முகப்பு » ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்


முந்தைய கட்டுரை: அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

(தொடர்ச்சி…)

வேதம் கூறும் பிரபஞ்சவியலில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும், ஒன்றையடுத்து ஒன்றாகவும் முடிவில்லாமல் (infinity) பலப்பல உலகங்கள் (Universes) வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன என்று பார்த்தோம். இவற்றில் எப்பொழுதுமே கால் பங்கு, தோற்றம் கொண்டவையாகவும் (manifest) மீதி முக்கால் பங்கு, தோற்றம் இல்லா நிலையிலும் (unmanifest) இருப்பதை நடராஜரின் தாண்டவம் எப்படிக் காட்டுகிறது என்றும் பார்த்தோம்.

இந்த அமைப்பில் மும்மூர்த்திகளும் ஓய்வு ஒழிவில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தையும் தாங்கியும், ஊடுருவியும் இருக்கும் முழு முதல் பரப் பிரம்மம் நாராயணன் எனப்படுகிறான் என்று பிரமாண நூல்கள் கூறுகின்றன என்றும் பார்த்தோம். இந்த நூல்கள் உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்பவை என்று அனைத்து ஆசார்ய புருஷர்களும் கூறியுள்ளனர். இவை constitution of India போன்றவை. இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் இந்து மதத்தின் எல்லா வழிகளும், வழக்கங்களும் எழுந்துள்ளன.

கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.

முக்தி பெற சிவனை வணங்கினால் என்ன, விஷ்ணுவை வணங்கினால் என்ன, இதில் என்ன பேதம் இருக்கிறது என்று எண்ணலாம். அப்படி அல்ல, இந்தக் கடவுளை வணங்கினால்தான் முக்தி, அந்தக் கடவுளை வணங்கினால் முக்தி கிடைக்காது என்றும் எண்ணலாம். இதன் விளைவாக எந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சையும் பல காலம் நடந்து வந்திருக்கிறது. பல காலம் என்றேன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில் இந்தச் சர்ச்சை இல்லையா என்றால், இல்லை என்று சொல்லலாம். காரணம், இவை குறித்த கருத்துகளை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். அதற்கும் காரணம், பிரமாண நூல்கள் சொல்லும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர்.

எனவே பிரமாண நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

இந்த மூன்று நூல்களுள், பிரம்ம சூத்திரம் முழுவதுமே, பிறக்கும் உயிர்களின் நிலை, பரம் பொருள் என்னும் பரப் பிரம்மத்தின் நிலை, அந்தப் பரம் பொருளை அடையும் விதம் ஆகியவை பற்றி ரிஷிகள் கூறியுள்ள விஷயங்களை சூத்திரங்களாகக் கொண்டுள்ளது. அந்த நாளிலும் எழுந்துள்ள பல எதிர் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அவை உள்ளன.

அவை கூறுவது என்னவென்றால், பரப் பிரம்மனையே தியானித்து வந்தால், அந்த பிரம்ம நிலையை ஒருவன் அடைவான். பிரம்மம் என்பதற்கு எளிமையான விளக்கம் ‘சத்யம், ஞானம் அனந்தம் (எல்லை இல்லாதவன்)’ என்பதே. இந்த மூன்று குணங்களைக் கொண்டவனாக இறைவனை எந்நேரமும் நினைத்து வந்தால், முக்தி கிடைக்கும்.

இவை எல்லாம் சொல்வதற்கு நன்றாக இருக்கும். பரப் பிரம்மனது ரூபம் என்ன? நான் சிவனை வாங்குகிறேன். அவனை பிரம்மமாக தியானித்தால், எனக்கு முக்தி கிடைக்காதா? அல்லது ராமனை வணங்கும் நான் அவனைப் பிரம்மமாக நினைத்து தியானம் செய்தால் முக்தி கிடைக்காதா? நாராயணனை மட்டுமே தியானம் செய்தால்தான் முக்தி கிடைக்குமா? அப்படி என்றால், சிவனடியார்கள் பலரும் முக்தி அடைந்ததாக நூல்கள் கூறியுள்ளனவே, அவை பொய் என்று ஆகாதா? மேலும் எந்த ஒரு தெய்வ உருவையும் அல்லாது ஞான வடிவாகப் பல சித்தர்கள் தியானித்து பரம நிலை அடைந்துள்ளனரே, அது எப்படி? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேரிடையான பதில் ஜோதிடத்தில் உள்ளது.

 

ஜோதிடம் காட்டும் முக்தி

ஜோதிடமா, அது புரட்டு, என்று சொல்லும் முன், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஜோதிடம் என்றால் ‘ஒளியியல்’ (Science of Light) – ஜ்யோதி-இஷா என்று அர்த்தம். அந்தப் பரம் பொருள் கோடி சூர்ய ஒளி உடையவன். விராட புருஷனாக பிரபஞ்சத்தில் வியாபித்துள்ள அவன் உருவம் நட்சத்திரங்களின் உருவம் – “நட்சத்த்ராணி ரூபம்’ என்று புருஷ சூக்தம் சொல்கிறது. அதாவது அந்தப் பரம புருஷன் நக்ஷத்திர ரூபத்தில் உள்ளான்.

‘நக்ஷ்’ என்னும் வடமொழி வேர்ச் சொல்லிலிருந்து நக்ஷத்ரம் என்னும் சொல் உண்டானது. நக்ஷ் என்றால் அடைதல் என்று பொருள். (to attain) எதை அடைய வேண்டுமோ அது நக்ஷத்ரம். மேலும் இது ‘ந- க்ஷீயதே’ – குறையாதது என்றும் பொருள்படும். குறையாததும், குறைவில்லாததும் அடையப்பட வேண்டியதும் பிரம்மம், எனவே நக்ஷத்ரம் அவன் ரூபமாகிறது.

அவனிலிருந்துதான் நாம் வந்தோம், அவனில்தான் முடிவில் ஐக்கியமாவோம் என்னும்படி, கண்ணுக்குத் தெரியும் நக்ஷத்திரமான சூரியனிலிருந்துதான் நம் பூமி வந்தது. முடிவில் சூரியனைத்தான் அது அடையப் போகிறது. ஒவ்வொரு நக்ஷத்திரமும் அது வந்த ஜ்யோதியில்தான் கடைசியில் ஐக்கியமாகப் போகின்றன.

நக்ஷத்ரங்களின் ஒளி இயல்தான் ஜ்யோதிஷம் – எவ்வாறு என்றால், சூரியன் காலை இதமாகக் காய்கிறான். மதியம் உஷ்ணமாகக் காய்கிறான். பின்மதியம், அவன் உக்ரம் தாங்க முடிவதில்லை. ஆனால் மாலை மிதமாகி, இரவில் நம் இயக்கத்தையே குறைத்து விடுகிறான். மேல்சொன்ன ஒவ்வொரு பொழுதிலும், கோடிக்கணக்கான விஷயங்கள் நடக்கின்றன. தாவரங்கள் உணவு உண்டாக்குவதிலிருந்து, கிருமிகள் அழிவதும், நீர் மேகம் உண்டாவதும், என்று பல செயல்களுக்கு அந்தச் சூரியன் காரணமாகிறான். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

அவனா செய்கிறான்? அவன் எங்கோ நிலையாக இருக்கிறான். நாம்தான் – இந்த பூமிதான் சுழன்று சுழன்று, அவனிடமிருந்து வேறு வேறான பலனை, வேறு வேறான நிலையில், வேறு வேறான நேரத்தில் பெற்றுக் கொள்கிறோம். சூரியன் இருந்த இடத்தை விட்டு அசைவதில்லை. தனியாக ஒன்றும் செய்வதில்லை. அதே போல்தான் இந்த zodiac எனப்படும் வான் வெளி மண்டலத்தை நாம்தான் வெவ்வேறு நேர- கால- நிலையிலிருந்து பார்த்து, சூரியனிடமிருந்து வெவ்வேறான கிரணங்களை அனுபவித்தது போல, நம் நிலைக்கு ஏற்ப, வெவ்வேறான பலன்களை அனுபவிக்கிறோம். அவை என்னென்ன என்று சொல்வதுதான் ஒளியியல் எனப்படும் ஜ்யோதி- இஷம்.

இதைப் பற்றி முதன் முதலில் கூறியவர் நான்முகப் பிரமன். அவர் உபதேசித்த கருத்துகள் ‘பிரம்ம ரிஷி சம்வாதம்’ என்று சமஸ்க்ருதத்தில் இருக்கின்றது. சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு. ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் பெயரில் தற்சமயம் கிடைக்கிறது. அவரையும் சேர்த்து, 18 மகரிஷிகள் ‘ஜோதிட ப்ரவர்தகர்கள்’, (ஜோதிட சாத்திரத்தைத் தோற்றுவித்தவர்கள்) என்று சொல்லப்படுகிறார்கள். இவர்கள் தத்தமது பெயரால் உருவாக்கிய சமிஹிதைகளில் சொன்ன கருத்துகளைப் பல புராணங்களிலும் காணலாம்.

முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல பல கடவுளர்களும் தத்தமக்கென்று கொண்டுள்ள பணிகளை (jurisdiction or portfolio) தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஜோதிடம் உதவுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தையும், அதை இயக்கிக் கொண்டிருக்கும் கடவுளர்களைப் பற்றியும் சொல்வதாலும், ஜோதிடம் என்பது ‘வேத புருஷனின் கண்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஜோதிடத்தின் பயனைப் பற்றிய இந்த முன்னுரையுடன், நான்முகப் பிரமன் கூறும் முக்தி பற்றிய கருத்து என்ன என்று பார்ப்போம். அவர் தந்துள்ள ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் உபதேசத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், 73 யோகங்களைச் சொல்லி அவற்றுக்கான முன் பிறவிக் காரணத்தையும் கூறுகிறார். என்ன செயல் செய்தால் மறு பிறவியில் என்ன பயன் கிட்டும் என்று இவை தெளிவாக்குகின்றன. மும்மூர்த்திகள், அவர்தம் தேவியர் ஆகியோரை வணங்குவதால் என்ன பயன் என்றும் பிரம்மா சொல்கிறார்.

அவற்றுள் மும்மூர்த்தி பற்றிய குறிப்புகள், முக்தி பற்றி விவரிக்கின்றன. அவரது கூற்றுப்படி மும்மூர்த்திகளுமே முக்தியைத் தரக் கூடியவர்கள்.

 

மும்மூர்த்திகளும் முக்திக்கு சாதனம்

சீகண்ட யோகம் 

shivapadamஒருவன் சிவனடியார்களைத் துதித்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உபசாரங்களையும் செய்து வந்தால், மறு பிறவியில், சீகண்ட யோகத்தில் பிறந்து, ருத்ராக்ஷம் தரித்து, திருநீறு பூசி, அனவரதமும் சிவத் தியானத்தைச் செய்து, சைவ சித்தாந்தப்படி விரதங்களை அனுஷ்டித்து, சாதுக்களை உபசரித்து, சிவனையே முழுமுதல் கடவுளாகக் கொண்டு, மக்களால் மகாத்மா என்று துதிக்கப்பட்டு, மறு ஜன்மம் இல்லாத சிவபதம் அடைவான்.

லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது சீகண்ட யோகம் ஆகும்.

 

ஸ்ரீநாத யோகம் 

paramapadamஒருவன் நாராயணனையே முழு முதல் கடவுளாகக் கொண்டு, வைணவ அடியார்களை நன்கு உபசரித்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து வந்தால் மறு பிறவியில் ஸ்ரீ நாத யோகத்தில் பிறந்து, நாராயணின் திருச் சின்னங்களைத் தரித்து, நாராயணன் ஒருவனையே தியானித்து, நல்ல குடும்பம், மனைவி, மக்கள், செல்வம் பெற்று அனைவராலும் கொண்டாடப் பட்டு, மறு ஜன்மம் இல்லாத பரமபதம் அடைவான்.

களத்ரகாரகனான சுக்கிரனும், பாகியாதிபதியான 9 -ஆம் வீட்டு அதிபதியும், புத்திர காரனான புதனும் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது ஸ்ரீ நாத யோகம் ஆகும்.

 

விருஞ்சி யோகம் 

lord_brahmaஒருவன் வேதம் கற்ற பிராமணர்களைப் போஷித்து, வைதீக காரியங்களுக்கு உறுதுணையாக இருந்தால், மறு பிறவியில் விருஞ்சி யோகத்தில் பிறந்து, பிரம்ம ஞானமும், அறிவும் பெற்று, நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகளைப் பெற்று, சிறந்த சீடர்களைப் பெற்று, ச்ரேஷ்டன் என்று பெயர் பெற்று, பிரம்ம தேஜசுடன் ஜொலித்து, மறு ஜன்மம் இல்லாத பிரம்ம லோகம் அடைவான்.

குரு, சனி, லக்னாதிபதி ஆகியோர் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது விருஞ்சி யோகம் ஆகும்.

இந்த மூன்று யோகங்களும், மூன்று மூர்த்திகளைப் பரப் பிரம்மமாக வழிபடுவதால், அவ்வாறு வழிபட்டவர் பிறவாமை என்னும் முக்தி நிலையை அடைவர் என்று காட்டுகின்றன. இதைச் சொன்னவர் நான்முகப் பிரமனே.மேலும் முக்திக்கு சாதனமாக ஒருவன் செய்ய வேண்டியதையும் இந்த யோகங்கள் காட்டுகின்றன.

 

சிவன் – விஷ்ணுவில் யார் பெரியவர்?

இந்த யோகங்கள் காட்டும் மற்றொரு விளக்கம் யார் பெரியவர் என்ற பேதம் சிவன், விஷ்ணுவுக்கு இருக்கிறதா என்பது. அது எப்படி என்று பார்ப்போம்.

எந்தக் கடவுளைப் பரப் பிரம்மம் என்று வணங்குகிறோமோ, அந்தக் கடவுள் மீதே உடல், பொருள், ஆவி என்று அனைத்து செயல், எண்ணங்களைச் செலுத்த வேண்டும். அப்படி, இப்படி என்று கவனச் சிதறல் இல்லாமல், முழு முனைப்புடன், இரவு பகலாக தியானம் இருக்க வேண்டும். எனவே ஒரு கடவுளை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒருவன், வேறு கடவுள் என்று கவனம் சிதறாமல் இருக்க அந்தந்தக் கடவுளே முக்கியம், அவனே உயர்ந்தவன் என்றெல்லாம் சொல்லி கவனம் கொள்ள வைத்துக் கொள்ளும் பொருட்டு பெரியோர் கூறியிருக்கின்றனர்.

சிவனை வணங்குபவர்கள், அவனையே ஒரே கடவுள் என்று கவனம் செலுத்தி பரம்பொருளாக வணங்குங்கள் என்று ஊக்குவித்திருக்கிரார்கள். அதேபோல் விஷ்ணுவே ஒரே கடவுள் என்று அவனை வணங்குபவர்கள், வேறு கடவுளர் என்று கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். நடுவில் இந்தக் கடவுளை வேண்டிக்கொண்டேன், அந்தக் கடவுளை வேண்டிக் கொண்டேன் என்றால், அந்தந்தக் கடவுளர் தரும் நன்மைகளில் நாட்டம் வருகிறது என்றும் அல்லது, பரப் பிரம்மனையே அடைய வேண்டும் என்ற சிந்தையிலிருந்து விலகி, தோன்றும் உலகிலுள்ள பிற பயன்களை மனம் நாடுகிறது என்றும் ஆகி, தீவீர வழிபாட்டை நீர்க்கச் செய்து விடும். இந்தக் கோட்பாடுகள், முக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்குத் தேவை.

முக்தியில் நாட்டம் இல்லாதவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றபடி, எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த பலன்களுக்கு தேவதையோ, அந்தந்த தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம். அல்லது மனம் விரும்பும் தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம்.

இந்த விஷயத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்’. அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். இன்றைக்கு அவர்கள் எல்லோருமே அப்படி என்று சொல்ல முடியாது, ஆயினும், முக்தி மார்க்கத்தை நாடுபவர்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘நாராயணனே நமக்கு’ என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல. அதேபோல், ‘சர்வம் சிவ மயம்’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது.

அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே? அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும்? அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே?

இதைச் சுட்டிக் காட்டும் வண்ணம் கீதையில் கண்ணன் கூறுகிறான். (7-16).

நான்கு விதமானவர்கள் இறைவனை வழிபடுகின்றனர்.

 • செல்வத்தை வேண்டி வழிபடுகின்றனர்.
 • துன்பத்திலிருந்து விடுபடவேண்டி வழிபடுகின்றனர்.
 • வேறு சிலர் இந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்று ஆச்சர்யப்பட்டு அவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வழிபடுகின்றனர். (அப்படிப்பட்டவரை ஜின்ஞாசு என்பர்.)
 • மெய்ஞானம் பெற்ற ஞானியும் வழிபடுகிறான்.

 

இப்படிச் சொல்லிவிட்டு, கண்ணன் சொல்கிறான், இவர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் என்றாலும், இவர்களுள் ஞானிதான் எனக்குப் பிரியமானவன். ஏனென்றால், என்னுடைய உண்மையான சொரூபம் இவனுக்குத்தான் தெரியும். “வாசுதேவம் சர்வம் இதி’எல்லாவற்றுக்குள்ளும் வசிப்பவன் வாசுதேவன் என்னும் நானே என்று என் சுய ரூபத்தை இவன் அறிவான், அதனால் இவனும் என் ரூபத்தில் இருக்கிறான் என்று கண்ணன் சொல்லும் கீதை நமக்குப் பிரமாண நூல்.

எந்த ரூபத்தை ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங்கினாலும், அந்த ரூபத்தில் உள்ள பரம் பொருள்தான் அனைத்து தெய்வங்களிலும், அண்ட சராசரங்களிலும் உள்ளான் என்று ஆத்ம பூர்வமாக உணர்வதே சரியான மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஒருவன் நிலைத்திருக்கும்போது, கவனச் சிதறல் கூடாது என்ற நோக்கத்தில் பெரியோர் சொன்னவை, சமயச் சண்டைகளுக்கு வழிகோலி விட்டன.

முக்தியில் நாட்டமுள்ளவர்களானாலும் சரி, அப்படிப்பட்ட நாட்டமில்லாதர்களும் சரி, பிற தெய்வங்களைக் குறைத்துச் சொல்லுதல் என்பது – ஜோதிட பாஷையில் சொல்வதானால் – பாவ கர்மாவை உண்டு பண்ணும். அப்படிப்பட்ட கதைகளைப் பற்றிப் பேச ஒருவர் விரும்பினால், கவனமாகக் கையாள வேண்டும். அதனால் வரக்கூடிய பிற தெய்வ நிந்தனையும், அதனால் புண்படும் பக்தனின் அவதியும், கர்மாவை உண்டு பண்ணக்கூடியவை. அன்றைக்கு அவர்கள் சொல்லவில்லையா என்றால், முக்தி மார்க்கத்திற்குச் சொன்னார்கள். முக்தியில் நிலை பெற்றவன் அப்படிப் பேசலாமே என்றால், உண்மையிலேயே முக்தியில் நிலைபெற்றவன், பரம் பொருளின் சொரூபத்தை உணர்ந்திருப்பான். அவன் அப்படிப் பேச மாட்டான்.

 

நான்முகப் பிரமன் தரும் முக்தி

veda-paadasaalaiமுக்தி மார்க்கத்திற்கு சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கடவுளர்களையும் எவ்வாறு வழிபட வேண்டும் என்று மேற்சொன்ன யோகங்கள் காட்டுகின்றன. ஆனால் நான்முகப் பிரமன் விஷயம் அப்படிச் சொல்லப்படவில்லை. இருப்பதிலேயே, நான்முகன் பக்திதான் எளிதானது. வேதத்தைப் போற்றுதலும், வேதம் ஓதுதலை வளர்த்தலும், வேதம் ஒதுவோரை நன்முறையில் காத்தலும், அவர்களுக்குச் சேவை புரிதலும் பிரமனுக்குச் செய்யும் பக்தி என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்பத்திலும் வேதத்தை நினைவுக்குக் கொண்டு வந்து உலகைப் படைத்து, வேதத்தை நிலை நிறுத்துபவன், நான்முகப் பிரமனாக இருக்கவே, வேதத்தைப் போஷித்தலே முக்திக்கு வழி என்றாகிறது. நான்முகப் பிரமனே வேத உருக் கொண்டவன் என்றும் ஆகிறது. அதனாலும் அவனுக்கென்று தனிக் கோயில் இல்லாமல் இருக்கலாம். அதனாலும், ஒவ்வொரு உற்சவத்திலும், முதலில் வேத கோஷம் செய்துகொண்டு கற்றோர் செல்லவேண்டும். அவர்களைப் பின்தொடர்ந்து தான் மற்றோர் செல்வர்.
 
வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ அவன் முக்தி அடைவான். வேதத்தையும், அது பரப்ப உதவும் சமஸ்க்ருதத்தையும் வெறுக்கும் திராவிடத் தலைவர்கள் எப்பேர்பட்ட அறிவிலிகள் என்று இதிலிருந்து தெரிகிறது. இவ்வளவு எளிய வழியை அழித்துவிட்டார்களே!

 

தோன்றும் பிரபஞ்சத்தில் முக்தன் நிலை

மும்மூர்த்திகள் மூலமும் முக்தி கிடைக்கும் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் பல முக்தர்கள், சித்தர்கள் வரலாறுகள் இருக்கின்றன.

 

முக்தி பெற்ற இவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

இதைப் பற்றி ஜைமினி, பாதராயணர் போன்றோர் விவாதித்த கருத்துகள் பிரம்ம சூத்திரங்களாக உள்ளன. மறு பிறவி என்னும் கர்மப் பிணைப்பிலிருந்து இந்த முக்தர்கள் விடுபட்டு விடுகிறார்கள். ஆனால் நான்முகப் பிரமனின் 100 வருட ஆயுளாக இருக்கும்  இந்தத் தோன்றும் பிரபஞ்சத்தின் கால் பகுதியைவிட்டு இவர்களால் வெளியேற முடியாது என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. நான்முகப் பிரமன் இருக்கும் பிரம்ம லோகத்தில் இவர்கள் நிலை பெற்று, அந்த நான்முகனின் ஆயுள் முடியும்போது அவனுடன், இந்தச் சக்கரத்தை விட்டு வெளியேறி, பிரபஞ்சத்தையே தன் கருவில் தாங்கும் பரம் பொருள் என்னும் அந்தப் பிரம்மனிடம் (Supreme Brahman) லயிப்பர்.

இந்தக் கால் பகுதி பிரபஞ்சத்தில் முக்தி அடைந்த உயிர்கள், எங்கு வேண்டுமானாலும் சஞ்சரிக்கலாம், எதை நினைத்தாலும் சாதிக்கலாம். படைத்தல் தொழில் தவிர, பரம் பொருள் செய்யும் எந்தச் செயலையும் செய்யக்கூடிய நிலையையும் ஆற்றலையும் அவர்கள் பெறுகிறார்கள்.

இதோ வேதம் காட்டும் பிரபஞ்சத்தைப்பாருங்கள்…
 

nataraja5-theory-of-creation2

 நாம் பயணிக்கும் பிரபஞ்சம் இது

 

முக்தர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் என்ன அர்த்தம்? பல்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய அகத்தியரால் எப்படி அப்படித் தோன்ற முடிந்தது என்று இது காட்டுகிறது அல்லவா? அவர் என்றோ முக்தி அல்லது சித்தி அடைந்திருப்பார். வெவ்வேறு யுகங்களில் தேவை ஏற்படும்போது, அப்பொழுதே அப்படியே அவரால் தோன்ற முடியும். கருவில் பிறந்து, வளர்ந்து வர வேண்டிய அவசியமில்லை. எங்கெங்கு தேவையோ, அங்கங்கு தோன்றி, செய்ய வந்த செயலைச் செய்திருப்பார். ஆனால் கர்மப் பிணைப்பு அவருக்கு ஏற்படாது. அதுதான் இந்த முக்தி தரும் விசேஷச் சலுகை.

இறைவன் திடீரென்று தோன்றி ஆட்கொண்டான் என்றெல்லாம் புராணங்கள் சொல்கின்றனவே, அவை கட்டுக்கதை அல்ல என்றும் இது காட்டுகிறது. முக்தர்களாலேயே, இஷ்டப்படி வந்து போக முடியும் என்றால், இறைவன் வருவதில் என்ன அதிசயம்? அது எப்படி கட்டுக் கதையாக இருக்கும்?

அவ்வாறே, நாரதரும் வந்து போய்க் கொண்டு இருக்கிறார். பல ரிஷிகளும், பெரியோரும் நம் கண்ணில் பட முடியும் – நாம் அந்த அளவு ஆத்ம சாதனை கொண்டிருந்தால். இதன்படி ஆதி சங்கரரோ, அல்லது இராமானுஜரோ மீண்டும் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. கர்ம வினையால் அவர்கள் பிறக்க மாட்டார்கள். உலக நன்மைக்காக, ஆண்டவன் ஆஞ்ஞையால் அவர்கள் அவதரிப்பார்கள்.

வெவ்வேறு காலக் கட்டத்தில் பிரபந்தங்களைப் பாடிவிட்டுப் போய் விட்டார்கள் ஆழ்வார்கள். நம்மாழ்வார் அருள, நாத முனிகள் அவற்றைப் பெற்றாரே, அது எப்படி – என்பதும் இந்த அமைப்பில் தெரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் தியானம் செய்தால், அவனுக்கு முன் நம்மாழ்வார் தோன்ற முடியும். திவ்யப் பிரபந்தத்தை எடுத்துக் கொடுக்க முடியும்.

இதையெல்லாம் சொன்னோம் சரி, இந்த மும்மூர்த்திகள் தவிர வேறு தெய்வங்களைப் பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்காதா? பிரம்ம சூத்திரம் அதையும் சொல்கிறது.

 

பிற மதம், பிற தெய்வம் மூலம் முக்தி உண்டா?

ஒருவன் எதை உபாசிக்கிறானோ அதை அடைவான். இதை ‘தத்க்ரது’ என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. பரம் பொருள் என்னும் அந்த முழு முதற் கடவுளைத் தியானித்து மும்மூர்த்திகளில் ஒருவரை உபாசித்தால் முக்தி கிடைக்கும். வேத மதத்தில் பிற மூர்த்திகளை உபாசித்தாலும், முடிவில் இந்த மும்மூர்த்திகளுக்குத்தான் ஒருவன் செலுத்தப்படுவான். அவையெல்லாம் பரிவார தேவதைகள். சிவன் அல்லது விஷ்ணுவுடன் சேர்பவர்கள். அவர்கள் மூலம் முக்திக்கு வழி பிறக்கும்.

sri-ramanujarஆனால் படைக்கப்பட்ட உலகில் தோன்றின உயிர்களை முழு முதற் கடவுளாக எண்ணுபவர்கள் அந்த உயிர்களையே அடைவார்கள். இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. அதனால் ஆசாரியனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முக்திக்குத் தேவையான தியானம் இல்லாவிட்டாலும்கூட, முக்தரான இராமானுஜரைத் தியானிப்பதால், முன் கூறிய ‘தத்க்ரது’ கோட்பாட்டின்படி, வைணவர்கள் இராமானுஜரை அடைந்து, தாமும் முக்தி அடைவர். தெய்வம் கொடுத்த உறுதிமொழி இப்படி நடைமுறைப்படுத்தப்படும்.

ஆனால் பிற மதங்களில் இவ்வாறு அல்ல. அம்மதங்களில் தெய்வம் என்று போற்றப்படுபவர்கள், ஆன்மிக விழிப்படைந்த உயிர்களாக இருந்தாலும், முழு முதற் கடவுளான பிரம்மத்தை உபாசிக்காமையால், முக்தி அடைந்தவர் இலர். எனவே அவர்களுக்கு மறு பிறவி உண்டு. அதுவரை அவர்களை உபாசித்த உயிர்களும் அவர்களிடமே நிலைத்து, மீண்டும் அவர்கள் பிறக்கும்போது பிறக்க வேண்டும். அல்லது ஒரு கல்பம் முடிந்து பிரளயம் வந்து படைக்கப்பட்ட எல்லாம் அழியும்பொழுது அவையும் அழிந்து மீண்டும் பிறக்க வேண்டும். இதை பிரம்ம சூத்திரம் வாயிலாக அறிகிறோம்.

இன்றைக்குப் பிற மதங்கள் இருக்கின்றனவே அவர்களுக்கு வேறு கதியில்லையா என்று கேட்டால், என்னிடம் இரண்டு பதில்கள் இருக்கின்றன.

ஒன்று ஜோதிடம் வாயிலாக அறிவது. நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல் இவை ஒருவனிடம் இருந்தால், அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.

மற்றொன்று, இந்து மதத்தைக் காப்பியடித்து இப்பொழுதெல்லாம் ‘முத்தொழிலோனே நமஸ்காரம்’ என்று கிறிஸ்துவுக்கு நமஸ்காரப் பாட்டு பாடுகிறார்களே, கிறிஸ்துவை வேத முதல்வன் என்றாக்கிக் கும்பிடுகிறார்களே, இது எங்கே கொண்டுபோய் விடும் என்று குழப்பமாக இருக்கிறது. இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள். இவர்கள் கலைஞர்-புத்தாண்டு கொண்டாடினார்கள். பொங்கல் கொண்டாடினார்கள். இன்னும் விரதங்கள்தான் பாக்கி.

ஆனால் இங்கே இருப்பவர்கள், நம் விரத நாள்களில் வயிறு முட்ட உண்டுவிட்டு, அவர்கள் விரதத்தை முடித்துவைக்க, கஞ்சி குடிக்கிறார்கள்.
 
என்ன அபத்தம் இது?
 
இதற்கெல்லாம் எப்படி கர்ம பலன் சொல்வது?

ஒன்றுமே புரியவில்லையே?

எங்கே போனார்கள் இந்த ஜைமினியும், பாதராயணரும்? அவர்களைக் கேட்போமே ….

என்ன…… அவர்களைக் காணோமா…? எஸ்கேப் ஆயிட்டாங்களா ஆ ஆ ஆ ஆ ஆ …..

(தொடரும்…)

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

380 மறுமொழிகள் வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்

 1. RAMA on February 5, 2010 at 6:42 am

  My heartfelt thanks for the great article.

 2. திருச்சிக் காரன் on February 5, 2010 at 8:40 am

  கீதை Chapter 12 Verses 13- 14

  அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

  சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

  நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

  ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

  க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

  ஸ ந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

  யோகி (யோக நெறியில் நிற்பவன்)

  யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

  த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

  மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

  யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

  ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்)

  ——–
  தன்னை பக்திமான் என கருதிக் கொண்டு, தன்னுடைய தெய்வம் தான் உயர்ந்தது எனக் காட்ட ஆயிரக் கணக்கில் சுலோகங்களை மேற்கோள் காட்டும் சான்றோர்களே, பக்திக்கு இலக்கணத்தை பாருங்கள்!!

  ஆனால் நீங்கள் செய்வது என்ன?

  பிறர் தெய்வங்களாக வணங்குபவரை த்வேஷித்து, தூஷித்து, மனதிலே வெறுப்பு நிரம்பிய நிலையிலே,

  நான் வணங்கும் தெய்வம்தான் உண்மையானது, முழு முதற்கடவுள் என அகந்தையும், மமதையும் நிரம்பிய நிலையில் இருந்து கொண்டு, முக்கியமானதாக கூறப் பட்டுள்ள எல்லா பண்புகளையும் தூக்கி கடாசி விட்டு, பெரிய பக்திமான் போல எண்ணிக் கொள்கிறீர்கள். கிருட்டினரின் கொள்கைக்கு எதிராக செயல் படுகிறீர்கள்!

 3. ஜடாயு on February 5, 2010 at 9:43 am

  அன்புள்ள ஜெயஸ்ரீ அவர்களுக்கு,

  முக்தி என்கிற ஒரு abstract கருத்தாக்கத்தை இப்படி ஒரு manual போட்டு விளக்கி விட முடியுமா? உங்களது அதீத்மான “பிரமாண நூல்”வாதம் நீங்கள் இங்கு எடுத்தோதுவதாகக் கூறும் வேதாந்த தத்துவத்தின் இயல்பு அல்லவே அல்ல. மாறாக, அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி, தத்துவரீதியாக தோற்கடித்து விட்ட (ஆனால் சடங்குகள் மூலம் நடைமுறையில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும்) பூர்வமீமாம்சம் என்ற தரப்பின் இயல்பு என்பதை நினைவுறுத்துகிறேன். அந்த வகையில், நீங்கள் கூறும் ஒரு பார்வையும் இந்துமத நீரோட்டத்தில் இருக்கிறது, ஆனால் கண்டிப்பாக அது ஒரு குறுக்கல்வாத (reductionist) பார்வையே அன்றி வேதாந்தத்தின் முழுமைவாத (abolutist) பார்வை அல்ல.

  “ நசிகேதா, தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்றவன் ஆன்ம வடிவாகவே ஆகிறான்” – கட உபநிஷதம் 2.1.15

  முக்தி என்ற கருத்தாக்கம் சமயம், சடங்குகள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்தது.. இதைச் செய்தால் இது கிடைக்கும் என்ற செயல் விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கருத்தாக்கம் அது.. அதை ஒரு ஜோதிட நூலைக் கொண்டு வரையறை செய்வது என்பதே பழுதுபட்டதாகவும், சிறுபிள்ளைத் தனமானதாகவும் தோன்றுகிறது..

  அது மட்டுமல்ல, முண்டக உபநிஷதத்தில், ”மற்ற எல்லா உலகியல் அறிவுத் துறைகளுக்கும் சற்று அடுத்தபடியில் தான் வேதம், வேதாந்த விசாரம் எல்லாமே கூட இருக்கிறது, மேலான ஞானம் இவைகளுக்கெல்லாம் கூட அப்பாற்பட்டதே” என்று கூறப்படுகிறது. இதன்மூலம் தங்கள் தத்துவ அறிவின் எல்லையத் தாங்களே உணர்த்தி, மனிதன் அவற்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற கருத்தையும் வேத ரிஷிகள் உணர்த்தினர். வேத இலக்கியத்தின் மாபெரும் உன்னதமாகவே சுவாமி விவேகானந்தர் இதைக் குறிப்பிடுகிறார்..

  தீவிர அகத்தரிசன தருணத்தில் வெளிப்படும் ஒரு பேரெழுச்சிக் கவிதையாகவே முக்தி பற்றிய அனுபவம் நம் மெய்ஞானிகளால் பாடப்பட்டுள்ளது.. அது அனைத்தையும் அணைக்கும் நிலையாகஇருக்கலாம் –

  காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
  கடலும் மலையும் எங்கள் கூட்டம்
  நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
  நோக்க நோக்கக் களியாட்டம்
  (மகாகவி பாரதி)

  அல்லது, அனைத்தையும் துறக்கும் நிலையாக இருக்கலாம் –

  “நான் சைவமும் அல்ல, சாக்தமும் அல்ல,
  ஐந்து இரவுகள் திருமாலை வழிபடும் வைணவமும் அல்ல,
  எனக்கு வேதமும் இல்லை, வேள்வியும் இல்லை,
  ஆசாரமும் இல்லை, தவமும் இல்லை
  சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்”!
  (ஆத்ம ஷட்கம், ஆதிசங்கரர்)

  மற்றபடி முக்தியைப் பற்றிய பேச்செல்லாம் வெறும் பேச்சே என்கிறார்கள் ஞானிகள்.

  “விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்” – திருமூலர்

 4. ஜடாயு on February 5, 2010 at 9:59 am

  // அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //

  இது வேதாந்தத்திற்கு முற்றிலும் மாறான கருத்து. முக்தி என்பது “நம்பிக்கையால்” வருவதல்ல. அது பந்தம் அல்ல, விடுதலை.

  மதம் என்பது எந்த விகாரங்களும் அற்ற ஆத்மாவின் இயல்பாக எப்படி இருக்க முடியும்? மதம் என்பது மனித பிரக்ஞையின் ஒரு அடுக்கில் ஒரு கட்டத்தில் மனிதனால் ஏற்கப் படுவது. அதை அந்தப் பிறவியிலேயே பலவிதமாக மாற்றிக் கொள்ளவும் முடியும், உதறித் தள்ளிவிடவும் முடியும். பெற்றோர்களது மொழி பிள்ளைகளுக்கு வருவது போலவே, மதமும் வருகிறது. அதற்குமேல் அதில் ஒன்றுமில்லை.

  சைவராக இருந்து வைஷ்ணவரானார் திருமழிசையார். வைஷ்ணவராக இருந்து சைவரானார் ஹரதத்தர்.. சைவ, வைஷ்ணவ சமரசத்தைப் பாடிக் கொண்டே முருகபக்தராக இருந்தார் அருணகிரியார். சாக்த, சைவ, வைஷ்ணவ சாதனை முறைகளைப் பயின்று அவற்றில் இழையோடும் ஒருமையைக் கண்டுணர்ந்து அதைப் போதித்தார், நமக்கு மிக சமீபகாலத்தில் வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ணர்.

  வெளிநாட்டில் பிறந்து சிறந்த வேதாந்திகளாகவும், யோகிகளாகவும் ஆனவர்களில் சகோதரி நிவேதிதா, அரவிந்த ஆசிரம ஸ்ரீஅன்னை, ரமண மகரிஷியின் சீடர்கள் ஆகியவர்களைச் சொல்லலாம். நாம் அறியாமலேயும் பலர் இருக்கலாம். இவர்களது இறை அனுபவங்கள் எல்லாம் பொய்யா? ”Every soul is potentially divine. ஒவ்வொரு ஜீவனும் முக்திக்கு அதிகாரி தான். இதைத் தான் வேதாந்தம் அறைகூவுவதாக சுவாமிஜி உலகெங்கும் முரசறைந்தார் – இல்லையா?

  நம்மவர், அன்னியர் – நம்நாடு, வேறு தேசம் என்பதெல்லாம் உலகியலுக்கு உட்பட்ட சமூக, அரசியல் தளங்களில் மட்டுமே. ஆன்மிகத் தளத்தில் அல்ல.

 5. armchaircritic on February 5, 2010 at 10:59 am

  கட்டுரை ஏதோ எனக்கு புரிய வெச்சதுன்னு நெனச்சா ஜடாயுவோட மறுமொழி கொழப்பிடுச்சு! முக்தின்னா என்ன? கடவுளை அடைவதா? கடவுள் நிலையை அடைவதா?
  //வெளிநாட்டில் பிறந்து சிறந்த வேதாந்திகளாகவும், யோகிகளாகவும் ஆனவர்களில் சகோதரி நிவேதிதா, அரவிந்த ஆசிரம ஸ்ரீஅன்னை, ரமண மகரிஷியின் சீடர்கள் ஆகியவர்களைச் சொல்லலாம். நாம் அறியாமலேயும் பலர் இருக்கலாம். இவர்களது இறை அனுபவங்கள் எல்லாம் பொய்யா?//இதற்கு கட்டுரையிலேயே //அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும்// என்ற பதில் இருப்பது போல் இருக்கிறது.
  //நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல் இவை ஒருவனிடம் இருந்தால், அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.//இதில் கடைசி வரிக்கு ஜடாயு கண்டனம் தெரிவிக்கிறார். ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இந்த உலகின் முதல் மதம்/வழி இந்து மதம்/வழியாக இருப்பதால் பிறகு வந்த அனைத்து மதங்களும் அதைப் பின்பற்றுகின்றன என்று.

 6. திருச்சிக் காரன் on February 5, 2010 at 12:13 pm

  //முக்தி என்ற கருத்தாக்கம் சமயம், சடங்குகள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்தது.. இதைச் செய்தால் இது கிடைக்கும் என்ற செயல் விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கருத்தாக்கம் அது.. அதை ஒரு ஜோதிட நூலைக் கொண்டு வரையறை செய்வது என்பதே பழுதுபட்டதாகவும், சிறுபிள்ளைத் தனமானதாகவும் தோன்றுகிறது.. //

  I think this is an important point. Astrology predicts what can happen to a man…. he will get good….. he will be in bad shape, getting sorrows… etc-( I am not getting into the arguement here whether Astrology is genuine or not ).

  But liberation is attaining a totally independent status, completely releived of any sorrows, totally liberated from the clutches of sorrow, nature, fate….. whatever it is.

  Even Buddha claimed that he attained liberation.

 7. B.R.ஹரன் on February 5, 2010 at 1:56 pm

  //முக்தி என்ற கருத்தாக்கம் சமயம், சடங்குகள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்தது.. இதைச் செய்தால் இது கிடைக்கும் என்ற செயல் விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கருத்தாக்கம் அது.. அதை ஒரு ஜோதிட நூலைக் கொண்டு வரையறை செய்வது என்பதே பழுதுபட்டதாகவும், சிறுபிள்ளைத் தனமானதாகவும் தோன்றுகிறது..//

  சொற்பிரயோகம் தவறு ஜடாயு. ஜோதிஷம் உங்களுக்குப் பிடிக்காமலும் அதில் உங்களுக்கு நம்பிக்கையில்லாமலும் இருக்கலாம். அதற்காக அதைக் கற்றவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதைச் “சிறுபிள்ளைத்தனம்” என்று கூறுவது சரியில்லை. ஜெயஸ்ரீஜி அவர்கள் வயதிலும், அனுபவத்திலும், கல்வியிலும் மூத்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  //ஜோதிடமா, அது புரட்டு, என்று சொல்லும் முன், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஜோதிடம் என்றால் ‘ஒளியியல்’ (Science of Light) – ஜ்யோதி-இஷா என்று அர்த்தம்.//

  தமிழ் ஹிந்து வாசகர் கூட்டத்தில் யாரும் குருடர்கள் அல்ல ஜெயஸ்ரீஜி, இருட்டில் உள்ளவர்களும் ஒளி தேடுபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஒளி பெற விருப்பம் உள்ளவர்கள் பெற்றுக் கொள்ளட்டும்.

  அன்புடன்

  ஹரன்

 8. பாலாஜி on February 5, 2010 at 3:26 pm

  வழக்கம்போல ஒரு நல்ல அறிவியல்பூர்வமான கட்டுரையை ஜெயஸ்ரீ மேடம் குடுத்துட்டாங்க! ஜோதிடம் வேதத்தின் ஒரு அங்கம், இன்று ஜோதிடர்கள் சரியில்லை என்பதற்காக ஜோதிடம் போய்யாகிவிடாதே…

  //இது வேதாந்தத்திற்கு முற்றிலும் மாறான கருத்து. முக்தி என்பது “நம்பிக்கையால்” வருவதல்ல. அது பந்தம் அல்ல, விடுதலை.//

  ஜடாயு சார், ஆசிரியர் எழுதியதை படியுங்கள்:-

  “இன்றைக்குப் பிற மதங்கள் இருக்கின்றனவே அவர்களுக்கு வேறு கதியில்லையா என்று கேட்டால், என்னிடம் இரண்டு பதில்கள் இருக்கின்றன.”

