தமிழ்ஹிந்து தளத்தினைத் தாங்களாகவே தொடர்பு கொண்டு, இலங்கையில் திருமுறை வேள்விகள் நடத்துவது பற்றிய இந்த விவரணங்களை செயல்திட்டக் குழுவினர் நம்மிடம் அளித்தனர்.
Ivermectin is a general term used to describe the drug ivermectin, which is usually present in two components called ivermectin and a chemical substance known as ivermectin b1. Viagra for sale in 3 days the last thing you want to get behind is someone you are trying Alblasserdam buy xenical online amazon to break up with. Azithromycin price philippines mercury drug review and buy.
Ivermectin for hookworms in humans has many potential advantages over currently used drugs like praziquantel. There are many other possible neutrally causes, such as an infection (like giardia, a type of parasite in the stomach and intestines of people who have been malnourished, and e. Gabapentin and flexeril together reduce the number of episodes of acute pain and improve function at night.
De middelen, die zeker ook aan de oplossing liggen of in de klas voor stromklets. The generic names for this medication include clomid for men for sale Stuttgart Feuerbach doxycycline hydrochloride and doxycycline. It is very important for me because i need to complete my last year project.
இந்தச் செயல்திட்டம் இறையருளால் தடையின்றி நடந்து நிறைவுபெறுக என வாழ்த்தி அந்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
பின்னணி:
இலங்கைத் தீவில் இரத்த ஆறு ஓடி ஓய்ந்திருக்கிறது. போர் முடிந்து விட்டாலும் மிகவும் குழப்பமுற்ற நிலை இருக்கிறது; சிங்கள இனவெறியும், பௌத்த மதவெறியும், கிறிஸ்தவ சூழ்ச்சியும் இணைந்து தமிழர் வாழ்வையும், உரிமைகளையும் பல பத்தாண்டுகளாக சூறையாடி, அதன் இறுதிக் கட்டமாக போர் முடிந்த பின்னும் இன்னும் விடியல் வரவில்லை.
இந்தப் போரில் பாதிக்கப்பட்டோரில் 85% தமிழ் இந்துக்கள். சைவ சமயத்தை உயிரினும் மேலாகப் போற்றி வரும் பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள் . அழுது கொண்டிருக்கிறார்கள்; அலமந்து இருளில் மூழ்கி இருக்கிறார்கள். விம்மலும், வேதனையும், கண்ணீரும், கம்மலையும், அழுகுரலும் ஓயாத நிலமாகச் சைவத் தமிழ் மக்களின் நிலம் வரண்டு சிவந்து போயிருக்கிறது.
ஓய்ந்து உழன்று துவண்டு நாதியற்று, கேட்பாரின்றி துயரம் மீநிற்க, துன்பத்திற்கு மேல் துன்பம் சூழ முகாம்களில் இருந்து முகாம்களுக்கு அலைக்கழிந்து ஆற்றொண்ணாத் துயருடன் ஏங்குகின்றனர் தமிழ் மக்கள். அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவர்களது உரிமைகளை மீட்பதுடன் கூடவே, அந்த மக்களின் நெஞ்சங்களுக்கு நம்பிக்கை ஒத்தடம் அளிப்பதும் மிக மிக முக்கியமானது.
”இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே”
என்று சம்பந்தரும்,
”கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே”
என்று அப்பரும் அருளிச் செய்துள்ளனர்.
சைவத் தமிழ் மக்களுக்குச் சைவ நெறிதான் உயிர்; வேத ஆகம வழிபாடுகள் நடப்பதற்கும், திருமுறைகள் ஓதுவதற்கும், திருநெறிகள் கைக்கொள்வதற்கும் உரிய இடங்களாக ஆயிரக் கணக்கான திருக்கோயில்கள் தமிழர் நிலப்பகுதியில் பல நூற்றாண்டுகள் வரலாற்றுப் பெருமை பெற்று இருந்தன. போரின் காரணமாகவும், திட்டமிட்ட கலாசார ஒழிப்பு மூலமாகவும் இப்பழம்பெரும் திருக்கோயில்களும் சிதைந்தன; மீதமிருப்பனவும் சிறிது சிறிதாக அழிந்து வருகின்றன. அண்மையில் கூட யாழ்-காங்கேசந்துறை நெடுஞ்சாலைத் விரிவாக்கத்திற்காக என்று சொல்லப்பட்டு 70க்கும் மேற்பட்ட பழைய சைவக் கோயில்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டப் படுவதாக கவலை தெரித்தனர் இலங்கைத் தமிழ் மக்கள்.
