தப் படத்தைத் தயாரித்தது அமெரிக்கச் சதியோ, கிறிஸ்தவச் சதியோ, ஏதாகிலும் இருக்கட்டும். அதற்கு, சென்னை, அண்ணா சாலையில்   நிறுத்தப்பட்டிருந்த சாதாரண மக்களின் வாகனங்கள்  என்ன பாவம் செய்தன? செப். 14-ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை த.மு.மு.க. ரவுடிகள் தாக்கிய பிறகும்,   அரசு ஏன் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி, பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்களை சாலையில் திரளவிட்டு வேடிக்கை பார்த்தது? ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் அனைவருமே, மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏன் செயல்பட்டனர்? சென்னையில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் இதுவே காட்சி. பல இடங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டிருக்கின்றன. மக்கள் இஸ்லாமியர்களை அச்சத்துடன் காணும் நிலையை அவர்களே ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் என்ன?

அமெரிக்காவில் எடுத்த முஸ்லிம் விரோதப் படத்துக்கு இந்தியாவில் ஆர்ப்பாட்டமும், கலவரமும் செய்தால் என்ன பயன் கிடைக்கும்-  அரசியல்வாதிகளை மிரட்டுவதைத்  தவிர? இது ஒருவகை உளவியல் ஆதிக்கம். உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் இப்படித்தான் நடந்துகொள்கின்றனர். தங்கள் உயிரை விட மேலானதாக ஏக இறைவனான அல்லாவையும் அவரது தூதரான முகமது நபியையும் அவர்கள் கருதட்டும். அது அவர்களது பிறப்புரிமை. ஆனால், அதை நம்பாத பிற மதத்தவர்கள் மீதான காழ்ப்புணர்வு இஸ்லாமியர்களிடம் மண்டிக் கிடக்கிறது. பெரும்பாலான முஸ்லிம்கள் அந்த எண்ணம் கொண்டிருக்காவிட்டாலும், அவர்களை வழிநடத்துவோரிடம்  அந்தச் சிந்தனையே இருக்கிறது. அதுவே கலவரங்களில் உலகம் முழுவதும் வெளிப்படுகிறது.

குரான் புத்தகம் எரிக்கப்பட்டதாக புரளி கிளப்பிவிட்டால் போதும்,  அல்லது பன்றியை மசூதிக்குள் எறிந்துவிட்டால் போதும், ஒரு நகரில் மதக் கலவரத்தைத் தூண்ட. அதுதான் இந்தியாவின் தற்போதைய நிலைமை. உலகம் முழுவதுமே இஸ்லாமியர்களின் கொந்தளிப்பை எவ்வாறு கையாள்வது என்றுதான் அரசுகள் திண்டாடுகின்றன. முகமது நபி கார்ட்டூன் ஆகட்டும், பர்தாவுக்கு தடை ஆகட்டும், எல்லாத் தருணங்களிலும் முஸ்லிம்களின் எதிர்வினை ‘நேரடி நடவடிக்கை’யாகவே இருக்கிறது. ஏனெனில் அவர்களது மதம் அவ்வாறுதான் அவர்களுக்குக் கற்பித்திருக்கிறது. இதைச் சொல்லவும் யாருக்கும் திராணியில்லை.

சென்னையில் நடந்த முஸ்லிம்களின் வன்முறை வெறியாட்டத்தை   தமிழில்   ‘தினமணி’ நாளிதழ் (20.09.2012) மட்டுமே கண்டித்தது. அதற்கு அந்த இணையப் பக்கத்தில் வந்துள்ள பின்னூட்டங்களைக்  கண்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. தினமணி ஆசிரியருக்கே மிரட்டல் விடுக்கின்றனர். இத்தனைக்கும் மிகவும் மென்மையாக எழுதப்பட்ட தலையங்கம் அது. இதே நிலைதான் 2008-இல் ‘வார்த்தை’ மாத இதழில் ‘எனது இந்தியா’ என்ற கட்டுரையை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் நேரிட்டது என்பதை இந்நேரத்தில் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்ததாக, இஸ்லாமியர்களின் வாக்குவங்கிக் கனவில் லயித்திருக்கும் சிறுபான்மைப் பித்து கொண்ட அரசியல்வாதிகளுக்கு தங்கள் வலிமையைப் பறைசாற்றக் கிடைத்த வாய்ப்பாகவே இத்தகைய தருணங்களை இஸ்லாமிய அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன. அது அசாம் இனக் கலவரமாக இருந்தாலும் சரி, காஷ்மீரின் ஹஸ்ரத்பால் மசூதி விவகாரமாக இருந்தாலும் சரி, டிசம்பர் ஆறானாலும் சரி, மும்பை குண்டுவெடிப்பானாலும் சரி, முஸ்லிம்கள் நாடு முழுவதும் இவ்வாறுதான் நடந்து கொண்டிருக்கிறார்கள். இன்று பாஜகவுடன் பிற கட்சிகள் சேரத் தடையாக இருப்பது, இவ்வாறு இஸ்லாமிய வன்முறையாளர்கள் உருவாக்கியுள்ள அச்சம்தான். இதேதான் சுதந்திரத்துக்கு முன்னர் மகாத்மா காந்தியிடமும் இஸ்லாமியர்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதை சரித்திரப் பிரக்ஞையுடன் பார்த்தால்தான், நாம் இருக்கும் நாடும் உலகமும் எவ்வளவு அபாயமான இடத்தில் இருக்கின்றன என்பது புரியும்.

மொத்தத்தில், இந்த உலகம் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கும் இடையிலான சொத்துத் தகராறில் ரத்தம் சிந்துவது தொடர்கிறது. அடுத்த உலகப்போருக்கு ஒரு ஒத்திகையாகவே இன்றைய சதியைக் காண வேண்டும். அப்படி மீண்டும் ஒரு உலகப்போர்  மதவெறி காரணமாக மூளுமானால், நாம் யாரும் மிச்சம் இருக்க மாட்டோம் என்பது மட்டும் நிச்சயம். அதற்கு, அந்த அளவற்ற அருளாளனும், பகைவரையும் நேசிக்கச் சொன்ன தேவதூதனும் தான் காரணமாக இருப்பார்கள்.