  அவங்ககிட்ட ரெண்டு பதிலிருக்குனுதான் சொல்றாங்களே தவிர “நான் சொல்றதுதான் உண்மை, மற்றவை பொய்” நு ஹிட்லர் போலவோ அபிரகாமீய மதத்தவர் போலவோ சொல்லலியே!

  ஆசிரியர்கு மீண்டும் நன்றி, தொடரட்டும் உங்கள் நற்பணி!

 9. பாலாஜி on February 5, 2010 at 3:30 pm

  //வெவ்வேறு காலக் கட்டத்தில் பிரபந்தங்களைப் பாடிவிட்டுப் போய் விட்டார்கள் ஆழ்வார்கள். நம்மாழ்வார் அருள, நாத முனிகள் அவற்றைப் பெற்றாரே, அது எப்படி – என்பதும் இந்த அமைப்பில் தெரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் தியானம் செய்தால், அவனுக்கு முன் நம்மாழ்வார் தோன்ற முடியும். திவ்யப் பிரபந்தத்தை எடுத்துக் கொடுக்க முடியும்.//

  இந்த கருத்துதான் இந்துமதத்தின் முக்கியமான ஒன்றாகும். இது சைவத்திலும் உள்ளது. 5, 6, 7- ஆம் நூற்றாண்டில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் பிற நாயன்மார்கள் பாடிய தேவாரம், திருவாசகம் போன்றவற்றை 11- ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பிகள் கண்டெடுத்து ‘திருமுறை’ என்று தொகுத்தளிக்கிறார். அவருக்குமுன் 400 ஆண்டுகளுக்கு அவை எங்கு சென்றன என்றே எவருக்கும் தெரியவில்லை!

 10. Jeevs on February 5, 2010 at 3:51 pm

  // அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //

  இது சரியில்லை. கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப்படுபவர் என்று அர்த்தம் ஆகிறதே. தவறான வழியில் திசை மாற முயல்கிறீர்கள்.

 11. lakshmi on February 5, 2010 at 5:40 pm

  நாங்க எங்க பாட்டிகாலத்து ஆன்மீக கதைகள் அங்கங்க கேட்குற கதைகள் இதையெல்லாம் வச்சுகிட்டு நமக்கு ரொம்ப தெரிஞ்சு இருக்கு என எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கொள்வேன் .பார்கிறவங்க கிட்டேயெல்லாம் ஆன்மிக சம்பந்தமா படிக்கிறதெல்லாம் சொல்லி சந்தோசபட்டுக்குவேன்.ஆனால் உங்க கட்டுரைகளை படிக்கும்பொழுது தான் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதே என்று பிரமிப்பாக இருக்கிறது .”கற்றது கை அளவு கல்லாதது கடல் அளவு” என்பது எவ்வளவு உண்மை .இது போன்று பல கட்டுரைகள் எழுதி என் போன்றோரின் அக இருளை நீக்குங்கள்.தயை செய்து பெரிய எழுத்துக்களாக இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும் படிப்பதற்கு.மிகவும் அருமை உங்களுடைய கட்டுரை. .

 12. திருச்சிக் காரன் on February 5, 2010 at 6:39 pm

  Astrology and spirituality are different concepts altogethet.

  Astrology, in the past i said to have predicted that an individula would become a great spiritualist.

  As an example, It was said that Astrologers predicted that buddha would be a great Spiritualist and Ilango would be a proper person. Besided that I cant say whether Astrology can help to uplift any one spiritually.

  It is also said that Iramakrishna Paramahams has told that Vivekananda amd other disciple would do wonders- but it was not part of Astrology, Ramakrishna was considered as a seer!

 13. திருச்சிக் காரன் on February 5, 2010 at 6:41 pm

  //இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.//

  Sounds like abrahamaites

 14. Sarang on February 5, 2010 at 6:46 pm

  அய்யா Jeevs

  இந்த வலைதளத்தின் முகவரி http://www.tamilHINDU.com – இங்கு வந்தே நீங்கள் ஏசுவையும், மோசசையும், மற்ற அன்பு தூதர்களையும், அல்லாவையும் கடவுளாக கொண்டே தீர வேண்டும், மொக்ஷித்திர்க்கு இவர்களே அதிகாரி என்று சொன்னால் அது எத்தை காட்டுகிறது – இதை தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை

 15. armchaircritic on February 5, 2010 at 7:03 pm

  //Jeevs
  5 February 2010 at 3:51 pm

  // அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //

  இது சரியில்லை. கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப்படுபவர் என்று அர்த்தம் ஆகிறதே. தவறான வழியில் திசை மாற முயல்கிறீர்கள்.//
  இந்து மதம் என்பதற்கும் இந்து மத வழி என்பதற்கும் வேறுபாடு உள்ளது நண்பரே.

 16. ram on February 5, 2010 at 7:05 pm

  //armchaircritic
  5 February 2010 at 10:59 am
  முக்தின்னா என்ன? கடவுளை அடைவதா? கடவுள் நிலையை அடைவதா?//

  கடவுள் நிலையை அடைவதே! அது கூட நாம் கடவுள் நிலையை அடைந்து விட்டோம் என்பதெல்லாம் அடையும் பொழுது தெரியாது. கடவுள் நிலையை அடைவது என்பதை ஒரு உதாரணமாகச் சொன்னால் இரண்டு சொட்டு தண்ணீர் அருகருகே இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சொட்டு மற்றொரு சொட்டுடன் இணைந்து விட்டால் இரண்டும் ஒரே சொட்டுத் தண்ணீராகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலை தான் நமது ஆத்மா பரமாத்மாவுடன் இணையும் நிகழ்வு. இதையே முக்தி என்கிறோம். அதற்கு முதலில் பரமாத்மா வெளியில் இருக்கும் தண்ணீர் என்றும் நாம் உடலில் இருக்கும் தண்ணீர் என்பதையும் முதலில் முழுமையாக உணர வேண்டும். அப்படி உனர்ந்து கொள்ளும் பக்குவத்தையே “தத்வம் அஸி” அதாவது “அதுவே நீ” என்று புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதாவது தண்ணீர் இரண்டு தனித்தனி துளிகளாக இருந்தாலும் இரண்டும் அது ஒன்றே என்பது போல தான் இதுவும். ஆக இரண்டரக் கலந்து நாமே இறை நிலையை அவ்வாறு அடைவதே முக்தியாகும். அவ்வாறு இரண்டரக் கலக்கும் நிலை தான் “அஹம் ப்ரம்மாஸ்மி”…அங்கே உள்ளும் புறமும் ப்ரம்மமாகிய நானே என்றுணர்ந்து அதுவாகவே ஆவதாகும். நாமே அதுவாக ஆன பிறகு நாம் அதில் கலந்தோமா அல்லது அதுவாக ஆனோமா என்பதெல்லாம் நமக்கு தெரியாது. நாம் அப்படியே இருப்போம் அவ்வளவு தான். முக்தி பற்றி சந்தேகம் இருப்பவர்களுக்கு புரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏதோ என்னாலான முயற்சி.

  அன்புடன்
  ராம்.

 17. ram on February 5, 2010 at 7:19 pm

  அருமையான கட்டுரை ஜெயஸ்ரீ அவர்களே!

  //இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள்.//

  கவலைப்படாதீர்கள். முடிவில் நம்மையே வந்தடைவார்கள்.

 18. பெரியாரிஸ்ட் on February 5, 2010 at 7:24 pm

  //கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.//

  உங்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க வாழ்த்துகள்

 19. தனபால் on February 5, 2010 at 8:42 pm

  தங்கள் படைப்பு மிகவும் அருமை.வேதம் காட்டும் பிரபஞ்சத்தத்துவம் அறிவுப்பூர்வமாக உள்ளது.
  ஒரே ஒரு விசயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது என்றாலும் மொத்தத்தில் உங்கள் படைப்பு சிறப்பாக உள்ளது .

 20. Bala on February 5, 2010 at 10:45 pm

  // இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. //

  interesting. This sounds very much like a “prophet” idea rather than Hindu spirituality.

  In Hindu spiirituality, it is Guru’s guidance that kindles an aspirant towards self knowledge – but that is only the “inspiration” part. The Sadhaka also has to strive hard and peel of all his layers of “avidya” (ignorance) one by one.. and this may take one or many births… It is not said that just by mere association of a great sage, you are *guaranteed* of Mukthi.

  Plus, what Hindu spirituality insists on is “shraddha”. It does not directly translate as faith or belief as it is normally understood.

  It is *self knowledge* that is criteria for Mukthi – NOT “Belief in Vedas”, NOT “knowledge of Vedas”. Ramakrishna Paramahamsar, Sadasiva Brahmendrar, Vallalar, Ramana Maharishi – they were all Jeevan mukthas. But none of them had studied Vedic scriptures, they were not ritualistic at all.

  To say that such people attained Mukthi because they were destined for it (it was written in their horoscope) is way too much of a simplistic idea.. It is an insult on the greatness of human spirit. In that case, before starting any spiritual Sadhana, one can just consult the horoscope and find out if Mukthi is written for him or not.. If it says no, why to even waste time in pursuing spirituality?

  You see, mixing astrology with pure and prestine Hindu philosophical thought leads to such fallacies.

 21. பாலாஜி on February 5, 2010 at 11:39 pm

  //உங்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க வாழ்த்துகள்//

  ****இஸ்ட் அவர்களே, உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் உண்மையான பகுத்தறிவு தருமாறு நீங்கள் வெறுக்கும், கேவலப்படுத்தும், இகழும் இந்து தெய்வங்கள் அனைவரிடமும் வேண்டுகிறேன்..

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

 22. Sureshkumar S on February 6, 2010 at 12:18 am

  ஜெயஸ்ரீ அவர்களின் மற்றுமொரு சிறப்பான படைப்பு!.
  நான் கூற நினைத்த பெரும்பாலனவற்றை நமது நண்பர்கள் கூறிவிட்டனர். இருப்பினும் எனது கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.

  //மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்//

  உண்மை. புத்தர், மகாவீரர், இயேசு போன்ற பிற மதத்தவரும் நமது இந்து மத வழியில்தான் முக்தி பெற்றனர். இதை இன்று அவர்களை (இயேசு)பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் பிரசங்கிகள் உணர வேண்டும்.

  //இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள்.//
  //கவலைப்படாதீர்கள். முடிவில் நம்மையே வந்தடைவார்கள்.//
  நிச்சயம் அவர்கள் ஒரு வித விரக்தியில் இருக்கிறார்கள். அதனால்தான் வள்ளுவரை அவர்கள் பக்கம் சேர்த்துப் பார்த்தார்கள் (முடியவில்லை என்பது வேறு விஷயம்), பொங்கல் கொண்டாடுகிறார்கள், வாழை மரம் கட்டி விழா எடுக்கிறார்கள், வேளாங்கன்னிக்கு நடை பயணம் போகிறார்கள். இவர்களுகெல்லாம் நமது இந்து மதம் ஒன்றை மட்டும் எப்போதும் உரக்க சொல்லி கொண்டே இருக்கிறது. அது பாரதி தனது கவிதையில் கூறுவது போல்
  பல வேடிக்கை மனிதரை போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

 23. பெரியாரிஸ்ட் on February 6, 2010 at 9:28 pm

  //****இஸ்ட் அவர்களே, உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் உண்மையான பகுத்தறிவு தருமாறு நீங்கள் வெறுக்கும், கேவலப்படுத்தும், இகழும் இந்து தெய்வங்கள் அனைவரிடமும் வேண்டுகிறேன்..

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
  //
  நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை

 24. Rama on February 7, 2010 at 7:00 am

  Periyarist, do you want to talk about your great leader EVR and his marriage to a girl old enough to be his grand daughter? Waiting for your “pakitharuvu” pearls of wisdom on this. Do not trouble yourself reg our muthki, thank you.

 25. பாலாஜி on February 7, 2010 at 8:11 am

  //நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை//

  இப்பொழுது மட்டும் என்ன இருக்கிறது? பல ‘பெரியாரிஸ்டு’ களுடன் வாதிட்டுவிட்டேன்.. உங்களிடமும் வெட்டிவாதம் செய்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை! ஏனெனில் என்னசொன்னாலும் “நான் புடிச்ச முயலுக்கு மூணே கால்னு” சாதிக்கரவங்க நீங்க!
  அதனால், என் நேரத்தை வேஸ்ட் பண்ண விரும்பல, பிறகு சந்திப்போம்!

 26. S Raman on February 7, 2010 at 8:26 am

  ஜெயஸ்ரீ அவர்களுக்கு வணக்கம்.
  தங்கள் கட்டுரை மிக நன்றாக, பொருள் பொதிந்ததாக உள்ளது. மகிழ்ச்சி.
  நாம் கூறுவது எதிலும் உள்ள பொருள் காண்பது என்பது அவரவர் நிலைப்பாட்டில் இருந்துதான் என்பதை மறுக்க முடியாது. தாங்கள் மற்றும் பலரின் மொழிகளுக்குப் பதிலாகவும், மேலும் சிலவற்றை விளக்குவன ஆகவும் இருக்கலாம் என ஆன்றோர் கூறியவைகளை இங்கு சமர்ப்பிக்கிறேன்.

  “மும்முதலை எம்மதமும் முற்கொள்ளும் ஒர்முதலே
  மும்முதலாய் நிற்கும் என்றும் மும்முதலும் – மும்முதலே
  என்னல் அஹங்காரம் இருக்கும் மட்டே யான் கெட்டுத்
  தன்னிலையில் நிற்றல் தலை”
  – என்று குறிப்பிட்டுள்ளார் ரமணர் “உள்ளது நாற்பது” பாடலில்.

  பொழிப்புரை: எந்த மதமும் ஜக, ஜீவ, பரம் என்னும் மூன்று முதற்பொருள்களின் தோற்றத்தை முதலில், அதாவது விவகார (உலகியல்) தசையில் (நோக்கில்), ஒப்புக்கொள்ளும். அவ்வாறு ஒப்புக்கொண்டு, பிறகு அவற்றின் இயல்பை விசாரித்து, முடிவில் சில மதங்கள், ஓர் சத்திய வஸ்துவாயுள்ள முதல் பொருளே ஜக, ஜீவ, பரம் என்னும் மூன்று முதற்பொருள்களாக மித்தையாகத் தோன்றுகிறது என்று சொல்லுதலும், வேறு சில மாதங்கள் அம் மூன்று முதல் பொருட்களும் எக்காலத்திலும் சத்திய நித்தியத் தன்மை வாய்ந்தது, எவ்வாறு மூன்று முதற்பொருள்களாகவே உள்ளன என்று சொல்லுதலும் நானென்ற அகங்காரம் ஜீவித்திருக்குமட்டுமே நிகழும். உருவ நாசமுற்றுத் தனது பிறப்பிடமாகிய ஆன்ம சொரூபத்தில் தங்குதலே சிறப்பாகும்.

  “பத்தன் நான் என்னுமட்டே பந்த முக்தி சிந்தனைகள்
  பத்தன் யார் என்று தன்னை பார்க்குங்கால் – சித்தமாய்
  நித்த முக்தன் தான் நிற்க நிற்காதேர் பந்த சிந்தை
  முக்தி சிந்தை முன்னிற்குமோ?” – என்றும் கூறுவார்.

  பொழிப்புரை: நான் பந்தமுடையவன் என்று எண்ணுகிற மட்டுமே பந்த சிந்தனையும் முக்தி சிந்தனையும் உண்டாகும். பந்தமுடையவன் யாரென்று விசாரித்து தன்னை அறியுங்காலத்தில், நித்த முக்தனாகிய தான் ஒருவனே அபரோட்சமாய் விளங்குவதால், பந்த சிந்தனை அழியுமானால் முக்தி சிந்தனை மாத்திரம் அழியாமல் தன்முன் நிற்குமோ?

  இதுதான் முடிவு என்றால், அவரவர் வழியைத் தேர்ந்து செல்வது அவரவர் உள்ள நிலைப்பாடு அன்றி வேறு ஏது?

  S. Raman

 27. S Raman on February 7, 2010 at 8:39 am

  எனது மறுமொழியில் ” மாதங்கள்” என்று ஒரு இடத்தில் தவறு நேர்ந்து விட்டது. அதை “மதங்கள்” என்று திருத்திக் கொள்ளவும்.

 28. armchaircritic on February 7, 2010 at 10:32 am

  //In that case, before starting any spiritual Sadhana, one can just consult the horoscope and find out if Mukthi is written for him or not.. If it says no, why to even waste time in pursuing spirituality?

  You see, mixing astrology with pure and prestine Hindu philosophical thought leads to such fallacies.//
  You may not believe this. But one of my friends who went to Vaitheeswaran Koil and Nadi josyam was shocked when the person looking at her ‘chuvadi’ gave it to her to take home saying that this soul has no more births.
  As far as I know horoscope talks only of this birth and this life.
  //நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை// உங்களுக்கு ரொம்ப bore அடிக்கும்.

 29. alax on February 7, 2010 at 11:07 am

  திரு., ஜெயஸ்ரீ சாரநாதன்.,
  தங்கள் கூற வருவது என்ன?..

 30. கந்தர்வன் on February 7, 2010 at 3:45 pm

  பெரியாரிஸ்டு அவர்களே,

  நீங்களும் உங்கள் ராமசாமி நாயக்கரும் தான் தமிழர்களின் விரோதிகள். சங்க இலக்கியங்களை வாசித்துப் பாருங்கள் – அப்பொழுது தெரியும், ராமாயண மகாபாரதக் கதைகளில் நம் சங்கத் தமிழர்கள் தொன்று தொட்டு எத்தனை ஈடுபாடு வைத்திருந்தனர் என்று. பரிபாடலைப் படித்துப் பாருங்கள் – அதில் வேதத்தின் புருஷ சூக்தமும், மாண்டுக்ய உபநிஷத்தும் அப்படியே தமிழாக்கப் பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்கள் முழுவதிலும் கோயில் வழிபாடுகள் நடந்து வந்ததை கண் திறந்து வாசியுங்கள். அப்பொழுது தான் அம்பலாகும் உங்களுடைய ரவுடித்தனமும் கயமையும். ஜைனராக இருந்தும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அந்தணர்களை எப்படி வருணித்து உள்ளார்கள் என்று பாரும் – தைத்திரீய உபநிஷத்தின் ஒரு வாக்கியத்தை அவர் சமணராக இருந்தும் தமிழ்ப் படுத்தியுள்ளார். இதனால் தானோ என்னவோ, தமிழர் கலாச்சாரத்தை ‘காட்டுமிராண்டி கலாச்சாரம்’ என்று சொன்னாரோ தாடி வைத்த உங்கள் தலைவர்!

  உமது ஆரிய-திராவிட வரலாற்று கட்டுக்கதைக்கு நேர்முரணாக சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. வேதம், உபநிஷத்து, இதிகாசம், ஆகமம் இவற்றை ஒட்டியே எழுந்த சங்க நூல்களில் எங்குமே பௌத்தம், சமணம் ஆகிய மதங்களைப் பற்றி இல்லாமையே தமிழ் சங்க கலாச்சாரமும், இதிகாச புராணங்களும் அவ்விரண்டு மதங்களுக்கு முந்தையதே என்பது சான்று. இதனால் உங்கள் aryan-dravidian theory அடிபட்டுப் போய்விட்டதே! அந்தோ பரிதாபம்! இவ்விஷயம் இப்பொழுது அம்பலம் ஆனதற்கு, இனி என்ன செய்வீர்கள்?

  வேதத்தையும், இதிகாச புராணத்தையும் வெறுக்கும் உங்கள் பெரியார் கட்சிக்கு ‘தமிழ்க் கலாச்சாரத்தைப் பேண உழைக்கிறோம்’ என்று சொல்ல ஒரு அருகதையும் இல்லை. சங்க நூல்களையும், வேத-இதிகாச-புராண நூல்களையும் ஒழுங்காக வாசித்து ‘தவற்றினை ஒத்துக் கொண்டேன்’ என்று எழுத உங்களை வரவேற்கிறோம். அல்லது மரியாதையாக stop infesting the web with your filthy, obnoxious, and at best resource-wasting presence. மேலும் உங்களது கைவரிசையைக் காட்ட முற்படின் உமது வாயடைக்கச் செய்யுமாறு சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களை வீச எம்க்கு சக்தி உண்டு.

  (edited and published)

 31. முத்து on February 7, 2010 at 10:31 pm

  நல்ல முயற்சி
  தத்வமசி
  அஹம் பிரஹ்மாஸ்மி.

 32. திருச்சிக் காரன் on February 8, 2010 at 12:40 am

  பெரியாரிஸ்ட்டுகளைப் பார்த்து கோபப் படுவதை விட பரிதாபமே பட வேண்டும். பெரியார் இந்து மதத்தில் இருந்த நம்பிக்கைகளை கண்டித்து, அதை வைத்தே தன்னை பெரிய பகுத்தறிவாளர் போலக் காட்டிக் கொண்டார்.

  பெரியாருக்கு முன்பே, பாரதி, விவேகானந்தர் இப்படி பலரும் இந்து மதத்தின் மீது போடப்ப்பட்ட மூட நம்பிக்கைகளை கண்டித்து உள்ளனர்.
  “வஞ்சனைப் பேய்கள் என்பார், அந்த மரத்தில் என்பார், இந்தக் குளத்தில் என்பார், அஞ்சி பயப் படுவார், மிக துயர் படுவார்” என பாரதி பாடி இருக்கிறான்.

  பெரியார் உண்மையில் பகுத்து ஆராயும் செயல் எதையும் செய்யவேயில்லை. சும்மா உதார் விட்டே காலத்தைக் கழித்து விட்டார்.

  “மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா? மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

  அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக‌ இருந்தாரா?

  உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

  ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு க‌ண்டிப்பாக‌ ‌ பதில் தேவை.

  இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்? ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்?

  அதாவது “உடலோடு சேர்ந்து தான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும், தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

  ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

  கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

  ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.

  புத்தர் , ஆதி சங்கரர், விவேகானந்தர் இவர்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள்.

  புத்தர் மனிதர்களின் துன்பத்தை நீக்க வழி காண முயற்ச்சி செய்து , ஒரு வழியையும் காட்டினார். பெரியார் என்ன செய்தார்? பெரியார் புத்தரைப் போல மனக் குவிப்பு செய்தாரா, ஆராய்ச்சி செய்தாரா?

  பெரியார் காவிரிக் கரையில் இரவு நேரங்களில் நண்பர்களுடன், சேர்ந்து நடனமாடி செய்த ஆராய்ச்சிகள் எல்லாம் இதே தளத்திலே வெளியாகி இருக்கின்றன.

  //நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள்// Courtesy- tamilhindu.

  பெரியார் என்ன செய்தார்? பெரியார் தன்னை அரசியல், சமுதாய ரீதியில் உயர்த்திக் கொள்ள வள்ளுவர், கம்பர் முதல் எல்லோரையும் திட்டியே காசு சேர்த்தார்.

  சிக்கனமாகவும், கஞ்சத் தனமாகவும் சேர்த்த காசை காப்பாற்ற ராஜாஜியிடம் வழி கேட்டார். இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார்.

  அவ்வளவு கஷ்டப் பட்டு சேர்த்த சொத்துக்கள் இப்போது யாரால் அனுபவிக்கப் படுகின்றன?

  //பாடு பட்டு பணத்தை சேகரித்து, ….
  கூடு விட்டிங்கு ஆவிதான் போயின பின்
  யாரோ அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்//

  என்ற தமிழ் செய்யுளின் படி, பாவம் பெரியார் கஷ்டப் பட்டு சம்பாரிச்சு யாரோ அனுபவிக்க விட்டு விட்டு, அம்போன்னு போய் விட்டார்.

  ஆனாலும் பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்களினால் நமக்கு உபயோகமும் உண்டு. பெரியாரின் கருத்துக்களை இந்துக்கள் சரியாக உபயோகித்து கொள்ள வேண்டும்.

  பெரியாரே பரிதாபம் , அவர் சொன்னதுதான் பகுத்தறிவுனு நினைத்துக் கொண்டு, அப்பாவிகளின் கற்பனை சொர்க்கத்திலே மகிழும் பெரியாரிஸ்ட்டுகளோ அதை விடப் பரிதாபம்.

 33. அறிவினா on February 8, 2010 at 1:04 am

  ‘யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்’ என்றால் அது என்ன உலகம்?

 34. தனபால் on February 8, 2010 at 1:13 am

  திரு கந்தர்வன் உங்கள் பின்னூட்டம் மிகவும் அருமை.

 35. jayasree on February 8, 2010 at 1:35 am

  இக்கட்டுரையைப் படித்த, மற்றும் மறுமொழி பதித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.
  பிரயாணத்தின் நடுவில், இப்பொழுதுதான் இந்தப் பதில்களைப் படித்தேன்.

  ஆனால், பலர் எழுப்பிய கேள்விகளுக்கு, கட்டுரையிலேயே பதில் இருக்கிறது. ‘தத்க்ரது’ என்பதிலும் பலரது கேள்விகளுக்கு விடை இருக்கிறது.- ஆபிரகாமிய மதத்தினர் பெறக்கூடிய நிலை குறித்தும் கூட.

  மேலும் வேத மதத்தின் முக்கிய இரு கருத்துக்கள் அந்த மூன்று ஜோதிட யோகங்களில் இருக்கின்றன. அவற்றை நான் விரிவுபடுத்தவில்லை. புரிந்து கொள்பவர்கள், புரிந்து கொள்ளட்டும் என்னும் காரணத்திற்காகவும், அதற்கு மேற்கொண்டு சொல்லப்பட்ட – கடவுளர்களில் பெரியவர் யார் என்ற தர்கத்தை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும், அகத்தியர் முதலானோர் குறித்த கதைகள் நடந்த சாத்தியக்கூறுகளையும் – எளிதில் புரியவைக்கக்கூடியது என்பதற்காகவும், ஜோதிட யோகங்கள் சொல்லப்பட்டன.

  வேத புருஷனின் கண் என்று ஜோதிடம் சொல்லப்படுவதின் காரணம் – ஜோதிடத்தின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தின், இயற்கையின், உலகியலின் எந்த ஒரு பரிமாணத்தையும், நிகழ்வையும் விளக்க முடியும் என்பதனாலே. வாசகர்கள் பலரும் நினைப்பதைப்போல ஜோதிடம் என்பது எதிர்காலம் பற்றி மட்டும் கூறுவது அல்ல. அப்படி என்றால் அது என்ன, என்று கூறுவதும் என் நோக்கம் அல்ல. எந்த அளவுக்கு, எந்த வகையில் அது தேவையோ, அந்த அளவுக்கே அதை கையாண்டுள்ளேன், கையாள்வேன். அந்தக் கடலின் கரையில் நின்றவர்களுக்குத்தான், அதன் வீச்சு புரியும்.

  சில விஷயங்களை இங்கே கூற விரும்புகிறேன்.

  # ப்ரமாண நூல்களே வேத மதத்தைப் புரிந்து கொள்ள உதவும் சாதனங்கள். அவை கூறுவது என்றென்றும் சாசுவதமான உண்மைகள். அவற்றை மீறியோ, அல்லது அவற்றைக் குறைத்து மதிப்பிட்டோ கூறப்படும் கருத்துக்கள் வேத மதக் கருத்துகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது. அப்படிக் கூறப்படும் கருத்துக்கள் சாசுவதமானவை அல்ல. இது ஒவ்வொரு இந்துவும் தெரிந்து கொள்ள வேண்டியது.

  # இந்தப் ப்ரமாண நூல்கள் பூர்வ மீமாம்சை சார்ந்தவை அல்ல. கீதாச்சரியனும் படிக்கச் சொல்லும் பிரம்ம சூத்திரம், சடங்கு சார்ந்த வேதக் கல்வி முடித்தவுடன், தத்துவ விசாரமாகச் செய்யப்படும் ஆன்மா பற்றிய விசாரணை. இதில்தான், ஆன்மாவைப்பற்றியும், பரம் பொருளை அடையும் மார்கங்களைப்பற்றியும், அவ்வாறு அடைந்தவுடன் இருக்கும் நிலையைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. உபநிடதங்களின் சாரம் பிரம்ம சூத்திரம்.

  # முக்தி என்பதன் அர்த்தத்தை இக்கட்டுரையில் கொடுத்துள்ளேன். முக்தி நிலையில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கூறும் ஒரு நூல் இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ‘முமுக்ஷுப் படி’ என்னும் அந்நூலை படித்து, விஞான ரீதியில் முக்தி அடையும் நிலை எவ்வாறு விளக்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

  # முக்தி பற்றிப் பேச முடியுமா? முடியும். பிரம்ம சூத்திரம் பேசுகிறது.
  ஆனால் முக்தி என்னும் அனுபவத்தைப் பேச முடியாது. அந்த அனுபவம் ஆனந்த நிலை என்று தைத்திரீயம் கூறுகிறது. அந்நிலையை அடைவதற்கு முன் வரை, ஜீவன் விஞான நிலை என்னும் அறிவார்த்த நிலையில் இருக்கிறது. அந்தப் பரம புருஷனே ஜீவனில் குடி கொண்டுள்ளதால், அவன் மூலமாக, அவன் நிலையான ஆனந்த நிலையைப் பற்றிப் பேச முடியும். ஆனால் ஆனந்த நிலையை எட்டினவுடன், அது வேறு பரிமாணம். விஞானம் கடந்த பரிமாணம். எனவே அந்த அனுபவத்தைப் பேச முடியாது. இதையே கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றனர். இதை மறுமொழியாக , முந்தின கட்டுரையில் விரிவாகக் கொடுத்துள்ளேன்.

  # முக்தி என்பது என்ன, சித்தி என்பது என்ன? இவை இரண்டும் ஒன்றா, அல்லது வேறு வேறா? தேடுங்கள், விடை கிடைக்கும். விடைக்குத் தேவையான ‘க்ளூக்கள்’ அந்த மூன்று யோகங்களில் உள்ளன – என்ன செய்வது!!! 😉

  # முக்தி என்பது செயலாக்கத்தினால் வருமா, இந்த ஜோதிட யோகங்கள் அவ்வாறு கூறுகின்றனவே என்றால், இந்த யோகங்கள், முக்தி அடைவதற்கு முந்தின இரு பிறவிகளைப் பற்றிக்கூறுகின்றன. அந்த அளவு சாதனம் செய்பவர் அந்தந்த யோகங்களில் பிறப்பர் என்பது பிரம்ம தேவன் கூற்று. அதன் விளக்கங்களைப் பாருங்கள். சர்வம் விஷ்ணு மயம் என்பவனும், சர்வம் சிவ மயம் என்பவனும் முக்திக்குத் தயாராகிறான். மறந்தும் புறம் தொழா விஷ்ணு பக்தனும், அவ்வாறேயான சிவ பக்தனும் முக்தி நிலைக்கு அருகில் வருகிறான் என்பது நோக்கத்தக்கது.

  # ஆனால் இந்த யோகங்கள் பங்கம் அடையாமல் இருக்க வேண்டும். பங்கம் அடையாத இந்த யோகங்களைக் காண்பது அரிது. பங்கப்பட்ட சீகண்ட யோகம் கொண்டவர் இன்றைய தமிழக முதல்வர்! ஏன் அந்த பங்கம் நேரிட்டது என்று ஜோதிடம்தான் விளக்குகிறது. அதன் காரணம் தான் அவர் அணியும் மஞ்சள் துண்டு!! பங்கப்பட்ட யோகத்தை அந்த மஞ்சள் துண்டு சீர் செய்யாது – செய்ய வில்லை. மாறாக, அப்படிப்பட்ட உயர்ந்த முக்தி மார்க்க, பக்தி நிலையில் இருக்கும் பொழுது கால் இடறினால், அடி அதிகம், சரிவு அதிகம். பரம பத விளையாட்டு காட்டும் – மேல் வரிசை யில் பாம்பின் வாயில் மாட்டிக்கொண்டு, அடி வரிசையில் தள்ளி விடப்பட்ட நிலை அது.
  பங்கப்பட்ட யோகம் அவருக்கு அளித்த வாழ்க்கையையும், ஜோதிடம் காட்டும் பாதையையும் உன்னிப்பாகக் கவனிக்கும் என் போன்றவர்களுக்கு, கர்ம சக்கரத்தை நினைத்து ஆச்சர்யம், பயம், பக்தி.. … என்னவென்று சொல்ல.

 36. திருச்சிக் கார‌ன் on February 8, 2010 at 1:26 pm

  ம‌ன‌திலே வெறுப்பு க‌ருத்துக்க‌ள் உடைய‌ எவ‌ரும் முக்தியை அடைய‌ முடியாது. அந்த‌ வெறுப்பே அவ‌ருக்கு ப‌ற்றை உருவாக்கி அவ‌ரை சிக்க‌ வைத்து விடும். புற‌ம் தொழாமை என்னும் நிலைப் பாடு, பிற‌ரின் வ‌ழி பாட்டு முறைக‌ளை த‌ன்னை அறியாம‌லேயே வெறுக்கும் ப‌டி செய்து விடும். தான் க‌ட‌வுளாக‌ வ‌ண‌ங்குப‌வ‌ர் ம‌ட்டுமே முழு முத‌ல் க‌ட‌வுள் என்ப‌தும் அஹ‌ங்காரத்தை, துவேச‌த்தை உருவாக்கும் கோட்பாடே. முக்தி என்ப‌து ஆன்மீக‌ ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ விட‌ய‌ம்.

  ஒருவ‌ன் த‌ன் ம‌ன வ‌லிமையை, ம‌ன‌ நிலையை உய‌ர்த்திக் கொண்டே வ‌ந்து க‌டும் முய‌ற்சிக்குப் பிற‌கே முக்தி என்னும் நிலை அடைவ‌தாக‌ கூற‌ப் ப‌டுகிற‌து. முக்தி ப‌ற்றிய‌ க‌ருத்துக்கு மிக‌ சிற‌ந்த‌ நூல்க‌ளில் விவேக‌ சூடாம‌ணியும் ஒன்று.

 37. திருச்சிக் கார‌ன் on February 8, 2010 at 1:29 pm

  //கீதாச்சரியனும் படிக்கச் சொல்லும் பிரம்ம சூத்திரம், சடங்கு சார்ந்த வேதக் கல்வி முடித்தவுடன், தத்துவ விசாரமாகச் செய்யப்படும் ஆன்மா பற்றிய விசாரணை.,,

  கீதாசாரியான் எந்த‌ இட‌த்திலே பிர‌ம்ம‌ சூத்திர‌த்தை ப‌டிக்கும்ப‌டிக் கூறினான் என்ப‌தை மேற்கோள் காட்டினால் புரிந்து கொள்ள‌ ஏதுவாக இருக்கும்.

 38. Jeevs on February 8, 2010 at 3:47 pm

  //Sarang
  5 February 2010 at 6:46 pm
  //
  அய்யா சாரங் ?
  நான் இந்துவல்ல என்பது உமது துணிபோ ?. அது கிடக்கட்டும்.

  கடவுள் என்பதன் அர்த்தத்தையே அனர்த்தமாக்கி இருக்கும் இந்தக் கட்டுரை ஜாதியக் கூறுகளை மட்டுமேக் கொண்டிருக்கிறது.

  நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
  சுற்றி வந்து முனுமுனென்று சொல்லும் மந்த்ரம் ஏதடா
  நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்
  சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?
  – சிவவாக்கியர்

  சாத்திரங்கள் ஓதுகின்ற சட்ட நாதப் பட்டரே
  வேப்பிரைப்பு வந்த போதில் சாத்திரம் வந்துதவுமோ
  மாத்திரை யெப்போதுமுள்ளே அறிந்து கொள்ள தெக்கிறீல்
  சாத்திரப் பை நோய்களேது சத்தி மூர்த்தி சித்தியே..
  – சிவவாக்கியர்

  சாத்திரங்கள் நிலவைச் சுட்டிக் காட்ட உதவும் விரல் போல. நிலவை ஒருவன் தானாகவும் காணலாம் மற்றவர்கள் துணையின்றி. ஆனால் நாம் நிலவை விட்டு விடுகிறோம். விரலை மட்டுமே பற்றிக் கொள்கிறோம்.

  //# ப்ரமாண நூல்களே வேத மதத்தைப் புரிந்து கொள்ள உதவும் சாதனங்கள். //
  ப்ரமாண நூல்கள் என்பவை யாவை ?
  முதலில், யார் ப்ராமணன் ?
  இந்து என்பது மதத்தின் கூறுகள் கொண்டதா ?

  உங்களுடைய இந்த சாதீயக் குறுக்கல் கொண்ட கட்டுரைகள் பெரும்பாலும் பெரியாரிஸ்டுகளுக்கான தீனி மட்டுமே. இதில் உண்மையான ஆன்மீகம் கிஞ்சித்தும் கிட்டாது.

  (edited and published).

 39. armchaircritic on February 8, 2010 at 6:04 pm

  //கீதாசாரியான் எந்த‌ இட‌த்திலே பிர‌ம்ம‌ சூத்திர‌த்தை ப‌டிக்கும்ப‌டிக் கூறினான் என்ப‌தை மேற்கோள் காட்டினால் புரிந்து கொள்ள‌ ஏதுவாக இருக்கும்.//
  internetல் தேடுவோம் என்று ‘brahma sutra in bhagavad gita’ என்ற கூகிள் search செய்தேன். Chapter 13 verse 5 கண்ணில் பட்டது. மேலும் ஏதாவது இருக்குமோ என்னவோ. இந்த தேடலில் ஒரு linkல் ‘Christianity and the Origin of Sanskrit’ என்ற ebook கண்ணில் பட்டது. யாராவது முடிந்தால் படியுங்கள்.

 40. armchaircritic on February 8, 2010 at 6:11 pm

  //அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே? அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும்? அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே?//
  கட்டுரையில் உள்ள இந்த வரிகள் அனைவரும் படித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை.

 41. பெரியாரிஸ்ட் on February 8, 2010 at 6:23 pm

  //“மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா? மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

  அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக‌ இருந்தாரா?
  //

  லூசுத்தனமான வாதம், அதான் உயிரும் உடலும் செத்தபிறகு இல்லைன்னு ஆகிவிடுது என்று நாத்திகன் சொல்கிறானே, இருக்குன்னு சொல்றவா தான் நிருபனம் செய்ய வேண்டும்.

  திருச்சிகாரனுக்கும் முக்தி கிட்ட வாழ்த்துகள்

  //மேலும் உங்களது கைவரிசையைக் காட்ட முற்படின் உமது வாயடைக்கச் செய்யுமாறு சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களை வீச எம்க்கு சக்தி உண்டு.//

  அதைத்தான் சொல்கிறேன். எம்மைப் போன்றவர்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை விட்டு விட்டு விரைவாக உங்களுக்கு முக்தி கிட்ட வாழ்த்துகள். மற்றவர்களுக்கு முக்தி கிடைத்தால் கிடைக்காவிட்டால் என்ன ? அவர்களாவது நிம்பதியாக இருக்கட்டுமே.

 42. திருச்சிக் கார‌ன் on February 8, 2010 at 10:03 pm

  //இந்த விஷயத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்’. அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். இன்றைக்கு அவர்கள் எல்லோருமே அப்படி என்று சொல்ல முடியாது, ஆயினும், முக்தி மார்க்கத்தை நாடுபவர்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘நாராயணனே நமக்கு’ என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல. அதேபோல், ‘சர்வம் சிவ மயம்’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது //

  //அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே?//

  “மறந்தும் புறம் தொழா” என்கிற‌ கோட்பாட்டில் இருப்ப‌வ‌ர் யாராவது “புற” தெய்வ‌ங்க‌ளையும் ப‌ர‌மாத்மா, முழு முத‌ற்க‌ட‌வுள் என‌ நினைக்கும் க‌ண்ணிய‌ம் உடைய‌வர்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌ரா? அவ‌ர‌வ‌ர் ம‌ன‌சாட்சியை தொட்டு சொல்லுங்க‌ள். ம‌த‌ வாத‌த்தை நியாய‌ப் ப‌டுத்த‌ எப்ப‌டி எல்லாம் எழுதுகிரார்க‌ள்.

 43. தமிழ்ப்பேச்சு on February 8, 2010 at 10:09 pm

  தமிழ் பேச்சு இணையத்துக்கு எல்லா நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
  தமிழ்டாக்

 44. தனபால் on February 8, 2010 at 11:22 pm

  தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு கீழே உள்ளது என் நண்பனின் வெப் சைட்.இதில் இலவச பதிவிறக்கம் நிறைய உள்ளது.விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
  http://www.maransdog.org/iskcon_documents
  http://www.maransdog.com/JIGGI_JIGGI
  http://www.maransdog.com/document
  http://www.maransdog.com/2009_books
  http://www.maransdog.com/Ramanujan/
  http://www.maransdog.com/Mahabharat/

 45. Sarang on February 9, 2010 at 11:46 am

  அய்யா ஜீவ்ஸ்

  //
  //# ப்ரமாண நூல்களே வேத மதத்தைப் புரிந்து கொள்ள உதவும் சாதனங்கள். //
  ப்ரமாண நூல்கள் என்பவை யாவை ?
  முதலில், யார் ப்ராமணன் ?
  இந்து என்பது மதத்தின் கூறுகள் கொண்டதா ?
  //

  மறுபடியும் படியுங்கள் பிரமான நூல் என்பது தான் கட்டுரையில் ப்ரமான நூல் எண்டு ஒரு ப் சேர்த்து வந்துள்ளது – பிரமான நூல் என்பது பிராமன நூல் இல்லை “பிராமன” என்பது ஜாதி – பிரமான என்பது நாம் கடைசி அத்தாட்சியாக கருதும் மூன்று நூல்கள்

  //
  // அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //

  இது சரியில்லை. கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப்படுபவர் என்று அர்த்தம் ஆகிறதே. தவறான வழியில் திசை மாற முயல்கிறீர்கள்.