வழிபடலாம் என்று போனால் இடிபாடுகள். வழியிலேயே மாற்றுச் சமயத்தார் – “உங்கள் வழிபாடுகள் உங்களுக்கு விமோசனத்தைத் தரவில்லை; மதம் மாறுங்கள்; எங்கள் நெறியில் சேருங்கள்” என ஒரு கையில் அவர்களின் மத வெறி காட்டும் புத்தகம், மறுகையில் அயல் நாடுகள் அள்ளிக் கொடுத்த பணக்கற்றை! இது ஒரு புறம்.
சிவன் கோயிலோ, முருகன் கோயிலோ, துர்க்கை கோயிலோ, பிள்ளையார் கோயிலோ, அம்மன் கோயிலோ இலங்கையில் இருக்கவில்லை என்றும் அவை அனைத்தும் புத்தர்களின் பாதம்பட்ட இடங்கள், தேரர்கள் புத்த நெறியை ஓதிய இடங்கள், புத்தரின் ஈமச் சின்னங்கள் புதைத்த இடங்கள், என்றும் முழங்கிப் புத்தர் சிலைகள் சைவத் தமிழர் நிலப்பகுதியெங்கும் அரசு ஆதரவுடன் அமைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மளமளமென்று விகாரங்கள் எழுகின்றன; தூபிகள் கட்டப்படுகின்றன; கண்மூடி விழிக்குமுன் விரைவாக கட்டப்படுகின்றன. இது மற்றொரு புறம்.
அலமந்து நிற்கும் மக்களுக்கு அடிக்குமேல் அடி, நம்பிக்கைக்கு உதைக்கு மேல் உதை, வாழ்வின் ஏக்கத்திற்கு இடிக்கு மேல் இடி; சைவ சமயத்தில், இந்து மதத்தில் தொடர்வதா, தமிழைப் பேசுவதா என்ற அச்சம் மீதூர அவர்கள் நிலை இருக்கையில், மாற்றுச் சமயத்தில் சேர்ந்து விடு சேர்ந்து விடு என்று அருகாமையிலேயே ஆர்ப்பரிக்கும் குரல்கள்.
நோக்கம்:
தமிழ் இந்துக்களை யார் காப்பாற்றுவது? சைவ நெறியும் இந்து மதமும் உகந்ததா? ஏற்றதா?, காப்பாற்றுமா? என்ற ஆதங்கம் மேவ ஒதுங்கிக் கொள்வோம் என்ற கண்ணோட்டத்துடன் விரக்தியுற்று இருப்பவர்களை நோக்கி அனைத்து இந்துக்களும் திருக்கண் நோக்க வேண்டும்.
தமிழையும், இந்து தர்மத்தையும், சைவத்தையும் ஈழத்தின் தமிழ் நிலப் பகுதிகளில் மட்டும்தான் கைக்கொள்வோர் இருக்கிறார்களா? ஏறத்தாழ ஐந்தரைக் கோடி எண்ணிக்கையான தமிழ் இந்து மக்கள் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் இந்திய மாநிலங்களிலும் இருக்கிறார்கள். வருவாய் தரும் இந்துத் திருக்கோயில்கள் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஏராளம். இந்து தர்மத்தையும், சைவத்தையும், தமிழையும் காக்கும் மடங்கள், ஆதினங்கள், அமைப்புகள் இந்தியாவில் பற்பல.
ஈழத்திலே ஊர் ஊராகச் சென்று சைவ மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய கட்டாயமும், கடமைப்பாடும், தேவையும், உரிமையும் தமிழகத்து இந்துக்களுக்கு, குறிப்பாக சைவப் பெருமக்களுக்கும், ஆதீனங்களுக்கும், சைவத் திருக்கோயில்களுக்கும் உண்டு.
