“சூப்பர் பிரெய்ன் யோகா”

”தோப்புக் கரணம்” நம்மூர் பள்ளிகளில் இது தண்டனை. அதையே அமேரிக்கர்கள் செய்தால் அது…

View More “சூப்பர் பிரெய்ன் யோகா”

யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 3)

யோகம் என்பது ஏதோ மூச்சு பயிற்சியோ, அல்லது உடற்பயிற்சியோ மட்டும் அல்ல. அது ஒரு ஆன்மீகத் தேடலுக்கான சிறந்த வழிமுறை. யோகம் சனாதன தருமத்தின் ஆணிவேர். இந்த கட்டுரை யோகத்தின் வெவ்வேறு பெயர்களை சொல்லி அவற்றை சுருக்கமாக விளக்க மேற்கொள்ளப்பட முயற்சி மட்டுமே. யோக சாத்திரத்தின் ஒவ்வொரு யோக முறையும் கடலளவு பெரியது. சனாதன தருமத்தில் பங்கு வகிக்கும் எந்த மார்க்கத்திலும், அது முருக வழிபாடாகட்டும், அனுமனின் வழிபாடாகட்டும், சக்தி வழிபாடாகட்டும், வைணவ வழிபாடாகட்டும், எந்த வழிபாட்டிற்கும் அடிப்படையானது யோகம். இதுவே அந்தந்த இஷ்ட தெய்வங்களின் அருளை பெற்றுத்தந்து முக்தி அடைய உதவக் கூடியது.

View More யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 3)

யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 2)

இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தில் யோகம் என்பது நான்கு பிரிவுகளாகவும், ஒவ்வொரு பிரிவிலும் எட்டு அங்கங்களை கொண்டதாகவும் பார்த்தோம். அந்த எட்டு அங்கங்களை இந்த பகுதியில் சுருக்கமாக பார்ப்போம். அஷ்டாங்க யோக முறையில் ஐந்து பகுதிகள் – அங்கங்கள் பகிரங்கமாக அதாவது உடலை கட்டுப் படுத்துவதும், மூன்று பகுதிகள் அந்தரங்கமாக உள்ளத்தை – மனதை கட்டுப்படுத்தக் கூடிய பயிற்சியுமாக பிரித்து கூறுவர். அதாவது யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம் ஆகியவை பகிரங்கமாகவும் – வெளிப்படையாக உடலை கட்டுப்படுத்தவும்; தியானம், தாரணை, சமாதி ஆகியவை மனதை கட்டுப்படுத்தவும் என பிரிக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றைப்பற்றியும் மிகச் சுருக்கமாக காண்போம்.

View More யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 2)

யோகம் – ஒரு எளிய அறிமுகம்

ஆன்மீகத்தில் யோகம் என்ற சொல்லை, மனிதன் தன் முயற்சிகளின் உச்சமாக அடையும் இன்ப துன்பங்கள் அற்ற விடுதலையே யோகம் என்றும், இன்னொரு விதத்தில் அந்த விடுதலை அடைவதற்கு உரிய வழியே யோகம் என்றும் இருவிதமான பொருளிலும் பயன்படுத்துவர். ஞானியர் வகுத்த பல்வேறு ஆன்மீக மார்க்கங்களில் யோகம் என்பது உடலை வருத்தி செய்யக்கூடிய பயிற்சி முறையாகவும், மனதை அடக்கி செய்யக் கூடிய பயிற்சி முறையாகவும் முக்கியமாக இரு பகுதிகளை கொண்டு விளங்குகிறது. தற்காலத்தில் பரவலாக யோகா என்பது உடல் வளக் கலையாகவும், மனவளக் கலையாகவும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இவை யோகத்தினால் அடையும் முதல் படி மட்டுமே – யோகம் இதைவிட பெரியதொரு நன்மைக்காக ஏற்பட்டதாகும்.

View More யோகம் – ஒரு எளிய அறிமுகம்