  //

  இங்கு ஆசிரியர் இந்து மதத்தை பற்றி பேசுகிறார் தாங்கள் அதை சரியல்ல என்கிறீர்கள் – மறு பிறவியில் கிறிஸ்தவராக பிறந்து முக்தி அடைவார் என்று கூற இது ஒரு கிறிஸ்தவ வலைதளமும் இல்லை கிறிஸ்தவத்தில் மறு பிறவி என்ற ஒரு கான்செப்டும் இல்லை

  நீங்கள் ஹிந்து அல்ல என்ற எண்ணம் இல்லை – இங்குமா இஸ்லாமையும் ,கிறிஸ்தவத்தையும் சேர்த்துக்கொண்டு செக்யுலர் காரர்களை போல் பேச வேண்டும் என்ற எண்ணமே

 46. Sarang on February 9, 2010 at 12:11 pm

  //
  “மறந்தும் புறம் தொழா” என்கிற‌ கோட்பாட்டில் இருப்ப‌வ‌ர் யாராவது “புற” தெய்வ‌ங்க‌ளையும் ப‌ர‌மாத்மா, முழு முத‌ற்க‌ட‌வுள் என‌ நினைக்கும் க‌ண்ணிய‌ம் உடைய‌வர்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌ரா? அவ‌ர‌வ‌ர் ம‌ன‌சாட்சியை தொட்டு சொல்லுங்க‌ள். ம‌த‌ வாத‌த்தை நியாய‌ப் ப‌டுத்த‌ எப்ப‌டி எல்லாம் எழுதுகிரார்க‌ள்.
  //

  அப்போ அல்லாவையும், ஏசுவையும், இல்லையேல் காட்டும் எத்தையும் பரமாத்மா என்று சொல்ல வேண்டியது தான் –
  இதெற்கெல்லாம் வேதம், புராணம், இதிகாசங்கள் எதற்கு அதென்ன சிவன் விஷ்ணு பிரம்ம, சக்தி, கந்தன் என்று ஒரு சில நாமங்களை மட்டும் பரமாத்வாடுன் ஒப்பிட வேண்டும் எல்லோரையும் பரமாத்மாவாக நினை எல்லோரையும் த்யானம் பண்ணு. எல்லோரையும் துதி பண்ணு என்பது தானே சர்வோத்தமமான நிலை – இது நடை முறைக்கு ஒவ்வாது என்பது தான் விஷயமே (இந்தியாவில் மட்டுமே நூறு கோடிக்கு மேல் மக்கள் எல்லோரையும் எப்படி த்யானம் பண்ணுவது)

  நீங்கள் சொல்லும் சில நாமங்களை மட்டும் பரமாத்மாவென கொண்டால் என்ன பயன், வேறொருவர் இன்னொரு லிஸ்ட் தருவார் – – பரமாத்மா ஸ்வரூபம் எங்கும் உள்ளது என்ற எண்ணம் வேண்டும் அதுவே நமது கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர எல்லோரையும் லிஸ்டில் வைத்தே ஆகா வேண்டும் என்பதல்ல

  அப்படியானால் நானும் கூட பரமாத்மா என்று கொள்ள வேண்டும் – இனியேனும் எனக்கு பதில் எழுதும் போது ஏக வசனத்தில் எழுதாதீர்கள் 🙂

  நமக்கு பிடிக்காத கருத்தெல்லாம் மத வாதம் என்பது காங்கிரசாரின் செகுலர் கொள்கை போல தான்

  – புறம் தொழாதவர்கள் ஒருவரை பற்றி மட்டுமே சிந்தனையில் இருப்பர், இப்படி ஒருவர் பற்றியே த்யானத்தில் இருக்கும் அவர்களுக்கு பிற தெய்வங்களை நிந்திக்கவோ யோசிக்கவோ, பூசிக்கவோ வேணும் என்ற எண்ணம் எங்கனே வரும் – இது அத்வைதிகளிடம் போய் உங்களுக்கு பல ஆத்மா உள்ளது என்று ஒப்புக்கொள்ளும் கண்ணியம் இருக்கிறதா என்று கேட்பது போல் ஆகும், அல்லது த்வைதிகளிடம் போய் ஒரே ஆத்மாதான் என்று ஒப்பும் கண்ணியம் இருக்கிறதா என்று கேட்பது போலாகும்

  எனக்கு எந்த தெய்வத்தின் மீதும் த்வேஷம் இல்லை, எல்லோரின் மீதும் மரியாதையை உள்ளது ஆனால் ஈடுபாடு என்பது ஒன்றின் மேல் தான் உள்ளது.

 47. Sarang on February 9, 2010 at 1:07 pm

  ஜெயஸ்ரீ அவர்களே

  நீங்கள் முந்தைய கட்டுரையில் எழுதியதை அப்படியே கும்பகோணம் சக்ரபாணி கோவிலில் நேரில் காண முடிந்தது

  – பிரபஞ்ச நிலையை குறிப்பதற்காக சக்கரத்தில் எழுந்தருளி இருக்கும் நாராயணனோ ருத்ராம்சம் பொருந்தியவராக முக்கண் உடையவராக உள்ளார் (முன்பு கூட இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன் – இந்த தடவை தான் மூன்றாவது நேத்ர தரிசனம் கிட்டியது)
  பிரம்மாவோ அங்கு சாக்ஷாத் எழுந்தருளி உள்ளார், விஷ்ணுவாகவும், ருத்ரனானகவும் தானே உள்ளார்

  – அவருக்கு நான்கு யுகங்களை குறிப்பது போல நான்கு திரவியங்களை கொண்டு [துளசி, குங்குமம், இரு மலர்கள் பெயர் நினைவில் இல்லை) அர்ச்சனை நடக்கிறது
  [தாயார், பிரம்மா, அக்னி, சூரியன் இவர்கள் அர்ச்சனை செய்கிறார்கள் ]

  – அவருக்கு காவேரி ஆற்றில் உள்ள ச்மசானத்திளிருந்து புகை வராமல் திருவாராதனம் நடப்பதில்லை என்று சொல்கிறார்கள் (ஜன்ம சுழலில் இருந்து ஒருவருக்கேனும் மோக்ஷம் அளித்த பிற்பாடே திருமஞ்சனம் காண்கிறார் என்பது போல)

 48. Jeevs on February 9, 2010 at 2:41 pm

  sarang !

  // மறுபடியும் படியுங்கள் பிரமான நூல் என்பது தான் கட்டுரையில் ப்ரமான நூல் எண்டு ஒரு ப் சேர்த்து வந்துள்ளது – பிரமான நூல் என்பது பிராமன நூல் இல்லை “பிராமன” என்பது ஜாதி – பிரமான என்பது நாம் கடைசி அத்தாட்சியாக கருதும் மூன்று நூல்கள் //

  Who authenticates it ? How does it differs from others saying ” இறுதி வேதம் ” இறுதி தூதர் ?
  மறுபடியும் சொல்கிறேன். இந்து மதத்தின் கூறுகள் கொண்டதாகத் தான் நீங்க வழிநடத்திச் செல்ல முயல்கிறீர்கள் என்பது என் கருத்து.
  கடவுள் இல்லை என்று சொல்லி, கர்ம யோகத்தில் இருப்பவனும் முக்தி அடைகிறான். அவனுக்கு so called “இந்து மதத்தில்” சத்தியமான இடம் உண்டு.

  ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை வழிபட நாம் வைத்துக் கொள்ளும் பெயர்களே சிவ விஷ்ணு பிரம்ம மற்றும் கோடானு கோடி பெயர்கள். பகவான் கிருஷ்ணனே விஷ்வரூபத்தின் போது சொல்வது என்ன என்பதை யோசிக்கவும்.

  //நீங்கள் ஹிந்து அல்ல என்ற எண்ணம் இல்லை – இங்குமா இஸ்லாமையும் ,கிறிஸ்தவத்தையும் சேர்த்துக்கொண்டு செக்யுலர் காரர்களை போல் பேச வேண்டும் என்ற எண்ணமே//

  can you point this out please ? 🙂 கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப் படுபவர் என்பது தான் உங்கள் எண்ணம் என்றால் – எல்லாம் கடந்து உள்ளில் நிறைந்திருப்பவனை ஒரு கூட்டுக்குள் மட்டுமே காணவேண்டும் என்று வற்புறுத்துவீர்களானால் – உங்களின் ஆன்மீகப் பயணத்திற்கு வாழ்த்துச் சொல்லி நான் ஒதுங்கிக் கொள்கிறேன் 🙂

 49. Sarang on February 9, 2010 at 3:03 pm

  அன்புள்ள பாலா மற்றும் முக்திக்கு நிஷ்டை தேவை என நினைப்பவர்க்கு

  //
  Bala
  5 February 2010 at 10:45 pm
  // இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. //

  interesting. This sounds very much like a “prophet” idea rather than Hindu spirituality.

  In Hindu spiirituality, it is Guru’s guidance that kindles an aspirant towards self knowledge – but that is only the “inspiration” part. The Sadhaka also has to strive hard and peel of all his layers of “avidya” (ignorance) one by one.. and this may take one or many births… It is not said that just by mere association of a great sage, you are *guaranteed* of Mukthi.

  //

  ஆப்ரஹாமிய மதத்தில் – இப்படி செய்தால் தான் சுவர்க்கம் அடையாளம் (ஜாலியாக இருக்கலாம்) என்பது திருஷ்டாந்தம் 🙂

  ராமானுஜரை சரண் புகுந்தவர்களுக்கு அவர் முக்தி தருகிறேன் என்கிறார் சரண் புகவிடில் முக்தி இல்லை என்று சொல்லவில்லையே – ராமனுஜரின் உண்மையான பக்தனாக இருந்தால் அவர் சொல்படி கேட்பான் – அவர் சொல்படி கேட்பது என்பது தர்ம சாஸ்திரப்படி நடந்து பக்தியில் தெளிப்பதே ஆகும் – எப்படியும் நிஷ்டை வந்து விடுகிறது

  மேலும் ராமானுஜ சம்மந்தம் என்பது என்னவோ அவரது சொந்தக் காரர்களுக்கும் பூணுல் போட்டவர்க்கும் என்று நினைத்து விடாதீர் – சித்திரை மாதம் ஆதிரை நாள் பெரும்புதூர் வந்தீர்களானால் அங்கு பாகவதர் கூட்டமே நிரம்பி இருக்கும் – அவருக்கு பிராமணர் அல்லாத அடியார்வர்களே ஜாஸ்தி

  முக்திக்கு நிஷ்டை வேண்டும் என்பது ஒரு சரியான சிந்தனை அல்ல – அது என்னோமோ கடவுளிடம் போய் – நான் இவ்வளவு த்யானம் பண்ணேன், இவ்வளவு தானம் பண்ணேன், பக்கத்து வீட்டுக்காரரோட ஒரு நூறு மணி நேரம் அதிகமா உன்ன நினைத்தேன் அதனால எனக்கு கட்டாயம் முக்தி தா என்று கேட்பது போல் உள்ளது – அவனோ ச்வதன்த்திரன் என்று வேதம் கூறுகிறது – முக்தி அழிப்பது என்னவோ அவனது இஷ்டம் – அவனை எசினவருக்கும் முக்தி உண்டு (ராவணன், கம்சன், சிசுபாலன்), ஒரு பானைக்கே முக்தி அள்ளித்தான் என்பது ததி பாண்டன் கதையின் முலம் அறிகிறோம்

  //
  Plus, what Hindu spirituality insists on is “shraddha”. It does not directly translate as faith or belief as it is normally understood.

  It is *self knowledge* that is criteria for Mukthi – NOT “Belief in Vedas”, NOT “knowledge of Vedas”.
  //

  ஆன்ம ச்வபாவத்தை அறிந்து விட்டால் முக்தி என்று எப்படி கொள்வது – அது என்னமோ நீங்களே அடைந்தது போல் உள்ளது அதற்க்கு கடவுள் எதற்கு – அவன் மனம் வைக்காவிடில் என்ன பணியும் ஒரு பிரயோஜனமும் இல்லை – அவன் மனம் வைத்தால் எதுவும் பண்ணவே வேண்டாம்

  எதுவுமே வேண்டாம் என்னை பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிறேன் கவலை படாதே என்று கடைசியாக சொல்கிறானே கண்ணன் அப்போ அது என்ன ஆபிரகாமிய கொள்கையா இல்லை அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லையா

 50. Sarang on February 9, 2010 at 3:32 pm

  ஜீவ்ஸ்

  //
  ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை வழிபட நாம் வைத்துக் கொள்ளும் பெயர்களே சிவ விஷ்ணு பிரம்ம மற்றும் கோடானு கோடி பெயர்கள். பகவான் கிருஷ்ணனே விஷ்வரூபத்தின் போது சொல்வது என்ன என்பதை யோசிக்கவும்.
  //

  இங்கு ஏன் கிருஷ்ணனே சொன்னார் என்று சொல்கிறீர்கள் – உங்களுக்கு ஒரு வரையறை, கிருஷ்ணன் என்ற ஒரு கோட்பாடு தேவை படுகிறது – அது போல தான் மத கோட்பாடுகளும் – யாரும் கடவுளை மதத்தினுள் அடைக்கவில்லை – அந்த மூன்று பிரமாணங்களும் பரமாத்மாவை பற்றி பறக்க பேசுபவை – பரமாத்மா என்பது பொது தத்துவம் – நீங்களே அந்த பிரமானன்களுள் ஒன்றை தான் கூறுகிறீர்கள், இது பிரமாணம் ஆதலால் கேள் நம்பு என்கிறீர்கள்
  (இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்)

  //
  Who authenticates it ? How does it differs from others saying ” இறுதி வேதம் ” இறுதி தூதர் ?
  //

  தெளிவான வித்யாசம் உள்ளது

  வேதாந்த சனாதன தர்மத்தில் ஊறி திளைத்தவர்கள், ஜ்யானிகள், புத்தமும், சீனமும் சனாதன தர்மத்தை களவாடிய பொது அதை மீட்டுக்கொண்டு தந்தவர்கலான சங்கரர், ராமானுஜர், மத்வர் மற்ற ஜ்யானிகள் சனாதன தர்மத்தை தெரிந்து கொள்ள இந்த மூன்று நூல்கள் பிரமாணம் என்று கொண்டார்கள் – இல்லை என்று நீங்கள் சொன்னால் நீங்கள் போகும் வழி வேறு (அவர்களின் வேதாந்த வழி அல்ல) அவ்வளவே விஷயம்

  இங்கு இறுதியாக கொள்ளப்படுவது என்பது “the only and final” என்ற அர்த்தம் இல்லை – நீயே பார்த்து முடிவு செய், நீயே யோசித்து ஆராய்ந்து முடிவு செய், இதுவும் முடிவில்லையா அப்போது இந்த ப்ராமானதிர்க்கு வா – மேலும் உனது முடிவுகள் முன்னோர் கடும் தவம் செய்து உலக நன்மைக்காக தங்களையும் வருத்தி கொண்டு ஆராய்ந்து கொணர்ந்த அந்த பிராமணத்தின் படி உள்ளத என்று பார் என்பது தான் திருஷ்டாந்தம்

  இதை இறுதியாக கொள்ளாமல், ந்யாய, வைசேசிக, யோக, சங்க்ய மதங்கள் இருந்தனவே – அவைகளுக்கு இந்த மூன்றும் பிரமாணம் அல்லவே, இவையும் சனாதன தர்மத்தின் அங்கமாகி விட்டனவே?

  ஆகவே இங்கு கூறும் பிரமானமானது வேந்தாந்த விஷயத்தை அறியவே. இது தான் கடவுள் என்று அவரை கட்டுப்படுத்த அல்ல – வேதாந்த மார்கமாக எழுதும் பொது இவை மூன்றையும் பிரமாணமாக கொண்டே தீர வேண்டும் – தமிழில் பேசினால் தமிழ் இலக்கணம் இல்லாமல் எப்படி பேச முடியும் அது போலவே

  இறுதி நூல், இறுதி தூதர் என்பது வேறு – உலகத்தவரே (பாவிகளே) இதுக்கு முன் இருந்தவையும் பொய், பின் வரப்போவையும் பொய் இதுவே மெய் இது அல்லால் ஏதும் இல்லை ஜாக்கிரதை என்பது தான் இங்கு அறிகிறோம்

  பிரமாணமாக கொள்ளும் இறுதி நூலானது இலக்கணம் போல – இதற்க்கு மேல் எனக்கு சரியாக எழுதவரவில்லை

  //
  can you point this out please ? கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப் படுபவர் என்பது தான் உங்கள் எண்ணம் என்றால் – எல்லாம் கடந்து உள்ளில் நிறைந்திருப்பவனை ஒரு கூட்டுக்குள் மட்டுமே காணவேண்டும் என்று வற்புறுத்துவீர்களானால் – உங்களின் ஆன்மீகப் பயணத்திற்கு வாழ்த்துச் சொல்லி நான் ஒதுங்கிக் கொள்கிறேன்
  //

  ம்ம்ம் எனக்கு எழுதவரவில்லை என்பது மறுபடியும் நிரூபணம் – நான் சொன்னது இந்த தலத்தில் போட்துவாகவே எழுதுவது என்பது தேவை யற்றது – இது ராமாயணத்தில் ராமர் ராவணனை வதம் செய்தார், ராமர் சீதையை மணந்தார் என்று சொல்லாமல் – நமது நூலின் கதாநாயகன் எதிர் கதாநாயகனை கொன்றார், நமது நூலின் கதாநாயகன் கதாநாயகியை மணந்தார் என்பது போல் ஆகிவிடும் – இதை தான் நான் சொல்ல வந்தது

  ஒரு சிறிய விண்ணப்பம் – ஓரிரண்டு பதில்களை படித்து விட்டு இவன் இப்படிதான், இந்த கொள்கை உடையவன் நம் போல் பரந்த மனம் இல்லையே உனக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன் என்று முடிவு கட்டுவது சரியல்ல – பதில்களை “context” உடன் மட்டும் பார்த்து, வலை தளத்தில் எழுதும் பொது நமது கருத்தை முழுமையாக விளக்க இயலாமல் போகிவிடும் என்பதையும் மனதில் கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறேன்

 51. ram on February 9, 2010 at 3:53 pm

  ///தனபால்
  8 February 2010 at 11:22 pm
  தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு கீழே உள்ளது என் நண்பனின் வெப் சைட்.///
  very thanks for this.

 52. tamilvanam on February 9, 2010 at 4:06 pm

  Dear Thiru, Thiruchikkaran avarkale,

  May I have ur email id pls’

  regards,

  thamil

 53. Sarang on February 9, 2010 at 4:42 pm

  ஜீவ்ஸ் அவர்களே

  //
  ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை வழிபட நாம் வைத்துக் கொள்ளும் பெயர்களே சிவ விஷ்ணு பிரம்ம மற்றும் கோடானு கோடி பெயர்கள். பகவான் கிருஷ்ணனே விஷ்வரூபத்தின் போது சொல்வது என்ன என்பதை யோசிக்கவும்.
  //

  மேலும் இங்கு ஹிந்து மதம் என்று தான் கூற வேண்டும், முக்தியை பற்றி வேறு யாரும் பேசவில்லை – மற்றவரெல்லாம் ஒரு நாலஞ்சு பேர சாத்திபுட்டு மேலே பொய் ஜாலியா இருக்கலாம் என்று தான் சொல்கிறார்கள் – உலகம் சக்கரம், வாழ்கை சக்கரம், மறுபிறவி, முக்தி இதெல்லாம் நீங்கள் வேண்டாம் என்றாலும் ஹிந்து என்ற மத நூல்களில் தான் உள்ளன – மதம் என்றாலே மோசம் என்பது அர்த்தம் அல்ல.

  அதாலால் முக்தியை பற்றி பேசும் பொது ஹிந்து மதத்தை பற்றி மட்டுமே சொல்ல வேண்டியாக உள்ளது அதாவது ஹிந்து மதத்தில் சொன்னது போல நடந்தால் முக்தி என்று ஹிந்து மதம் விவரிக்கும் ஒரு நிலை கிட்டும்

  இஸ்லாம் நூல் படி நடந்தால் முக்தி கிட்டும் என்று எங்கனே சொல்வது – அந்த மார்கத்திலோ மறு பிறவி என்பதோ நாம் கூறும் முக்தி என்பதோ இல்லையே – ஒரு இஸ்லாமியருக்கு முக்தி கிட்டியது என்று சொல்வோமாயின் அவர் ஹிந்து மதத்தில் சொன்னபடி (மதம் மாறாமலேயே) ஏதோ செய்துள்ளார் அதன் விளைவாக முக்தி கிட்டியது என்று தானே கொள்ள வேண்டும்

  அடிப்படையில் ஒரு நூலே இல்லாமல், மார்கமே இல்லாமல் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் எங்கும் செல்ல முடியாது – வேத நூலில் சொன்ன மார்க்கம் வேண்டுமானால் அதை அறிதலும் அதன் படி நடத்தலும் முக்கியமாகிறது அதற்க்கு வேதத்தையே பிரமாணமாக கொள்ள வேண்டியது உள்ளது

 54. ஜடாயு on February 9, 2010 at 4:54 pm

  // ஆன்ம ச்வபாவத்தை அறிந்து விட்டால் முக்தி என்று எப்படி கொள்வது – அது என்னமோ நீங்களே அடைந்தது போல் உள்ளது அதற்க்கு கடவுள் எதற்கு – அவன் மனம் வைக்காவிடில் என்ன பணியும் ஒரு பிரயோஜனமும் இல்லை – அவன் மனம் வைத்தால் எதுவும் பண்ணவே வேண்டாம் //

  அன்புள்ள சாரங்,

  பாலா நம்மாழ்வாரைப் படித்திருப்பார் போலும். நம்மாழ்வார் கூறுவதைப் பாருங்கள்:

  நன்றாய் ஞானம் கடந்துபோய்
  நல்லிந்திரிய மெல்லா மீர்த்து
  ஒன்றாய்க் கிடந்தவரும் பாழ்
  உலப்பிலதனை உணர்ந் துணர்ந்து,
  சென்றாங்கின்ப துன்பங்கள்
  செற்றும் களைந்து பசையற்றால்
  அன்றே அப்போதே வீடு
  அதுவே வீடு வீடாமே. (திருவாய்மொழி 8-8-6.)

  உரை: நம் ஸ்வரூபத்தை மறைக்கும் ப்ரக்ருதியின் ஸம்பந்தத்தை விலக்கி இந்திரியங்களை ஜெயித்து விஷயங்களோடு உள்ள ஸம்பந்தத்தையும் அதின் ருசி வாஸனைகளையும் விட்டால் ஆத்மாவின் மறைந்த ஸ்வரூபம் தோன்றும். அதுவே மோக்ஷம், மோக்ஷத்தின் ஆனந்தமும் அதுவே.

  இங்கும் முக்தி உன்னதக் கவிதையாகவே பாடப் பட்டுள்ளது, தன் தத்துவ வீச்சை முழுவதும் நிரப்பியபடி!

  // எதுவுமே வேண்டாம் என்னை பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிறேன் கவலை படாதே என்று கடைசியாக சொல்கிறானே கண்ணன் அப்போ அது என்ன ஆபிரகாமிய கொள்கையா இல்லை அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லையா//

  மோஷ த்வாரத்தின் *ஒரே* கேட்-கீப்பர் போன்று ஒரே ஒரு சமயவாதக் கடவுளை (thiesitic deity) உருவகித்தால் தான் ”நம்பிக்கை” என்பதை இந்த அர்த்தத்தில் பார்க்கத் தோன்றும். the conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for Vedantins, it is all manifestations of Brahman only.

  எதுவுமே வேண்டாம் என்றால் என்னத்திற்கு கீதை 18 யோகங்களை உபதேசிக்க வேண்டும்?? சரணாகதி பற்றி ஒரு சுலோகம் போதாதா? கீதையே யதேச்சஸி ததா குரு (எப்படி இஷ்டமோ அப்படிச் செய்) என்று பின்னர் கூறுவதைக் கவனியுங்கள்.

  முக்தி என்பது ஒரு “நிலை”. ஒரு செயல்பாடோ, அல்லது ஒரு இலக்கோ கூட அல்ல. தூய வேதாந்தத்தில் கட்டுகளற்ற விடுதலை என்றே அது பேசப்பட்டுள்ளது (”வீடு” என்ற தமிழ் சொல்லுக்கும் அதுவோ பொருள்). சரணாகதி தத்துவம் என்பது பக்தி மார்க்கத்தில் ஒரு உன்னத பாவனையாக சொல்லப் பட்டுள்ளது, அதுவே முக்தி அல்ல.

  மேலும், பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம்* மட்டுமே. அது ஒரு *நிலை* அல்ல. ஆத்ம-ஸ்வரூப-தர்சனம் எனப்படும் தன்னிலை உணர்தலே முக்தி என்று வேதாந்தம் கூறுகிறது.

 55. Sarang on February 9, 2010 at 5:48 pm

  ஜடாயு அவர்களே

  நம்மாழ்வாரின் ஒரு பாசுரத்தை கூறும் நீங்கள் அவர் மற்றவைகளில் சொன்னதை பார்க்கவில்லையே – அவர் ஆன்மாவிற்கு அடிமை ஸ்வபாவம் தான் காட்டினார் – ஆன்ம ஸ்வரூபம் என்று அவர் சொல்லுவது ஆன்மா செஷியின் செஷன் என்பதை அறிவதே

  உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (கண்ணன் சொல்லும் சரணாகதி).

  நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் (ஒரு தகுதி இல்லாமலே முக்தி கிட்டும் என்று நாம் தெரிந்து கொள்ள)
  அடியேன் சிறிய ஞானத்தன் – [அடியேன் என்பதன் மூலம் அடிமை என்பது, சிறிய ஞானத்தன் என்பதன் மூலம் ஆன்மாவிற்கு ஞானம் அழகல்ல என்றது]

  தீர வினைகள் தீர என்னை ஆண்டாய் .. உனக்காட்பட்டும் அடியேன் இன்னும் உழல்வேனே – [வினைகள் தீர்ந்தாயிர்று (ஆன்ம நிலை அறிந்தாயிற்று) ஆனாலும் இன்னும் இங்கு உழல்கிரேனே எங்கே மோக்ஷம் என்னபாடு போலே]
  ஆவிக்கொர் பற்றுக்கொம்பு – ஆன்மாவை அறிந்தால் மட்டுமே ஏற்படுமா இந்த எண்ணம்

  அடியேன் ஆவி அகமே தித்திப்பாய், அமர அழும்ப துழாவி என் ஆவி அமர தழுவிற்று [ஆன்ம நிலையை நன்கு உணர்தல், பரிபாஷையே ஆண்மவிர்ற்கும் கன்னனுக்குமாய் இருத்தல் – இதன் பின்னும் பல பாசுரங்கள பண்ணி இந்த லோகத்தில் தானே இருந்தார் ஆழ்வார்]

  கண்ணிடம் போய் என் நெஞ்ஜாரை கேட்டதாக சொல் – கண்ணனிடம் என் நெஞ்சு உள்ளது அதில் அவன் உள்ளான் அதனால் நெஞ்சார் என்று மரியாதையுடன் சொன்னது [பக்தியின் உச்சம்]

  எனதாவி யார் நான் யார் தந்த நீ கொண்டாக்கினையே – நீயே அதிகாரி, நான் ஒன்னும் என்னை உன்னுள் செலுத்தவில்லை , நீயே எடுத்துக்கொண்டாய் என்றது]

  இப்படி பல இருக்க நமக்கு வேண்டிய பொருளை தரும் ஒரு பாசுரத்தை மட்டும் பார்த்தல் அது பூரணமாக ஆழ்வாரின் வாக்கை பிரதிபலிக்காது

  //
  // எதுவுமே வேண்டாம் என்னை பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிறேன் கவலை படாதே என்று கடைசியாக சொல்கிறானே கண்ணன் அப்போ அது என்ன ஆபிரகாமிய கொள்கையா இல்லை அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லையா//

  மோஷ த்வாரத்தின் *ஒரே* கேட்-கீப்பர் போன்று ஒரே ஒரு சமயவாதக் கடவுளை (thiesitic deity) உருவகித்தால் தான் ”நம்பிக்கை” என்பதை இந்த அர்த்தத்தில் பார்க்கத் தோன்றும். the conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for Vedantins, it is all manifestations of Brahman only.
  //

  பாலா குறிப்பிட்ட நிஷ்டைகள் எதுவும் தேவை இல்லை – கண்ணன் என்னிடம் சரண் என்றால் போதும் என்பதை விளக்குவதற்காக சொன்னேன் – இதயுமா சமயவாதம் என்று பார்க்கத் தோன்றுகிறது – கண்ணன் மாம் ஏகம் என்று தானே கூறினான் – பர பிரம்மம் ஏகம் என்று கூறவில்லை – அவர் சொன்னதை மாற்றி சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை

  இதே யக்ஞவல்கர் சொன்னதை சொல்வதேன்றானால் – எல்லாம் அந்த இஷ்வரன் தான், ஹிரண்ய கார்பன் தான் என்று சொல்லி இருப்பேன் அங்கு கண்ணன் என்று பிரயோகித்திருக்க மாட்டேன்

  //
  எதுவுமே வேண்டாம் என்றால் என்னத்திற்கு கீதை 18 யோகங்களை உபதேசிக்க வேண்டும்?? சரணாகதி பற்றி ஒரு சுலோகம் போதாதா? கீதையே யதேச்சஸி ததா குரு (எப்படி இஷ்டமோ அப்படிச் செய்) என்று பின்னர் கூறுவதைக் கவனியுங்கள்.
  //

  இதற்க்கு எனக்கு தெரிந்த இரண்டு பதில்கள்

  முதலாவது – இவ்வளவு சொன்னேன், இது எதுவுமே முடியலன்னா இத பண்ணு. எனக்கு துளசி தீர்த்மாவது கொடு என்று கடைசியாக சொல்லவில்லையா அது போல் தான்

  இரண்டாவது – இது வைஷ்ணவ ஆசிரியர்கள் கொள்ளும் நிலை – சரம ச்லோகமானது முமுக்ஷுவான வைஷ்ணவர்களுக்கு மூன்று ரஹச்யங்களில் ஒன்று [முமுக்ஷுவுக்கு அறியவேண்டிய ரஹச்யம் மூன்று] – கீதையில் இந்த சரம ஸ்லோகமே முக்கியமானது என்று கொள்வர் – அது பிரபத்தி மார்கத்தை விவரிப்பதனால். இப்படி இருக்கையால் – சரம ஸ்லோகமே முக்கியமான கீதா வாக்கியம், முன் உள்ளவை எல்லாம் வெறும் அவதாரிகை என்பது அவர்களின் நிலை பாடு

  //
  மேலும், பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம்* மட்டுமே. அது ஒரு *நிலை* அல்ல. ஆத்ம-ஸ்வரூப-தர்சனம் எனப்படும் தன்னிலை உணர்தலே முக்தி என்று வேதாந்தம் கூறுகிறது.
  //

  நீங்கள் நான் எழுதியதை முழுவதும் மறுபடியும் படித்து பாருங்கள் – இதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்படி செய்தால் முக்தி நிச்சயம் என்ற எண்ணம் சரி அல்ல அது பகவாநிடதிளிருந்து அவனது உரிமையை பறிப்பது போலே என்பது தான் எனது அபிப்பிராயம் – [எனதாவி யார் நான் யார் தந்த நீ கொண்டாக்கினையே] – மேலும் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்தலே முக்தி என்றால் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்ந்தவர்கள் உணர்ந்த மாத்திரமே இவ்வுலகை விட்டு போய் விடுவர் (ஆன்ம போய் விடும்) – அப்படி நடப்பதில்லையே – சிவா பதமோ, பரம பதமோ அல்லது பர பிரம்ம பதமோ அடைவது தான் முக்தி என்றால் அதற்க்கு பர பிரம்மத்தின் ஒப்புதல் தேவை படுகிறது – கண்ணன் ஆன்ம நிலையை உணர்ந்தவர்களை தத்வதர்சி, முமுக்ஷு, ச்திதப்ரஞன் (மோக்ஷம் அடைய நினைப்பவர்கள், தகுதி உடையவர்கள்) என்று தான் சொல்கிறானே ஒழிய மோக்ஷம் அடைந்தவர்கள் என்று கூறவில்லையே

  இதை கொண்டே இஷ்வர இச்சை மோக்ஷத்திற்கு அவசியம் என்று சொன்னேன் – இஷ்வரன் பர பிரம்ம வடிவில் இருப்பினும் அந்த பிரம்மத்தின் இச்சை அவசியமாகிறது

  மேலும் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆன்மாவை த்யாநிப்பவன் கைவல்யம் என்ற இரண்டாம் தர மோக்ஷம் அடைகிறான் என்று கொள்கிறார்கள் (இது fyi – விவாதத்திற்காக அல்ல)

 56. Sarang on February 9, 2010 at 6:16 pm

  அய்யா பெரியாரிஸ்ட்

  //
  நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை
  //

  நீங்கள் பெரியாரை போல் இல்லாமல் உண்மையை ஒத்துக்கொள்கிறீர்கள்

  உங்களுக்கு வேலை இருக்காது
  நாங்கள் அனைவரும் முக்தி பெற்றுவிட்டால் – இங்கு கோவில்களே தேவை இல்லை (இருக்காது) அப்புறம் எந்த கோவிலின் முன்பு பெரியார் சிலையை திறப்பீர்கள் அதற்க்கு மாலை மரியாதை எல்லாம் செய்வீர்கள்

  உங்களுக்கு வேலை இருக்காது
  ஒவ்வொரு மைல் கல் பக்கத்திலும் “கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை” என்று எழுத வேண்டி இருக்காது

  உங்களுக்கு வேலை இருக்காது
  அஞ்சு ரூவா பிரியாணிக்காக எக்கக்செக்க வெயிலிலும் (பகுத்தறிவே இல்லாமல்) கருப்பு சட்டை கருப்பு பான்ட் போட்டுக்கொண்டு மைக் புடிச்சு இஷ்டப்படி சம்மந்த சம்மந்தமே இல்லாமல் கஷ்டப்பட்டு ஏதேதோ உவமானம் கூறி எதுகை மோனையுடன் சங்கராச்சர்யரையும், கோவில் அர்ச்சகர்களையும், பிராமணர்களையும் திட்ட வேண்டி இருக்காது – பாவம் பிரியாணி கிடைக்காதே 🙁
  இப்பொழுதே முதல்வரிடம் சொல்லி திக காரர்களுக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் இலவச பிரியாணி போட ஏற்பாடு செய்யுங்கள் – அதற்காக ஒரு ஆர்பாட்டம் வேண்டுமானாலும் செய்யுங்கள் அதில் தயிர் சாதத்தையும், சாம்பார் சாதத்தையும் இஷ்டப்படி வெய்யுங்கள்

  உங்களுக்கு வேலை இருக்காது
  வெறும் சர்சுக்களும், மசூதிகளும் தான் எஞ்சி இருக்கும் – அதை மறுப்பதற்கு வேறு ஒரு கூட்டம் இருக்கும் – உங்களுக்கு அதில் பங்கு இல்லை ஏன் என்றால் பெரியாருக்கு இந்து கடவுள் தான் கிடையாதே தவிர மற்றவை பற்றி ஆட்சேபனை ஏதும் இல்லை – தவறி நீங்கள் ஏதேனம் சில்மிஷம் செய்தாலும் உங்களுக்கு பேராபத்து வண்டு சேரும் என்ற பயம் இருக்கும் அதனால் வேலையே இல்லாமல் சும்மாவே தான் இருப்பீர்கள்

  பெரியாருக்கு கஷ்டமே இருக்காது – ஒரு பெரிய கூட்டத்தில் முட்டாள்கள் யார், அவர்களை கண்டு பிடித்து சீடர்களாக கொள்ள வேண்டும் என்ற சிரமம் பட நேராது – மேலே பார்பதுவெல்லாம் ஆகாசமாய் இருப்பது போலே

 57. கந்தர்வன் on February 9, 2010 at 6:19 pm

  திரு ஜடாயு அவர்களே,

  ‘சமயவாதம், சமயவாதம்’ என்று கூறுகிறீர்கள். உங்களுடைய தளத்தில் நீங்கள் ஆதி சங்கரரைப் புகழ்ந்துல்லீர்கள். நீங்கள் ஆதி சங்கரர் சூத்திர பாஷ்யத்தில் கூறியுள்ளதை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன் (பிரும்ம சூத்திர பாஷ்யம், 2.2.42): http://www.sacred-texts.com/hin/sbe34/sbe34218.htm

  “இந்த (பாகவத பாஞ்சராத்திர) மதத்தைப் பற்றி நாங்கள் (அத்வைத வேதாந்திகள்) கூறவேண்டியது: இம்மதத்தில் வேதாந்தத்துக்கு (எம்முடைய மதத்திற்கு) அனுகூலமான ஒரு பகுதி உள்ளது. அதை நாங்கள் நிராகரிக்கவில்லை – அதாவது, மூலப் பிரக்கிருத்திக்கும் அப்பால் உள்ள பரமாத்மாவான – சர்வாந்தர்யாமியான நாராயணனை, (பாகவத பாஞ்சராத்திர மதத்தில் சொல்லப்பட்டுள்ள) கோயில் வழிபாடு, திருவாராதனம், மற்றும் என்னேரமும் மறந்தும் புறந்தொழாமல் அவனையே நினைத்தல், முதலிய வழிகளில் அவனை வழிபடுவதை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஏனெனில், பகவானான அவனை வழிபட வேண்டும் என்று சுருதி-ஸ்மிருதி நூல்களில் இருந்து தெரிந்துக் கொள்கிறோம்.

  என்று கூறுகிறார். அதாவது, ஆதி சங்கரர் ‘மறந்தும் புறன்தொழாமை’ என்ற சித்தாந்தத்தை ஒரு பொழுதும் எதிர்க்கவில்லை. ஒரு பொழுதும் அதை ‘கீழான நிலை, குறுகிய மனப்பான்மை’ என்று கூறவே இல்லை. பிரும்ம சூத்திரத்திலும் இறுதி சூத்திரத்தில் அவர் “நிர்குண பிரம்ம நிலையை அடைந்து மோக்ஷம் பெறலாம். அல்லது, சகுண உபாசனை வழி சென்று விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடையலாம். இரண்டுமே புனராவிருத்தி (சம்சாரக் கடலில் மறுபடி பிறப்பு எடுத்தல்) அல்லாத இடங்கள். இவ்விரு வழிகளும் சம்சாரத்தில் இருந்து விடுதலை அளிக்கவல்லது.” என்றும் சொல்லியுள்ளார்.

  //
  the conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for Vedantins, it is all manifestations of Brahman only.
  //

  அனைவரும் “higher plane (பரமார்த்திகம்)” என்றும் “lower plane (வியாவஹாரிகம்)” என்று ‘இரண்டு தத்துவ நிலைகள் உள்ளன’ எனும் அத்வைத வேதாந்தத்தை ஆதரிக்க வேண்டும் என்று தேவை இல்லை. வேதாந்தம் என்றாலே அத்வைதம் அல்ல; விஷிஷ்டாத்வைதமும் த்வைதமும் வேதாந்த மார்கங்களே என்பது அந்த அந்த மதத்தைப் பின்பற்றுவர்களுடைய நபர்களின் கோட்பாடு. மேலும், ஆதி சங்கரர் “சகுண மோக்ஷ லோகமும் (பரமபதமும்) புனர் ஆவிருத்தியற்றது” என்று சொல்லியுள்ளார். ஆகையால், ஸ்ரீவைஷ்ணவர்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் வழிபாட்டு வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அத்வைத மதத்தைப் பின்பற்றுவார்கள் கோருவது சரி அல்ல.

  அத்வைத மதத்தின் வியாவஹாரிக்க நிலையில் சர்வாந்தர்யாமியான, சர்வசக்தனான, சர்வஜ்ஞனான பகவான் ஒருவரே உண்டு. அந்த பகவான் உபாசனைக்காக சில உருவங்களை எடுத்துக் கொண்டு வருகிறான் என்பதும் சங்கரர் ஒத்துக் கொண்டுள்ளதே. ஆகையால் வியாவஹாரிக்க நிலையில் theism என்பதும் உண்டு. இதை ஆதி சங்கரர் பாஷ்யங்களில் நன்கு விளக்கியுள்ளார்.

 58. Jeevs on February 9, 2010 at 7:22 pm

  ஜீவ்ஸ்

  //
  இங்கு ஏன் கிருஷ்ணனே சொன்னார் என்று சொல்கிறீர்கள் – உங்களுக்கு ஒரு வரையறை, கிருஷ்ணன் என்ற ஒரு கோட்பாடு தேவை படுகிறது – அது போல தான் மத கோட்பாடுகளும் – யாரும் கடவுளை மதத்தினுள் அடைக்கவில்லை – அந்த மூன்று பிரமாணங்களும் பரமாத்மாவை பற்றி பறக்க பேசுபவை – பரமாத்மா என்பது பொது தத்துவம் – நீங்களே அந்த பிரமானன்களுள் ஒன்றை தான் கூறுகிறீர்கள், இது பிரமாணம் ஆதலால் கேள் நம்பு என்கிறீர்கள்
  (இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்)//

  கிருஷ்ணன் சொன்னதைச் சொன்னது விளங்கிக் கொள்ள அல்லது விளக்கிச் சொல்ல. மறுபடியும் நாம் விரல்களைப் பற்றிக் கொள்ளவே விரும்புகிறோம். நிலவை ஏன் நேரடியாக பார்க்கக் கூடாது ?. க்ருஷ்ணன் ஒரு பெயர். அது காட்டும் நிலவை நாம் விட்டுவிட்டு பெயரில் நிற்கிறோம். அதைத்தான் குறிப்பிடுகிறேன்.

  கிருஷ்ணன், சிவன், பிரமன், விஷ்ணு இந்தப் பெயர்கள் தெரியாத ஒருவன் வீடுபேறு அடைய முடியாதா ? முடியும். தன்னையறிந்து தன்னுள் தானறிந்து தன்னை விடுத்தல் நடக்கும் போது. சைக்கிள் பழக முதலில் துணை வேண்டும். அப்போது நம் கவணம் முழுதும் ஹாண்டில் பார், ரோடு என்று இருக்காது. சொல்லிக் கொடுப்பவர் பின்னாடி பிடித்திருக்கிறாரா என்ற கவனத்தில் தான் இருப்போம். அது தான் நீங்கள் சொல்லும் பிரமாணங்கள். அந்தப் பிரமாணங்கள் மட்டுமே போதுமானவையா ? நீங்கள் சைக்கிள் நன்றாகப் பழகியப் பின் உங்கள் கவனம் எங்கு சிதறி இருப்பினும், வண்டி சரியான பாதையில் ஓடும். அப்போது பிரமாணங்களைக் கொண்டுதான் வழித்தடத்தில் செல்லுவேன் என்பது அபத்தம்.

  அதே போல சிலர் தானே தத்தி தத்தி விழுந்து எழுந்து கற்றுக் கொள்வார்கள். அவர்கள் வண்டியே ஓட்டத் தெரியாதவர்களா ? இருவருக்குமே குறிக்கோள் ஒண்று தான். ஆனால் கடைசி வரை ஒருத்தர் என் வண்டியைப் பிடித்தால் தான் வண்டி ஓட்டுவேன் என்பது அபத்தத்திலும் அபத்தம் இல்லையா ?