இந்தக் கடமையை உணர்ந்து, தமிழகத்திலிருந்து ஈழம் சென்று சைவத் திருமுறைகள் ஓதி ஞான வேள்வி செய்து, தமிழக இந்துக்களின், சைவ மக்களின் ஆதரவு ஈழத்தமிழருக்கு என்றென்றும் உண்டு என்பதை நிலைநிறுத்திச் சிவநெறியில் ஈழத்தமிழரை ஈடுபடுத்தும் நோக்கத்துடன் கோவையைச் சார்ந்த இந்து அமைப்புகள், சைவ சமய மன்றங்கள் இணைந்து ஒரு செயல் திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.
செயல் திட்டம்:
ஈழத்தமிழர் தாயகம் இலங்கைத் தீவில் ஒன்பது ஆட்சி மாவட்டங்களை (அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம்) உள்ளடக்கியது. மலையகத் தமிழரின் தாயகம், எட்டு ஆட்சி மாவட்டங்களை (கொழும்பு, இரத்தினபுடி, மாத்தளை, குருணாகல், கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை) உள்ளடக்கியது.
இந்தப் பதினேழு மாவட்டங்களிலும் உள்ள சைவத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முதற்கட்டமாகத் திருமுறை வேள்விகளை நிகழ்த்துகிறோம். சைவத் துறவிகள், திருமுறை ஓதுவார்கள், இசை விற்பன்னர்கள், தொண்டர்கள் தமிழகத்தில் இருந்து குழுவாகச் சென்று இந்தப் பதினேழு மாவட்டங்களிலும் உள்ள ஊர்கள் தோறும் திருமுறை வேள்விகளை நிகழ்த்துவர்.
ஒரு வேள்வியல்ல, இரண்டு வேள்வியல்ல, ஆகக் குறைந்தது நூற்றைம்பது வேள்விகளை நிகழ்த்த வேண்டும். நுற்றைம்பது ஊர்களைத் தேர்ந்தெடுப்பர். கதிர்காமத்தில் முதலாவது வேள்வி தொடங்கி, கிழக்குக் கரையோரமாகச் சென்று, பின்பு மேற்குக் கரையோரமாகத் திரும்பி, கொழும்பு வரை வந்து, மலையகத்தில் புதுந்து அங்கெல்லாம் திருமுறை வேள்விகளை நடத்திச் சைவ மக்கள், தமிழ் மக்கள் சைவ நெறியில் ஊடாட்டம் அற்ற நம்பிக்கை கொள்ளுமாறு உதவுவர்.
ஒருங்கிணைப்பு:
திருமுறை ஞான வேள்வி நடத்துவதில் கோயம்புத்தூரில் திருமிகு. கங்காதரர் ஓதுவார் பயிற்சி பெற்றுப் பல இடங்களில் செய்து வருகிறார். அவர் தலைமையில் துறவிகள் ஐவர், ஓதுவார்கள் ஐவர், தொண்டர்கள் ஐவர் எனப் பதினைந்து பேர் கொண்ட குழு இலங்கைக்குச் சென்று ஊர் ஊராகத் திருமுறை வேள்விகளை நிகழ்த்துவர்.
வேள்வியை முறைப்படுத்தி நெறிப்படுத்துபவர்:
பண்ணிசைமணி. சி. வைத்தியநாத தேசிகர் கங்காதர தேசிகர்
14பி, திருவள்ளுவர் வீதி, மணியக்காரன் பாளையம்,
கணபதி அஞ்சல், கோவை 641 006,
தொலைபேசி: +91-9843299222
குழுவில் இடம்பெறும் மற்ற தொண்டர்கள் பற்றிய விவரங்கள் கீழே பின்பு தரப்பட்டுள்ளன.
பயணம்:
நூற்றைம்பது திருமுறை வேள்விகள், நூற்றைம்பது நாட்கள், பதினைந்து பேர்கொண்ட குழுவாக, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்வதாகத் திட்டம்.
கொழும்பு வரை விமானத்தில் பயணம், அங்கிருந்து இதற்காகவே ஏற்பாடு செய்த வாடகை கார் ஒன்றை அமைத்துக்கொண்டு இந்தப் பதினைந்து பேர்களும், வேள்வி வழிகாட்டிகளும் ஊர் ஊராக சென்று, தங்கி, திருமுறை வேள்வி நடத்தி சைவச் செஞ்சாலியானது துளிர்த்துக் கதிர் விட்டுப் பொலிகின்ற காட்சியை உண்டாக்குவர்.
நோக்க நிறைவு:
சைவ மக்களிடையே தன்னம்பிக்கை பெருகும். சைவ சமய நெறியில் நம்பிக்கை வரும்
அலமந்த மக்களுக்கு ஆதரவுக் கரம் தமிழ்நாட்டில் இருந்து நீள்கிறதே என்ற உற்சாகம் பிறக்கும்
காலம் :
பயணத்தில் ஈடுபடுவோர் கடவுச் சீட்டு மற்றும் பயண ஆவணங்களைத் தயார் செய்து வருகின்றனர். அறுவடை முடிந்த கோடை காலத்தில் வழக்கமாகத் தமிழ் இந்துக்கள் ஈழத்தின் கோயில்களில் திருவிழா கொண்டாடும் காலத்தில் இந்த வேள்விப் பயணம் நடைபெறத் திருவருள் கூட்டுவதாக.
இத்திட்டத்தில் பங்கு பெறவும், உதவிபுரியவும் விழைவோர் ஒருங்கிணைப்பாளர் திரு. கங்காதர தேசிகர் அவர்களை மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொண்டர்கள்:
குழுவில் திரு சி. வைத்தியநாத தேசிகர் கங்காதர தேசிகர் உடன் கூட, பின்வருவோர் இடம்பெறுவர் –
1. தவத்திரு அனந்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள், காமாட்சிபுரம் ஆதீனம், ஒண்டிப்புதூர் அஞ்சல், கோவை.
2. திருப்பெருந்திரு சடாட்சர வேல் சுவாமிகள், கச்சியப்பர் மடாலயம், ஈச்சநாரி, கோவை.
3. தவத்திரு நாகசக்தி பீடம் சிவ சண்முகசுந்தரபாபு சுவாமிகள், மலுமிச்சம்பட்டி, ஈச்சநாரி, கோவை.
4. தவத்திரு கிருட்டினமூர்த்தி சுவாமிகள், கெம்பட்டி குடியிருப்பு, கோவை
5. தவத்திரு கணேசமூர்த்தி அடிகளார், நவக்கிரகக் கோயில், காவட்டி, நாயக்கன்பட்டி, சுப்பனாபுரம், பேரையூர், மதுரை.
6. தவத்திரு குமாரசுவாமி சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ஆன்மீகப் பேரவை, ஊஞ்சவேலாம்பட்டி, பொள்ளாச்சி.
7. ஓதுவார் முருகேசு பழனிச்சாமி, நாதேகவுண்டன்புதூர், ஆலந்துறை வழி, கோவை.
8. ஒதுவார் ஆறுமுகம் பால கிருட்டிணன், மீனாட்சிபுரம், பொள்ளாச்சி.
9. ஓதுவார் இராயப்ப கவுண்ட பொன்னுசாமி, சேடன் தோட்டம், கோவை.
10. ஓதுவார் இராமசாமி முருகானந்தம், மெல்லப்பமுதலியார் தோட்டம், அசோக் நகர், வேட்டைக்காரன் புதூர்.
11. ஓதுவார் ஆறுமுகம் தண்டபாணி, மூலத்துறை அஞ்சல், சிறுமுகை.
12. ஓதுவார் வெள்ளியங்கிரி ஆனந்தசிவம், மீனாட்சி தோட்டம், ஜிஎன் மில்ஸ், கோவை.
13. ஓதுவார் திருநாவுக்கரசு நாராயணன் தேசிகர், சிஎம் எம் வீதி, காரைக்குடி.