  //
  வேதாந்த சனாதன தர்மத்தில் ஊறி திளைத்தவர்கள், ஜ்யானிகள், புத்தமும், சீனமும் சனாதன தர்மத்தை களவாடிய பொது அதை மீட்டுக்கொண்டு தந்தவர்கலான சங்கரர், ராமானுஜர், மத்வர் மற்ற ஜ்யானிகள் சனாதன தர்மத்தை தெரிந்து கொள்ள இந்த மூன்று நூல்கள் பிரமாணம் என்று கொண்டார்கள் – இல்லை என்று நீங்கள் சொன்னால் நீங்கள் போகும் வழி வேறு (அவர்களின் வேதாந்த வழி அல்ல) அவ்வளவே விஷயம்//

  எத்தனையோ மகா புருஷர்கள் உதித்த திருநாடு. மேலே நீங்கள் குறிப்பிட்டவர்கள் வணங்கத் தக்கவர்கள் அவர்கள் சொன்னது எல்லாம் அற்புதமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர்கள் சொன்னது மட்டுமே சரி என்று சொல்ல வருவதைத் தான் சரியில்லை என்று சொல்ல வருகிறேன். எதையும் சோதித்து அறிந்துக் கொள் என்கிறதல்லவா நீங்கள் சொல்ல வரும் பிரமாணமும் ?

  // இங்கு இறுதியாக கொள்ளப்படுவது என்பது “the only and final” என்ற அர்த்தம் இல்லை – நீயே பார்த்து முடிவு செய், நீயே யோசித்து ஆராய்ந்து முடிவு செய், இதுவும் முடிவில்லையா அப்போது இந்த ப்ராமானதிர்க்கு வா – மேலும் உனது முடிவுகள் முன்னோர் கடும் தவம் செய்து உலக நன்மைக்காக தங்களையும் வருத்தி கொண்டு ஆராய்ந்து கொணர்ந்த அந்த பிராமணத்தின் படி உள்ளத என்று பார் என்பது தான் திருஷ்டாந்தம்
  //

  சரிதான். ஆனால் அதை ஏன் சில மூன்றுக்குள் அதுவும் சமஸ்கிருதத்தில் இருந்தால் தான் ஒப்புக்கொள்வேன் என்பதெல்லாம் ? இதைச் செய்யாதே இதை மட்டுமே செய் என்பது ஒடுக்குதல் மதத்தின் செயல். இந்துவாக இருப்பதற்கு ஒரு இப்படிச் செய் என்ற கட்டுப் பாடு வேண்டாம். வழிக்காட்டுதல் மட்டுமே போதும். அதன் படி நடப்பதும் வீழ்வதும் அவன் கர்மா ( அப்படி என்று ஒன்று இருந்தால் )

  சமஸ்கிருதம் தருவதே முக்தி காட்டும் நூல் என்பதெல்லாம் பம்மாத்து. மொழி ஒரு கருவி. அவ்வளவே. தமிழில் இல்லாதவையா ?

  வேதாந்த வழி / பக்தி வழி எனும்போது திருப்புகழின் திருவாசகத்தின் இனிமையும், தேவாரப் பதிகங்களும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் கூட பிரமாண நூல் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.

  அதி தீவிர வேதாந்த தத்துவங்கள் மட்டுமே என்றால் அற்புதமான சித்தர் பாடல்களையும் கொள்ளலாம். ஆகவே பிரமான நூல் “அவை மட்டுமே” என்று குறுக்குதல் ஏற்க முடியாது. பாரதியின் பல பாடல்கள் தரும் மெய் சிலிர்ப்பை சம்ஸ்கிருத ஒலிக் கோர்வை எனக்கு அளிக்க முடியாது.

  // இதை இறுதியாக கொள்ளாமல், ந்யாய, வைசேசிக, யோக, சங்க்ய மதங்கள் இருந்தனவே – அவைகளுக்கு இந்த மூன்றும் பிரமாணம் அல்லவே, இவையும் சனாதன தர்மத்தின் அங்கமாகி விட்டனவே?

  //
  ஆகவே இங்கு கூறும் பிரமானமானது வேந்தாந்த விஷயத்தை அறியவே. இது தான் கடவுள் என்று அவரை கட்டுப்படுத்த அல்ல – வேதாந்த மார்கமாக எழுதும் பொது இவை மூன்றையும் பிரமாணமாக கொண்டே தீர வேண்டும் – தமிழில் பேசினால் தமிழ் இலக்கணம் இல்லாமல் எப்படி பேச முடியும் அது போலவே

  இறுதி நூல், இறுதி தூதர் என்பது வேறு – உலகத்தவரே (பாவிகளே) இதுக்கு முன் இருந்தவையும் பொய், பின் வரப்போவையும் பொய் இதுவே மெய் இது அல்லால் ஏதும் இல்லை ஜாக்கிரதை என்பது தான் இங்கு அறிகிறோம்

  பிரமாணமாக கொள்ளும் இறுதி நூலானது இலக்கணம் போல – இதற்க்கு மேல் எனக்கு சரியாக எழுதவரவில்லை
  //

  இறைவனைப் பற்றிய அறிவை/ தெளிவை எந்த ஒரு நூலும் ஏற்படுத்த முடியாது. 100% தூரத்தில் ஒரு அடி எடுத்து வைக்கத் தூண்டும் தூண்டுகோல் என்ற அளவில் இருக்கலாமே தவிர அவையே பிரமாண நூல்கள் அவற்றைக் கொண்டே வீடுபேறு என்பது – என்னளவில் பேத்தலான விஷயம்.

  //
  தமிழ் இந்து என்ற போதில் அது மட்டுமே பேசவேண்டும் என்றில்லை. அக்கம் பக்கம் அறியாமல் நான் மட்டுமே சரி என்பதைப் போலவாகிவிடும்.

  ஒரு சிறிய விண்ணப்பம் – ஓரிரண்டு பதில்களை படித்து விட்டு இவன் இப்படிதான், இந்த கொள்கை உடையவன் நம் போல் பரந்த மனம் இல்லையே உனக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன் என்று முடிவு கட்டுவது சரியல்ல – பதில்களை “context” உடன் மட்டும் பார்த்து, வலை தளத்தில் எழுதும் பொது நமது கருத்தை முழுமையாக விளக்க இயலாமல் போகிவிடும் என்பதையும் மனதில் கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறேன் //

  Lets Discuss It 🙂 ( No Arguments 😉 only discussion )

 59. jayasree on February 9, 2010 at 7:38 pm

  திரு ஹரன்

  // சொற்பிரயோகம் தவறு ஜடாயு. ஜோதிஷம் உங்களுக்குப் பிடிக்காமலும் அதில் உங்களுக்கு நம்பிக்கையில்லாமலும் இருக்கலாம். அதற்காக அதைக் கற்றவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதைச் “சிறுபிள்ளைத்தனம்” என்று கூறுவது சரியில்லை.//

  // தமிழ் ஹிந்து வாசகர் கூட்டத்தில் யாரும் குருடர்கள் அல்ல ஜெயஸ்ரீஜி, இருட்டில் உள்ளவர்களும் ஒளி தேடுபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஒளி பெற விருப்பம் உள்ளவர்கள் பெற்றுக் கொள்ளட்டும்.//

  நன்றி ஹரன்ஜி.

  முன்பு, வருடப்பிறப்பு பற்றிய கட்டுரைக்கு மறு மொழி பகர்ந்த திரு தமிழ் செல்வன் அவர்கள், சங்கத் தமிழில் காணப்படும் ஜோதிடக்க்கருத்துக்களை எழுத ஊக்கமும், வரவேற்பும் கொடுத்ததையும் நினவு கூர்கிறேன். ஆனால், ஜோதிடம் என்றாலே முணுக் – என்று கோபமும், எரிச்சலும் கொண்டு ஜடாயு அவர்கள், மாண்டூகராக 🙂 மாறுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறதே அன்றி, வேறு எப்படியும் நான் இதைப் பார்க்கவில்லை.

  வேதாந்தமும், ஆயிரக்கணக்கானோரின் அவதிகளையும் தெரிந்து கொள்ள வழி செய்த ஜ்யோதிஷமும் அளிக்கும் விருப்பு வெறுப்பற்ற மனமும், சம நோக்கும் (ஸ்தித -ப்ரக்ய) தொற்றிக் கொள்வதால், புகழ்ந்தால் நான் புல்லரித்து விடுவதில்லை. இகழ்ந்தால் இறந்து விடுவதும் இல்லை. ஆனால் இகழப்படுவது “ஜ்யோதிஷமயனம் சக்ஷுஹு” எனபப்டும் வேத புருஷனின் கண் என்பதாலும், கண்ணெனப் படுவதால், வேதத்தை ஜ்யோதிஷதின் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்பதாலும், எவ்வாறு இதன் மூலம் வேத புருஷனை அறிந்து கொள்ளலாம் என்று சொல்ல வேண்டியது என் கடமை.

  இன்னும் சொல்லப்போனால், கட்டுக் கதை என்றும், myth என்றும் பலரும் நினைக்கும் புராணக் கூற்றுகள், உண்மை என்பதையும், அவை காட்டும் உள் அர்த்தத்தையும் ஜ்யோதிஷம் வாயிலாக மட்டுமே அறிய முடியும். பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக ஒரு விஷயத்தை இங்கே கூறுகிறேன்.

  மேரு மலையைப் பற்றி ஆங்காங்கே புராணங்களில் காணலாம். மந்தர மலை எனப்படும் மேரு மலையை ஆதாரமாகக் கொண்டு பாற் கடலைக் கடைந்த கதை பலருக்கும் தெரியும். இந்த மேரு மலை எங்குள்ளது என்பதற்கு புராணங்களிலேயே வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஜ்யோதிஷம் மூலம் புரிந்து கொள்ளலாம்.

  விண் வெளியைத் துல்லியமாகக் கணிக்க அந்நாளில் கோள வடிவப் பந்தினைக் கொண்டு அறிவார்கள். ஜோதிட சாத்திரத்தில் விளக்கப்பட்டுள்ள இந்தப் பந்தின் நடுவே, வட, தென் துருவங்களை இணைக்கும் அச்சை ஜோதிடத்தில் மேரு என்பர். மேரு என்பது பூமியின் அச்சாக பொருள் கொள்ளப்பட்டு அது பல் வேறு காலக் கட்டங்களில் வேறு வேறு அளவில் சுழன்றது.

  மேருவை ஆதாரமாகக் கொண்டு பால் கடல் கடையப் பட்டது என்பது புராணக் கதை. கடைதல் என்றாலே. தயிர் கடைவது போல இப்படியும், அப்படியுமாக, இரு புறமும் மாறி மாறி சுழற்றுவது. 23 – 1/2 பாகை என்று தற் சமயம் ஒரு புறம் சாய்ந்த பூமி, முன்பு வேறு புறமும், வேறு பாகையிலும் சுழன்றது என்று இது காட்டுகிறது. இந்தக் கடைதலில், பூமியின் உள் புறத்தில் உள்ளவை மேல் புறமும், மேல் பாகத்தில் உள்ளவை உள்புறமும் உருட்டிப் போடப்படும். நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன் பூமி உருவாகிக் கொண்டிருந்த காலத்தில், இந்தக் கடைதல் அதிகமாக இருந்திருக்கும். அதன் விளைவாக, பூமி பகுதிகள் சிதறி கொண்டிருந்தன. இதை, மலைகள் இறக்கை கொண்டு பறந்தன என்று சொன்னார்கள். வால்மீகி ராமாயணத்தில், மைனாக மலை, தான் அப்படிப் பறந்ததாகச் சொல்கிறது. இந்திரன் வஜ்ராயுதத்தினால், தன இறக்கைகளை வெட்டிப் போடவே, கீழே விழுந்து, ஒரே இடமாக உட்கார்ந்து விட்டதாகச் சொல்கிறது. இந்திரனின் ஆயுதம் , இடி, மின்னல். எனவே, இடி விழுந்து, மலைகள் துண்டாகி ஆங்கங்கே விழுந்து அமர்ந்துவிட்டன என்று தெரிகிறது.

  மேலும் இந்தக் கடைதலில், பூமியின் உள்ளே உருவான விஷ வாயுக்களே முதலில் வெளி ஏறியிருக்கும். அதை உண்டவர் சிவபெருமான். பின்னால் வந்த நவ நிதிகளும், பலவித நவரத்தினங்கள். இன்றும் சிறந்த ரத்தினங்கள் எரிமலைப் படிமங்களிலிருந்து எடுக்கபடுகின்றன. இப்படியே பால் கடலைக் கடைந்த நிகழ்ச்சியை விவரிக்கலாம் – மேரு மலை என்பது எது என்று நமக்குத் தெரிந்தால்! அது பூமியின் அச்சு என்ற அறிவைத் தருவது ஜ்யோதிஷம்.

  அது அச்சு மட்டுமல்ல. பல் வேறு இடங்களில் வேறு பொருளிலும் மேரு வருகிறது. அதில் ஒன்று மேரு என்பது வட துருவம். சிவபெருமானின் ஆதிகால இருப்பிடம் வடதுருவப் பனி மண்டலம். விசுவ கர்மா அங்கே சிவனுக்கு மாளிகை அமைத்தான் என்றும், பின்னாளில் இமயத்தில் அமைத்தான் என்றும் புராணக் கதை உண்டு.
  பூமியின் அச்சின் உச்சி வட துருவம். பனிப் பகுதியாக இருந்த அந்த இடம் ஆதி நாளில் சிவனது இருப்பிடமாக இருந்தது. இது குறித்த பிற கருத்துக்களை, அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.

  மேருவைச் சுற்றி சூரியன் வலம் வரும். அச்சின் சாய்மானம் வேறாக இருக்கும் காலத்தில் சூரியன் வட துருவத்தை சுற்றும் கோணத்தில் இருந்திருக்க வேண்டும். ஒரு வித சாய்மானத்தில், பூமியின் வட பகுதி மட்டுமே சூரியனை ஆறு மாதம் கண்ட காலம் இருந்திருக்க வேண்டும். மீதி ஆறு மாதம் சூரியனைக் காணாது இருந்திருக்க வேண்டும். இவ்வாறு கூறும் கதைகள் புராணங்களில் மட்டுமல்ல, புற நானூறு 174 – லும் சொல்லப் படுகிறது.

  இங்கே சொல்லப்படும் விஸ்வகர்மா என்பவன் தேவ சிற்பி. சூரியக் குடும்பத்தை (கிரகங்கள்) அதனதன் நிலையில் வைத்த அந்த சூரியனே விஸ்வகர்மா என்பது வாஸ்து சாத்திரம் சொல்லும் விஷயம். சூரியனின் ஈர்ப்பு சக்தியால், கிரக மண்டலம் தங்கள் சம நிலை (equilibrium) அடைந்தன என்பது நாம் அறிந்த அறிவியல். இதை விஸ்வகர்மா அமைத்தான் என்று கதையாகக் கூறுவதன் பொருள் என்ன என்று காட்டுவது ஜ்யோதிஷமே.

  மேலும், மேரு மலை மற்றொரு பொருளிலும் வருகிறது. இதன் படி பார்த்தால், மேரு மலை என்பது பூ மத்திய ரேகைப் பகுதியில் இருக்க வேண்டும். ஒரு நட்சத்திரம், மேரு மலைக்குக் கிழக்கே உதிக்கும் பொழுது, அதே நட்சத்திரம் இலங்கைக்கு உச்சியில் இருக்கும் என்று பிரம்ம சித்தாந்தம் என்னும் ஜோதிட சித்தாந்தத்தில் பிரம்மகுப்தர் கூறுகிறார். அப்படி என்றால், மேருவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் 90 பாகைகள். இலங்கைக்கு மேற்கே 90 பாகைகள் தொலைவில் மேரு இருந்தால்தான் இது சாத்தியம். இலங்கைக்கு மேற்கே இந்தப் பகுதியில் தற்போது இருப்பது அட்லாண்டிக் பெரும் கடல்.

  சரி, நீருக்குள் ஏதேனும் இருக்குமா என்றால், இருக்கிறது mid-Atlantic ridge எனப்படும் நீண்ட மலை தொடர். சென்ற நூறு ஆண்டுகளே தெரிய வந்துள்ள இம்மலைத் தொடர் துருவப் பகுதி வரை செல்கிறது. இதன் அமைப்பும் முதலில் சொன்ன அச்சு போல துருவங்களை இணைக்கும் நடுப் பகுதி. இங்கு எந்நேரமும் கடைதல் நடந்து கொண்டு. பூமியின் mantle கொந்தளித்து வெளியேயும் உள்ளேயும் சென்று கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிகின்றன. (wikipedia – வில் படிக்கலாம்).
  இந்த மலைப் பகுதியில்தான் மேரு இன்னும் சிகரம், ஒரு காலத்தில் கடல் பரப்புக்கு மேலே உயர்ந்து இருந்திருக்க வேண்டும்.

  மேரு என்று பிரம்மகுப்தா சொல்லும் இடத்தில் ‘ரோமக தேசம்’ இருந்தது என்று சூரிய சித்தாந்தம் என்னும் இன்னொரு ஜோதிட நூல் சொல்கிறது. இன்றைய ரோம் வேறு, இந்த ரோமக தேசம் வேறு. மயன் என்னும் மிலேச்சன் சூரியனிடமிருந்து பெற்ற இந்த சித்தாந்தம் இன்றைக்கு நாம் பின் பற்றும் ஜோதிட நூல்களுள் ஒன்று. இன்று இந்த தேசம் இல்லை. கடலுள் மூழ்கிவிட்டது. ஆனால் இப்பகுதியில்தான் அட்லாண்டிஸ் என்று ஹோமர் எழுதிய நாடு இருந்தது. 10,000 வருடங்களுக்கு முன் முழுகிய அந்த நாடு ஏன் மிலேச்சம் என்று கூறப்பட்டது என்பதையும், அங்கே வழங்கிய ஜோதிடம் அ-வேத (வேதத்திற்குப் புறம்பானது ) சோதிடமாக இருப்பதையும், அதன் மூலம் வஷிச்டரிடமிருந்து பெறப்பட்டதையும் ஜோதிட நூல்கள் மூலமாகத்தான் அறிய முடியும்.

  அது மட்டுமல்ல, சமீபத்திய மரபணு ஆராய்ச்சியின்படி, வட இந்தியர்களுக்கும், இந்தியாவின் வடமேற்குத் திசையில் உள்ள ஐரோப்பிய மக்களுக்கும் உள்ள ஒற்றுமையையும், இந்தியாவிலிருந்து வெளியே சென்றதாக ஆராய்ச்சியாளர் கருத்துக்கும் ஒட்டியே, ராமரது முன்னோர் காலத்திலேயே வெளியேறிச் சென்றவர்கள் என்பதை வால்மீகி ராமாயணம் மூலமாகவும், ஜோதிட நூல்கள் மூலமாகவும் சுட்டிக்காட்டலாம். விளக்கங்களை இங்கே படிக்கலாம்.
  http://www.scribd.com/doc/22717150/Roots-of-Mlechcha-astrology

  ஜோதிடம் காட்டும் மேருவைக் கொண்டே, ராஹு, கேது என்னும் பூமி, சந்திரனின் சுழற்சிப் பாதை வெட்டும் புள்ளிகளைப் பற்றியும், அவை குறித்த புராணக் கதை கூறும் கருத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், அவை எப்பொழுதெல்லாம் மாறின என்பதன் அடிப்படையில், கடைதலினால் பூமியின் அச்சு எப்பொழுது நிலை மாறியது என்பதையும் சொல்ல முடியும்.

  இன்றைக்கு உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாமல், நம் நாட்டில்தான் பூர்வ வரலாறு கூறும் புத்தகங்கள், சங்கத் தமிழிலும், புராண இதிகாசங்களிலும் உள்ளன. படைப்பின் உயர்ந்த நிலையைக் காட்டும் வேதாந்தமும், பரம் பொருளின் இயல்பும் மூன்று ப்ரமாண நூலகளாக உள்ளன. உபநிடதங்களின் முடிபு பொருள், பிரம்ம சூத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள கீதை உதவுகிறது. இவை தரும் அடிப்படைக் கருத்துக்களை விவரிக்கும் programme -ஆக ஜோதிடமும் பரந்து கிடக்கிறது. இந்தப் பொக்கிஷங்கள் மேலை நாட்டினரிடையே இருந்திருந்தால், அவற்றின் அடிப்படையில் தங்களை நன்கு உயர்த்திக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.
  நம்மவர்கள்தாம் இவற்றை இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

  ஒருவர் முக்தி மார்கத்தில் எந்த நிலையில் இருக்கிறார் – அல்லது கொஞ்சமாவது முக்தி, பக்தி அல்லது, சித்தி நிலைக்கு அருகில் வருகிறாரா என்று நம் ரிஷி பராசரர் சொன்ன விம்சாம்சா என்னும் ஜோதிட வர்க்கத்தை ஆராய்ந்து வலைத் தளத்தில் பதிந்துள்ளவ்ர் ஒரு ஐரோப்பியர். எந்த நாட்டினரானாலும் வேத வழியில்தான் முக்தி என்பதை அறிந்தவர். இதில் அரசியல் கிடையாது. ஆனால் இந்திய அரசியல் வாதியின் செகுலர் கொள்கையை வேத மதத்திலும் புகுத்த முயல்பவர் ஆஸ்திகம் பேசும் நம் மக்கள்தான். இதற்குச் சான்றுகளை இங்கே நிறையவே படிக்கிறேன். ….

  அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அடிப்படை (basics) தெரிந்தால்தான் எந்த நிகழ்வையும் (phenomenon) விளக்க முடியும். மண்ணின் அடிப்படை விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் தான், அந்த மண்ணிலிருந்து உருவாக்கப்படும் பொம்மை முதல், பாண்டம் வரை, கண்ணாடி முதல் சிலிகான் சிப் வரை அனைத்தையும் விளக்க முடியும். அது போல பரப் பிரம்மத்தின் இயல்பை அறிந்தால் தான் அதனிடமிருந்து தோன்றின இந்தப் பிரபஞ்சம் முதல், முக்தி வரை அறிய முடியும். அது இல்லாமல், மேலோட்டமாகக் கண்ணுக்குத் தெரியும் விஷயங்களிலிருந்து, உள்ளிருப்பதை பார்க்கும் நோக்கு சரியல்ல. எந்த ஆச்சர்ய புருஷரும் அத்தகைய methodology – யைக் கொள்ளவில்லை. அடிப்படையைப் பிடியுங்கள். இந்து மதம் என்னும் இந்த ஆதி தர்மம் – சனாதன தர்மம் என்ன சொல்கிறது என்று புரியும்.

 60. திருச்சிக் கார‌ன் on February 9, 2010 at 8:59 pm

  Dear Brother Mr. Tamilvanam,

  My e mail id is

  thiruchchikkaaran@gmail.com

  I have a webblog also, you can just click on my name and reach my blog as well.

  Thank you brother, and look forward to receive your mail.

  Best Regards,

  Thiruchchikkaaran

 61. Jeevs on February 9, 2010 at 9:20 pm

  //Sarang
  9 February 2010 at 4:42 pm

  //
  அடிப்படையில் ஒரு நூலே இல்லாமல், மார்கமே இல்லாமல் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் எங்கும் செல்ல முடியாது – வேத நூலில் சொன்ன மார்க்கம் வேண்டுமானால் அதை அறிதலும் அதன் படி நடத்தலும் முக்கியமாகிறது அதற்க்கு வேதத்தையே பிரமாணமாக கொள்ள வேண்டியது உள்ளது
  //

  இல்லையே… அப்படி ஒரு கட்டுப்பாடும் கிடையாது. அப்படி ஒரு நூல் வழி காட்டவேண்டுமே யானாலும் எனக்குப் பிரியமான மொழியில், இதமாகச் சொல்லுபவற்றைத்தான் ஏற்க வேண்டியிருக்கிறது. வேத நூல்(கள்) “மட்டுமே” வீடுபேறுக்கு சாஸ்வதமான வழி என்பதை நான் ஏற்க மறுக்கிறேன்.

  சித்தர்கள் காட்டும் கோட்பாட்டில் என்ன தவறு ? பக்தி மார்கத்தில் தன்னை சேர்த்து அற்புதமான பாடல்களைக் கொண்டு கோவிந்தன் என்பான் ஓர் காளையிடம் அடைக்கலமான கோதையின் பாடல்களில் கிட்டாத இறையின்பம் உண்டா ? பாரதியின் பாடல்களில் கண்ணனையும் கண்ணம்மாவையும் படிக்கும் போது தனை மறந்த நிலையில் கண்களில் நீர்வழிய அந்தக் காட்சிகளைக் காண்கிறோமே.. அது கங்கைக்குப் போனாலோ அல்லது சமஸ்கிருத வேதங்களைப் படித்தாலோ தான் வரும் என்கிறீர்களா ?

  தத்துவ மார்கம் மட்டும் தான் வீடு பேறுக்கு வழி வகுக்குமா ? ஏன் பக்தி மார்கம் வகுக்காதா ? ஊனுருகி உடலுருகி பாடி வீடு பேறு அடைந்த பல மகாத்மாக்களை நம் தமிழகம் கண்டிருக்கிறதே.

  நான் சொல்ல வருவது எல்லாம் இது தான்.

  நால்வகை வேதங்கள் பலவும் சொல்லி இருக்கிறது. நல்வழி காட்டுகிறது. எல்லாம் சரி. ஆனால் “அவை மட்டுமே” பிரமாண நூல்கள், ” அவை மட்டுமே” முக்திக்கு வழிக் காட்டும் என்பதெல்லாம் ஏற்க இயலாதவை.

 62. jayasree on February 9, 2010 at 9:49 pm

  திரு சாரங் அவர்களது பதில்
  //
  மேலும், பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம்* மட்டுமே. அது ஒரு *நிலை* அல்ல. ஆத்ம-ஸ்வரூப-தர்சனம் எனப்படும் தன்னிலை உணர்தலே முக்தி என்று வேதாந்தம் கூறுகிறது.
  //

  நீங்கள் நான் எழுதியதை முழுவதும் மறுபடியும் படித்து பாருங்கள் – இதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்படி செய்தால் முக்தி நிச்சயம் என்ற எண்ணம் சரி அல்ல அது பகவாநிடதிளிருந்து அவனது உரிமையை பறிப்பது போலே என்பது தான் எனது அபிப்பிராயம் – [எனதாவி யார் நான் யார் தந்த நீ கொண்டாக்கினையே] – மேலும் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்தலே முக்தி என்றால் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்ந்தவர்கள் உணர்ந்த மாத்திரமே இவ்வுலகை விட்டு போய் விடுவர் (ஆன்ம போய் விடும்) – அப்படி நடப்பதில்லையே – சிவா பதமோ, பரம பதமோ அல்லது பர பிரம்ம பதமோ அடைவது தான் முக்தி என்றால் அதற்க்கு பர பிரம்மத்தின் ஒப்புதல் தேவை படுகிறது – கண்ணன் ஆன்ம நிலையை உணர்ந்தவர்களை தத்வதர்சி, முமுக்ஷு, ச்திதப்ரஞன் (மோக்ஷம் அடைய நினைப்பவர்கள், தகுதி உடையவர்கள்) என்று தான் சொல்கிறானே ஒழிய மோக்ஷம் அடைந்தவர்கள் என்று கூறவில்லையே

  இதை கொண்டே இஷ்வர இச்சை மோக்ஷத்திற்கு அவசியம் என்று சொன்னேன் – இஷ்வரன் பர பிரம்ம வடிவில் இருப்பினும் அந்த பிரம்மத்தின் இச்சை அவசியமாகிறது

  ******
  திரு சாரங் அவர்களுக்கு,

  மிக அருமையாகச் சொன்னீர்கள்.
  என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  முதலில் எழுதின மறு மொழியில், ‘புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்’ என்று என்று இரண்டு விஷயங்களை விரிவு படுத்தாமல் விட்டதில் ஒன்றைப் பிடித்து விட்டீர்கள்:) .

  அவன்றி ஓரணுவும் அசையாது – என்பதை ஒப்புகொள்ளும் பட்சத்தில், அவன் மனம் வைக்காமல் முக்தி கிடையாது என்ற லாஜிக் வருகிறது. .
  எளிதாகச் சொல்ல வேண்டுமானால், ஜெயலலிதா, சோனியாவைப் பார்க்க என்ன முயற்சித்தாலும், சோனியா மனம் வைத்த பிறகுதான், பார்க்க முடிந்தது. அது போல எனலாம்:)

  பரம புருஷனும் மனம் வைத்தால்தான் அவனை நாம் அடைய முடியும்.
  “This Aathman is attained by one, whom he chooses” is the sruti.
  The clause ‘whom He chooses’ conveys the idea of the seeker becoming an object of choice of Bhagawan. (வேதார்த்த சங்ரஹா).

 63. ஜடாயு on February 9, 2010 at 10:18 pm

  அன்புள்ள கந்தர்வன், சாரங், உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

  வேதாந்தம் என்றால் அத்வைதம் மட்டுமே அல்ல என்பதை அறிவேன் (ஆயினும் நடைமுறை வழக்கில் அப்படி ஆகி விட்டது – அல்லவா? .. மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம்). வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் கூறப் படவேயில்லை!

  // இப்படி இருக்கையால் – சரம ஸ்லோகமே முக்கியமான கீதா வாக்கியம், முன் உள்ளவை எல்லாம் வெறும் அவதாரிகை என்பது அவர்களின் நிலை பாடு //

  இதுவும் ஒரு குறுக்கல்வாதம் என்பது என் தாழ்மையான எண்ணம். மிகையான எளிமைப் படுத்தலும் கூட. இன்றைக்கு கீதையை திறந்த மனதுடன் படிக்கும் எவரும் இத்தகைய ஒற்றைப் பார்வையை விமர்சிக்கவே செய்வார்கள்.

  குறிப்பிட்ட சித்தாந்தத்தின் கருத்தாக்கத்தை நீங்கள் எடுத்தோதுவதில் எனக்கு பிரசினை எதுவும் இல்லை. சமயத்தில், சமயவாதம் என்றாலும் கூட அது தனக்கே உரிய அழகுடனும், கம்பீரத்துடனும் வெளிப்படுகிறது.

  ஆனால், இது ஒன்று தான் இந்து தர்மத்தின் ஆதாரபூர்வமான கொள்கை, வேறெதுவும் இல்லை என்பது போன்ற நிலைப்பாடுகள் சரியல்ல (உதாரணமாக, பரம்பொருள் என்பதை நாராயணன் என்ற சொல்லால் மட்டுமே குறிக்க வேண்டும், வேதத்தில் “நம்பிக்கை” இல்லாவிட்டால் முக்தி கிடைக்காது, சரணாகதி மார்க்கம் மூலம் மட்டுமே மோட்சம் சாத்தியம்). அவற்றையே நான் விமர்சிக்கிறேன்.

  குறிப்பாக, கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக இந்து மறுமலர்ச்சியின் நாயகர்கள் இதை எடுத்தோதி வந்திருக்கிறார்கள். உதாரணமாக. கீதை. மகாகவி பாரதி அதைத் தமிழில் ஆக்கியிருக்கிறார்; வங்கத்தின் புரட்சிவீரர்கள் அதில் தேசிய உத்வேகம் பெற்றிருக்கிறார்கள்; மகாத்மா காந்தி சத்தியாக்கிரகத்தின், சமூக சேவையின் பொறியைக் கண்டிருக்கிறார்; ஸ்ரீஅரவிந்தர் ஒருங்கிணைந்த யோகத்தின் சாஸ்திரமாக அதை விளக்கியிருக்கிறார். திலகர் அரசியல் செயலூக்கத்தின் உத்வேகத்தை அதில் கண்டிருக்கிறார். இவ்வளவு இருக்க, கீதையின் செய்தி வைஷ்ணவ இறையியல் மட்டுமே, சரணாகதி மார்க்கம் மட்டுமே என்று கச்சை கட்டி வாதம் செய்யும் போக்கு கண்டிப்பாக விமர்சிக்கப் பட்டே ஆகும் அல்லவா? நம் எதிரே எவ்வளவு பிரத்யட்ச உண்மைகள் உள்ளன!

  உபநிஷதங்களும் சரி, கீதையும் சரி, வேதாந்த தரிசனமும் சரி – ஒற்றைக் குரல்கள் அல்ல. அவை பன்முகப்பட்ட சிந்தனை வீச்சுகளின், ஆன்மிக பரிமாணங்களின் வெளிப்பாடுகள். அவற்றை அப்படிப் பட்ட அடிப்படைப் புரிதலுடன் கற்பது தான் சரியான வழி என்று எனக்குத் தோன்றுகிறது.

 64. திருச்சிக் கார‌ன் on February 9, 2010 at 10:46 pm

  பெரியாரிஸ்ட்டு அவ‌ர்க‌ளே,

  உட‌ல் இற‌ந்த‌ பின் உயிரும் அதோடு இற‌ந்து விடுகிர‌து என்று யாராவ‌து க‌ருதினால், அது ஒரு அனுமான‌மே, உண்மை என்று சொல்ல‌ முடியாது.

  உட‌ல் இற‌க்கும் போது , உயிர் அழிந்து விடுகிர‌தா என்ப‌தை நாம் இற‌ந்த‌த‌ற்க்குப் பிற‌குதான் அறிந்து கொள்ள‌ முடியும், அல்ல‌து இற‌ப்புக்கு முன்பே ஆழ்ந்த‌ ம‌ன‌க் குவிப்பின் மூல‌ம் இத‌ற்கான‌ விடையை அறிய‌ முடியுமா என்ப‌தையும் சிந்திக்க‌ வேண்டும். உயிரும் அழிந்து விடுகிறது என்ப‌தை இப்பொதே அறுதியிட்டு உறுதியாக‌க் கூற‌ முடியாது.
  இது ஆராய‌ப் ப‌ட‌ வேண்டிய‌ ஒன்று.

  கொச்சி க‌ட‌ற்க‌ரையில் நின்று, “எங்க‌ய்யா இருக்கு ஆப்பிரிக்க‌ க‌ண்டம், ந‌ல்லா பாரு… ஆப்பிரிக்க‌ க‌ண்ட‌ம் எங்க‌ இருக்கு, காட்டு ?” என்று கேட்ப‌து போல‌ இருக்கு. ஒரு போட்டில் ஏறி ஒரு ம‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌ம் செய்தாலும் ஆப்பிரிக்கா க‌ண்ட‌த்தை காண‌ முடியாது. நீண்ட‌ முய‌ற்சி தேவை.

  ஆனால் முய‌ற்சியே எடுக்காம‌ல் வெறும‌னே உண்டு இர‌வு தூங்கி காலையில் எழுந்து அடப் போய்யா, உட‌ல் சாகும் போது உயிரும் அழிந்து விடுகிற‌து என்று முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?

  இந்த‌ விட‌ய‌த்தில் சித்த‌ர்க‌ள்,புத்த‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் ம‌ன‌க் குவிப்பு செய்து ஆராய்ச்சி செய்து உள்ள‌ன‌ர். அதை அப்ப‌டியே ஒத்துக் கொள்ள‌ வேண்டும் என்று நான் கூற‌வில்லை. நாத்தீக‌ர்க‌ளும் இந்த‌ விடய‌த்தில் ஆராய்ச்சி இல்லாம‌ல் ஒரு க‌ருத்தை எடுத்து முடிவாக‌ அறிவிப்ப‌து நுனிப் புல் மேயும் செய‌லே.

  உட‌ல் இற‌ந்த‌ பின் உயிர் க‌ண்டிப்பாக‌ தொட‌ர்ந்து வாழ்கிற‌து என்று நான் உறுதியாக‌ சொல்ல‌வில்லை. நாம் ஆராய்ச்சி செய்வோம். உயிர் ஆராய்ச்சி ஆதிகால‌ முனிவ‌னுட‌னொ, சித்தனுட‌னோ புத்த‌னுட‌னோ, இயேசு கிறிஸ்துவிட‌னோ, முஹ‌ம‌து ந‌பியுட‌னோ ஆதி ச‌ங்க‌ர‌ருட‌னோ, விவேகான‌ந்த‌ருட‌னோ முற்றுப் பெற‌ வேண்டிய‌தில்லை.

  நீங்க‌ளும், நானும், இந்த‌ உல‌கில் யார் வேண்டுமானாலும் தொட‌ர்ந்து ஆராய்ச்சி செய்ய‌லாம். ஆராய்ச்சி செய்து விட்டு க‌ருத்தை சொல்லுங்க‌ள்.

  அவ‌ச‌ரப் ப‌ட்டு அறிக்கை விட்டால், லூசுத் த‌ன‌ம் என‌, சிந்திப்ப‌வ‌ர்க‌ள் க‌ருத‌ வாய்ப்பு உண்டு.

 65. Sarang on February 9, 2010 at 11:40 pm

  ஜெயஸ்ரீ அவர்களே

  //என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  இது உங்களது பெருந்தன்மையை காட்டினாலும், இதற்க்கு எனக்கு நிச்சயமாக அதிகாரம் கிடையாது – அனைத்திலும் மிக சிறியவன் நான்.

 66. கந்தர்வன் on February 10, 2010 at 4:00 am

  //
  ஆயினும் நடைமுறை வழக்கில் அப்படி ஆகி விட்டது – அல்லவா? .. மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம்
  //

  சிறிதளவும் உண்மை அல்ல. இன்றளவும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மத்வர்களும் அவரவர் ஆசாரிய சூக்திகளை (நூல்களை) படித்துத் தான் வருகிறார்கள். பிள்ளை லோகசாரியார் பண்ணியுள்ள “தத்துவ த்ரயம்” நூலையும், ஆளவந்தாரின் “சித்தித் த்ரயத்தையும்” வாசித்து பாருங்கள். ஏன், ஆழ்வார்களின் பாடல்களிலேயே தெளிவாக பல உபநிஷத்து வாக்கியங்கள் தமிழாக்கப் பட்டுள்ளன. சரி, அத்வைதிகளில் எத்தனை பேர் இன்று ஆதி சங்கர பிரும்ம சூத்திர பாஷ்யத்தையும், கீதா பாஷ்யத்தையும், சுரேசுவரரின் நைஷ்கர்மியசித்தியையும் வாசிக்கிறார்கள்? ஆகையால், “தத்துவ ரீதியி விட்டு விலகி விட்டன” என்று வைனவத்தைச் சொல்வது சரி அன்று.

  நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஞான மார்க்கமே பக்தி மார்கத்திற்குப் பல படி உயர்ந்தது என்ற அபிப்பிராயம் எழுகிறது. ஆதி சங்கரர் பண்ணியுள்ளதாகப் படிக்கப்படும் “பஜ கோவிந்தத்தில்”, “மூட மதியே, சமஸ்கிருத இலக்கணத்தை வாசிப்பதால் ஒரு பயனும் இல்லை. கோவிந்தனை கும்பிடு! அப்பொழுது யமன் கூட உன் முக்திக்கு தடங்கல் ஆக மாட்டான்” என்று உள்ளதே? அப்படியானால், இதை ஆசிரயிப்பவர்கள், “ஞான மார்க்கம் முற்றித் தான் பக்தி மார்க்கம்” என்று கொள்ள வேண்டுமே!

 67. jayasree on February 10, 2010 at 8:56 am

  திரு சாரங்,

  மூத்தவன் இருப்பினும், அறிவுடயோனான இளையவன் பின்னே அரசும் செல்லும். நீங்கள் அள்ளிக் கொடுத்த பிரம்ம ஞானத்திற்கு என் வணக்கங்கள். இதில் வயது, பிற தகுதிகள் பார்ப்பது கிடையாது.

 68. Sarang on February 10, 2010 at 11:01 am

  ஜடாயு அவர்களே
  //
  மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம்//
  இது புதிதாக உள்ளது – மயர்வற மதின்னலம் அருளினான் யவன் அவன் என்று ஆழ்வார் நீங்கள் சொன்னதை முதல் பாசுரத்திலே போட்டு உடைத்துவிட்டாரே – ராஜாஜியின் பஜ கோவிந்தம் முன்னுரையில் “those who think gyana is different from bhakti are ignorant” என்று கூறி விட்டார் – இதிலிருந்து இரண்டு விஷயங்கள் திண்ணம் ஒன்று ஆதி சங்கரரும் அவருடைய இறுதி காலங்களில் பக்தியை முன் வைத்தார் என்பது, இரண்டு மற்ற தரிசனங்கள் மதின்னலமான ஞானாம் கூடிய பக்தியையே முன் வைத்தனர் என்று – ராமானுஜர் வேதாந்தமும் செய்தார் [ஸ்ரீ பாஷ்யம், வேதண்ட சங்கரம் …] பக்தியும் செய்தார் [கத்ய த்ரயம்]. அவரது கீதா பாஷ்யத்தில் ஞானம் கலந்த பக்தியே வலியுறுத்தபடுகிறது
  //
  // இப்படி இருக்கையால் – சரம ஸ்லோகமே முக்கியமான கீதா வாக்கியம், முன் உள்ளவை எல்லாம் வெறும் அவதாரிகை என்பது அவர்களின் நிலை பாடு //
  இதுவும் ஒரு குறுக்கல்வாதம் என்பது என் தாழ்மையான எண்ணம். மிகையான எளிமைப் படுத்தலும் கூட. இன்றைக்கு கீதையை திறந்த மனதுடன் படிக்கும் எவரும் இத்தகைய ஒற்றைப் பார்வையை விமர்சிக்கவே செய்வார்கள்.
  //

  நமக்கு ஒவ்வாவதையும் புலப்படாதையும் குறுக்கல்வாதம் எனக்கொள்வது சரியல்ல என்பது எனது அபிப்ராயம்
  இது தத்துவ ஞானிகள் ஆராய்ந்து கூறியவை – சும்மா சொன்னது இல்லை
  சரம ஸ்லோக நிர்ணயமானது பிரசித்தம் – வேண்டுமானால் சரம ஸ்லோகத்தையும் கீதையில் உள்ள மற்ற ஸ்லோகங்களையும் நீங்களே நன்கு ஆராயுங்கள் – எல்லா இடத்திலும் சொன்னது சரம ஸ்லோகத்தில் அப்படியே பிரதிபலிக்கும் – சரம ச்லோக்மானது ஒரு “summary – முடிவுரை” போல. கீதையில் இரண்டாம் அத்யாயத்தில் உள்ளதை தான் நெடுக விரித்து கூறுகிறார் அதற்காக இரண்டாம் அத்யாயம் மட்டுமே போதுமே என்றால் எப்படி. இரண்டாம் அத்தியாயம் என்பது ஒரு “abstract – முகவுரை” மாதிரி. நாம் உதாரணத்திற்கு ஒன்று பாப்போம்

  சரம ஸ்லோகம் – சர்வ தர்மான்
  இதையே தான் இரண்டாம் அத்தியாயத்தில் 2-54 ஆவது ஸ்லோகம் தொடங்கி முடிவு வரை வலியுறுத்தப்படுகிறது
  2-57 – ய : சர்வத்ர அநமிஸ்நேஹ் : தத் தத் ப்ராப்ய ஷுபாஷுபம் ந அபிநந்ததி நத்வேஷ்டி தஸ்ய ப்ராஜ்ஞய ப்ரதிஷ்டிதா – யாரிடம் எதனிலும் ஈடுபாடு இல்லாமல் [தர்மமத்தில் ஈடுபாடு இல்லையோ] பற்றுதல் இல்லையோ ….