14. ஓதுவார் பழனிச்சாமி நடராசன், கிருட்டினராசா வீதி, சித்தாதோட்டம், கணபதி அஞ்சல், கோவை.
15. ஓதுவார் ஆர். கணேச தேசிகர், சிரவை ஆதீனம், சின்னவேடம்பட்டி அஞ்சல், கோவை.
நிகழ்வுகள்
சைவத் திருமுறைகளை முன்னிலையாக்கி, பாடல்களைத் தமிழோடு இசைபாடி, இறைவனை நாடும் வேள்வி, காலையில் 8 மணிக்குத் தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிந்துவிடும், ஊர்வெளியிலே பந்தல் அமைந்து இவ்வேள்விகளை நடத்தும்போது ஊர் மக்கள் அங்குத் திரண்டு வருவார்கள்; வழிபாட்டில் ஈடுபடுவார்கள். திருமுறைகளை ஓதுவார்கள் கூட்டு வழிபாட்டில் ஈடுபடுவார்கள், நம்பிக்கையூட்டும் நல்லுரைகளால் ஆறுதல் பெறுவார்கள். மாலையில் திருமுறை இசை நிகழ்ச்சி, சைவ நெறிகள் பற்றி உரைகள் நிகழ்த்தலாம்.
நிகழும் இடங்கள்
இலங்கையில் 22 ஆட்சி மாவட்டங்களும், அவற்றில் 150 திருமுறை வேள்வி நடக்கவுள்ள ஆட்சிக் கோட்டங்களும் அங்குள்ள அமைப்புகளும் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.
1. கொழும்பு மாவட்டத்தில் 9 கோட்டங்கள், அவற்றுள் 6 கோட்டங்களில் 15 திருமுறை வேள்விகள்.
1. கொலன்னாவை, 2 அவிசாவளை, 3. மகாரகமை, 4. நுககொடை, 5 மொரட்டுவை, 6. அவிசாவள.
நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தும் அமைப்புகள்:
1. விவேகானந்த சபை
2. அன்னை அபிராமி ஆசிரமம்
3. கொழும்பு வடக்கு இந்து பரிபாலன சங்கம்
4. சைவ முன்னேற்றச் சங்கம்
5. கொழும்பு மகளிர் இந்து மன்றம்
6. சுங்கத் திணிகள இந்து ஊழியர் சங்கம்
7. ஈழத்து திருநெறித் தமிழ் மன்றம்
8. அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம்
9. இந்து கலாசார மன்றம்
10. இந்து வித்தியா விருத்திச் சங்கம்
11. கதிகாம யாத்திரீகர் தொண்டர் சபை
12. சட்ட மாணவர் இந்து மகாசபை
13. இரத்மலானை – மொடட்டுல இந்து மன்றம்
14. சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் பரிபாவன சபை
15. ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் தேவஸ்தானம் அறங்காவலர் சபை
16. கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் கோவில் அறங்காவலர் சபை
2. கம்பகா மாவட்டத்தில் 13 கோட்டங்கள், அவற்றுள் 4 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்
1. நீர்கொழும்பு, 2. முனுவாங்கொடை, 3. வத்தளை, 4. ஜாஎல
நடத்துவோர்:
1. நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கம்
3. குருணகல் மாவட்டத்தில் 18 கோட்டங்கள் அவற்றுள் 4 கோட்டங்களில் 4 திருமுறை வேள்விகள்
1. குருணாகல், 2. குளியாப்பிட்டி, 3. பொல்காவலை, 4. நிக்கவரெட்டியா
நடத்துவோர்:
1. ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை, பொல்கவலை.
4. இரத்தினபுரி மாவட்டத்தில் 12 கோட்டங்கள், அவற்றுள் 5 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்
1. எகலியகொடை, 2. குருவித்தை, 3. இரத்தினபுரி, 4. பலாங்கொடை, 5. நிவித்திகலை
நடத்துவோர்:
1. பலாங்கொடை இந்து மன்றம்
2. இரத்தினபுரி முருகன் கோயில்
5. கேகாலை மாவட்டத்தில் 10 கோட்டங்கள், அவற்றுள் 8 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்
1. இரம்புக்கனை, 2. மானவலை, 3. கல்கமுவை, 4. கேகால, 5. வரக்காப்பொலை, 6. எட்டியாந்தோட்டம், 7. தெரணியகலை 8. தெகியோவற்றை
நடத்துவோர்:
1. கேகாலைப் பிள்ளையார் கோயில்
6. மாத்தளை மாவட்டத்தில் 11 கோட்டங்கள், அவற்றுள் 4 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்
1. மாத்தளை, 2. இலக்கலை, 3. இரத்தோட்டை, 4 உக்குவெலை
அவற்றை நடத்துவோர்:
1. மாத்தளை பாக்கிய வித்தியாசாலை
2. மாத்தளை முத்துமாரியம்மன் கோயில்
7. கண்டி மாவட்டத்தில் 17 கோட்டங்கள் அவற்றுள் 4 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்
1. குண்டசாலை, 2, கண்டி 3. எட்டிநுவரை, 4. தும்பன
அவற்றை நடத்துவோர்:
1. பேராதனைப் பல்கலைக்கழக குறிஞ்சிக்குமரன் ஆலய அறங்காவலர் சபை
2. மத்திய மாகாண இந்து மகா சபை
8. நுவரெலியா மாவட்டத்தில் 5 கோட்டங்கள், அவற்றுள் 5 கோட்டங்களில் 10 திருமுறை வேள்விகள்
1. கொத்தமல, 2. உடஜேவகதத்தை 3. வலப்பனை, 4. நுவரெலியா 5. அம்பலகமுவை
அவற்றை நடத்துவோர்
1. அட்டன் இந்து வாலிபர் சங்கம்
2. மஸ்கெலியா இந்து மாமன்றம்
3. ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பரிபாலன சபை, சீதா எலிய
9. வதுளை மாவட்டத்தில் 14 கோட்டங்கள் அவற்றுள் 5 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்
1. வதுளை, 2. பண்டாரவளை, 3. அப்புத்தளை, 4. வெலிமடை, 5. பாசறை
அவற்றை நடத்துவோர்:
1. பண்டாரவளை இந்து இளைஞர் மன்றம்
2. வதுளைப் பிள்ளையார் கோயில்
10. புத்தளம் மாவட்டத்தில் 10 கோட்டங்கள், அவற்றுள் 4 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்
1. புத்தளம் 2. சிலாபம், 3. ஆனைமடு, 4. உடைப்பு
அவற்றை நடத்துவோர்:
1. முன்னேஸ்வர ஆலய அறங்காவலர்,
2. உடைப்பு அம்மன் ஆலய அறங்காவலர்,
3. புத்தளம் பிள்ளையார் கோவில் அறங்காவலர்.
11. அநுராதபுரம் மாவட்டத்தில் 19 கோட்டங்கள், அவற்றுள் 5 கோட்டங்களில் 6 திருமுறை வேள்விகள், பொவன்னறுவையில் ஒன்று
1. மதவாச்சி, 2. நொச்சியாகமம், கெக்கிராவை, 4. அநுராதபுரம், 5. பதவியா (6. பொலன்னறுவைச் சிவன்கோயில்)
அவற்றை நடத்துவோர்
1. அநுராதபுரம் விவேகானந்தசபை
12. வவுனியா மாவட்டத்தில் 4 கோட்டங்களில் 10 திருமுறை வேள்விகள்
1. நெடுங்கேணி, 2. வவுனியா தெற்கு, 3. வவுனியா … 4. செட்டிகுளம்
அவற்றை நடத்துவோர்.
1. சுத்தானந்த இந்து இளைஞர் மன்றம்
2. ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய பரிபாலன சபை வவுனியா
3. மகாதேவ ஆச்சிரமம், கிளிநொச்சி
13. மன்னார் மாவட்டத்தில் 4 கோட்டங்கள் 4 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்
1. மன்னார், 2. மாந்தை மேற்கு, 3. நானாட்டான் 4. முசலி
அவற்றை நடத்துவோர்.