  சரம ஸ்லோகம் மாம் ஏகம் சரணம்
  — தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசித மத்பர:
  எல்லாவற்றையும் அடக்கி (எல்லாவற்றையும் விட்டு)மனதில் அசைவுகள் இல்லாமல் என்னையே பரமாத்வாக கருதி ….

  இப்படி நீங்கள் சரம ஸ்லோகத்தில் பார்ப்பது கீதை எங்கிலும் உள்ளது – கீதை எங்கிலும் உள்ளது சரம ஸ்லோகத்தில் உள்ளது [இதை இப்படியும் அர்த்தம் கொள்வதில் தவறில்லை சமயவாதும் இல்லை]

  பூர்வாச்சார்யர்கள் சும்மா அபிமானத்துடன் இதை கூறவில்லை – உங்களுக்கு இந்த ஆச்சர்யர்களை பற்றி தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது – பிரமாணம் இல்லாததயும் அவர்களது பூர்வாச்சார்யர்கள் சொல்லாததையும் ஒருக்காலும் இவர்கள் சொல்ல மாட்டார்கள் [ராமானுஜ கீதா பாஷ்யம் அப்படியே ஆளவந்தார் செய்த கீதார்த்த சங்கரத்தை தழுவி இருக்கிறது]

  — முகுந்த மாலை என்பது குலசேகரர் செய்தது என்று உள்ளது – இதை விசேஷமாக குலேசேகர ஆழ்வாரே தான் பண்ணினார், வைஷ்ணவர்களுக்கு கிரு கண்களான உபய வேடாந்தைளும் திளைத்த ஆழ்வாரே நமக்கு முன்னோடி என்றெல்லாம் கொள்ளாமல் தீர ஆராய்ந்து இரு குலசெகரகளும் வேறு வேறு என்றே அறுதி இட்டுள்ளனர்

  – பேதை குழவி பிடித்து சுவைத்துன்னும் பாதக்கமலங்கள் காணீரே – இதற்க்கு இப்படியும் அர்த்தம் கொள்ளலாம் – கண்ணானது பாதங்கள் இனிமையானவை அதானால் தான் குழவிகள் உண்கின்றன என்று, இதை யாரும் ஏற்க மாட்டார்கள் ஏன் என்றால் பூர்வாச்சார்யர்கள் இப்படி அர்த்தம் கொள்ளவில்லை – இதற்க்கு சரியான அர்த்தமே கொண்டுள்ளனர்

  – சிற்றம் சிறு காலேவந்துன்னை சேவித்து – இதை கண்ணனின் சின்னன் சிறிய காலே நாங்கள் உன்னை செவிக்கிறோம் என்றும் அர்த்தம் கூறலாம் – ஆனால் பூர்வாசார்யர்கள் கருத்து இதற்க்கு ஒவ்வாததால் இப்படி ஒருவரும் கொள்ளுவதில்லை

  கூரத்தாழ்வான் ராமனுஜரின் மடத்து வாசலில் ஒரு மாத காலம் வெறும் நீர் மட்டும் உண்டு கற்றுக்கொண்டது சரம ஸ்லோக விவரணம் – இதை லேசாக கொள்பவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் – இவ்வளவு முக்கியம் வாய்ந்த ஒன்றை குறுக்கல்வாதம் என்று கொள்வது தாழ்மையான கருத்தே என்பதில் ஐயம் இல்லை

  //
  குறிப்பிட்ட சித்தாந்தத்தின் கருத்தாக்கத்தை நீங்கள் எடுத்தோதுவதில் எனக்கு பிரசினை எதுவும் இல்லை. சமயத்தில், சமயவாதம் என்றாலும் கூட அது தனக்கே உரிய அழகுடனும், கம்பீரத்துடனும் வெளிப்படுகிறது.

  ஆனால், இது ஒன்று தான் இந்து தர்மத்தின் ஆதாரபூர்வமான கொள்கை, வேறெதுவும் இல்லை என்பது போன்ற நிலைப்பாடுகள் சரியல்ல (உதாரணமாக, பரம்பொருள் என்பதை நாராயணன் என்ற சொல்லால் மட்டுமே குறிக்க வேண்டும், வேதத்தில் “நம்பிக்கை” இல்லாவிட்டால் முக்தி கிடைக்காது, சரணாகதி மார்க்கம் மூலம் மட்டுமே மோட்சம் சாத்தியம்). அவற்றையே நான் விமர்சிக்கிறேன்.
  //

  பிரபத்தி என்ற ஒரு உயர்ந்த வழியானது உங்களுக்கு சமயவாதமாக படுகிறது – சரணாகதி மார்க்கம் மட்டுமே முக்தி அளிக்கும் என்பது வைஷ்ணவர்கள் தங்களுக்கு வேறு அதிகாரம் இல்லை (அடியேன் சிறிய ஞானத்தன் என்று ஆழ்வாரே கூறிய பின்) என்பதால் மட்டுமே. போவோர் வருவோரிடம் எல்லாம் இதை திணித்ததாக எனக்கு தெரிய வில்லை – எனக்கு இத்தை தவிர வேறு கதி இல்லை என்று இருந்தால் அது மற்றவரை ஏன் பாதிக்க வேண்டும். சரணாகதி மார்க்கமும் சும்மா பஞ்ச சம்ஸ்காரம் செய்துவிட்டு சும்மா இருப்பது இல்லை – அதுவும் சிரமமானதே. பலர் நாம்சன்கீதனம் தான் கலி யுகத்தில் முக்தி என்கிறார்கள் – இதையும் குறுக்கல்வாதம் என்பீர்களா

  //
  இவ்வளவு இருக்க, கீதையின் செய்தி வைஷ்ணவ இறையியல் மட்டுமே, சரணாகதி மார்க்கம் மட்டுமே என்று கச்சை கட்டி வாதம் செய்யும் போக்கு கண்டிப்பாக விமர்சிக்கப் பட்டே ஆகும் அல்லவா? நம் எதிரே எவ்வளவு பிரத்யட்ச உண்மைகள் உள்ளன!

  உபநிஷதங்களும் சரி, கீதையும் சரி, வேதாந்த தரிசனமும் சரி – ஒற்றைக் குரல்கள் அல்ல. அவை பன்முகப்பட்ட சிந்தனை வீச்சுகளின், ஆன்மிக பரிமாணங்களின் வெளிப்பாடுகள். அவற்றை அப்படிப் பட்ட அடிப்படைப் புரிதலுடன் கற்பது தான் சரியான வழி என்று எனக்குத் தோன்றுகிறது.
  //

  எங்கேயாவது இப்படி கூறினோமா நான் தான் தெளிவாக எனக்கு தெரிந்த இரண்டு பதில்கள் உண்டு ஒன்று பொதுவானது(முதலாவது – இவ்வளவு சொன்னேன், இது எதுவுமே முடியலன்னா இத பண்ணு. எனக்கு துளசி தீர்த்மாவது கொடு என்று கடைசியாக சொல்லவில்லையா அது போல் தான்) ஒன்று வைஷ்ணவர்கள் கொள்வது என்று சொன்னேனே (வைஷ்ணவர்கள் மற்றவரை ஏற்க வேண்டும் என்ற வற்புறுத்துவது அல்லது அறுதியானது என்று சொல்லவில்லையே)

  எவ்வளவோ கீதா பாஷ்யம் உள்ளது – சங்கருருக்கு முன்னும் இருந்தது – அவரே எக்கச்சக்கமாக உள்ளது பல அர்த்தங்கள் உள்ளது – மக்கள் குழம்பி உள்ளனர் அதற்காகவே நான் இந்த பாஷ்யம் செய்கிறேன் என்கிறார் – இன்றைக்கு பல்லாயிர பாஷ்யங்கள் உள்ளன – எல்லாமே நன்றாகவே உள்ளன [திலகர் கர்ம யோகமே முக்தி அதுவே கீதையின் சாரம் என்கிறார் – இதுவும் சிலருக்கு ஏற்புடையதே]

  நீங்கள் ஏனோ வைஷ்ணவர்கள் மட்டும் இப்படித்தான் என்று முடிவு கட்டிவிட்டு அதை சார்ந்தே பேசுவது போல் உள்ளது – நீங்கள் பார்த்து பழகிய சிலர் காழ்புணர்ச்சி கொண்டிருந்தால் எல்லாரையும் அந்த கட்டத்தினுள் கட்டுவது சரியல்ல என்று படுகிறது

 69. Sarang on February 10, 2010 at 12:44 pm

  ஜெயஸ்ரீ அவர்களே

  //
  மூத்தவன் இருப்பினும், அறிவுடயோனான இளையவன் பின்னே அரசும் செல்லும். நீங்கள் அள்ளிக் கொடுத்த பிரம்ம ஞானத்திற்கு என் வணக்கங்கள். இதில் வயது, பிற தகுதிகள் பார்ப்பது கிடையாது.
  //

  அடியேன் சித்திரையில் சித்திரை – அந்த வாசனையோ என்னமோ, என்றும் சிறியவனாக இருப்பதே எனக்கு பொருந்தும்

 70. Sarang on February 10, 2010 at 12:46 pm

  திருச்சிகாரரே

  இந்த உவமானம் மிக அருமை

  //
  கொச்சி க‌ட‌ற்க‌ரையில் நின்று, “எங்க‌ய்யா இருக்கு ஆப்பிரிக்க‌ க‌ண்டம், ந‌ல்லா பாரு… ஆப்பிரிக்க‌ க‌ண்ட‌ம் எங்க‌ இருக்கு, காட்டு ?” என்று கேட்ப‌து போல‌ இருக்கு. ஒரு போட்டில் ஏறி ஒரு ம‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌ம் செய்தாலும் ஆப்பிரிக்கா க‌ண்ட‌த்தை காண‌ முடியாது. நீண்ட‌ முய‌ற்சி தேவை.

  ஆனால் முய‌ற்சியே எடுக்காம‌ல் வெறும‌னே உண்டு இர‌வு தூங்கி காலையில் எழுந்து அடப் போய்யா, உட‌ல் சாகும் போது உயிரும் அழிந்து விடுகிற‌து என்று முடிவுக்கு வ‌ர‌ முடியுமா
  //

 71. திருச்சிக் கார‌ன் on February 10, 2010 at 1:04 pm

  ஞானம், பக்தி இவை எல்லாம் பற்றி நண்பர்கள் விவாதிக்கின்றனர். ஞான மார்க்கம் என்று ஒரு வழி இருப்பதாக சொல்லப் படுகிறது. உண்மையை தேடுதல், உண்மையை பற்றிய ஆராய்ச்சி இவை ஞான மார்க்கம் என கருதப் படலாம் என நினைக்கிறேன்.

  ஆனால் ஞானம் என்பது உயிரானது விடுதலை அடைந்த நிலையே. ஞானம் என்பது ஒரு நிலை. ஞானம் is a state of soul ( உயிர்). துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலையே ஞானம் எனக் கூறப் படுகிறது.

  ஒரு மனிதன் தன்னை மனிதனாக, உடல் உள்ளவனாக , அந்த உடல் சார்ந்தவனாக இருக்கும் வரை துன்பங்கள் தன்னை வந்து சேர்வதை, அதாவது அவன் துன்பங்களை அனுபவிப்பதை தடுக்க இயலாது, அவன் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், அரசனாக இருந்தாலும், பேரரசானாக இருந்தாலும், இதே நிலைதான். இந்த அடிமை நிலை தனக்கு இல்லை என்பதை அவன் எப்போது உணர்கிறானோ அப்போது அவன் உயிர், அவன் அறிவு ஞானம் பெற்ற நிலையை அடைகிறது என சொல்லப் படுகிறது.

  இந்த ஞான நிலையை அடைய கர்ம யோகம், தியானம், கர்ம பலத் தியாகம், பக்தி, ….. என பல வழிகள் சொல்லப் பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு வழி பொருத்தமாக இருக்கலாம். பக்தி என்பது பெரும்பாலான மக்களால் எளிதில் பின்பற்றக் கூடிய வழியாக கருதப் படுகிறது.

  ஆனால் எந்த வழியில் வந்தாலும் கடைசியில் ஞானத்தை அடைந்து விடுதலை பெறுவதாக கூறப் படுகிறது.

  இதுவே இந்து மதம் பற்றி நாம் கற்ற வகையில் என்னுடைய புரிதல். இது தவறானது என யாராவது கருதினால் விளக்கம் அளிக்கலாம்.

 72. ஜடாயு on February 10, 2010 at 1:07 pm

  கந்தர்வன், சாரங்,

  நம்மாழ்வாரின் முக்தி பற்றிய அந்தப் பாடல் தன்னளவில் முழுமையானது. அதில் “நம்பிக்கை” பற்றி எதுவும் இல்லவும் இல்லை. வேதாந்தத்தின் மையமான தத்துவம் கவித்துவ உச்சம் கொள்ளும் தருணத்தில் விளைந்த ஒரு கவிதை அது, அதைச் சுட்டுவதற்காகவே குறிப்பிட்டேன்.. உடனே சுழன்றடித்து மேலும் மேலும் திருவாய்மொழி மேற்கோள்களை அள்ளி வீசுகிறீர்கள்! இத்தகைய விவாதங்களில் எனக்கு ஆர்வமில்லை என்றும் முன்பே கூறிவிட்டேன்.

  இரண்டு விளக்கங்கள் மட்டும் கொடுத்து விட்டு விடைபெறுகிறேன்… எனக்கு முக்கியமான வேலைகள் நிறைய உள்ளன..

  // ஆயினும் நடைமுறை வழக்கில் அப்படி ஆகி விட்டது – அல்லவா? .. மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம் //

  சரியாகக் கவனியுங்கள் – “நடைமுறை வழக்கு” என்று தான் சொன்னேனே அன்றி எனது கருத்து என்று சொல்லவே இல்லை. உடனே refutation களை ஆரம்பித்து விட்டீர்களே! இன்றைக்கு வேதாந்தம் (Vedanta),வேதாந்தி (Vedanti) என்ற சொல்லாட்சியை அதிகம் புழங்குபவர்கள் அத்வைதிகள் மட்டுமே (அத்வைதி என்றால் சம்பிரதாய சங்கரமடங்கள் மட்டுமே என்று நினைத்துக் கொள்ளவேண்டாம் – அது தவறு. ஸ்ரீராமகிருஷ்ணரின், ஸ்ரீநாராயண குருவின், சட்டம்பி சுவாமிகளின், ரமண மகரிஷிகளின், சின்மயானந்தரின் மற்றும் பல யோகிகளின் பாரம்பரியத்தினர் எல்லாரும் கூட அத்வைதிகளே, தத்துவரீதியாக, அவர்களும் ஆதிசங்கரரைப் போன்றே மற்ற துவைதவாத வேதாந்தப் பிரிவுகளை நிராகரிக்கவில்லை, மாறாக படிநிலைகளாகக் கண்டார்கள்; சமயரீதியாக சமரசத்தை உபதேசித்தார்கள்).

  பக்தியை மையமாகக் கொண்ட வேதாந்தப் பிரிவினர் ஸ்ரீவைஷ்ணவம், மத்வ சித்தாந்தம் ஆகிய தனிப் பெயர்களால் தங்கள் தரப்பைத் *தாங்களே* அழைத்துக் கொண்டனர். கருத்தளவிலும் கூட தத்துவத்தையும், ஞானத் தேடலையும் பின்னால் நிறுத்தி பக்தி சார்ந்த, சமயம் சார்ந்த வழிபாட்டு முறைகளையே முன்வைத்தனர். எனவே காலப் போக்கில் வேதாந்தம் என்றால் அத்வைதம் மட்டுமே என்பதான ஒரு வெகுஜன புரிதல் ஏற்பட்டது, அது இன்றும் தொடர்கிறது.

  இதை சுவாமி விவேகானந்தரும் சுட்டிக் காட்டியுள்ளார். வேதாந்தம் என்பது அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், த்வைதாத்வைதம் ஆகிய அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கியதே என்றும் ஆணித்தரமாக அவர் வலியுறுத்தியுள்ளார். அதுவே என் கருத்தும் ஆகும்.

  // நீங்கள் ஏனோ வைஷ்ணவர்கள் மட்டும் இப்படித்தான் என்று முடிவு கட்டிவிட்டு அதை சார்ந்தே பேசுவது போல் உள்ளது – நீங்கள் பார்த்து பழகிய சிலர் காழ்புணர்ச்சி கொண்டிருந்தால் எல்லாரையும் அந்த கட்டத்தினுள் கட்டுவது சரியல்ல என்று படுகிறது //

  இல்லை. தனிப்பட்ட சில அனுபவங்களை வைத்து ஒரு நிலைப்பாட்டைக் கொள்ளும் அளவுக்கு நான் முதிர்ச்சியற்றவன் அல்ல. சொல்லப் போனால், நான் கண்ட ஸ்ரீவைஷ்ணவ நண்பர்களில் பெரும்பாலர் முற்றாகவே சமய சமரசம் கொண்டவர்கள். 25 வருடங்களாக எல்லா சாதிக்காரர்களையும் சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் ஐயங்கார் குருசுவாமி நான் மிகவும் மதிக்கும் பெரியவர்களில் ஒருவர், இப்படிப் பலரைச் சொல்லலாம். எங்கள் வீட்டிலும் சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் என்று எல்லா மகானகளின் திருவுருவத்தையும் இணைத்து வைத்துப் போற்றுகிறோம்.

  இங்கு கூறியதெல்லாம் கருத்து ரீதியாக நீங்கள் இங்கு எழுதியவற்றின் மீதான விமர்சனம் மட்டுமே.

 73. Sarang on February 10, 2010 at 1:40 pm

  ஜடாயு அவர்களே

  //
  நம்மாழ்வாரின் முக்தி பற்றிய அந்தப் பாடல் தன்னளவில் முழுமையானது. அதில் “நம்பிக்கை” பற்றி எதுவும் இல்லவும் இல்லை. வேதாந்தத்தின் மையமான தத்துவம் கவித்துவ உச்சம் கொள்ளும் தருணத்தில் விளைந்த ஒரு கவிதை அது, அதைச் சுட்டுவதற்காகவே குறிப்பிட்டேன்.. உடனே சுழன்றடித்து மேலும் மேலும் திருவாய்மொழி மேற்கோள்களை அள்ளி வீசுகிறீர்கள்! இத்தகைய விவாதங்களில் எனக்கு ஆர்வமில்லை என்றும் முன்பே கூறிவிட்டேன்.
  //

  திருவைமொழியை இங்கு ஒப்பித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை – நீங்கள் பாலா கூறியதை நம்மாழ்வாரே கூறியுள்ளாரே பாருங்கள் என்பது போல் தான் உங்கள் பதிலில் எழுதி இருந்தீர்கள் – தன்னளவில் முழுமையானது என்பது மற்ற பாசுரங்களுக்கு விரோதம் இல்லாமல் அர்த்தம் கொள்ள வேண்டும் [நான் பாசுரத்தை பற்றி எதுவும் கூறவில்லை, நீங்கள் ஒரு தனி பொருள் கொண்டு அந்த பொருள் தான் பாலா சொன்னது என்று செர்துக்குரியத்தை தான் சுட்டிக்காட்டினேன்] – சும்மா ஆழ்வார் இஷ்டம் போல எல்லாத்தையும் சொன்னார் என்பது ஏற்புடையதல்ல – நீங்கள் குறிப்பிட்ட பாசுரத்தை மற்ற பாசுரங்களோடு சேர்த்து எவ்வண்ணம் பொருள் கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுத முயற்சித்தேன்

  //
  சரியாகக் கவனியுங்கள் – “நடைமுறை வழக்கு” என்று தான் சொன்னேனே அன்றி எனது கருத்து என்று சொல்லவே இல்லை. உடனே refutation களை ஆரம்பித்து விட்டீர்களே
  //

  இப்படி யார் நினைத்து கொண்டிருந்தாலும் அது உண்மையில் தவறான கருத்தே என்பதை சொல்லவே எழுதியது – “refutation” இல்லை. வேதாந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு பக்திக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றால் வேதாந்தத்தில் பக்தியே இல்லை என்றல்லவா ஆகிவிடும் – வேதாந்தம் ஞானம் மட்டும் அல்ல பக்தியும் சேர்ந்ததே – அதையே ராஜாஜி சுட்டிக்காட்டி உள்ளார்

  //
  இங்கு கூறியதெல்லாம் கருத்து ரீதியாக நீங்கள் இங்கு எழுதியவற்றின் மீதான விமர்சனம் மட்டுமே.
  //

  விமர்சிக்கும் முன் அது சரியானதா என்று எப்படி ஊர்ஜிதம் செய்வீர்கள் – பல முறை இது சமயவாத போக்கு இல்லை அது உங்களின் புரிதல் மட்டுமே என்று சொன்ன பின்பும் நீங்கள் அதையே மறுபடியும் அழுத்தி கூறியதால் உங்களுக்கு வைணவர்கள் மீது அப்படி ஒரு எண்ணம் உண்டோ என்று என்ன வேண்டியதாயிற்று – தவறான எண்ணம் எனில் மன்னியுங்கள் – சமரச கொள்கை உடையவர்கள் தான் சரி என்ற எண்ணமே சமரசமான எண்ணம் இல்லை [தர்க்க ரீதியில் அடிபட்டு போகிறது]

  நாம் விவாதத்தை வளர்க்க வேண்டாம் – உங்களின் கருத்துக்களின் மீது எனது அபிப்பிராயம் என்னது என்பதை மட்டுமே இங்கு எழுதியது

 74. கந்தர்வன் on February 10, 2010 at 2:48 pm

  ஜடாயு அவர்களே,

  ஒன்றே ஒன்றை மட்டும் கவனிக்குமாறு தாழ்வுடன் கேட்டுக்கொள்கிறேன்:

  //
  மற்ற துவைதவாத வேதாந்தப் பிரிவுகளை நிராகரிக்கவில்லை, மாறாக படிநிலைகளாகக் கண்டார்கள்; சமயரீதியாக சமரசத்தை உபதேசித்தார்கள்
  //

  நீங்கள் கூறும் சமரசமாவது “எல்லா சம்பிரதாயங்களும் சமம்” என்ற கருத்து தானே? “சமரசத்தை உபதேசித்தார்கள்” என்று கூறிவிட்டு, துவைதவாதத்தை “படிநிலைகள்” என்று சொன்னீர்கள். இது முன்னுக்குப் பின் முரணானது.

  அது போகட்டும். நீங்களோ, “த்வைதம் முற்றி, விஷிஷ்டாத்வைதத்திற்கு வந்து, அதற்கும் பின்பு மேலான அத்வைத நிலையை அடைகிறான் மனிதன்” என்று கூறுகிறீர்கள். அப்படி சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் அபிப்பிராயத்தைச் சொன்னதற்காக நாங்கள் (கந்தர்வன், சாரங் அவர்கள், போன்றோர்) உங்களை “சமயவாதி” என்று அழைக்கவில்லை.

  ஆனால் நாங்கள் மட்டும் “சௌர-காணாபத்திய-சைவ-சாக்த மதங்கள் படிநிளைகளே, வைணவம் கடைசி படி” என்று சொன்னதற்கு எங்களை “சமயவாதி” என்று அழைப்பது நியாயமா என்று ஆலோசிக்குமாறு உங்களையும் விவாதத்தில் கலந்துக் கொண்ட மற்றவர்களையும் கேட்டுக்கொண்டு தாழ்வுடன் இவ்விவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.

  நன்றி,

  கந்தர்வன்.

  PS: ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமும் அத்வைத தர்சனம் தான். [விசிஷ்ட + அத்வைதம் என்பதே, விசிஷ்ட+த்வைதம் என்பது அல்ல.]

 75. Sarang on February 10, 2010 at 11:05 pm

  ஜீவ்ஸ் அவர்களே

  //
  இறைவனைப் பற்றிய அறிவை/ தெளிவை எந்த ஒரு நூலும் ஏற்படுத்த முடியாது. 100% தூரத்தில் ஒரு அடி எடுத்து வைக்கத் தூண்டும் தூண்டுகோல் என்ற அளவில் இருக்கலாமே தவிர அவையே பிரமாண நூல்கள் அவற்றைக் கொண்டே வீடுபேறு என்பது – என்னளவில் பேத்தலான விஷயம்.
  //

  இறைவனை அறிய என்று கூறவில்லையே – வேதாந்தத்தை அறியவே என்று கூறியுள்ளேன் – ஆதி சங்கரரும் அந்த வந்த இமே என்ற கீதையின் வ்யாக்யானத்தில் இதை தெளிவாகவே சொல்லி உள்ளார் – வேதாந்தம் ஆத்மா ஸ்வரூபத்தை அறிய ஒரு வழி காட்டி, ஆசார்யாரியம் சென்று வேதம் கற்றால் ஆத்மா சுத்தி உண்டாகி, வேதம் சொல்வது புரிந்து, அதனால் ஞானம் பிறந்து, பக்தி வளர்ந்து, முக்தி பெற்று இறை உள்ளில் ஆன்மா ஒடுங்குகிறது

  நாம் இங்கே ஆராய்வது வேந்தாந்தை பற்றி பேச வேதாந்தமே பிரமாணம் என்பதுவே. முக்திக்கு பிராமாணம் [முதல், இறுதி அதிகாரி ] பகவானே 🙂 எந்த நூலும் இல்லை

  //
  கிருஷ்ணன், சிவன், பிரமன், விஷ்ணு இந்தப் பெயர்கள் தெரியாத ஒருவன் வீடுபேறு அடைய முடியாதா ? முடியும். தன்னையறிந்து தன்னுள் தானறிந்து தன்னை விடுத்தல் நடக்கும் போது. சைக்கிள் பழக முதலில் துணை வேண்டும். அப்போது நம் கவணம் முழுதும் ஹாண்டில் பார், ரோடு என்று இருக்காது. சொல்லிக் கொடுப்பவர் பின்னாடி பிடித்திருக்கிறாரா என்ற கவனத்தில் தான் இருப்போம். அது தான் நீங்கள் சொல்லும் பிரமாணங்கள். அந்தப் பிரமாணங்கள் மட்டுமே போதுமானவையா ? நீங்கள் சைக்கிள் நன்றாகப் பழகியப் பின் உங்கள் கவனம் எங்கு சிதறி இருப்பினும், வண்டி சரியான பாதையில் ஓடும். அப்போது பிரமாணங்களைக் கொண்டுதான் வழித்தடத்தில் செல்லுவேன் என்பது அபத்தம்.
  //

  பரமாத்மா விருப்பமில்லையேல் யாருக்கும் எதுவும் கிடையாது (வீடு பேரு உட்பட)

  முதலில் சைக்கிள் ஓட்ட உதவுபவர் [வேதான்தாமோ, பக்தி நூலோ, யோகமோ, நாம சந்கீர்தனமோ சொல்லித்தரும்] ஆசார்யர் – கண்ணும் கருத்துமாக சைக்கிள் ஓட்டுபவர் முமுக்ஷு (மோக்ஷம் விரும்புபவர்) – ஆனால் ஒன்றை விட்டுவிட்டீர்கள் சைக்கிள் ஓட ரோடு வேண்டும், காந்த சக்தி வேண்டும், எதிரில் வருபவர் முட்டாமல் இருக்க வேண்டும், கடைசியாக நீங்கள் எவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்டினாலும் வீட்டுக்கதவு திறந்திருந்தால் தான் வீட்டிற்குள் செல்ல முடியும் இல்லை என்றால் குறுக்கு மறுக்கும் ஓட்டிக்கொண்டே தான் இருக்க வேண்டும் – அப்படி இல்லாமல் இருக்க அவனது கிருபை வேண்டும்

  //
  எத்தனையோ மகா புருஷர்கள் உதித்த திருநாடு. மேலே நீங்கள் குறிப்பிட்டவர்கள் வணங்கத் தக்கவர்கள் அவர்கள் சொன்னது எல்லாம் அற்புதமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர்கள் சொன்னது மட்டுமே சரி என்று சொல்ல வருவதைத் தான் சரியில்லை என்று சொல்ல வருகிறேன். எதையும் சோதித்து அறிந்துக் கொள் என்கிறதல்லவா நீங்கள் சொல்ல வரும் பிரமாணமும் ?
  //

  இவர்கள் மட்டும் அல்ல, பல்லாயிரக்கனக்கான ஆஹா புருஷர்கள் வேதாந்தம் பற்றி பேச இம்மொன்றையும் பிரமாணமாக கொண்டனர் (நோக கடவுளை பற்றி பேச அல்ல]. ராமானுஜர் எங்காவது கடய த்ரயத்தில் ரங்கநாத உன்னை இந்த கேன உபநிஷட்டில் பிரமாணம் இப்படி கூறுகிறதே, ப்ரசன உபநிஷத்தில் இப்படி கூறுகிறதே அதையே பிரமாணமாக கொண்டு உன்னை துதிக்கிறேன், அதை பிரமாணமாக கொள்வதாலேயே எனக்கு முக்தி தா என்று சொல்லவில்லை, சங்கரரும் பஜ கோவிந்தத்தில் இப்படி சொல்லவில்லை

  விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள் – மூன்று பிரமாணங்கள் வேந்தாந்தை அறிய இறுதி பிரமாணங்கள். பகவனை அறிய அவனே இறுதியானவன்

 76. Sarang on February 11, 2010 at 9:26 am

  ஜீவ்ஸ் அவர்களே

  மேலே சொன்னதன் தொடர்ச்சியாக

  இந்த பிரமாணங்கள் தான் முக்தி என்றில்லாமல், பராமாத்மவே முக்தி தர வல்லவன் என்பது தெளிவு – அவன் அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க வில்லை – அவனுக்கு சொந்தமான ஆன்மாவை [தந்த நீ கொண்டாக்கினையே ] அவனே உருக்கி பருக நினைக்கிறான், ஒரு நாள் நினைத்ததை சாதிதஊம் விடுவான் [வைகுந்தம் புகுவது மன்னவர்க்கு இயல்பே] – அவனது இந்த செயளிருந்து தப்ப ஒரே மற்று வழி ஆச்சர்யனை சரண் அடைந்து அவர் மூலமாக முக்தி பெறுவதே. ஆசிரியர் கூறியுள்ளதை போல, நாம் என்ன வேண்டும் [நல்ல விஷயங்கள்] என்று நினைக்கிறோமோ அதுவே ஆகிறோம் [சிவா சிந்தையில் இருப்போர் சிவா பதமும், நாராயணனை சரண் புகுந்தால் பரம பதமும் ….] ஆச்சார்யா சின்காயில் இருப்போர் ஆச்சர்யரின் நிலையை தானே அடைவார்கள். நாயன்மார்கள் சிவ பதத்தை அடைந்தனர், நாய்ன்மார்கலையே சரண் புகுந்தவரும் நாயன்மார்கள் அடைந்த அதே சிவ பதத்தை அடைவர்

 77. திருச்சிக் கார‌ன் on February 11, 2010 at 3:06 pm

  இந்த “மறந்தும் புறம் தொழா” என்னும் கோட்பாடு இந்திய சமுதாயத்துக்குள் எப்ப‌டி வ‌ந்த‌து ? இதன் மூலம் என்ன என என்று, நாம் இந்த‌ கோட்பாட்டின் அடி முடி தேடும் செய‌லில் இற‌ங்கினோம்.

  நான் பாம‌ர‌னேய‌ன்றி ப‌ண்டித‌ன‌ல்லன். எனினும் என‌க்கு எட்டிய‌ அளவுக்கு முண்ட‌க, க‌ட, தைத்திரிய‌, பிர‌ஹ‌தார‌ண்ய‌ உப‌ நிட‌த‌ங்க‌ளிலும், ப‌க‌வ‌த் கீதையிலும் தேடிப் பார்த்தேன், தென் ப‌ட‌வில்லை. அறிஞ‌ர்க‌ள் யாராவ‌து இது ப‌ற்றி தெரிந்து இருந்தால் விள‌க்க‌ம் த‌ர‌லாம். ஆனால் நான் தொட‌ர்ந்து இந்த‌ கோட்பாட்டின் மூல‌ம் எங்கே என்று தேடினேன், தேடினேன்…. வாழ‌க்கையின் ஓர‌த்துக்கே ஓட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லாத‌ ப‌டிக்கு, என்னுடைய‌ நூல‌க‌த்திலேயே இத‌ற்க்கு ஒரு சான்று கிடைத்த‌து.

  //உன்னை உன் அடிமை வீடாகிய‌ எகிப்து நாட்டில் இருந்து மீட்ட‌வ‌னாகியே நானே உன் தேவ‌ன் (க‌ட‌வுள்).

  என்னைத் த‌விர‌ உன‌க்கு வேறு தேவ‌ர்க‌ள் ((க‌ட‌வுள்) வேண்டாம்.

  சொர்க்க‌த்திலும் பூமிக்கு மேலும், ச‌முத்திர‌த்துக்கு அடியிலும் உள்ள‌ யாதொரு சொரூப‌த்தையும் நீ தாழ‌ப் ப‌ணிய‌வோ, வ‌ணங்க‌வோ கூடாது.//

  யூத‌ர்க‌ளின் க‌டவுள் ஜேஹோவா என‌ப்ப‌டும் க‌ர்த்த‌ர், அவ‌ருடைய‌ தூத‌ராகிய‌ மோச‌ஸின் மூல‌ம் யூத‌ர்க‌ளுக்கு இட்ட‌ முத‌ல் க‌ட்ட‌ளை, இந்த மறந்தும் புற‌ம் தொழாமை க‌ட்ட‌ளை. “ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌”மாகிய‌ பைபிளில் இது தெளிவாக‌ உள்ள‌து.

  இந்த‌ கோட்பாடுதான் உல‌கிலே ம‌த‌ வெறியை, ம‌த துவேஷத்தை தூண்டி விட்டு, தொட‌ர்ச்சியான‌ போர்க‌ளை ந‌ட‌த்தி, இரண்டு உல‌க‌ப் போர்க‌ளில் இறந்த‌வ‌ர்க‌ளை விட‌ அதிக‌மான‌ பேரைக் கொன்று, இர‌த்த‌ ஆறை ஓட‌ விட்ட‌து.

  இந்துக்க‌ள் கட‌வுளாக‌ வ‌ழி ப‌ட்ட‌ யாருமே – நாராய‌ண‌னோ, சிவ‌னோ, வினாய‌க‌ரோ…. இப்ப‌டி “என்னைத் த‌விர‌ வேறு யாரையும் தொழ‌க் கூடாது” எனக் க‌ட்ட‌ளைக‌ள் எதுவும் போடாத‌ நிலையில்,

  இந்த‌ பால‌வ‌ன‌ ஆபிர‌காமிய‌க் க‌ட்டளையை இந்தியாவில் அதிக‌ செல்வாக்கு உள்ள‌தாக்கி, ச‌கிப்புத் த‌ன்மைக்கு ஆப்பு வைக்கும் காட்டு மிராண்டி நிலைக்கு ம‌க்களை அழைத்து செல்லும் அபாய‌ம் உள்ள‌ இந்த‌ கோட்பாட்டுக்கு, இங்கே இந்தியாவில் ப‌ட்டுக் குஞ்ச‌ல‌ம் க‌ட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌?

  அதுவும் எப்ப‌டி – முக்தி அடைவ‌த‌ற்க்காக‌ இதை ப‌ய‌ன் ப‌டுத்துவ‌தாக‌ -முலாம் பூசிப் பார்க்கிறார்க‌ள்!

 78. திருச்சிக் கார‌ன் on February 11, 2010 at 4:41 pm

  ஒரு வ‌குப்பில் முப்ப‌து பேர் ப‌டிக்கிறார்க‌ள். அந்த‌ வ‌குப்பிற்க்கு ஒரு கிளாஸ் டீச்ச‌ர் இருக்கிறார். அவ‌ர் ம‌ட்டும் அல்லாம‌ல், அந்த‌ வ‌குப்பிற்க்கு இன்னும் சில‌ டீச்ச‌ர்க‌ள்‍- கண‌க்கு டீச்ச‌ர், வ‌ரலாறு டீச்ச‌ர்- இவ‌ர்க‌ளும் அந்த‌ வ‌குப்பிற்க்கு வ‌ந்து பாட‌ம் எடுக்கிறார்க‌ள்.

  அந்த‌ வ‌குப்பில் ஒரு மாண‌வன், கிளாஸ் டீச்சர் அல்லாம‌ல் வேறு எந்த‌ டீச்ச‌ர் பாட‌ம் எடுக்க‌ வ‌குப்பில் நுழைந்தாலும், எழுந்து நிற்ப‌தோ, அவ‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்க‌ம் செலுத்துவ‌தோ கிடையாது. கேட்டால், என‌க்கு கிளாஸ் டீச்ச‌ரை ம‌ட்டுமே பிடிக்கும், அவ‌ங்க தானே கிளாஸ் டீச்ச‌ர், ம‌ற்ற‌ டீச்ச‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்க‌ம் செலுத்த‌ மாட்டேன் என்கிறான்.

  இதை க‌ண‌க்கு டீச்ச‌ர், கிளாஸ் டீச்ச‌ரிட‌ம் தெரிவிக்கும் போது, அந்த‌ நிலையில் கிளாஸ் டீச்ச‌ர் அந்த‌ மாண‌வ‌னைக் கூப்பிட்டு பாராட்டுவாரா? அவ‌னைக் கூப்பிட்டு ஏன் இப்ப‌டி அக‌ராதி செய்கிராய்? உன்னால் என‌க்கு ம‌ற்ற‌ டீச்ச‌ர்க‌ளுட‌ன் பொல்லாப்பு என்று அவ‌னைக் க‌டிந்து கொள்வார்.

  இந்த‌ மாண‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் தான் இந்த‌ ம‌ற‌ந்தும் புற‌ம் தொழா மாந்த‌ர்க‌ள்.

  இவ‌ர்க‌ளால் இவ‌ர்க‌ளின் த‌லைவ‌ர்க‌ளுக்கு தொல்லைதான். விஷ்ணுவும், சிவ‌னும் இவ‌ர்க‌ளின் கையில் சிக்கி ப‌டாத‌ பாடு ப‌ட‌ வேண்டியுள்ள‌து. எல்லோரையும் ம‌ன‌ப் பூர்வமாக‌ வ‌ண‌ங்கி , த‌ன்னிட‌ம் விசேஷ‌ ப‌க்தி செலுத்தும் “அத்வேஷ்டா” ப‌க்த‌னே விஷ்ணுவிற்க்கு மிக‌வும் பிரிய‌மான‌ ப‌க்த‌னாக இருப்பான் என‌ நான் தைரிய‌மாக‌ சொல்வேன்.

  உங்க‌ளை ம‌ட்டுமே வ‌ண‌ங்குவேன் என்று ச‌ண்டித் த‌ன‌ம் செய்யும் “ப‌க்த‌னு”க்கு சிவ‌னும் ச‌ரி, விஷ்ணுவும் ச‌ரி முக்தி வ‌ழ‌ங்க‌ மாட்டார்க‌ள் என‌வும் நான் வெளிப்ப‌டையாக‌ சொல்வேன்.

 79. Sarang on February 11, 2010 at 5:15 pm

  //
  இந்த‌ கோட்பாடுதான் உல‌கிலே ம‌த‌ வெறியை, ம‌த துவேஷத்தை தூண்டி விட்டு, தொட‌ர்ச்சியான‌ போர்க‌ளை ந‌ட‌த்தி, இரண்டு உல‌க‌ப் போர்க‌ளில் இறந்த‌வ‌ர்க‌ளை விட‌ அதிக‌மான‌ பேரைக் கொன்று, இர‌த்த‌ ஆறை ஓட‌ விட்ட‌து.
  //

  பைபிள் மூலம் கூறும் கோட்பாடுகள் தான் ஜாஸ்தியாக உள்ளது – கொஞ்சம் நமது விஷயத்தையும் புரட்டிப் பார்த்தால் நல்லது

  பல ஆயிரம் ஆயிரம் வருடங்களாக[ நாம் இங்கு கூறும் ஆபிரகாமிய காலதிருக்கு முன்பிருந்தே] மறந்து புறம் தொழாமை இங்கு உள்ளது ஆனால் அதானால் ஒருவர் கூட ரத்தம் சிந்தியடாக தெரியவில்லை

  வித்தியாசம் என்னவென்றால் – நான் கும்பிடுவதே கடவுள் நீ கும்பிடுவது அல்ல அதனால ஒன்னு நான் கும்பிடுறத கும்பிடு இல்லாங்காட்டி நான் கொன்னுருவேன், நான் கும்பிடுறத கும்பிட்டா தான் நீ மனுஷன் இல்லாட்டி நீ காட்டு மிராண்டி என்பது அங்கே (இங்கேயும் இது போல் ஒரு புது வடிவில் தலை தூக்குகிறது)

  ஆனால் இங்கோ – இறைவா உன்னை என்னால் அறிவதே இயலாது – உன்னை ஒரு உருவில்லாவது உன்னுடன் இணக்கம் கொள்ள முயல்பிறேன் – பரமாத்மா ஸ்வரூபமாக இந்த உருவையே கொள்கிறேன் – உன்னையே தியானிக்கிறேன் – த்யானமானது ஒன்றில் ஆழ்வதே ஆகும் – நான் த்யானம் செய்யும் பொது round robin முறையில் புள்ளையார், முருகன், சிவன், பார்வதி, சூரியன், இயேசு, அல்லா, விஷ்ணு, அய்யனார், எனது அம்மா, பாட்டனார் இப்படி வந்து போனால் த்யானம் எப்படி நிலைக்கும் – சரி எனக்கு ஒரு ஆபத்து நேர்கிறது நான் புள்ளயாரே, முருகா, ஏசுவே, விஷ்ணுவே, சிவனே என்று தான் கூப்பிடனுமா – அப்படி கூப்பிட்டா அவர் வருவார் என்று ஒவ்வொருவரும் சும்மா இருந்துவிட்டால் – ஆபத்துக்கே இப்படின்னா, இந்த பிறவி என்ற பேராபத்தில் இருந்து மீள உன் ஒருவனை மட்டும் தியானித்தால் போதாத எல்லோரையும் கட்டாயம் சேத்துக்க் கொள்ளணுமா – இது என்னது புது விவகாரமா இருக்கு நான் பாட்டுக்கு நீயே எனக்கு கதி, வேறொன்றிலும் என் மனம் போகவில்லை என்று இருந்தால் புது வம்பு வந்து சேர்கிறதே -cbse யில் படிப்பவர் cbse முறையிலேயே படித்து 12th பாஸ் பண்ணக் கூடாத – state board, metic இப்படி எல்லாவற்றிலும் படித்தே தீர வேண்டுமா, சிலர் இப்படி கொஞ்ச காலம் மாறி மாறி படிக்கிறார்கள் அது சரியல்ல என்று நான் கூறவில்லை அது அவர் விருப்பம் ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள வேறுபாடுகளையும் அவர்கள் தெரிந்து கொண்டு ஒவ்வன்றின் பண்பையும் அறிந்து கொண்டும் அவர்களும் 12th பாஸ் செய்கிறார்கள் நானும் தானே பாஸ் செய்கிறேன் – நான் என்ன state board காரனை கிள்ளினேனா, அல்லது metric காரனை தள்ளினேனா

  பரமாத்மா மதத்தின் பால் சிலர் கொள்ளும் வெரியயும் உன்மெல் ச்லருக்கு இருக்கும் மீலாத மேலான அசயாத இடைவிடாத பற்றையும் வேருபடுத்தி காட்டும் வல்லமை தாராயோ

 80. Sarang on February 11, 2010 at 5:25 pm

  //
  ஒரு வ‌குப்பில் முப்ப‌து பேர் ப‌டிக்கிறார்க‌ள். அந்த‌ வ‌குப்பிற்க்கு ஒரு கிளாஸ் டீச்ச‌ர் இருக்கிறார். அவ‌ர் ம‌ட்டும் அல்லாம‌ல், அந்த‌ வ‌குப்பிற்க்கு இன்னும் சில‌ டீச்ச‌ர்க‌ள்‍- கண‌க்கு டீச்ச‌ர், வ‌ரலாறு டீச்ச‌ர்- இவ‌ர்க‌ளும் அந்த‌ வ‌குப்பிற்க்கு வ‌ந்து பாட‌ம் எடுக்கிறார்க‌ள்.