1. மன்னார் இந்து மகாசபை
2. மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம்
3. திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை
14. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13 கோட்டங்கள், அவற்றுள் 13 கோட்டங்களில் 15 திருமுறை வேள்விகள்
1. நெடுந்தீவு, 2. ஊர்காவற்றுறை 3. சங்கானை, 4. சண்டிலிப்பாய், 5. தெல்லிப்பளை, 6. கோப்பாய், 7. வடமராட்சி, 8. பருத்திதுறை, 9. உடுவில், 10. வேலணை, 11. யாழ்ப்பாணம், 12. நல்லூர், 13. சாவகச்சேரி
அவற்றை நடத்துவோர்
1. நல்லை ஞானசம்பந்தர் ஆதீனம்
2. தெல்லிப்பளை துர்க்கை அம்மன் அறங்காவலர்
3. காரைநகர், ஈழத்துச் சிதம்பர அறங்காவலர்,
4. நயினா தீவு நாகபூசனி அம்மன் அறங்காவலர்,
5. சாவகச்சேரி சிவன்கோவில் அறங்காவலர்
6. வல்வெட்டித்துறை சிவன்கோவில் அறங்காவலர்
7. ஊர்காவற்றுறை இந்து சங்கம்
8. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் அறங்காவலர்
9. நீலகண்ட இளைஞர் சைவ அபிவிருத்திச் சபை சாவகச்சேரி
10. உடுவில் இந்து இளைஞர் மன்றம்
12. யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை
15. திருகோணமலை மாவட்டத்தில் 10 கோட்டங்கள், அவற்றுள் 10 கோட்டங்களில் 15 திருமுறை வேள்விகள்
1. பதவிசிறீபுரம், 2. குச்சவெளி, 3. குமரன்கடவை, 4. மொரவாவி, 5. நகரமும் புறமும், 6. தம்பலகாம, 7. கிண்ணியா, 8. மூதூர், 9. சேருவிலை, 10. கந்தளாய்
அவற்றை நடத்துவோர்:
1 இந்து இளைஞர் மன்றம்
2. திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை
3. திருகோணேச்சர ஆலய பரிபாலன சபை
16. மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 கோட்டங்கள், அவற்றுள் 8 கோட்டங்களில் 15 திருமுறை வேள்விகள்
1. கோறளப்பற்று, 2. கோறளைப் பற்று வடக்கு, 3. ஏறாவூர்ப்பற்று, 4. மண்முனை வடக்கு, 5. மண்முனை தென்மேற்கு, 6. மண்முனை மேற்கு, 7. ஏராவில், 8. போரதீவு
அவற்றை நடத்துவோர்:
1. இந்து இளைஞர் மன்றம்
2. மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றம்
3. மட்டக்களப்பு – அம்பாறை இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியம்
4. குருக்கள் மடம் இந்து சமய விருத்திச் சபை
5. மட்டக்களப்பு கதிரொளி இல்லம் கொக்கட்சிசோலை
6. கூழாவடி இந்து இளைஞர் மன்றம்
7. மட்டக்களப்பு சைவத் திருநெறி மன்றம்
17. அம்பாறை மாவட்டத்தில் 12 கோட்டங்கள், 12 கோட்டங்களில் 15 திருமுறை வேள்விகள்
1. பதியத்தலாவை, 2. மகாஓயா, 3. உகணஇ, 4. சம்மாந்துறை, 5. கல்முனை, 6. நிந்தாவூர், 7. அட்டாளைச்சேனை, 8. அக்கரைப்பற்று, 9. தமனை, 10, திருக்கோவில், 11. பொத்துவில், 12 இலகுகல்
அவற்றை நடத்துவோர்
1. கல்முனை இந்து இளைஞர் மன்றம்
2. ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் அக்கரைப்பற்று
3. மட்டக்களப்பு – அம்பாறை இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியம்
18. களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் 55 கோட்டங்களில் 5 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்
1. மாணந்துறை, 2. காலி, 3. மாத்தறை, 4. திசைமாகாராமம் (கதிர்காமம்) 5. மொனராகலை
சைவ அமைப்புகள் இல்லாத ஊர்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் ஒழுங்குகளைச் செய்துதரும்.