  அந்த‌ வ‌குப்பில் ஒரு மாண‌வன், கிளாஸ் டீச்சர் அல்லாம‌ல் வேறு எந்த‌ டீச்ச‌ர் பாட‌ம் எடுக்க‌ வ‌குப்பில் நுழைந்தாலும், எழுந்து நிற்ப‌தோ, அவ‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்க‌ம் செலுத்துவ‌தோ கிடையாது. கேட்டால், என‌க்கு கிளாஸ் டீச்ச‌ரை ம‌ட்டுமே பிடிக்கும், அவ‌ங்க தானே கிளாஸ் டீச்ச‌ர், ம‌ற்ற‌ டீச்ச‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்க‌ம் செலுத்த‌ மாட்டேன் என்கிறான்.
  //

  பரமாத்மா நான் யார் வன்து படம் சொன்னாலும் பாடத்தின் மேது மட்டுமெ கவனம் கொல்ல நினைக்கிறேண், சிலர் கனக்கு வாத்தியார் என்ன செஞார் , ஆங்கில வாதியார் செஞார் என்ட்ரெல்லம் பார்க்க சொல்கிரார்கலே

  மேலும் அனைத்து வித்தைகலயும் தானே அறின்து அனைவர்க்கும் அன்பால் புகட்டும் இந்த மெட்ரிக் முரைக்கு முன் நமது பன்பாட்டில் இருந்த குருகுல வாசத்தயே என் மனம் விரும்புகிரது – ஒரு முழுமை பேற்ற ஆசான் எனது ஆருயிருக்கு காவல் இருப்பார் என்னை கடை தெர்துவது தான் அவரது பொருப்பு எண்று இருப்பார், அவரை விட்டால் எனக்கு வேரு கதி ஏது – இது கன்னு, இது பினக்கு என வித்யாசம் தெவை தான ஒவ்வொன்னுக்கும் ஒரு specialist tai நாடிதான் ஆகனுமா

 81. திருச்சிக் காரன் on February 11, 2010 at 6:04 pm

  கணக்கு வாத்தியாருக்கோ, வரலாறு வாத்தியாருக்கோ கால் பிடிக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை.

  ஆசிரியர் என்றால் அவர் வரும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது டீச்சருக்கு செலுத்த வேண்டிய மரியாதை. பள்ளி மாணவன் வகுப்பிற்கு செல்லும் முன் அசெம்பிளிக்கு செல்ல வேண்டும் என்பது பள்ளியின் நியமம்.

  நான் நேராக வகுப்புக்கு தான் செல்வேன், என் வேலை படிப்பது மட்டும் தான். கொடி வணக்கமும் செலுத்த முடியாது, எல்லா டீச்சருக்கும் வணக்கமும் சொல்ல முடியாது என்று அகராதி செய்யும் மாணவனை என்ன சொல்ல முடியும்? அவனால் டீச்சர்களுக்கு தான் தொல்லை. குறிப்பாக கிளாஸ் டீச்சருக்கு அவனால் அதிக தொல்லை.

 82. திருச்சிக் காரன் on February 11, 2010 at 6:27 pm

  ஆபிரகாமிய மதத்தவர் எல்லோரும் (கிறிஸ்தவ, இசுலாமிய, யூத பிரிவினர்) மறந்தும் புறம் தொழாமை என்கிற அடிப்படை வாத, சமரச மறுப்பு, பிடிவாதக் கோட்பாட்டில் மிக உறுதியாக இருந்தவர்கள்.

  அதனால் அவர்கள் வாழ்ந்து வந்த மத்தியக் கிழக்கு & ஐரோப்பியப் பகுதியில் கிறிஸ்தவ, இசுலாமிய, யூத பிரிவினர் மூவரும் வாளை உருவி இரத்த ஆறு ஓட விட்டனர்.

  ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்களில் பெரும்பான்மையானவர்கள் அத்வேஷ்டா, சமரச, நல்லிணக்க, எல்லாக் கடவுள்களையும் மரியாதை செய்யும் நாகரீகப் போக்கை பின்பற்றியவர்கள்.

  எனவே ஒரு சிறு பிரிவினர் சானதன தர்மத்திலும் தங்களை அறியாமலேயே ஆபிரகாமிய கோட்பாட்டை புகுத்தி பின்பற்றியபோது – பெரும்பான்மையான மக்கள் அவர்களையும் சகித்துக் கொண்டு, இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்தல், என்ற வகையிலே அவர் நாணும் வகையிலே எல்லாக் கடவுள்களையும் மனப் பூர்வமாக வணங்கி நன்னயம் செய்து விட்டனர்.

  இதனால் தான் இந்து மதம் அமைதிப் பூங்காவாகவே இருந்து விட்டது.

  அப்படி அமைதிப் பூங்காவாகவே இருக்க வேண்டும்,

  இன்னும் “மறந்தும் புறம் தொழா” ஆபிரகாமிய, அடிப்படை வாத, சமரச மறுப்பு, பிடிவாதக் கருத்தை பரப்பி அமைதியை நல்லிணக்கம் கெடுக்கப் பட வேண்டாம் என்பதற்கு தான், இத்தனையும் எழுதுகிறோம்.

 83. கந்தர்வன் on February 11, 2010 at 6:41 pm

  சாரங் அவர்களே,

  //
  நான் கும்பிடுவதே கடவுள் நீ கும்பிடுவது அல்ல அதனால ஒன்னு நான் கும்பிடுறத கும்பிடு இல்லாங்காட்டி நான் கொன்னுருவேன், நான் கும்பிடுறத கும்பிட்டா தான் நீ மனுஷன் இல்லாட்டி நீ காட்டு மிராண்டி என்பது அங்கே (இங்கேயும் இது போல் ஒரு புது வடிவில் தலை தூக்குகிறது)
  //

  “இங்கேயும் இது போல் ஒரு புது வடிவில் தலை தூக்குகிறது” – இப்படி நீங்கள் சொன்னதன் அர்த்தம் எத்தனை பேருக்கு விளங்கியதோ?!! அனைவரும் மனம் திறந்து இதை எப்பொழுது புரிந்து கொள்வார்களோ?!!

 84. கந்தர்வன் on February 11, 2010 at 6:47 pm

  திருச்சிக் காரன் அவர்களே,

  அருமையான உவமை கூறியதற்கு நன்றி. இதை வைத்தே விளக்குகிறோம்:

  எந்த டீச்சர்-க்கும் வணக்கம் செலுத்துவதில் எமக்கு ஆட்சேபனம் இல்லை. கண்டிப்பாக விஷ் பண்ணுவோம். ஆனால், “எல்லா டீச்சரும் பிரின்சிபால் தான்” என்பதைத் தான் நாங்கள் ஏற்கவில்லை. அதற்காக, பக்கத்து பெஞ்ச் பையன் “கணக்கு டீச்சர் தான் பிரின்சிபால்” என்று சொன்னதற்கு அவனை கேலி பண்ண மாட்டோம், சாத்து சாத்த மாட்டோம்.

 85. கந்தர்வன் on February 11, 2010 at 7:01 pm

  //
  நான் நேராக வகுப்புக்கு தான் செல்வேன், என் வேலை படிப்பது மட்டும் தான். கொடி வணக்கமும் செலுத்த முடியாது, எல்லா டீச்சருக்கும் வணக்கமும் சொல்ல முடியாது என்று அகராதி செய்யும் மாணவனை என்ன சொல்ல முடியும்?
  //

  இதற்கு நேரான situation, “சந்த்யாவந்தன-விஷ்வேதேவா-அக்னிஹோத்ர-தர்பண-ச்ராத்த கர்மாக்களில் மற்ற தெய்வங்களின் வணக்கம் உள்ளது, ரிஷி-பித்ரு வணக்கம் உள்ளது, ஆகையால் வைணவனாகிய நான் அவற்றைச் செய்ய மாட்டேன்” என்று சொல்வதற்குச் சமம். இதைப் பற்றி பகவான் என்ன கூறுகிறான் என்றால், “சுருதி, ச்மிருதிகளில் சொல்லப்பட்ட அன்றாடம் செய்ய வேண்டிய கர்மாக்களை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ, அவனை ஒருபொழுதும் நான் என் பக்தனாக ஏற்றுக் கொள்வதில்லை” (விஷ்ணு தர்மோத்தர புராணம்). மறந்தும் புறந்தொழாதவர்கள் இந்த கர்மாக்களை விடாமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் சொல்லும் உவமையால் வரும் குற்றச்சாட்டு செல்லாது.

  நீங்கள் சொன்ன உவமையே எடுத்துக் கொள்வோம். மறந்தும் புறந்தொழாமையை விட்டு விலகச் சொல்வது, ஸ்கூல் படிக்கப் போகும் பையனிடம், “ஒருவர் மட்டும் பிரின்சிபால் அல்ல, ஸ்கூல் ஆயாவும் பிரின்சிபால், நாட்டுக் கொடியும் பிரின்சிபால், டங்கு டங்கு-ன்னு சத்தம் போடும் ஸ்கூல் மணியும் பிரின்சிபால், பீ.டீ. டீசெரும் பிரின்சிபால், பக்கத்துப் பையனும் பிரின்சிபால்” என்று சொல்வதற்குச் சமம்.

 86. ந.உமாசங்கர் on February 11, 2010 at 7:54 pm

  கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு

  த‌ங்க‌ள் ஆராய்ச்சிப்ப‌ணி சீரிய‌து. ந‌ன்றி. அடிமுடி காணாத வரலாற்றைப் புனையப்பட்டது என்று காட்டுவதற்காக நமது அன்பர்கள் சிலர் சில வேத மேற்கோள்களையும் திரு கிருஷ்ணசாமி அய்யங்காரின் புத்தக மேற்கோள்களையும் காட்டி வாதிட்ட‌போது உங்க‌ள் க‌ட்டுரை ஆராய்ச்சிபூர்வ‌மாக‌ வ‌ந்து சிறிது மாற்றைத்த‌ந்தது. தங்களும் ச‌ம‌ர‌ச பாவ‌த்தில் சிவ‌ன், விஷ்ணு, பிர‌ம்மா மூவ‌ரையும் சிலாகித்து எழுதினீர்க‌ள். அதோடுகூட‌ வேத‌ப்பிர‌மாண‌ம் என்றும் எழுதிய‌போது அது எந்த‌க் க‌ட்டுரையாள‌ருக்கும் இருக்க‌வேண்டிய‌ உரிமை/ சலுகை (discretion) என்றே இருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் வேத‌ப்பிர‌மாணம் என்று விஷ‌ய‌த்தை அத‌ற்கே திசைதிருப்பி ந‌ம‌து அன்ப‌ர்க‌ள் சார‌ங் அவ‌ர்க‌ளும் க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளும் அதேசுழ‌லில் த‌ங்க‌ளையும் இழுத்துவிட்டார்க‌ளே!

  ஜோதிட‌ சாஸ்திர‌த்தில் உள்ள யோக‌ங்க‌ளைக் கூறியிருக்கிறீர்க‌ள்.

  அவ‌ற்றிலே,

  ///லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது சீகண்ட யோகம் ஆகும்.///

  ///களத்ரகாரகனான சுக்கிரனும், பாகியாதிபதியான 9 -ஆம் வீட்டு அதிபதியும், புத்திர காரனான புதனும் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது ஸ்ரீ நாத யோகம் ஆகும்.///

  ///குரு, சனி, லக்னாதிபதி ஆகியோர் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது விருஞ்சி யோகம் ஆகும்.///

  இங்கே எழுத்துப்பிழை உள்ள‌து. ‘ந‌ட்பு’ என்றே வ‌ர‌வேண்டும். ந‌ட‌ப்பு என்ப‌து த‌வ‌று. “ந‌ட‌ப்பு” என்ப‌து சில‌ ச‌மூக‌த்தின‌ரின் இறுதிச்ச‌டங்குக‌ளில் ஒன்று.

  அத்தியாய‌ம் 6 ஸ்லோக‌ம் 28 ‍ ப‌ல‌தீபிகை இந்த‌ யோக‌ங்க‌ளை விவ‌ரிக்கிற‌து. இந்த யோகங்களால் அவர்களுக்கு முறையே பரமசிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் அருள் பரிபுரணமாக இருப்பது தெரிகிறது அவர்கள் அந்தந்த மூர்த்திகளின் பக்தனாக இருப்பார்கள் என்றுதானிருக்கிறது. மேலும் இந்த‌ யோக‌ம் இத‌னால் என்றுதான் ஜோதிட‌ நூல்க‌ள் கூறுமே அல்லாது, த‌ங்க‌ள் கூறியுள்ள‌ப‌டி இந்த‌ யோக‌ம் இருந்்தால் அவ‌ர்க‌ள் முறையே சிவ‌ன் விஷ்ணு பிர‌ம்மாவைத்தான் வ‌ண‌ங்க‌வேண்டும் பிறதெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்க‌க்கூடாது என்று எந்த‌ ஜோதிட‌ நூலும் கூற‌வில்லை என்ப‌தே என‌து சிற்ற‌றிவுக்கு எட்டிய‌ விஷ‌ய‌ம். இவ‌ரை ம‌ட்டுமே வ‌ண‌ங்க‌வேண்டும் பிறிதொருவ‌ரை வ‌ண‌ங்க‌க் கூடாது என்ப‌த‌ற்கு எந்த‌வித‌மான‌ வேத‌ப்பிர‌மாண‌மும் இல்லை என்ப‌தும் தெளிவு.
  இன்னும் சொல்ல‌ப்போனால் ஒவ்வொரு யாக‌த்திலும் அனைத்து தேவ‌ர்க‌ளுக்கும் உரிய‌ அவிஸைக் கொடுக்க‌வேண்டும் என்றுதான் இருக்கிற‌து.

  ஸ்றீ ராம‌ர‌து ஜாத‌க‌த்தில் இந்த‌ மூன்று யோக‌ங்க‌ளும் இருந்த‌தாக‌ அறிகிறேன். (வால்மீகி ராமாய‌ண‌ம் பால‌காண்ட‌ம் ஜாத‌க‌த்தைப்ப‌ற்றிக்கூறுகிற‌து.) ஸ்றீகண்்ட‌ யோக‌த்தால்தானோ அவ‌ர் ராமேஸ்வ‌ர‌த்தில் ப‌ர‌ம‌சிவ‌னைப் பூஜித்த‌தாக ஐதீக‌ம் இருக்கிற‌து.

  இவையெல்லாம் இருக்க, அடிமுடி காணாத வரலாற்றுக்குப் பிரபஞ்ச‌ அறிவியல் தொடர்பைச் சிந்தித்த தாங்கள், ஜோதிட சாஸ்திரத்தில் கிரக நிலைகள் வானவியலை ஒத்ததே என்றாலும், ஒருவரது பிறப்பின்போது இந்த இடத்தில் இந்த கிரகம் இருந்தால் இதுதான் பலன் என்று கூறுவதற்கு அதுபோல எதேனும் விஞ்ஞான அடிப்படை உள்ளதா என்று சிந்தித்ததுண்டா? எனது சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி எதுவும் இல்லை.

  என்னிடமும் பஞசபூதங்கள், பரமசிவன், சிதம்பர ரகசியம் பற்றி ஓர் விஞ்ஞானம் சார்ந்த‌ கருத்து உள்ளது. அது குறித்து விவரமாக பின்னர் ஒருசமயம் எழுதுகிறேன்.

 87. Sarang on February 11, 2010 at 11:15 pm

  உமாசங்கர் அய்யா

  //
  அத்தியாய‌ம் 6 ஸ்லோக‌ம் 28 ‍ ப‌ல‌தீபிகை இந்த‌ யோக‌ங்க‌ளை விவ‌ரிக்கிற‌து. இந்த யோகங்களால் அவர்களுக்கு முறையே பரமசிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் அருள் பரிபுரணமாக இருப்பது தெரிகிறது அவர்கள் அந்தந்த மூர்த்திகளின் பக்தனாக இருப்பார்கள் என்றுதானிருக்கிறது. மேலும் இந்த‌ யோக‌ம் இத‌னால் என்றுதான் ஜோதிட‌ நூல்க‌ள் கூறுமே அல்லாது, த‌ங்க‌ள் கூறியுள்ள‌ப‌டி இந்த‌ யோக‌ம் இருந்்தால் அவ‌ர்க‌ள் முறையே சிவ‌ன் விஷ்ணு பிர‌ம்மாவைத்தான் வ‌ண‌ங்க‌வேண்டும் பிறதெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்க‌க்கூடாது என்று எந்த‌ ஜோதிட‌ நூலும் கூற‌வில்லை என்ப‌தே என‌து சிற்ற‌றிவுக்கு எட்டிய‌ விஷ‌ய‌ம். இவ‌ரை ம‌ட்டுமே வ‌ண‌ங்க‌வேண்டும் பிறிதொருவ‌ரை வ‌ண‌ங்க‌க் கூடாது என்ப‌த‌ற்கு எந்த‌வித‌மான‌ வேத‌ப்பிர‌மாண‌மும் இல்லை என்ப‌தும் தெளிவு.
  இன்னும் சொல்ல‌ப்போனால் ஒவ்வொரு யாக‌த்திலும் அனைத்து தேவ‌ர்க‌ளுக்கும் உரிய‌ அவிஸைக் கொடுக்க‌வேண்டும் என்றுதான் இருக்கிற‌து.
  //

  ஒரு உதாரணம் கூறுகிறேன் – இருவர் பேசிக்கொள்கிறார்கள் – முதலாமவர் கூறுகிறார் – அதோ போகிறாரே அவருக்கு கணக்கு நன்றாக வரும் அவர் கணிதத்தில் முதுநிலை பட்டம் வாங்கி உள்ளார் – இன்னொருவர் சொல்கிறார் ஓஹோ அப்போ அவருக்கு அறிவியல் சுத்தமா வராதா என்று.
  – நீங்கள் சொல்வது எனக்கு இப்படிதான் படுகிறது

  //
  க‌ட்டுரையாள‌ருக்கும் இருக்க‌வேண்டிய‌ உரிமை/ சலுகை (discretion) என்றே இருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் வேத‌ப்பிர‌மாணம் என்று விஷ‌ய‌த்தை அத‌ற்கே திசைதிருப்பி ந‌ம‌து அன்ப‌ர்க‌ள் சார‌ங் அவ‌ர்க‌ளும் க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளும் அதேசுழ‌லில் த‌ங்க‌ளையும் இழுத்துவிட்டார்க‌ளே!
  //

  வேதாந்த சாயலாக வரும் விஷயத்திற்கு வேத பிராமாணம் பார்ப்பது இயல்பே – நான் ஒன்னும் அடுத்த அஜித் படம் என்ன என்பதற்கு பிராமாணம் கோரவில்லை

  ஒருவர் ராமாயணத்தில் நடந்திராத விஷயத்தை சொன்னார் அது இல்லை என்று வால்மீகி / கம்ப ராமயனததை சுட்டிக்காட்டி சொன்னேன்

  ஒருவர் ராமன் வேறொரு பெண் மீது ஆசை பட்டான் அது மனித இயல்பு தானே என்றார் – அதற்க்கு சரியான விளக்கம் தர வேண்டியாதாயிற்று

  மேலும் அவதாரம் எடுப்பவர் பரமாத்மா ஆகவே முடியாது என்று எந்த ஆதரமுமே இல்லாமல் தவறாக வேத பிரமாணம் காட்டி சொன்ன பொது அதற்கு சரியான பிரமாணங்கள் காட்டினேன் – தேவையே இல்லாமல் வேத பிராமணம் எங்குமே முவைக்க படவில்லை – இதெல்லாம் சரி வேதாந்த விஷயத்தை பேச வேத பிராமணம் இதோ என்று கூறினால் அதிலென்ன தவறு இருக்கிறது – வேதம் பிரமாணத்தை விட்டால் வேதாந்த மதம் இருக்காது.

  ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன் – வேதம் சார்ந்த, வேதாந்த விஷயங்களை பேச வேந்தாம் தான் பிரமாணம். ராமயனதிருக்கு வால்மீகி ராமாயணம் தான் பிரமாணம். பெரிய புராணத்தில் வருவதற்கு பெரிய புராணம் தான் பிரமாணம், நான் பெரிய புராணம் இன் இங்கிலீஷ் என்று எழுதினால் அது பிரமாணம் ஆகாது, ஆழ்வார் பாசுரங்களுக்கு ஆசார்யர்கள் எழுதின வ்யாக்யானமே பிரமாணம் அவ்வளவே விஷயம் – இதை சொல்லவந்தால் இல்லை இல்லை பிரமாணம் என்று ஒன்றே இருக்ககூடாது என்றால் இலக்கணம் இல்ல மொழி எப்படி இஷ்டம்போல அழகில்லாமல் இருக்குமோ அது போல ஒரு வராரையே இல்லாமல் போகி விடும்.

  பெரிய புராணத்தில் இருப்பது வேதத்தில் இல்லை, ஆழ்வாரின் இந்த பாசுரத்தில் இருப்பது வேதத்தில் இல்லை என்றெல்லாம் அதற்க்கு வேத பிரமாணம் தேடவில்லை

  //
  தங்களும் ச‌ம‌ர‌ச பாவ‌த்தில் சிவ‌ன், விஷ்ணு, பிர‌ம்மா மூவ‌ரையும் சிலாகித்து எழுதினீர்க‌ள்
  //

  இந்த சமரச பாவம் துளி கூட இல்லாமல் வந்தது தான் முதலில் வந்த தான் அடி முடி கானா கட்டுரை – அதில் வீணே சிலருக்கு அகம்பாவம் என்று கூறியதை சரியல்ல என்று மறுத்து மட்டுமே நான் எழுதினேன் – நீங்கள் ஏன் ஒரு முறை கூட அந்த கட்டுரை ஆசிரியரிடம் அந்த கட்டுரை சமரச பாவமாக இல்லை என்று கேட்கவில்லை – இப்படி நாம் சார்ந்து இருப்பது தவறென கூறவில்லை – ஆனால் மற்றவரை கூரை கூறுவது சரி என்று எனக்கு படவில்லை – எனக்கு தெரிந்து ஜடாயு அவர்கள் மட்டுமே சில சார்ந்த கருத்துக்களை பொதுவில் மறுத்தார்

 88. Sarang on February 11, 2010 at 11:54 pm

  பரமாத்மாவே

  எனக்கொரு அம்மா இருக்கிறார், பெரியம்மாவும் இருக்கிறார் – நான் தாயின் மீது அதிக பக்தி கொண்டவன் – எனது தாய்க்கு தினமும் சிஸ்ருஷை செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறேன் – எனது பெரிம்மா பைய்யன் ஒருவர் இருக்கிறார் – அவர் என்னிடம் வந்து என் அம்மாவும் எனக்கு அம்மா தானே – நீ ஏன் பெரிய அம்மா என்று சொல்கிறாய் உன் அம்மாவுக்கு செய்வது போல என் அம்மாவான அம்மாவுக்கு ஏன் சிஸ்ருஷை செய்யவில்லை என்கிறார் – நான் சொன்னேன் உன் அம்மாவும் அம்மாதான், எனக்கு பெரிய அம்மா. என்னை பெற்று எனக்கு ஆருயிராய் இருந்து, என்னை பேணுவதிலேயே தன்னை அர்பணித்த எனது தாயே எனக்கு தாய், அதற்காக உனது அம்மாவை நான் தாய் இல்லை என்று கூறவில்லை – உனது தாயை பெனுவதர்காகதான் உன்னை படித்தான் இறைவன் – நான் எனது தாய்க்கு பணிவிடை செய்வதிலேயே காலத்தை செலவழிக்க வேண்டும் என நினைக்கிறேன், இரண்டு பேரையும் சேர்த்து பணிவிடை செய்ய வேண்டும் என்றால் எனது கவனம் சற்று சிதறக் கூடும் இருவருக்கும் செய்யும் பணிவிடையில் குறை ஏற்படக்கூடும் என நினைக்கிறேன். அதனால் உனக்கு எல்லா தாயையும் குறைவின்றி கவினிக்க முடியும் என்றால் நீ அப்படி இரு, எனக்கு அது சாத்தியமில்லை என்று படுவதனால் நான் இந்த வழியை தேர்ந்தெடுத்தேன்

  எனது பெரியம்மா பைய்யன் இப்படி நீ சொல்வது காட்டு மிராண்டி தனம் என்கிறார் எனக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை

 89. Sarang on February 12, 2010 at 12:28 am

  நண்பரே

  உங்களுக்கு புறம் தொஜாமை என்றால் என்ன என்று புரியவில்லை என்பது திண்ணமாகிறது – காங்கிரசார் போல ஹிந்து என்று ஒருவர் ஒரு வார்த்தை சொன்னால் அவன் மத வெறியன் என்று அர்த்தம் கொள்ளாமல் ஹிந்து என்ற வார்த்தைக்கும் மத வெறிக்கும் முடிச்சு போடாமல் இருக்க வேணும் என்றார் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் – நீங்கள் என்ன தான் முயன்று ஆபிரஹாமிய மதத்தையும் புறம் தோழமை என்ற நல்ல கொள்கையையும் முடிச்சு போடா நினைத்தாலும் அது நிரவர்ற ஒரு பினக்காகவே இருக்கும் – ஏன் என்றால் உங்களின் கருத்து சரியாக புரிந்து கொண்டு வந்ததல்ல

  //
  ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்களில் பெரும்பான்மையானவர்கள் அத்வேஷ்டா, சமரச, நல்லிணக்க, எல்லாக் கடவுள்களையும் மரியாதை செய்யும் நாகரீகப் போக்கை பின்பற்றியவர்கள்.
  //

  இந்த பல்லாயிரம் ஆண்டு முன்பே புறன் தொழாமை இருந்தது – நீங்கள் இதிஹாச புராணங்களையும், ரிஷிகளை பற்றியும், உபநிஷட்கலாயு நாராக ஒரு ஆச்சரரிடம் கற்குமாறு வேன்டுகிரேன்.
  இதற்க்கு நான் முன்னமெபல சான்றுகல் கொடுத்தாயிற்று

  //
  எனவே ஒரு சிறு பிரிவினர் சானதன தர்மத்திலும் தங்களை அறியாமலேயே ஆபிரகாமிய கோட்பாட்டை புகுத்தி பின்பற்றியபோது – பெரும்பான்மையான மக்கள் அவர்களையும் சகித்துக் கொண்டு, இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்தல், என்ற வகையிலே அவர் நாணும் வகையிலே எல்லாக் கடவுள்களையும் மனப் பூர்வமாக வணங்கி நன்னயம் செய்து விட்டனர்.
  //

  இதெல்லாம் உங்களின் திரிப்பு என்றே கொள்ள வேண்டும் – நாயன்மார்களையும், ஆழ்வார்களையும், வ்யாசருய்ம், பீஷ்மரையும் , பரசரரையும், ப்ரஹல்லாதனயும்,துருவனயும், ரிஷிகளையும் இதில் நீங்கள் சேர்த்தே சொல்கிறீர்கள் என்பதே உங்களுக்கு தெரியாமல் உள்ளது

  //
  இதனால் தான் இந்து மதம் அமைதிப் பூங்காவாகவே இருந்து விட்டது.

  அப்படி அமைதிப் பூங்காவாகவே இருக்க வேண்டும்,

  இன்னும் “மறந்தும் புறம் தொழா” ஆபிரகாமிய, அடிப்படை வாத, சமரச மறுப்பு, பிடிவாதக் கருத்தை பரப்பி அமைதியை நல்லிணக்கம் கெடுக்கப் பட வேண்டாம் என்பதற்கு தான், இத்தனையும் எழுதுகிறோம்.
  //
  எழுதுவதோடு நில்லாமல் – சற்றெ அழமாக நான் மெர்கோரிய்வற்கலின் வாழ்கையும், அவர்கள் சொன்னதயும் படியுங்கள்

  இஙு அடுத்தவரை காட்டு மிரான்டி எண்று நீங்கள் மட்டுமே கோரி வருவதால் பொருமை இன்மை எஙு உல்லது எண்று சற்றேக் ஆராயுங்கள்

  தொழுதல் என்பது இங்கு முழுமையாக சரனாகதி பன்னுவது எண்று அற்தம். பாற்த எல்லவற்றயும் சரன் புகுவது நம்பிக்கை இன்மயெ ஆகும். ஓன்றில் பூரன நம்பிக்கை வைப்பது தவரே இல்லை. புரம் தொழாதவர் யாரும் மர்ர தெவதாக்கலை மரியாதை இல்லாமல் கொள்வதில்லை, அவர்கலை குறைவாக நினைப்பதில்லை மாறக தங்களின் ஒரு நம்பிக்கயில் ச்திரமாக உல்லனர் எண்ற கருத்தின் படி வாழ்கின்றனர்

  புரம் தொழமை குரை கோரும் நீங்கள், முருகன், விஷ்னு, ப்ரம்ம, சிவன், ஹனுமன் … என்றோடு நில்லாமல் யெசு, ஜெஹொவா, அல்லா,குரு நானக், மஹவிரார், தலாய் லாம, டர்கவில் உல்ல பலர், சைன்ட் ஆன் பலர், இன்னும் கன்டுபிடிக்கபடாத பலர், செங்கிச் கான் (அவனை மொங்கொலியர் கடுவுலாக் கருதுவதாக கேள்வி)இப்படி எல்லவர்ரயும் செற்துக்கொன்டு தொழ அனைவரும் தாயாராக உல்லனரா எண்று சொல்லமுடியுமா இல்லை நம்மால் தான் அனைவரைபற்றியும் படிக்கவாவது முடியுமா – நமக்கு வேதம் கோரும் பிராயம் நூரே, இதில் நேரத்தை வேன் செய்யாமல் ஒன்றில் கவனம் கொள்ள நினைபது தவறென பட்டால் ஒன்னும் சொல்வதர்க்கில்லை.

  நெருப்பு எண்றால் சுடாது

  தலை கட்டுகிறேன்

 90. திருச்சிக் காரன் on February 12, 2010 at 2:16 am

  நாம் யாரையும் எதையும் வ‌ண‌ங்க‌ சொல்லிக் க‌ட்ட‌ய‌ப் ப‌டுத்த‌வில்லை. க‌ட்டா‌ய‌ப் ப‌டுத்துவ‌து என்ப‌து நாக‌ரீக‌த்துக்கு எதிரான‌து.

  எந்த‌ தெய்வ‌த்தையும் நாம் நிந்திக்க‌வில்லை. தெய்வ‌ங்க‌ளாக‌ க‌ருத‌ப் ப‌டும் எல்லாவ‌ற்றையும் ந‌ல்லிண‌க்க‌ அடைப்ப‌டையில் ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ வ‌ண‌‌ங்க‌ நாம் த‌யாராக‌ இருக்கிரொம். எல்லா ம‌னித‌ரையும் நேசிக்க‌வே செய்கிரொம்.

  அல்லாஹ் தான் ஒரெ க‌டவுள், க‌ர்த்த‌ர் ம‌ட்டுமே ஜீவ‌னுல்ல‌ க‌ட‌வுள் என்கிற‌ ரேஞ்சிலெ தான் இருக்கிர‌து, உங்க‌ளுடைய‌ “எங்க‌ள் கட‌வுள் தான் முழுமுத‌ல் க‌ட‌வுள்” கோட்பாடும்.

  உல‌கிலெ அடிப்ப‌டை வாத‌ ம‌த‌ங்க‌ளுக்கிடையே ச‌ம‌ர‌ச‌ம் உருவாக்க‌க் கூடிய‌, ச‌ம‌ர‌ச‌க் க‌ருத்துக்க‌ள் உள்ள‌ ஒரே ம‌த‌ம் இந்து ம‌த‌ம். அதிலும் வ‌ந்து ஆபிர‌காமிய‌ பிடிவாத‌க் க‌ருத்துக்க‌ளை புகுத்துவ‌து ச‌ரியா?

  இதை சொன்னால், நாங்க‌ள் க‌ட்ட‌ய‌ப் ப‌டுத்துவ‌து போல‌ போல்டு லெட்ட‌ரில் போட்டால் உண்மையாகி விடுமா?

  உல‌க‌ ம‌த‌ங்க‌ளுக்கிடையே ச‌ம‌ர‌ச‌த்தை உண்டாக்க‌ உல‌க‌த்தின் ஒரே, க‌டைசி ந‌ம்பிக்கை இந்து ம‌த‌ம் ம‌ட்டுமே.

  உல‌கின் எல்லா ம‌த‌க் க‌ட‌வுள்க‌ளையும் வ‌ண‌ங்க‌ த‌யாராக‌, எல்லா ம‌த‌ வ‌ழி பாட்டு த‌ள‌ங்க‌ளுக்கும் போக‌த் த‌யாராக‌ இருக்கும் ப‌டியான‌ ம‌னித‌ன் யாராவ‌து இருந்தால் அவ‌ன் இந்து தான்.

  இங்கும் வ‌ந்து பிடிவாத‌க் க‌ருத்துக்க‌ளை புகுத்த‌ வேண்டுமா?

  நாங்க‌ள் யாரையும் க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை. இந்த “ம‌ற‌ந்தும்‌ புற‌ம் தொழாமை” க‌ருத்தான‌து, இந்து ம‌தத்திலேயே ப‌ல‌ர் முழுமுத‌ற் கடவுளாக‌ வ‌ண‌ங்கும் இன்னொரு தெய்வ‌த்தின் கோவிலின் கோபுர‌ம் கூட‌ க‌ண்ணில் ப‌ட‌க் கூடாது என்று நினைக்கும் அளவுக்கு வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை ம‌ன‌தில் உருவாக்க‌வில்லை? இது உங்க‌ளுக்கு தெரியாதா? ம‌ன‌சாட்சியை தொட்டு சொல்லுங்கள். இது உங்க‌ளுக்கு தெரியாதா?

  இத‌ற்க்கும் இசுலாத்திற்க்கும் என்ன‌ விதியாச‌ம் ‍- ஆயுத‌ம் எடுக்க‌வில்லை என‌ப‌தை த‌விர‌.

  ஆயுத‌ம் எடுக்காம‌லே க‌ருத்தினாலே வெறுப்பை ப‌ர‌ப்பி‍ – இன்னொரு தெய்வ‌த்தின் கோவிலின் கோபுர‌ம் கூட‌ க‌ண்ணில் ப‌ட‌க் கூடாது – என்ற‌ அளவுக்கு நிலையை உருவாக்கிய‌து இந்த‌ “ம‌ற‌ந்தும்‌ புற‌ம் தொழாமை” க‌ருத்து தானெ?

  கிருட்டிண‌ரின் “அத்வேஷ்டா” க‌ருத்து உங்க‌ளுக்கு முக்கியமாக‌த் தெரிய‌வில்லையா?

  உங்க‌ளைக் குறை சொல்லவோ, உங்க‌ளிட‌ம் குற்ற‌ம் க‌ண்டு பிடிக்க‌வோ இவ்வ‌ள‌வும் எழுத‌வில்லை. இந்த‌ விட‌ய‌ம் அவ்வ‌ள‌வு முக்கிய‌மான‌து என்ப‌தால் தான் எழுதுகிரோம்.

  ஆபிர‌காமிய‌ ம‌த‌க் கார‌ருக்கு கூட‌ ‌ ம‌த‌ ந‌ல்லிண‌க்கம்‌, ம‌த‌ ச‌கிப்புத் த‌ன்மை, ச‌க‌ஜ‌த் த‌ன்மை ஆகிய‌வ‌ற்றின் அவ‌சிய‌த்தை புரிய‌ வைத்து விட‌லாம் போல‌ இருக்கிர‌து.

 91. Sarang on February 12, 2010 at 3:13 pm

  //எந்த‌ தெய்வ‌த்தையும் நாம் நிந்திக்க‌வில்லை. தெய்வ‌ங்க‌ளாக‌ க‌ருத‌ப் ப‌டும் எல்லாவ‌ற்றையும் ந‌ல்லிண‌க்க‌ அடைப்ப‌டையில் ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ வ‌ண‌‌ங்க‌ நாம் த‌யாராக‌ இருக்கிரொம். எல்லா ம‌னித‌ரையும் நேசிக்க‌வே செய்கிரொம்
  ///

  ஏன் மனிதனை நேசிக்க மட்டும் செய்கிறீர்கள், கடவுள் என்று சொல்பவரை கும்பிடுகிறீர்கள் – சகல ஜெஈனிலும் நான் உள்ளேன் என்றல்லவா சொன்னான் கண்ணன்

  அத்வேஷ்ட என்ற கீதையை எதற்கோ முடிச்சு போட்டால் அது பொருந்தாது – நீங்கள் கீதையை முழுவதுமாக பார்க்கவில்லையே – சரம ஸ்லோகம் தெரியாதா – யாரிடமும் வெறுப்பு வைக்காதே என்று சொன்ன அதே கண்ணன் – என்னையே பனி என்றானே – இதை இரண்டையும் சேர்த்து பார்த்தால் என்ன வரும் – நீ என்னை மட்டுமே த்யானம் செய் அதற்காக மற்றவரை வெறுக்காதே, சமமாக பாவி, நான் அவர் உள்ளும் உளேன், விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுத்தால் என் மீது உள்ள சிந்தனை பிசகும், பிசகினால் அது த்யானம் ஆகாது – நீ என்னை நம்பினால் போதுமானது அதற்காக மற்றவர் மீது அவநம்பிக்கை வேண்டாம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் [இந்த கருத்தை தான் புறம் தோழா மாந்தர் பூரணமாக பின் பற்றுகின்றனர் ]

  உங்களின் கூற்று படி கண்ணன் சரம ஸ்லோகத்தில் வெறுப்பு கருத்து சொல்கிறான் அப்படிதானே – ஒரு பூரண புரிதல் இல்லாத எவர்க்கும் இப்படிதான் தோன்றும் – அதற்காக தான் ஆச்சர்யரிடம் படி, முன்னோர் வகுத்த படி நட என்றார்கள்

  ஒரே ஒரு கீதையை மட்டும் படித்தால் பயன் அல்ல என்பதற்கு ஒரு உதாரணம் பாப்போம் – ந த்வேவாஹம் அச்ய ந அசம், ந த்வம் ந இமே ஜனாதிப, ந செய்வ பவ்ஷ்யாமஹா சர்வே வயமதா பரம் [இதற்க்கு முன்னால் நான் இல்லமால் இருந்ததில்லை, நீயும் இல்லாமல் இருந்ததில்லை, இங்கு இருக்கும் ராஜ்யர்களும் இல்லாமல் இருந்ததில்லை – நான் நீ அவர்கள் எல்லோரும் எப்போதும் உள்ளோம்] – போச்சு கண்ணன் எல்லாரும் எப்போதும் இருக்கோம் என்று சொல்லிவிட்டான் – அப்போ நானும் கண்ணனும், டெண்டுல்கரும், பெரியாரும், கருணாநிதியும், கனிமொழியும் சமம் தான் எல்லாம் ஒன்னு தான்

  இது போல் தான் நீங்கள் கூறும் பொருள் உள்ளது – கடல் நீரிலும் உப்பு உள்ளது சாம்பாரிலும் உப்பு உள்ளது அதற்காக சாம்பார்ல உப்பு போட்ட கடல் நீராகிடும் என்று சொல்ல முடியாது – இது போல் தான் உங்களின் காட்டு மிராண்டி இலக்கணம் உள்ளது

  the conept of unity has no place without diversity – இந்த எளிமையான கருத்தை புரிந்து கொள்ளாமல் (சமரசத்தின் உண்மையான கருத்தை கூட புரிந்து கொள்ளாமல்) எழுதிக்கொண்டே போனால் எப்படி – இது புலால் உன்னதவனை பார்த்து – என்னடா நீ உனக்கு சமரசமே இல்லையே – உஅலக மக்களில் பெரும்பான்மையோர் புலால் உண்கின்றனர் – நீ மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாயே என்பது போல் உள்ளது

  நானோ ஆரண்யத்தில் அமைதியாக ஏகாந்தத்தில் இறைவனை நினைத்து வாழ நினைக்கிறேன் என்னை வலுக்கட்டாயமாக கலைஞர் கட்டிய பெருந்தகயீர் ஸ்டாலின் திறந்து வைத்த சமத்துவ புறத்தில் தான் வசிக்க வேண்டும் – மூட்டைய கட்டு என்றால் எனக்கு கஷ்டமாக உள்ளது

  சமரசம் என்பது உலகனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது இல்லை மாறாக உலகம் முழுவதிலும் பரமாத்மாவே வ்யாபிதுள்ளர் என்று அறிவதே – இந்த அறிவினால் நாம் இயற்கையாகட்டும், விலங்குகள் ஆகட்டும். மனிதர்கள் ஆகட்டும் எல்லோரிடமும் மரியாதையுடனும் அன்புடனும் இருக்க வேண்டும் என்பதே – அதற்காக என் பொண்ண உனக்கு தரேன் உன் பொண்ண அவனுக்கு தா – நீ ஏன் சாமிய கும்பிடு நான் ஒன சாமிய கும்பிடுறேன் என்பதனால் ஏற்படாது – சமரசம் என்பது ஒரு மன நிலையே – அதை நடை முறையில் நடக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் கொண்டு வர முடியாது – என்னால் கோவிலில் ஒரு முறையும், சர்ச்சில் ஒரு முறையும், பள்ளி வாசலில் ஒரு முறையும் சமத்துவம் வளரனும் என்று திருமணம் செய்துகொள்ள முடியாது – காலை சாம்பார் சாதமும், மதியம் ரொட்டியும், இரவு பிரியாணியும் சாப்பிட முடியாது

  முஸ்லிமிற்கு ஒரு பெண்ணும், க்ரிச்துவன்க்கு ஒரு பெண்ணும், ஹிந்துவுக்கு ஒரு பெண்ணும் சமரசித்திர்காக கட்டிக்கொடுக்க வேண்டும் என்று ஓர் பத்து பதினைந்து மக்களை பெற்று கொள்ள முடியாது

  இதே போல் காலையில் கோவில் , மதியம் சர்ச்சுக்கும், இரவு பள்ளிவாசலுக்கும் போக முடியாது

  இப்படி எல்லாம் இருந்தால் தான் அவன் சமரசவாதி என்றால் அது என்னால் ஆகாத காரியம் – எனது வாழ்வு சில நாட்கள் கொண்டதே – அதை நான் இப்படி மனதை அலை பாயவிட்டு வீணடிக்க விரும்பவில்லை

  // இன்னொரு தெய்வ‌த்தின் கோவிலின் கோபுர‌ம் கூட‌ க‌ண்ணில் ப‌ட‌க் கூடாது – என்ற‌ அளவுக்கு நிலையை உருவாக்கிய‌து இந்த‌ “ம‌ற‌ந்தும்‌ புற‌ம் தொழாமை” க‌ருத்து தானெ?
  //

  இது தான் உங்களுக்கு விஷயம் சரியாக புரியவில்லை என்பதை தெளிவாக்குகிறது – இப்படி நினைப்பவர் யாரும் இன்னொரு கோபுரத்தை இடிக்க வில்லை – இப்படி சொன்னது ( பேரா) ஆசை கூடாது, ஸ்திரமான மனது வேண்டும் என்பதற்காகவே – இதற்க்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் – திவச காலத்தில், மூன்று அதிகாரிகளை [பாருங்கள் நான் எவ்வளவு சமரசமாக பேச நேர்கிறது என்று] அழைத்து உணவு உன்ன வைப்போம் – அவர்கள் உண்ணுவதை பார்க்காதே என்று சொல்லுவார்கள் – ஏன் என்றால் ஐயோ இவர் இவ்வளவு குறைவாக் உன்கிறாரே, அவர் இவ்வளோ பச்சடி சாபிடறாரே என்று நமது ஸ்திரமில்லாத மனதிற்கு தவறியும் தோன்ற கூடாது என்பதற்காகவே – அப்படி நம் மனம் சிந்த்தித்தால் பித்ரு காரியத்தில் குறை ஏற்படும் என்பதாலேயே

  தஞ்சை கோபுரத்தின் அழகினை பார்த்து – அடடா எவ்வளவு அழகாக உள்ளது – நம் கோவிந்தனுக்கு இப்படி ஒன்று இல்லையே என்று யோசிப்போமே அனால் அந்த எண்ணம் கோவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் பேராசை என்பதால்)

  ஆபிரஹாமிய மதமே ஒரு வன்முறையின் பால் தோன்றியதே ஆனால் வேத காலத்திலிருந்தே அமைதியாக ஒன்றிலே மனத்தை செலுத்தி வரும் நமது தர்மம் இதற்க்கு மாறாக ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதே.

  ஆபிரஹாமிய மதத்தை பரப்பியவர்கள் மற்றவரை காட்டு மிராண்டி என்றே சொல்லி காட்டு மிராண்டி தனத்தை அவிழ்த்து விட்டனர் [அவர்கள் செய்தது பலவாக இருந்த ஒன்றை ஒன்றாக மாற்ற நினைத்தது என்று தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம் – அது வெறும் அரசியல் சார்ந்த மக்களை கட்டுப்படுத்த நினைத்தான் விளைவால் வந்தது] – நீங்கள் செய்வது அவர்கள் செய்ததை அப்படியே உல்டாவாக செய்வது போல் உள்ளது

  நீங்கள் வீணே அதையும் இதையும் முடிச்சு போட்டுக் கொண்டு, நாமும் இப்படி கேட்டுவிட்வோம் என்றால் அது ஆடாரம்ற கவலை என்றே நான் சொல்வேன் – பல ஆயிரம் ஆண்டுகளாக [பக்தி அதன் உயரத்தில் இருந்த போதும்] இல்லாத சண்டை இப்போது வராது

  இந்த இரண்டுக்கும் வித்யாசம் பார்க்க உங்களுக்கு தெரியவில்லையே என்று எனக்கு வருத்தமாக உள்ளது

  //
  அல்லாஹ் தான் ஒரெ க‌டவுள், க‌ர்த்த‌ர் ம‌ட்டுமே ஜீவ‌னுல்ல‌ க‌ட‌வுள் என்கிற‌ ரேஞ்சிலெ தான் இருக்கிர‌து, உங்க‌ளுடைய‌ “எங்க‌ள் கட‌வுள் தான் முழுமுத‌ல் க‌ட‌வுள்” கோட்பாடும்.
  //

  இப்படி யாரும் சொல்லவில்லையே – உங்கள் மனதில் தொன்றினதேர்கேல்லாம் நாங்கள் பொறுப்பு இல்லை – தாங்கள் மட்டும் ஹிந்து தான் சிறந்தவன் போலே மேலே எழுதி உள்ளீர்களே அதை எங்கே சென்று சொல்ல – புறம் தொழாதவர் நாயன்மார்கலாகட்டும் ஆழ்வார்களாகட்டும் ரோட்டிலே போற வருபவனை பிடித்து இவர் தாநோசன்தவர் என்று பிரசாரம் செய்யவில்லை – இந்த புறம் தொழாமை என்பது பக்தியின் ஒரு உயர்ந்த நிலை தானே ஒழியே வேருஒன்றும் இல்லை . இப்படி சமரச வாதி தான் உலகில் உயன்தவர் மற்றவர் எல்லாம் காட்டுமிராண்டி என்று கூறுவதன் மூலம் நீங்கள் சொல்லும் விஷயத்திற்கு நீங்களே முதல் எடுத்துக்காட்டாக உள்ளீர் – இங்கு பிடிவாதமாக மற்றவரை கொஞ்சம் கூட யோசிக்காமல் காட்டு மிராண்டி என்று முத்திரை குத்துவது நீங்கள் மட்டுமே – இது தான் சமரச பாவமோ?

  //
  உல‌கின் எல்லா ம‌த‌க் க‌ட‌வுள்க‌ளையும் வ‌ண‌ங்க‌ த‌யாராக‌, எல்லா ம‌த‌ வ‌ழி பாட்டு த‌ள‌ங்க‌ளுக்கும் போக‌த் த‌யாராக‌ இருக்கும் ப‌டியான‌ ம‌னித‌ன் யாராவ‌து இருந்தால் அவ‌ன் இந்து தான்.
  //
  கொஞ்சம் எல்லா ஹிந்துக்களையும் கேட்டறிந்த பின்பு இதை கூறவும் – யார் யாரெல்லாம் தர்காவுக்கு வர ரெடி என்று – நாம் மட்டும் தான் அறியாமையால் திப்பு சுல்தான் தர்காவிற்க்கு (புதைத்த இடம்) சென்று விட்டு சாமுண்டேஸ்வரி கோவிலுக்கும், ஸ்ரீரங்கபட்டினம் கோவிலுக்கும் செல்கிறோம் [this is how karanataka tourism plans their ஓனே day bangalore to mysore trip].

  சமரசம் என்ற பேரில் நீங்கள் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட முடியாது – தமிழனுக்கு பொங்கல் வடை தான் பிடிக்கும், குஜராத்திக்கு ரொட்டிதான் பிடிக்கும் – வித்யாசங்கள் உள்ளது – எல்லா வித்யாசமும் இயற்கையானதே – மல்லிகை பூக்கும் இதே பூமியில் தான் கல்லிச்செடியும் விளைகிறது, கஞ்சா செடியும் விளைகிறது – கண்ணை மூடிக்கொண்டு யாரும் இதை கள்ளி என்று சொல்லதீர்கள், மல்லி என்று சொல்லாதீர்கள் என்றால் என்ன செய்வது

  கற்பனையாகவே ஒரு விஷயத்தை கல்பித்துவிட்டு அதை தவறு என்று தம்பட்டம் அடித்தால் பயன் இல்லை –

 92. jayasree on February 12, 2010 at 3:45 pm

  திரு உமா சங்கர்,

  //ச‌ம‌ர‌ச பாவ‌த்தில் சிவ‌ன், விஷ்ணு, பிர‌ம்மா மூவ‌ரையும் சிலாகித்து எழுதினீர்க‌ள்.//

  உள்ளதை எழுதினேன் .
  ச‌ம‌ர‌ச, சிலாகித்து – போன்ற வார்த்தைகள் இந்நாளைய secular influences.
  பிரம்ம வாதத்தில் இவை கிடையாது.

  இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது – இது போலவே பல இடங்களிலும் கருத்துக்களைப் படிக்கும்போது, வேத மதம் என்ன கூறுகிறது என்று எழுத இது இடமல்ல என்று புரிகிறது.

  ஆதார கோட்பாடுகளையே ஒத்துக் கொள்ள மாட்டேன் என்றால், நான் ஒன்றும் செய்ய முடியாது. ஒதுங்கிக் கொள்வதுதான் வழி. ஏனென்றால் நீங்கள் விரும்பும் வகையில் நான் எழுத வேண்டும் என்றால், அது வேதக் கோட்பாடு ஆகாது. அது வேறு ஏதோ.

  நீங்கள் நினைக்கும் ஒரு எண்ணம், வேதப் பிரமாணத்துக்குள் வரவில்லைஎன்றால், ஒரு ஆசார்யனை அணுகி முறைப்படி இந்தக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளவும். அதன் படி உங்கள் எண்ணங்களை அலசவும்.

  ஜோதிடம் பற்றிய கேள்விகள் :-
  ‘பல’ தீபிகை போன்ற புத்தகங்களைப் படித்தவராக இருந்தால், அந்தக் கேள்விகள் வந்திருக்காது, நானும் பதில் சொல்ல வேண்டியிருக்காது. பலதீபிகை படித்தும் அக்கேள்விகள் வந்தால், நான் பதில் சொல்லியும் பயன் கிடையாது. எனவே ஜோதிடக் கருத்து பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவில்லை.

  நண்பர் சுஜாதா தேசிகன், இந்தக் கட்டுரைகள் கொஞ்சம் high என்றார். அதனால், நானும் மெனக்கெடாமல், உங்களுக்கும் தொந்திரவு கொடுக்காமல் விட்டு விடுகிறேன்:)
  ஆன்மீகமும், பிரம்ம ஞானமும் அவரவர் விதிவழியே அடைவர். வாழ்கையும், காலமும் வழிப்படுத்தும். அப்பொழுது தாமே தேடி வரும்போது அவரவர்க்குக் கிடைக்கும். எல்லோருக்கும் கிடைக்கட்டும். கிடைக்கும்.

 93. திருச்சிக் காரன் on February 12, 2010 at 5:42 pm

  கந்தர்வன் அவர்களே,

  முதல் பதிலில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது.

  அதில் //எந்த டீச்சர்-க்கும் வணக்கம் செலுத்துவதில் எமக்கு ஆட்சேபனம் இல்லை. கண்டிப்பாக விஷ் பண்ணுவோம். ஆனால், “எல்லா டீச்சரும் பிரின்சிபால் தான்” என்பதைத் தான் நாங்கள் ஏற்கவில்லை. அதற்காக, பக்கத்து பெஞ்ச் பையன் “கணக்கு டீச்சர் தான் பிரின்சிபால்” என்று சொன்னதற்கு அவனை கேலி பண்ண மாட்டோம், சாத்து சாத்த மாட்டோம்//

  //எந்த டீச்சர்-க்கும் வணக்கம் செலுத்துவதில் எமக்கு ஆட்சேபனம் இல்லை. கண்டிப்பாக விஷ் பண்ணுவோம்.//

  இது சமரச கருத்தே.

  //ஆனால், “எல்லா டீச்சரும் பிரின்சிபால் தான்” என்பதைத் தான் நாங்கள் ஏற்கவில்லை//

  நீங்கள் யாரை ப்ரின்சிபிலாக , முதன்மையாக கருதுகிரீகளோ அது உங்கள் விருப்பம் , அது அவரவர் விருப்பம் அதில் நாங்கள் குறுக்கிடவில்லை.

  //இதைப் பற்றி பகவான் என்ன கூறுகிறான் என்றால், “சுருதி, ச்மிருதிகளில் சொல்லப்பட்ட அன்றாடம் செய்ய வேண்டிய கர்மாக்களை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ, அவனை ஒருபொழுதும் நான் என் பக்தனாக ஏற்றுக் கொள்வதில்லை” (விஷ்ணு தர்மோத்தர புராணம்). மறந்தும் புறந்தொழாதவர்கள் இந்த கர்மாக்களை விடாமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் சொல்லும் உவமையால் வரும் குற்றச்சாட்டு செல்லாது.//

  இது பகவான் சொன்னாதா இல்லையா என்று பாருங்கள்:

  அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

  சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

  நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

  ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

  க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

  ஸ ந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

  யோகி (யோக நெறியில் நிற்பவன்)

  யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

  த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

  மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

  யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

  ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்)

  அன்றாடம் செய்ய வேண்டிய கர்மாக்களை செய்து கொண்டு மனதிலே வெறுப்புக் கருத்துக்களை வைத்து இருந்தால் அதனால் பலன் ஒன்றும் இல்லை.

  //ஸ்கூல் ஆயாவும் பிரின்சிபால், நாட்டுக் கொடியும் பிரின்சிபால், டங்கு டங்கு-ன்னு சத்தம் போடும் ஸ்கூல் மணியும் பிரின்சிபால், பீ.டீ. டீசெரும் பிரின்சிபால், பக்கத்துப் பையனும் பிரின்சிபால்” என்று சொல்வதற்குச் சமம்.//

  உங்களது கிளாஸ் டீச்சரை மட்டுமே உயர்ந்தவராகக் காட்ட கணக்கு டீச்சரை (அவரும் இன்னொரு வகுப்புக்கு கிளாஸ் டீச்சர் தான் – பியூன் , ஆயா என்று மட்டம் அதட்டும் அளவுக்கு துவேஷம், வெறுப்பு காட்டப் பட்டு உள்ளது.

  முதல பதிலில் இருந்த சமரசத்தை இரண்டாம பதிலில் துவேஷம் விரட்டி விட்டது.

 94. திருச்சிக் காரன் on February 12, 2010 at 5:49 pm

  நாளென் செய்யும் ,

  வினை தானென் செய்யும் ,

  எனை நாடி வந்த கோளென் சேயும் என்றார் சான்றோர்.

  “நாமர்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்” என்றார் அப்பர்.

  “கிரக பலமேதி” என்றார் தியாகராஜர். அஞ்சி அஞ்சி சாகும் வரைக்கும் பலரும் நம்மை ஆளுவர். விழித்து எழுந்தால், விடுதலை தான்.

 95. திருச்சிக் காரன் on February 13, 2010 at 12:27 am

  பிரஹலாதன், துருவன் ஆகியோரின் பக்தி எவ்வளவு சிறப்பானது! அவர்கள் எவ்வளவு நல்லவர்கள்!!

  உங்களது பிடிவாத, சகிப்புத்தன்மை மறுப்பு கொள்கைக்கு அவர்களை உபயோகப் படுத்த முடியாது!!!

  பிரஹலாதன் யாரயுமே வெறுக்கவில்லை. இரண்யகசிபு அவரைக் கொல்லக் கட்டளை இட்ட போது கூட இரண்ய கசிபுவை வெறுக்கவில்லை. விஷ்ணுவை தன்னுடைய முக்கிய எதிரி என்று இரண்யகசிபு கருதி வந்த நிலையிலும், அவருக்கு நல்ல புத்தி சொல்ல முயன்றாரே தவிர அவரை வெறுக்கவில்லை.

  இப்படி நடந்தது என்று வைத்துக் கொள்வோம் :

  இரண்யணைக் கொல்ல – உடல் பகுதி, கீழே இடுப்பு வரையிலும் சிம்மமாகவும், மேல் உடல் மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்த சிவன் உருவத்தில் – இரண்யணைக் கொல்ல வந்திருந்தால் பிரஹலாதன் அந்த நரசிம்ம மூர்த்தியை வணங்கியிருக்க மாட்டாரா?

  மறந்தும் புறம் தொழா மாட்டேன், நீ வந்த வேலையை முடித்து வீட்டுப் போ என்றும், நான் உன்னைத் தொழா வேண்டும் என்றால் இந்த சந்திர சேகர கங்காதர உருவத்தை விட்டு விட்டு வா எனவும் கண்டிசன் போட்டு இருப்பாரா?

  நண்பர்களே, முதலில் பிரஹலாதன், துருவன், மார்க்கண்டேயன் ஆகியவர்களின் மாசு மறுவற்ற அன்பு உள்ளத்தை, வெள்ளை உள்ளத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

  அப்படி உங்களால் புரிந்து கொள்ளக கூடுமானால், உங்களின் வெறுப்புக் கருத்துகளை தாங்கிப் பிடிக்க அவர்களை துணைக்கு அழைக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்வீர்கள். .

 96. திருச்சிக் காரன் on February 13, 2010 at 12:42 am

  அத்வேஷ்டா என்பதை முதல் வார்த்தையாக அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அறிவித்து, நிர்மமோ நிரஹங்கார என்று தெளிவாக சொல்லி, அகராதி தனம் இல்லாத அஹம்பாவம் இல்லாத நல்ல மனநிலையில் என்னை வணங்குபவன், எனக்குப் பிடித்தமானவன் என்று சொல்லியிருக்கிறார்.

  அதே கிருட்டிணர், விசுவ ரூப தரிசனம் காட்டியதான போது ருத்திரர், ஆதித்யர், பிரம்மா, வசுக்கள், எல்லாமுமாக தானே இருப்பதாக விசுவ ரூப தரிசனம் காட்டினால் அப்போது அர்ஜுனனைப் போல தொழாமல், மறந்தும் புறம் தொழா மாந்தர்கள் கண்ணை மூடிக் கொள்வார்களா?

  உன்னைத் தொழா முடியாது, எல்லா உருவமுமாக வந்து சேர்ந்து தொலைந்தாயே, என்று அவரையே கடுப்படிக்கும் நிலையை உருவாக்கக் கூடிய வெறுப்பை, துவேசத்தை உருவாக்கும் கோட்பாடு தான், மறந்தும் புறம் தொழா கோட்பாடு.

 97. திருச்சிக் காரன் on February 13, 2010 at 2:50 am

  //
  உல‌கின் எல்லா ம‌த‌க் க‌ட‌வுள்க‌ளையும் வ‌ண‌ங்க‌ த‌யாராக‌, எல்லா ம‌த‌ வ‌ழி பாட்டு த‌ள‌ங்க‌ளுக்கும் போக‌த் த‌யாராக‌ இருக்கும் ப‌டியான‌ ம‌னித‌ன் யாராவ‌து இருந்தால் அவ‌ன் இந்து தான்.
  //
  கொஞ்சம் எல்லா ஹிந்துக்களையும் கேட்டறிந்த பின்பு இதை கூறவும் – யார் யாரெல்லாம் தர்காவுக்கு வர ரெடி என்று – நாம் மட்டும் தான் அறியாமையால் திப்பு சுல்தான் தர்காவிற்க்கு (புதைத்த இடம்) சென்று விட்டு சாமுண்டேஸ்வரி கோவிலுக்கும், ஸ்ரீரங்கபட்டினம் கோவிலுக்கும் செல்கிறோம் [this is how karanataka tourism plans their ஓனே day bangalore to mysore trip].

  //அவதாரங்களில் மிகச் சிறந்தவராகிய ஸ்ரீ கிரிஷ்ணர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார்.

  “எந்த மனிதரிடமாவது அசாதாரண ஆன்மீக சக்தி வெளிப்படுமானால் அங்கே நான் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்”.

  உலகம் முழுவதும் உள்ள அவதார புருஷர்களையும் இந்துக்கள் வணங்குவதற்கான கதவை இந்தக் கருத்து திறந்து விடுகிறது.

  எந்த நாட்டிலும் தோன்றிய எந்த மாகானையும் ஓர் இந்து வழி பட முடியும்.

  கிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கும் , முகமதியரின் மசசூதிக்கும் சென்று நம் வழி படுகிறோம். இது நல்லது. ஏன் வழி படக் கூடாது. நான் முன்பே சொல்லியது போல நம்முடைய மதம் உலகம் தழுவிய மதம்.

  எல்லாக் கருத்துக்களையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அது பரந்தது. //

  பக்கம் 77, 78
  தலைப்பு: இந்திய ரிஷிகள்
  நூல் : இளைய பாரதமே எழுக
  அச்சிட்டவர் : இராம கிருஷ்ண மடம்

  சொற்ப்பொழிவு நிகழ்த்தியவர்: சுவாமி விவேகானந்தர்

 98. திருச்சிக் காரன் on February 13, 2010 at 3:19 am

  // இன்னொரு தெய்வ‌த்தின் கோவிலின் கோபுர‌ம் கூட‌ க‌ண்ணில் ப‌ட‌க் கூடாது – என்ற‌ அளவுக்கு நிலையை உருவாக்கிய‌து இந்த‌ “ம‌ற‌ந்தும்‌ புற‌ம் தொழாமை” க‌ருத்து தானெ?
  //

  இது தான் உங்களுக்கு விஷயம் சரியாக புரியவில்லை என்பதை தெளிவாக்குகிறது – இப்படி நினைப்பவர் யாரும் இன்னொரு கோபுரத்தை இடிக்க வில்லை – இப்படி சொன்னது ( பேரா) ஆசை கூடாது, ஸ்திரமான மனது வேண்டும் என்பதற்காகவே –

  தஞ்சை கோபுரத்தின் அழகினை பார்த்து – அடடா எவ்வளவு அழகாக உள்ளது – நம் கோவிந்தனுக்கு இப்படி ஒன்று இல்லையே என்று யோசிப்போமே அனால் அந்த எண்ணம் கோவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் பேராசை என்பதால்) //

  ஒவ்வொரு முத்தாக உதிர்க்கிறார். எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்கள்.

  //தஞ்சை கோபுரத்தின் அழகினை பார்த்து – அடடா எவ்வளவு அழகாக உள்ளது – நம் கோவிந்தனுக்கு இப்படி ஒன்று இல்லையே என்று யோசிப்போமே//

  ஒவ்வொரு முத்தாக உதிர்க்கிறார். எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்கள்!

  ஆபிராகாமிய கடவுள், தான் பொறாமையுள்ள கடவுள் என்கிறார்.

  இங்கே மறந்தும் புறம் தொழாமை கோட்பாடு பக்தன் தான் பேராசைக் காரன் என்கிறார்.

  இங்கே மறந்தும் புறம் தொழாமை கோட்பாடு பக்தனை இன்னொரு இந்துக் கடவுளுக்கு கட்டப் பட்ட கோபுரத்தைப் பார்த்து வயிறு எரிச்சல் பட்டு பேராசை நிலையை அடைய வைப்பதால் பார்க்காமல் தவிர்ப்பதாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார். எப்படி ஒரு சின்னத் தனம். உங்களின் சின்னத்தனத்தால் கோவிந்தனுக்கே அவமானத்தை உண்டாக்குகிறீர்கள்.

  சரி போகட்டும். சிறிய கோபுரம் உடைய சிவன் கோவிலைக் கூட பார்க்காமல் போனார்களே, அப்படி சொல்லி விட்டுப் போனதை நானே கேட்டிருக்கிறேன். சிறிய கோபுரத்தைப் பார்த்தாலும் வயிர்றேரிச்சலா? .

 99. ந.உமாசங்கர் on February 13, 2010 at 9:44 am

  கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு,

  மறுமொழிக்கு நன்றி.

  தாங்கள் ச‌ம‌ர‌ச பாவ‌த்தில் எழுதினீர்கள் என்று நான் நினைத்தது தவறுதான். தாங்களே தங்களுக்கு அவ்வாறு சமரச பாவம் இல்லை என்று சொல்லும்போது அதை நான் ஏற்கத்தான் வேண்டும். ஆனால் நான் எப்போதும் சமரச பாவத்துடன்தான் எழுதுகிறேன். இதைத் தாங்கள் செக்யூல‌ர் தாக்கம் என்கிறீர்கள். அப்படி அல்ல. சமரச பாவம் ஆதிசங்கரர் தாக்கம் என்கிறேன் நான். தங்களது கட்டுரையில் ஏற்கனவே தாங்கள் கூறியதை இங்கே நினைவு கொள்கிறேன்.

  ///இதன் விளைவாக எந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சையும் பல காலம் நடந்து வந்திருக்கிறது. பல காலம் என்றேன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில் இந்தச் சர்ச்சை இல்லையா என்றால், இல்லை என்று சொல்லலாம். காரணம், இவை குறித்த கருத்துகளை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். அதற்கும் காரணம், பிரமாண நூல்கள் சொல்லும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர்.///

  ஆதிசங்கர பகவத்பாதர் சிவ, விஷ்ணு, சக்தி, கணபதி, சுப்ரமணிய, சூர்ய‌ பக்தர்களை ஒருங்கிணத்து தற்போதைய மதத்தை நிலைநிறுத்தும்போது சிலரை வாதத்தினால் வென்றும் சிலரை சமரசப்போக்கில் அரவணைத்தும் செய்தார் என்பது வரலாறு. இதனால்தான் அனைத்து மூர்த்தங்களையும் ஒருங்கே வழிபடும் மரபு நிலைபெற்றது. அவரும், சிவ, விஷ்ணு, சக்தி, கணபதி, சுப்ரமணிய, சூர்ய‌ ஸ்துதிமாலைகளை பக்தியுடன் சமரசப்போக்கில் எழுதி்னார் என்பதும் வரலாறு. அவர் காலத்திலேயே இப்படி விஷ்ணுபக்தர்கள் அவரிடம் கோபப்பட்டதும் அதற்கு பதிலாக அவர் பஜகோவிந்தம் அருளியதும் வரலாறு. பஜகோவிந்தம் 24ஆம் ஸ்லோகத்தைப் பாருங்கள்.

  த்வ‌ம‌யி சான்ய‌த்ரகோ விஷ்ணு:
  வ்ய‌ர்த்த‌ம் குப்ய‌ஸி ம‌ய்ய‌ஹிஷ்ணு;
  ஸ‌ர்வ‌ஸ்மின்ன‌பி ப‌ச்யாத்மான‌ம்
  ஸ‌ர்வ‌த்ரோத்ஸ்ருஜ பேத‌க்ஞான‌ம்

  இத‌ன் பொருள்:

  உன்னிட‌த்திலும் என்னிட‌த்திலும் ம‌ற்ற‌ இட‌த்திலும் விஷ்ணு ஒருவ‌ரே உள்ளார். அப்ப‌டியிருக்க‌ பொறுமைய‌ற்ற‌வ‌னாய், என்னிட‌த்தில் வீணாக‌க் கோப‌ம் கொள்கிறாயே, எல்லாப் பொருட்க‌ளிலும் த‌ன் ஸ்வ‌ரூப‌த்தையே பார். எவ்விட‌த்திலேயும் பேத‌த்தைத் தோற்றுவிக்கிற‌ அஞ்ஞான‌த்தை விடு.

  அவ‌ர் காலத்திலும் விஷ்ணு பக்த‌ர்க‌ள் கோபிப்ப‌தும், அவர்களை ச‌ம‌ர‌ச‌ப்போக்கில் அரவ‌ணைத்துச் செல்வ‌தும் இருந்தது என்ப‌தைத்த‌விர‌ வேறு என்ன‌ சொல்ல‌? அவ‌ர் ச‌ம‌ர‌ச‌ப்போக்கில் சொன்ன‌தை ஏற்கும்போது அவ‌ர் எழுதிய‌ பிற‌ ஸ்துதிக‌ளையும, அவர் சமரசமாக நடந்து காட்டியதையும் ஏற்க‌வேண்டும‌ல்ல‌வா?

  வேதம் பிர‌மாண‌ம் என்ப‌தை எங்கே எப்ப‌டி அவ‌ர் உப‌யோகித்தார் என்பதை‌யும் பார்க்க‌வேண்டும். (இது ஒரு உதாரணம்தான். விவேக சூடாமணியிருந்து)

  ச்ருதிப்ராமாணைக‌ம‌தே: ஸ்வ‌ர்த‌ர்ம‌நிஷ்டா த‌யைவாத்ம‌ விசுத்திர‌ஸ்ய‌
  விசுத்த‌புத்தே: ப‌ர‌மாத்ம‌வேத‌ன‌ம் தேனைவ‌ ஸ‌ம்ஸார‌ஸ்மூல‌நாச:

  இதன் பொருள்:

  “வேத‌ம்தான் பிர‌மாண‌ம் என்று ஒரே தீர்மான‌முள்ள‌வ‌னுக்கு த‌ன‌து த‌ர்ம‌த்தை மேற்கொள்வ‌திலே ஈடுபாடு ஏற்ப‌டும். அத‌னால் சித்த‌ம் ந‌ன்கு தெளிவ‌டையும். ந‌ன்கு தூய்மையான புத்தி உள்ள‌வ‌னுக்கு உத்த‌ம‌மான‌ ஆத்மாவின் ஸாக்ஷாத்கார‌ம் ஏற்ப‌டும். அத‌னால் ஸ‌ம்ஸார‌த்த‌ளை, அறியாமை முத‌லிய‌ன‌ அழியும்.”

  அதாவ‌து ஒருவ‌னை ந‌ன்னெறிப்ப‌டுத்த‌ த‌ன‌து த‌ர்ம‌த்தைக் க‌டைப்பிடிக்க‌ இந்த‌ ந‌ம்பிக்கை அவ‌சிய‌ம் என்றார். வேதம் பிரமாணம் என்பதை “அடிமுடி காணாத‌ வ‌ர‌லாற்றைப் புனைய‌ப்ப‌ட்டது” என்று சொல்வ‌த‌ற்கு உப‌யோகிப்ப‌தைத்தான் நான் ஏற்க‌வில்லை. நான் விரும்பும் வ‌கையில் நீங்கள் எழுத‌வேண்டும் என்று சொல்ல‌வில்லையே! வேதம் பிரமாணம் என்பதை நல்வழிப்படுத்தக் கையாண்டதை, வேறு பொருளில் கையாளலாமா? Quoting out of context will not help in reaching the ultimate truth.

  ஆர‌ம்ப‌முத‌லே நான் சொல்லிவ‌ந்த‌து இதுதான். வேத‌ப்பிர‌மாண‌ம் காட்டி வாத‌ம் செய்ய‌ வ‌லைத்த‌ள‌ம் இட‌ம‌ல்ல‌. அத‌ற்கு ச‌ங்க‌ர‌ம‌ட‌ம் போன்ற‌ ம‌ட‌ங்க‌ளிலோ ச‌ம்ஸ்கிருத‌க் க‌ல்லூரியிலோ, காஞ்சி விஸ்வ‌ம‌ஹா வித்யால‌யாவிலோ ந‌ட‌க்கும் வித்வ‌த் ஸ‌த‌ஸ்க‌ளே முறையான‌ இட‌ங்க‌ள்.

  ம‌ற‌ந்தும் புற‌ம்தொழா மாந்தர்க‌ள் என்ப‌த‌ற்கு ஆதிசங்கரரின் மேற்கூறிய பஜகோவிந்தத்தையும் சுட்டிக்காட்டி என‌து குருநாத‌ர் சொன்ன‌ விள‌க்க‌ம் இதோ.

  (உன‌க்குள்ளே இருக்கும் நாராய‌ண‌னைத் தொழ) ம‌ற‌ந்துவிட்டு உன் புறம் (உள்ள நாராயணனைத்) தொழாதே.
  அதாவ‌து நாராய‌ண‌னை உள்ள‌த்துக்குள்ளே இருத்தாம‌ல் வெளியில் ம‌ட்டும் தொழுவ‌தாக‌ இருந்தால், ம‌ன‌த்தூமை வ‌ராது, பொய்யொழுக்கம் வந்துவிடும். இறையுண‌ர்வில் ல‌யிக்காது என்ப‌தே அது.

  தொண்டர்த‌ம் தூய உள்ள‌த்தேதான் இறைவ‌னை நிறைக்க‌ முடியுமே அல்லாது பிர‌மாண‌ங்க‌ளில் அல்ல‌ என்ப‌தைத்தான் நான் சொன்னேன். அவ‌ன் அருள் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ன் காட்டும் இந்த‌ப் பேருண்மை புரியும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ அருள் இல்லாத‌வ‌ர்க‌ளுக்கும் அவ்வ‌ருளைத்த‌ர‌ இறைவ‌னை இறைஞ்சுவோம்.

 100. Sarang on February 13, 2010 at 3:03 pm

  //
  பிரஹலாதன் யாரயுமே வெறுக்கவில்லை. இரண்யகசிபு அவரைக் கொல்லக் கட்டளை இட்ட போது கூட இரண்ய கசிபுவை வெறுக்கவில்லை. விஷ்ணுவை தன்னுடைய முக்கிய எதிரி என்று இரண்யகசிபு கருதி வந்த நிலையிலும், அவருக்கு நல்ல புத்தி சொல்ல முயன்றாரே தவிர அவரை வெறுக்கவில்லை.
  //

  யாரும் யாரையும் வெறுக்க வில்லை – புறம் தோழமை என்றால் வெறுப்பு என்றால் அது உங்களது மன நிலை – அதை மாற்ற நான் முயலமாட்டேன்

  உங்களுக்கு புறன் தோழா மாந்தர் ஒருவரின் கதை சொல்கிறேன் – அவர் பிறந்து ஆயிரன் வருடம் ஆகிறது

  ஸ்ரீவத்சங்கர் என்றொருவர் இருந்தார் அவர் ராமானுஜரை காப்பதற்காக ராமனுஜரின் வேடமே போட்டுக்கொண்டு அரசனிடம் செல்ல வேண்டியதாயிற்று – அந்த அரசவையில் நாளுறான் என்றொருவர் இவரை போட்டுக்கொடுத்து விட்டார் – இது ராமானுஜர் அல்ல அவரது சிஷ்யர் ஸ்ரீவத்சங்கர் என்று அரசன் அவரது கண்ணையும், உடன் சென்ற ராமனுஜரின் வயதான குருவின் கண்களையும் குத்த சொல்கிறான் – பார்வை இழந்த குரு ஊர் திரும்பும்முன் வலி பொறுக்கமாட்டாமல் மரித்துவிடுகிறார்
  ஸ்ரீவத்சங்கர் வலி ஆறும் வரை ஒரு ஊரில் இருந்து விட்டு திருவரங்கம் திரும்புகிறார் – அங்கே கோவிலுக்கு சென்றால் அவரை அரசனின் ஆட்கள் இவர் ராமனுஜரின் சிஷ்யர் உள்ளே போக அனுமதி இல்லை என்கிறார்கள் – இன்னொரு காவலாளி இவர் ராமனுஜரி சிஷ்யாரக இருந்தாலும் உத்தமர் அதனால் உள்ளே அனுப்பலாம் என்கிறார் – இதை கேட்ட ஸ்ரீவத்சங்கர், எனக்கு ராமனுஜரின் சிஷ்யன், அடிமை என்ற நிலையை கெடுத்துவிட்டு அரங்கனின் சேவை முக்கியமில்லை என்று ஊரை விட்டே மதுரை அருகே சென்று விடுகிறார் – நண்பரே இந்த நிலை தான் புறம் தொழாமை

  கொஞ்ச காலம் காலம் கடக்கிறது – அரசன் புற்றுநோய் வந்து மாண்டு விடுகிறான் – அரசனின் தொல்லை இல்லாததால் ஸ்ரீவத்சங்கர் ஊரு திரும்புகிறார், ராமானுஜரும் கர்நாடகத்தில் இருந்து ஊரு திரும்புகிறார் – கண்களை இழந்த ஸ்ரீவத்சன்கரை பார்த்து ராமானுஜர் துடிதுடிக்கிறார் – கஞ்சிக்கு அவரை அழைத்து சென்று வரதராஜரிடம் கண்கள் தரவேண்டி துதி பண்ண சொல்கிறார் (இதை ராமானுஜரே ஏன் துதிக்கவில்லை என்று கேள்வி கேட்காதீர்கள் – அதற்கெல்லாம் விளக்கம் இருக்கிறது) – ஸ்ரீவத்சங்கர் காஞ்சி பெருமானிடம் எனக்கு என்ன கதி(மோட்சம்) நீ தருவிருக்கியோ அதே நாளுரானுக்கும் தா என்கிறார் – தன கண் போனதற்கு காரணமாக இருந்த நாளுரானுக்கு, ஆச்சர்யரின் மரணத்துக்கு காரணமாக இருந்த மோட்ஷம் வேண்டிய இவரின் மனோபாவம் தான் மறந்தும் புறம் தொழமை காரர்கள் கொண்டது

  வேங்கடநாதன் என்று ஒரு புறம் தொழாதவர் இருந்தார் – இவர் ஒரு மாபெரும் ஞானி [ஒரே நாள் இரவில் அரங்கனின் பாதங்களை பற்றி மட்டும் 1008 பாடல்களை பாடினவர் – பஞ்ச பட்டினியில் வாழ்ந்தார் – அவரிடம் ஒரு கவி வந்து ஏன் இப்படி இன்னல் படுகிறீர் – என்னை போல் அரசவைக்கு வாரும் சௌக்கியமாக இருக்கலாம் நிறைய சொத்து கிடைக்கும் என்றார் – அதற்க்கு இவர் தேவராஜனே எனது சொத்து போய்விடும் என்று கூறி வைராக்ய பஞ்சசத் இயற்றினார் – நண்பரே பட்டினியில் vaadiya pothum வேறேதுவும் வேண்டாம் தேவராஜனே பொது என்று சொன்ன இவரின் மனோ பாவமே புறம் தொழாதவர் கொண்டது

  Ramaanujar என்று ஒரு புறம் தொழாதவர் இருந்தார் – இவர் பதினெட்டு முறை சுமார் என்பது கிலோ மீட்டர் மேலும் கீழும் நடையாய் நடந்து ஒரு மாதம் தண்ணீர் மட்டுமே உண்டு உபவாசம் இருந்து ஒரு பெரும் பேரு அளிக்கும் மந்தர அர்த்தத்தை அவரது குருவிடம் இருந்து பெற்றார் – குருவோ இது பரம ரஹசியம் யாருக்காவது சொன்னால் உனக்கு நரகம் என்றார் – இவர் மந்தரார்ததை கேட்டார் – ஜாதி மதம் வித்யாசம் இல்லாமல் ஆசை உடயோருக்கேல்லாம் சொன்னார் – தனது சிஷ்யர்களிடமும் ஆசை உடயவருக்கேல்லாம் சொல்ல சொன்னார்
  அவரது குரு என்ன இப்படி செய்தீர் நரகம் தான் உமக்கு என்றார் – அதற்க்கு ராமானுஜர் என் ஒருவனுக்கு நரகம் என்றால் பரவலில்லை இத்தனை பேர் நற்கதி அடைவார்களே என்றார் – நண்பரே எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கு நரகம் செல்ல துணிந்த இவரின் மனோ பாவமே புறம் தொழாதோர் கொண்டது

  இந்த புறம் தொழாதவர் தான் சமூக சீர்திருத்தம் செய்து எல்லோரையும் கோவிலுக்குள் அனுமதித்தார்

  ஒரு முறை இவரது சிஷ்யனான முதலி ஆண்டான் என்பர் ராமனுஜர் தீர்த்தம் கொண்ட பின் நான் தான் தீர்த்தம் சாப்பிடுவேன் என்று (உடனே இவருக்கு என்ன இப்படி ஒரு கருத்து என்று பாயவேண்டாம்) ஊர் மக்களிடம் வாதிட்டுக்கொண்டிருண்டார் – ஊர் மக்களோ [எல்லா ஜாதியினரும்] ராமானுஜர் முதல் தீர்த்தம் சாப்பிடலாம் இரண்டாம் தீர்த்தம் எங்களுக்கே என்றனர் – இதை பார்த்த ராமானுஜர் என்ற யதிராஜர் என்ற உடையவர் என்ற எம்பெருமானார் ஊர் மக்களின் பின் சென்று நின்றார் ஊர் மக்களுக்கு அப்புறம் தீர்த்தம் கொண்டார் அவர் பின்னே முதலியாண்டான் நின்று தீர்த்தம் கொண்டார் – இப்படி எதிராஜனாக இருந்தும் உயர்வு தாழ்வு பாராமல் வெறுப்பு இல்லாமல் நடந்து கொண்ட இவரே புறன் தொழா மாந்தரின் பாவம் எப்படி இருக்கும் என்பதற்கு சான்று

  மீரா புறம் தொழாதவர் – செய்யாத தவறுக்காக உயிரை நீத்தவர் –

  எனது பிரதம ஆச்சர்யரும் புறம் தொழாதவர் – அவர் எழுபத்தி அயிந்து வயதிலும் தினமும் எல்லா ஜாதி மக்களையும் திரட்டி நல்ல போதனைகள் சொல்லிவருகிறார், ஓர் மிக சிறியவன் கருத்து சொன்னாலும் பாராட்டுவர் கேட்டுக்கொள்வார் – எல்லா கடவுளை வணங்குவோருக்கும் அன்ன தானம் உண்டு, எல்லோரிடமும் மரியாதை undu ( குறிப்பு – யாரையும் மதம் மாற்றவில்லை )

  ப்ரஹள்ளதன், துருவன் அக்ரூரர், விதுரர், பீஷ்மர், வியாசர், சுகர் இப்படி புறம் தொழாத மஆகாங்கள் எத்தனையோ –

  ப்ரஹள்ளதன், துருவன்,நாயன்மார்கள், ஆதினங்கள், ஆழ்வார்கள், ஆசாரியர்கள் புறம் தொழாதவர் தான் அனால் அவர்கள் நல்லவர்தானே என்று சுட்டிக்காட்டினால் ஏதேதோ எழுதுகிறீர்கள் – இந்த விஷயம் கூடவா புரியவில்லை

  எந்த ஒரு ஆழ கருத்துமே இல்லாமல் ஒருவர் திரும்ப திரும்ப காடு மிராண்டி காட்டு மிராண்டி என்று சொன்னால் என்னார் அர்த்தம் உலகோர் தான் சொல்ல வேண்டும்

  இப்படி இத்தனை பேரையும் நீங்கள் காட்டு மிராண்டி கூட்டத்தில் சேர்த்தாயிற்று – கோவில் கோபுரம் நான் சொன்னதை ஒரு கீழ்மையாக அர்த்தம் செய்தாயிற்று

  பெண்களை தெய்வமாகவும் பார்ப்பவர் உண்டு, கீழ்தனமாகவும் பார்ப்பவர் உண்டு

  எந்த ஒரு விடயத்தையும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் – காமாலை காரனுக்கு தான் எல்லாம் மஞ்சளாக தெரியும்

  இப்படி அன்றோர்களையும், ஆச்சர்யர்களையும் இந்த விவாதத்தின் வாயிலாக மேலும் மேலும் உங்கள் வாயிலாக பழி சொல்லுக்கு ஆளாக்க இனியும் எனக்கு மனம் இல்லை – இத்துடன் முடித்துக்கொள்கிறேன்

  உங்களுக்கு ஆசார்யர் அனுகிரகம் கிடைக்கட்டுமாக

 101. கந்தர்வன் on February 13, 2010 at 8:16 pm

  திரு சாரங் அவர்களே,

  நானும், “உண்மையைச் சொன்னால் யாராவது கேட்பார்களா? ஒரு சிலராவது படித்து மகிழ்வார்களா? பெரும்பாலும் பரந்த மனப்பான்மையும் ஆராய்ச்சி-அறிவியல் நோக்கமும் கொண்ட இன்றைய இளைஞர்கள் வாசிக்கும் இணைய தளம் ஒன்றில் கண்டிப்பாக விஷயங்களை நன்கு தர்க்க ரீதியுடன் பிரமானங்களுடன் காட்டினால் படித்து மகிழ்வார்கள்; பலர் பயன் பெறுவார்கள்” – என்று மனப்பால் குடித்திருந்தேன். நானும் முடிவு கட்டி விட்டேன் – இங்கு எவருக்கும் இவ்விஷயங்களில் ஆர்வம் இல்லை என்று. “சமரசம், சமரசம்” என்னும் அர்த்தமில்லாத குழந்தைத்தனம் தான் இங்கு உள்ளது.

  எனக்குத் தெரிந்த ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட http://bhagavatas.blogspot.com என்ற தளத்திற்கு இனி தொண்டு புரிய அவகாசம் தேவை. ஆகையால், இனி இத்தளத்தை வாசிப்பதையோ, இங்கு மறுமொழி இடுவதையோ முற்றிலும் நிறுத்தி விடுகிறேன். இதனால் நேரம் தான் வீண் ஆகிறது.

  இருப்பினும், இங்குள்ள சஹோதரர்கள் அனைவருக்கும் நல்ல ஞானம் மலர வேண்டும், ஆச்சாரிய சம்பந்தம் ஏற்பட வேண்டும், இவர்களுள் எவரையும் கைவிட வேண்டாம் என்று மட்டும் பகவானைப் பிரார்த்திக்கிறேன்.

  என் மறுமொழிகளைப் பொறுத்ததற்கும் பதிப்பிட்டதற்கும் இத்தளத்தின் உரிமையாளர்களுக்கு நன்றி. என்னுடைய மறுமொழிகளைப் படித்த அனைவருக்கும் நன்றி. விடைபெறுகிறேன்.

  கந்தர்வன்.

 102. திருச்சிக் கார‌ன் on February 13, 2010 at 9:03 pm

  I am sorry Mr. Saarang. We cant categorise பிரஹலாதன், துருவன் & மார்க்கண்டேயன் in புறம் தொழா category. Ofcourse பிரஹலாதன் & துருவன் are devotees of Vishnu, that does not mean that they can be put into that புறம் தொழா category.

  Let me repeat this again, may be you can get out of illussion.

  இப்படி நடந்தது என்று வைத்துக் கொள்வோம் :

  இரண்யணைக் கொல்ல – உடல் பகுதி, கீழே இடுப்பு வரையிலும் சிம்மமாகவும், மேல் உடல் மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்த சிவன் உருவத்தில் – இரண்யணைக் கொல்ல வந்திருந்தால் பிரஹலாதன் அந்த நரசிம்ம மூர்த்தியை வணங்கியிருக்க மாட்டாரா?

  மறந்தும் புறம் தொழா மாட்டேன், நீ வந்த வேலையை முடித்து வீட்டுப் போ என்றும், நான் உன்னைத் தொழா வேண்டும் என்றால் இந்த சந்திர சேகர கங்காதர உருவத்தை விட்டு விட்டு வா எனவும் கண்டிசன் போட்டு இருப்பாரா?

  நண்பர்களே, முதலில் பிரஹலாதன், துருவன், மார்க்கண்டேயன் ஆகியவர்களின் மாசு மறுவற்ற அன்பு உள்ளத்தை, வெள்ளை உள்ளத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

  அப்படி உங்களால் புரிந்து கொள்ளக கூடுமானால், உங்களின் வெறுப்புக் கருத்துகளை தாங்கிப் பிடிக்க அவர்களை துணைக்கு அழைக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.

 103. திருச்சிக் கார‌ன் on February 13, 2010 at 9:12 pm

  Dear Mr. Sarrang,

  //கோவில் கோபுரம் நான் சொன்னதை ஒரு கீழ்மையாக அர்த்தம் செய்தாயிற்று //

  Ok, Mr. Sarang, Let the readers read what you have written about your reaction on seeing the Vimaanaas of the Tanjore Temple and other similar temples , let them praise you…if they want to praise you!

  // இன்னொரு தெய்வ‌த்தின் கோவிலின் கோபுர‌ம் கூட‌ க‌ண்ணில் ப‌ட‌க் கூடாது – என்ற‌ அளவுக்கு நிலையை உருவாக்கிய‌து இந்த‌ “ம‌ற‌ந்தும்‌ புற‌ம் தொழாமை” க‌ருத்து தானெ?
  //

  இது தான் உங்களுக்கு விஷயம் சரியாக புரியவில்லை என்பதை தெளிவாக்குகிறது – இப்படி நினைப்பவர் யாரும் இன்னொரு கோபுரத்தை இடிக்க வில்லை – இப்படி சொன்னது ( பேரா) ஆசை கூடாது, ஸ்திரமான மனது வேண்டும் என்பதற்காகவே – இதற்க்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் – திவச காலத்தில், மூன்று அதிகாரிகளை [பாருங்கள் நான் எவ்வளவு சமரசமாக பேச நேர்கிறது என்று] அழைத்து உணவு உன்ன வைப்போம் – அவர்கள் உண்ணுவதை பார்க்காதே என்று சொல்லுவார்கள் – ஏன் என்றால் ஐயோ இவர் இவ்வளவு குறைவாக் உன்கிறாரே, அவர் இவ்வளோ பச்சடி சாபிடறாரே என்று நமது ஸ்திரமில்லாத மனதிற்கு தவறியும் தோன்ற கூடாது என்பதற்காகவே – அப்படி நம் மனம் சிந்த்தித்தால் பித்ரு காரியத்தில் குறை ஏற்படும் என்பதாலேயே

  தஞ்சை கோபுரத்தின் அழகினை பார்த்து – அடடா எவ்வளவு அழகாக உள்ளது – நம் கோவிந்தனுக்கு இப்படி ஒன்று இல்லையே என்று யோசிப்போமே அனால் அந்த எண்ணம் கோவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் பேராசை என்பதால்) !

 104. திருச்சிக் கார‌ன் on February 13, 2010 at 9:29 pm

  Dear Mr. Saraang,

  //ஸ்ரீவத்சங்கர் என்றொருவர் இருந்தார் அவர் ராமானுஜரை காப்பதற்காக ராமனுஜரின் வேடமே போட்டுக்கொண்டு அரசனிடம் செல்ல வேண்டியதாயிற்று – அந்த அரசவையில் நாளுறான் என்றொருவர் இவரை போட்டுக்கொடுத்து விட்டார் – அரசன் அவரது கண்ணையும், உடன் சென்ற ராமனுஜரின் வயதான குருவின் கண்களையும் குத்த சொல்கிறான் – பார்வை இழந்த குரு ஊர் திரும்பும்முன் வலி பொறுக்கமாட்டாமல் மரித்துவிடுகிறார்
  ராமனுஜரின் சிஷ்யன், அடிமை என்ற நிலையை கெடுத்துவிட்டு அரங்கனின் சேவை முக்கியமில்லை என்று ஊரை விட்டே மதுரை அருகே சென்று விடுகிறார் – நண்பரே இந்த நிலை தான் புறம் தொழாமை//

  My heartfelt sympathy for ஸ்ரீவத்சங்கர், ராமனுஜரின் வயதான குரு.

  We strongly condemn the inhuman and barabaric punishment given to ஸ்ரீவத்சங்கர் & ராமனுஜரின் வயதான குரு.

  We dont accept any punishment for religious matters.

  I have all respects for Sri Raamanujar, Sri vathsan,… I have no hesitation to show my absolute respects for their devotion – At the same time , If I were in a position to meet them, I should have whole heartedly joined in their Poojas conducted by them, and I Should have explained the deleterious effect of the புறம் தொழா concept on Hindu soceity to them as well without any hesitation!

 105. திருச்சிக் கார‌ன் on February 13, 2010 at 9:36 pm

  Dear Mr. Saarang,

  //இப்படி அன்றோர்களையும், ஆச்சர்யர்களையும் இந்த விவாதத்தின் வாயிலாக மேலும் மேலும் உங்கள் வாயிலாக பழி சொல்லுக்கு ஆளாக்க இனியும் எனக்கு மனம் இல்லை – இத்துடன் முடித்துக்கொள்கிறேன்//

  I dont blame the Acchaaryaas as a whole , but only pointing out the delterios effects in the புறம் தொழா concept. I have no hesitation to give my respects to them, but not ready to give my unconditional consent to all the principles of any one, without any deliberation.

  //உங்களுக்கு ஆசார்யர் அனுகிரகம் கிடைக்கட்டுமாக//

  Please dont wish me to imbibe any hate spreading concept or divisive concept.

  For me getting brain washed with hate principles and divisive principles is much severe punishment than getting a physical punishment.

 106. திருச்சிக் கார‌ன் on February 13, 2010 at 10:36 pm

  Dear Mr. Kantharvan,

  Thanks for your explanations. We are ready to worship Narayana whole heartedly with you. If you worship Narayana for one hour, we are ready to worship Narayana for 2 hours.

  If you bow before Narayana, we are ready to Prostrate. If you prostrate we are ready to do Angkaparadakshina.

  If you had explained as how you worship Naarayanaa, what methods you are using, what sort of Viradhams you are undertaking, what sort of spiritula advancement you got, whether you have really witnessed Naarayana personally…. and similar information, it would have been much useful for all the readers.

  Instead you were all out to establish the concept that forbids worshipping of other Gods, thereby creating division and heartedness among Hindus, and obstruct the path of harmony which we want to extend to other religions as well- and which in turn can bring peace in the world and save the mankind altogether.

  Do you mean to say that the Hindus who worship all Venkatesa, Ayyappan, Murugkar, Shiva… The people who worship all these .. they are all childish?

  The Adi Sanakara, Swami Vivekaanadaa… who united all the people with harmony,

  Did the Rishis Athri, Birugu, Kuthsa, Vashista, Kowthama, Kaashyapa, Aaangkeerasa… did they follow or advocate Puram Thozaa Concept?

  You might have made some valuable suggestions on devotion rather than on division!

 107. திருச்சிக் கார‌ன் on February 13, 2010 at 10:41 pm

  Please read as,

  If you had explained as how you worship Naarayanaa, what methods you are using, what sort of Viradhams you are undertaking, what sort of spiritula advancement you got, whether you have really witnessed Naarayana personally…. and similar information, it would have been much useful for all the readers.

  Instead you were all out to establish the concept that forbids worshipping of other Gods, thereby creating division and hate among Hindus, and obstruct the path of harmony which we want to extend to other religions as well- and which in turn can bring peace in the world and save the mankind altogether

 108. Sarang on February 13, 2010 at 11:57 pm

  கந்தர்வன் அவர்களே

  நீங்கள் எழுதியது இங்கு பிரசூரம் ஆனதில் இருந்தே தெரியவில்லையா – இது ஒரு நேர்மையான வலை தளம் என்று – திருச்சிகாரர் ஏற்காவிட்டால் நல்ல கொள்கைகள் செத்துவிடும் என்று அர்த்தம் இல்லை – இந்த திருச்சிகாரர் சமரச பாவத்திர்க்கே பங்கம் விழ விளைவிக்கும் நமது கடவுள்களையே அகந்தைகார்கள் என்று சொல்லி வேட்டு வைத்த கட்டுரையை பற்றி இது சமரச போக்கில் இல்லை என்று சொல்லவில்லை – இதிலிருந்தே தெரியவில்லையா இது வெறும் காங்கிரசார் கூறும் சமரசம் என்று – சமரச பாவத்தில் இருந்த ஸ்ரீவட்சங்கர், யாரோ ஒரு மறுத்ததை வெட்டி அதிலிருந்து பால் வடிவத்தை கண்டு மூர்ச்சையானார் – வாழை இலை தானாக விழுந்த பின்னரே அதில் உணவு கொள்வார் – இவரல்லவோ சமரச வாதி – சமரசம் என்றால் நாம் தொழும் இறைவன் எங்கும் உளன் என்பது மட்டுமே – அதை போட்டு இஷ்டப்படி குழிப்பிக்கொண்டால் என செய்வது – புறம் தோழா மாந்தர் அனைவருமே த்வேஷம் இல்லாதவர் அல்லர், அதே போல சமரம் பேசும் அனைவருமே த்வேஷம் இல்லாதவர் அல்லர் (அவர்களுக்கு வேறெங்கோ இருக்கும்) – ஆனால் உண்மையான தத்துவத்தை அறிந்தவர் சமரச வாதியைனும், புறம் தொழாதவாரயினும் நல்லவரே – சமரசமாக உள்ளவர் அத்வைதம் என்றால் என்ன, த்வைதம் என்றால் என்ன, ந்யாய வைசேசிகம் , சான்க்யம் , புத்தம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதை பற்றி கவலை பட மாட்டார் ஆனால் ஏதாவது ஒன்றை தான் ஸ்திரமாக பின்பற்றுவார் (மற்றதின் மேல் த்வேஷம் இல்லாமல், மற்றதை கீழ்மையுடன் நோக்காமல்]

  எப்படி தீக காரர்கள் ஒரு விஷயத்தை தப்பாகவே பார்பர்களோ அது போல இதையும் விட வேண்டியது தான் – தீக காரன் ஹரி என்றால் திருடன் என்று அர்த்தம் ஹரன் என்றாலும் அப்படியே அதனால் அவர்களை தொழுபவர்கள் அனைவருமே திருடர்கள் என்று விஷயமே புரியாமல் பேசுவான் அதற்க்கு ஆதாரமாக கண்ணன் வெண்ணை திருடியதை காட்டுவான், பாவம் அவனுக்கு கண்ணன் தன சொத்தை தானே திருடும்படி ஆக்கி இருக்கிறோம் நாம், அவன் திருடியது வெண்ணை இல்லை, வெண்மையான ஆன்மாவை என்று அவனுக்கு புரியவே புரியாது – அதே போல சகல லோகமாம் சகுனே வந்தே என்றும் ராமனாமசும் தாளி லாகீ என்றும் வாழ்ந்து வரும் புறம் தொழா மாந்தர்,தம்மை சிலர் காட்டுமிராண்டி என்று சொல்வார் – சொன்னதால் மட்டுமே அது உண்மையாகிவிடாது – இதுவும் கடந்து போகும்

  எனவே த்ருட வைராக்யத்துடன் இருங்கள் நேரம் கிடைத்தால் நல்ல கட்டுரை எழுதுங்கள்

  இந்த தளத்தில் பல நல்ல விஷயங்கள் அலசப்படுகின்றன – இந்த புறம் தொழாமை வாதம் என்பது ஒரு புறம் இருக்க, தமிழ் ஹிந்து இந்த பரந்த ஹிந்து மதத்திற்கு ஆற்றிவரும் தொண்டு சீறியது

 109. Sarang on February 14, 2010 at 12:38 am

  சமரச வாதிகள் வைக்கும் இரு விஷயங்கள்

  எல்லோரும் எல்லோரையும் தொழ வேண்டும்
  யாரும் தான் அபிமாநிக்கும் கடவுள் தான் மற்றவரை விட மேல் என்றோ தனது இறைவன் மட்டுமே பரமாத்மா என்று சொல்லகூடாது

  இந்த இரண்டாவது விஷயத்தில் தான் பீஷ்மர், ப்ரஹல்லாதன், மீரா போன்றார் தோற்ருவிடுகின்றனர் இந்த சமரசவாதிகளிடம்

  வியாசரும், சுகரும், பரசாரரும், வால்மீகியும் நாயன்மார்களும், ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும், ஆதீனங்களும் இரண்டு விஷயத்திலும் தோற்று நிற்கின்றனர்

  இல்லை இல்லை இரண்டாவது விஷயம் இல்லை – அது அவர்கள் தங்கள் கடவுளே பரமாத்மா என என்னட்டும் அவர்கள் மற்ற கடவுள்களை சிறியவர்களாக நினைப்பதை தான் நாம் சாடுகிறோம் என்றால் இரு அபேதங்கள் வருகிறது

  முதலாவதாக – எனது கடவுள் பரமாத்மா என்றால் மற்றவர் எல்லோரும் ஜீவாத்மா ஆகிவிடுகிறார்கள் – நேரடியாக சொல்லாமல் இப்படி மறைமுகமாக சொல்வதாகும் (எப்படி ஆயுதம் ஏந்தாமல் கருத்து மூலம் வெறுப்ப பரவுகிரத்து என்கிறார்களோ இதுவும் அப்படியே ஆகும்]
  இரண்டாவதாக – இப்படி சொல்லும் அனைவரும் த்வேஷம் கொள்வதில்லை -எந்த கொள்கை உடையவராக இருந்தாலும் அதில் நல்லவரே நமக்கு வேண்டும், சமரச வாதிகளிலும் த்வேஷம் உடையவர்கள் இருப்பது போலே

  //
  I have all respects for Sri Raamanujar, Sri vathsan,… I have no hesitation to show my absolute respects for their devotion – At the same time , If I were in a position to meet them, I should have whole heartedly joined in their Poojas conducted by them, and I Should have explained the deleterious effect of the புறம் தொழா concept on Hindu soceity to them as well without any hesitation!
  //
  இந்த உபதேசம் இரண்டிலும் தோற்ற நாயன்மார்களுக்கும், ஆழ்வார்களுக்கும் வியாசருக்கும், பீஷ்மருக்கு, சுகருக்கும், பரசரருக்கும் சேர்த்து தானா

  – வியாசருக்கும், பீஷ்மருக்கு, சுகருக்கும், பரசரருக்கும் – இவர்களை சேர்க்கக் கூடாது இவர்கள் வேறு என்று சொன்னால் இல்லை இவர்கள் இரண்டிலும் தோற்றனர் என்று ஆதாரம் தருகிறேன்

  தமசோமா ஜ்யோதிர்கமய

 110. armchaircritic on February 14, 2010 at 8:29 am

  I feel, after reading all the above comments, ‘ignorance is bliss’.

 111. Sarang on February 14, 2010 at 9:59 am

  //
  My heartfelt sympathy for ஸ்ரீவத்சங்கர், ராமனுஜரின் வயதான குரு.

  We strongly condemn the inhuman and barabaric punishment given to ஸ்ரீவத்சங்கர் & ராமனுஜரின் வயதான குரு.

  We dont accept any punishment for religious matters.
  //
  நம்முடைய ஆறுதல் அவர்களுக்கு பொருந்தாது – அவர்கள் பிரவிபெருகங்கடலை கடந்து சுமார் 1000 வருடங்கள் ஆகிறது

  அவர்கள் செய்தா சமுதாய சீர்திருத்தமும், வறட்டு ஜான மார்கத்தில் ஆழ்ந்திருந்த மக்கிளடம் பிகதி களிப்புட்டிய தொண்டும் நம்மால் ஆனா காரியம் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது – முடிந்தால் அவர்கள் ஒரு நாள் வாழ்வை நாம் ஒரு மணி நேரமேனும் வாழ நினைப்போம் – அறிவுரை கூற வேண்டும் என்ற என்னத்தை விடுவோம்

  மேலே சொன்ன கதையின் மைய்ய கருத்து – புறம் தொழாடவர்கள் எவ்வளவு காருண்யத்துடன் சம நோக்குடன் இருக்கிறார்கள் நீங்கள் சொல்வது போல் காட்டு மிராண்டிகள் அல்ல என்பதே

  இந்த விஷயத்தை விட்டு விட்டு – எனது அனுதாப அலையை பாய்ச்சியும், கொடும் செயல் செய்தவரை கண்டனம் செய்தும் பயன் இல்லை – அவரே இந்த செயலை கொடுமை என நினைக்கவில்லை – இப்படி நேர்ந்ததற்கு ஒரு அற்ப காரணம் சொன்னார் (நான் யாரவது ஒருவர் நெற்றி கொனாலக எட்டுக்கொண்டிருக்கிறாரே என்று நினைத்திருப்பேன் அதனால தான் எனக்கு கண் போகி விட்டது என்று – உண்மையில் அவர் அப்படி நினைக்கவில்லை என்பதே உண்மை)

  ராமானுஜ சம்மந்தமே முக்கியம், அரங்கன் சம்மந்தம் கூட தேவை இல்லை என்ற ஆச்சார்யா பக்தியும் புறம் தொழாமை தான் (ஆசார்யனை தவிர வேறதையும் முக்கியமாக் கருதாமை)

  நான் இன்னுமே இது மதம் சார்ந்த தண்டனை என்று சொல்லவில்லை – வேண்டும் என்றே தான் சொல்லவில்லை

  இதிலிருந்து என்ன திண்ணமாகிறது –

  -நாம் முக்கியமான கருத்தை விட்டு விட்டு மீண்டும் மீண்டும் காட்டு மிராண்டி என்று சொல்வதிலேயே நாட்டம் கொண்டுள்ளோம்,
  -எதையுமே சமயம் சார்ந்தே பார்க்கிறோம்,

  குறிப்பு – புறம் தொழாதவர்கள் தான் இப்படி நல்லவர்களாக காருன்யர்கலாக இருப்பார்கள் என்று சொல்லவில்லை – நல்லவர்கள் தான் (புறம் தொழடவர்கலாயினும் சரி, சமரச வாதிகளாயினும் சரி) நல்லவர்கள்

  நீங்கள் கூறும் “respectful Raamanujar) தான் வேறு ஒரு கோவில் கோபுரத்தை பார்க்காதீர்கள் என்று சொன்னார் – மேலே நான் சொன்ன காரணம் ஒரு உதாரணம் மட்டுமே – அவர் சொன்னதாவது
  – கோபுர அழகில் போய் நாட்டம் கொள்ளாதீர்கள்
  – கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர், நமக்கு புண்ணியம் தேவை இல்லை மொக்ஷமே தேவை
  – நான் உனக்கு அடிமை என்று சரணாகதி செய்தபின் [எந்த கடவுளுக்கயினும்], அந்த சரணாகதிக்கு பங்கம் விளைவிக்கும் படி மேலும் மேலும் சரணாகதி பண்ணாதீர்கள் அதற்க்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் – அது சரணாகதி பண்ணிவரிடம் இருந்து நமது ஆன்மாவை பறித்து வேறொருவரிடம் ஒப்புவதர்க்கு சமம்- அது நமது மனம் ஒன்றின் மீது நம்பிக்கை வைக்கத தன்மையே காட்டும்

  இதை இந்த மனநிலையுடன் பார்த்தல் நல்லதாகவே படும் – இல்லை நான் சொல்வது தான் சரி என்றால் இருக்கட்டும்
  முடிந்தால் – “The impact of Raanujaa’s teachings on society and life conditions by Lakshmamma” என்ற புத்தகத்தை படியுங்கள் – இந்த மறந்தும் புறம் தோழா மாந்தர் யார் என்று புரியும்

 112. கந்தர்வன் on February 14, 2010 at 2:09 pm

  திரு சாரங் அவர்களே,

  நீங்கள் எனக்கு நேரிடையாக எழுதியுள்ளதால் தான் நான் மறுபடியும் மறுமொழி இடுகிறேன்.

  இத்தளத்தில் நேற்று தான் இன்னொரு கட்டுரையில்:

  //
  சர்வ சங்காரகாலத்தில் பிரமன், திருமால் போன்றோர் உட்பட அனைவரின் உடல்களும் அவரவர் ஆட்சி செய்த உலகங்களும் அனைத்தும் எரிந்து சாம்பலாகும்.
  //

  //
  கங்காளம் என்பது முழு எலும்புக்கூடு. ஊழிக்காலத்தில் தானே முதல்வன் என்றுணர்த்த படைப்புக் கடவுளர், காத்தற்கடவுளர் ஆகியோரின் முழு எலும்புக் கூடுகளை இறைவன் தன் இரு தோள்களிலும் விரும்பித் தாங்குவன் எனத் திருமுறைகளும் புராணங்களும் கூறுகின்றன.
  //

  என்றும் எழுதப்பட்டு பிரசுரிக்கப் பட்டது. இதற்கு எனக்குத் தெரிந்து ஒரு மறுப்பும் யாரும் தரவில்லை. என்ன தான் “சம்பு பட்சம், அணு பட்சம்” என்று புரிவதற்குக் கடினமான விளக்கங்கள் கூறினாலும் (இவ்விலக்கமும் அக்கட்டுரையில் காணப்படா), இது சமரசத்துக்கு உகந்ததா என்று அனைவரும் தங்கள் நெஞ்சைத் தொட்டுக் கூற வேண்டும். இந்த கட்டுரையை மட்டும் வாசகர்கள் தனியாகப் படித்தால் என்ன நினைப்பார்கள்?

  Factual உண்மைக்கு மாறாக இன்னொருவர், “கம்பர் சிவ-விஷ்ணு ஒற்றுமை கண்டார்” என்றும் எழுதுவார். அதை மறுத்து பிரமாணம் காட்டினால் என்னைச் சமயவாதி என்பார். இதற்கும் முன் இன்னொரு கட்டுரையில், “ஆதி சங்கராச்சாரியார் வேண்டும் என்றே என்றோ, அறியாமையாலோ, பொய் கூறுவார்” என்று கூறும் மறுமொழிகளையும் இந்தத் தளத்தில் பிரசுரிப்பார்கள்.

  நிற்க. இத்தளம் இனிதே நடப்பதற்கு என்னுடைய support தேவை இல்லை. நான் மூன்று வாரங்களாக இத்தளத்தைப் படித்து வருகிறேன். ஆகையால் நான் விடைபெறுவது தான் சரி என்பது தோன்றிற்று.

  என் போன்றவர்கள் ஏற்கும்படியாக இந்த தளம் நடைபெற வேண்டும் என்றால், கீழ்க்கண்ட protocol-ஐ அனுசரிக்க வேண்டும்.

  (1) ‘ஹிந்து கலாச்சாரம்’ என்பது ஒரு தனிப்பட்ட சித்தாந்தம் அல்ல. சித்தாந்தத்தில் வேறுபாடுகள் உண்டு. கடவுட் கொள்கையில் வேறுபாடு உண்டு. Uniformity இல்லாததால் unity இல்லை என்பது அர்த்தம் அல்ல. ஆகையால் சித்தாந்த விஷயமாகிற கடவுட் கொள்கைகளைப் பற்றி இங்கு விமர்சிப்பதும் விவாதிப்பதும் இல்லை என்று.

  (2) இந்த தேவதையை இந்த தேவதை தோற்கடித்தார், இந்த தேவதை செருக்கு உற்றார், இந்த தேவதை சாபம் பெற்றார்; தண்டனை பெற்றார் போன்ற புராணக் கதைகளை விமர்சிப்பதும் விவாதிப்பதும் இல்லை என்று.

  மாறாக, இங்கு விமர்சிப்பதும் விவாதிக்க வேண்டியதும் பின்வருமாறு:

  (1) சைவ, வைணவ, முதலிய மத நூல்களில் காணப்படும் மனித நேயம் பற்றி.

  (2) சைவ-வைணவ ஒற்றுமையைப் பற்றி. சைவ-வைணவ ஒற்றுமை என்றால், சைவர்களும் வைணவர்களும் எப்படி சஹோதரர்கள் போல் ஒருவரை ஒருவர் மதித்து மரியாதை காட்டி, diversity-யுடன், சகிப்புத் தன்மையுடன் வாழ்கிறார்கள் என்பது பற்றி. சைவ-வைணவ ஒற்றுமைக்கும் “அரியும் சிவனும் ஒன்று” என்னும் கடவுட்கொள்கைக்கும் ஒரு வகையிலும் சம்பந்தம் இல்லை என்று ஒத்துக் கொண்டு அது பற்றி இங்கு ஆலோசிக்காமல் இருத்தல்.

  (3) சமய நூல்கள், புராணங்கள் இவற்றில் சமூக சீர்திருத்த கருத்துக்கள் பற்றி.

  (4) தற்கால ஹிந்து (சைவ, வைணவ) மடங்களிலும் இயக்கங்களிலும் நடக்கும் சமூகச் நற்சேவை பற்றி.

  (5) பெண்களுக்கு இந்து மதத்தில் கொடுக்கப் பட்ட உயர்ந்த இடம் பற்றி – உதாரணமாக மைத்ரேயி, கார்கி முதலிய பெண்கள் வேதாந்த விஷயங்கள் அறிந்தவர்கள், ஆண்டாள், மீராபாய், காரைக்கால் அம்மையார், முதலியோர் பற்றி.

  (6) ஆழ்வார், நாயன்மார், முதலிய பாடல்களில் வரும் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள்.

  (7) புராணக் கதைகளில் பகவான் (எந்த புராணத்தில் யார் பகவானாகக் கொண்டாடப்பட்டாலும்) பக்தர்களுக்கு அருளிய நற்கதி பற்றி. பகவானுடைய கிருபையைப் பற்றி, காருன்யத்தைப் பற்றி.

  (8) வேதங்களின், ஆகமங்களின் பழமை பற்றி, சங்கத் தமிழ் இலக்கியங்களில் வேத-இதிகாச-புராண விஷயங்கள் சொல்லப்பட்டது பற்றி, வேத-இதிகாச-புராண நூல்களில் வரும் முற்போக்கு சிந்தனை நிரம்பிய கருத்துக்கள் பற்றி.

  (9) அந்நிய சமயத்தவர்கள் நம் நூல்கள் மீதும் தேவதைகள் மீதும் false propaganda பண்ணினால் அதை (மேற்கூறப்பட்ட புள்ளிகளின் படி) தக்க பிரமாணம் காட்டி தகர்ப்பது.

  (10) தயவு செய்து மனு முதலிய ஸ்மிருதி நூல்களைப் பற்றிய விசாரமோ, விமர்சனமோ வேண்டாம். இது தேவையே இல்லை.

  (11) இந்து மதப் பெரியோர்கள் வாழ்க்கையில் வரும் நல்ல விஷயங்கள்.

  (12) ஒரு கட்டுரையில் factual accuracy அடிபடுகிறது என்று தெளிவாக மறுக்கமுடியாதபடி நிரூபிக்கப் பட்டால், அதை விமர்சிக்காமல் இருத்தல். அல்லது ஒரு disclaimer-ஆவது இட வேண்டும்.

  இப்படி அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்புடைய விஷயங்கள் பல பல இருக்கிறதே? இதை விட்டு விட்டு ஒரு தரப்பினருக்கு மட்டும் உகந்ததான கடவுட் கொள்கையை இங்கு எதற்கு விமர்சிக்க வேண்டும்?

  (edited and published)

 113. திருச்சிக் காரன் on February 14, 2010 at 5:31 pm

  //சமரச வாதிகள் வைக்கும் இரு விஷயங்கள்

  எல்லோரும் எல்லோரையும் தொழ வேண்டும்
  யாரும் தான் அபிமாநிக்கும் கடவுள் தான் மற்றவரை விட மேல் என்றோ தனது இறைவன் மட்டுமே பரமாத்மா என்று சொல்லகூடாது//

  //எல்லோரும் எல்லோரையும் தொழ வேண்டும்//

  நாம் எல்லோரும் எல்லாவற்றையும் தொழா வேண்டும் என்று கட்டாயப் படுத்தவோ, கட்டளை இடவோ இல்லை. பிறர் தெய்வங்களாக வணங்க்குபவரை வெறுக்க வேண்டாம், அவர்களின் வழி பட்டு முறைகளைக் கண்டிக்க வேண்டாம், என்பதுதான் நமது வேண்டுகோள்.

  நீங்கள் உங்கள் உள்ளத்தில் பிற தெய்வங்களின் மேல் வைத்து இருக்கும் வெறுப்பை எடுத்து விடுங்கள். அது போதும், அது தானாகவே உங்களை அன்புப் பாதைக்கு, சமரசப் பாதைக்கு கொண்டு வந்து விடும்.

  //யாரும் தான் அபிமாநிக்கும் கடவுள் தான் மற்றவரை விட மேல் என்றோ தனது இறைவன் மட்டுமே பரமாத்மா என்று சொல்லகூடாது//

  //யாரும் தான் அபிமாநிக்கும் கடவுள் தான் மற்றவரை விட மேல் என்றோ தனது இறைவன் மட்டுமே பரமாத்மா//

  இந்த முழு முதற்கடவுள் யார் என்பதை எல்லாம் , இப்போதே தீர்மானிக்க வேண்டிய, பார்க்காமலேயே தீர்மானிக்க வேண்டிய அவசியம் என்ன? இராம கிருட்டினர், “அம்மா, காளி உன் சொரூபத்தை இவனுக்கு அடிக்கடி காட்டதே, இவன் இந்த உலகத்தில் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது” என்று சொன்னதாகக் கூறப் படுகிறதே. அது போல அவரவர் கடவுளை நேருக்கு நேர் பார்த்து விட்டு, யார் முழு முதற்கடவுள் என முடிவு செய்து கொள்ளட்டுமே. (நான் இந்த உதாரணம் தருவது கால் மட்டுமே முழுமுதல் கடவுள் என்று சொல்வதற்காக இல்லை)

  இப்போதே அஜித் , விஜய் ரசிகர்கள் போல அடித்துக் கொள்ள வேண்டுமா?

  //இந்த இரண்டாவது விஷயத்தில் தான் பீஷ்மர், ப்ரஹல்லாதன், மீரா போன்றார் தோற்ருவிடுகின்றனர் இந்த சமரசவாதிகளிடம்//

  பிரஹலாதன் தோற்கவில்லை. நாங்களே பிரஹலாதனுடன் தான் இருக்கிறோம்.

  பிரஹலாதன் வணங்கிய கடவுள் நரசிம்மராக, அது வரை விண்ணிலும் மண்ணிலும் இல்லாத புதிய உருவமாக வந்த போதும், அது தான் தான் வணங்கிய கடவுள், தான் வணங்கிய கடவுள் எல்லா உருவமாகவும் வரவும் தோற்றமளிக்கவும் கூடும் என்பதை பிரஹலாதன் அறிந்து தான் இருந்தார்.

  அகந்தையும், அக்கிரமும், கொடுமையும், இறுமாப்பும் நிறைந்த இரண்ய கசிப்பை தான் கடவுளாக வணங்க முடியாது என்று சொன்னாரே தவிர,

  நல்ல தன்மை, நேர்மை, நியாயம், அன்பு, தீயவற்றை அழித்து நல்லதை காக்கும் தன்மை ஆகியவற்றை கொள்கையாக செயல் பாடாக கொண்ட, ஆனால் வெவ்வேறு போலக் காட்சி தரும் கடவுள்களுக்கு இடையிலே மோதல் போக்கை உருவாக்கவோ, மோதல் போக்கை சிந்தித்து பார்க்கவோ இல்லை!

  // I have all respects for Sri Raamanujar, Sri vathsan,… I have no hesitation to show my absolute respects for their devotion – At the same time , If I were in a position to meet them, I should have whole heartedly joined in their Poojas conducted by them, and I Should have explained the deleterious effect of the புறம் தொழா concept on Hindu soceity to them as well without any hesitation!//
  இந்த உபதேசம் இரண்டிலும் தோற்ற நாயன்மார்களுக்கும், ஆழ்வார்களுக்கும் வியாசருக்கும், பீஷ்மருக்கு, சுகருக்கும், பரசரருக்கும் சேர்த்து தானா //

  நன்மையை போதிக்கும், நல்ல செயல்களை செய்யும் கடவுள்களை யாருமே எதிர்க்க வேண்டியதோ, வெறுக்க வேண்டியதோ, இழிவு படுத்த வேண்டியதோ இல்லை. அவர்களைக் கும்பிடாதே எனத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன?

  விநாயகரைக் கும்பிட்டால் என்ன? ஐயப்பனைக் கும்பிட்டால் ? சிவனைக் கும்பிட்டால் என்ன? நாராயணனைக் கும்பிட்டால் என்ன? அவர்கள் நல்ல கருத்துக்களைக் கூறி நன்மையை செய்யும் போது அவர்களைக் கும்பிடுவதில் என்ன தவறு?

  ஒரு கடவுளை மட்டுமே கும்பிட்டு, மற்ற கடவுள் சிலைகளைப் பார்த்தால் கண்ணை மூடிக் கொண்டு, ஐயோ இன்னொரு கடவுளுக்கு இவ்வளவு பெரிய கோபுரமா, என வயிற்றெரிச்சல் பட வேண்டிய அவசியம் என்ன?

  பராசரர், சுகர், வீடுமர் யாரும் இன்னொரு தெய்வத்தின் மீது மனதிலே அல்சர் படவும் இல்லை, அவர்களை வெறுக்கவும் இல்லை, தேவைப் படும் போது வணங்க்கியிருக்கவும் தவற மாட்டார்கள்.

  வியாசர் விநாயகரைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டாரா? வியாசர் விநாயகரை முறைப்படி பூசை செய்து அவரயே மகாபாரதத்தை எழுதித் தருமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டதாக கூறப் படுகிறதே. வியாசருக்கு விநாயகர் மேல் வெறுப்பு இல்லை. அன்புதான் இருந்தது. அதே போல வியாசர் சிவனையோ, நாராயனையோ வெறுத்தோ, கண்ணை மூடிக் கொண்டிருக்கவோ மாட்டார்.

  எனவே வியாசரை புறந்தொழா கோட்பாட்டுக்காரராக திரித்துக் கூறுவதை ஒப்ப இயலாது.

  ஆபிரகாமியர் இந்தக் கடவுள் மட்டுமே உணமையான் கடவுள், பிறரைக் கும்பிடாதே என இன்று வாழ்பவரை வெறுப்புக் குழிக்குள் தள்ளுகின்றனர். நீங்களோ முன்பு வாழ்ந்தவர்களை கூட விடாமல் அவர்களையும் புறந் தொழாக்காரராக திரித்துக் காட்ட முயற்சி செய்கிறீர்களே சாமி!

  (edited and published)

 114. Sarang on February 15, 2010 at 12:08 am

  //நீங்கள் உங்கள் உள்ளத்தில் பிற தெய்வங்களின் மேல் வைத்து இருக்கும் வெறுப்பை எடுத்து விடுங்கள். அது போதும், அது தானாகவே உங்களை அன்புப் பாதைக்கு, சமரசப் பாதைக்கு கொண்டு வந்து விடும்.

  இது தான் வெறுப்பு கருத்து என்பது – அடுத்தவர் மீது இல்லாத பழி சுமத்துவது வெறுப்பு தானே –

  எங்காவது ஒரு தடவை உங்களால் மற்ற தெய்வத்தை குறைத்து கூறினேன் என்று காட்டுங்கள் பாப்போம் – இது தான் சங்கரர் சொன்ன மாயையோ – கண்ணை மூடிக்கொண்டு எழுதுவது தான் சமரசமோ – நண்பரே நீங்கள் நான் எழுதிய பதில்களை மறுபடியும் படித்து பார்த்தல் புரியும் – நானும் இதே கருத்தை தான் சொல்லி வருகிறேன் – யாரும் மற்ற தெய்வங்களை குறை கூற வேண்டாம் என்பதே எனது கருத்தும் – நீங்கள் சமரச வாதி என்று யாரை கூறுகிறீர்களோ அவர்கள் தான் இவனுக்கு அகந்தை, இவரின் உலகம் அழிந்துவிடும், நீங்கள் வெருப்புள்ளவர்கள் என்று யாரை கூறுகிறீர்களோ அவர்கள் தான் யாரை முழுமையுடன் தொழுதாலும் முக்தி என்று ஆதாரபூர்வமாக காட்டி உள்ளார்கள்

  இங்கு யாரும் வந்து புறம் தொழாமை தான் சிறந்தது என்று பிரகடன படுத்தவில்லை – அதை வேண்டும் என்றே வம்புக்கு இழுத்து வருவதை தான் பொறுமையுடன் மறுக்கிறோம் – இங்கே பார்தாலேபுரியும் யார் திணிக்கிறார்கள் யார் சமரசமாக உள்ளார்கள் என்று

  மேலே கந்தர்வன் காட்டிஉள்ள கட்டுரைக்கு தாங்களும் பதில் சொல்லயுலீர்கள் – எங்கே உங்களின் மறுப்பை அங்கே காணோம் – பிரம்மாவுக்கு அகந்தை என்று கூறிய கட்டுரையில் உங்கள் மறுப்பை காணோம் – அவதாரன் எடுத்தால் சிரியர் என்று சொன்ன இடத்தில உங்கள் மறுப்பை காணோம் – இதெற்கெல்லாம் மேலாக ராமன் பர சத்ரி ஆசை கொண்டவன் என்று தப்பர்த்தம் காட்டிய இடத்தில் உங்கள் மறுப்பை காணோம் – மருப்பிலேயே விருப்பு வெறுப்பு காட்டும் நாம் சமரச வாதம் பேசுவதில் அர்த்தம் இல்லை

  சிறு பிள்ளைக்கும் புரியும் “analytical reasoning” பாப்போம்

  premise 1 – All who follow புறம் தொழாமை have hatred in their heart
  premise 2 – புறம் தொழாமை will destroy hinduism

  1- ராமானுஜ, மாதவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சைதன்யர் அனைவரும் புறம் தொழாமை கடைபிடித்தனர்
  2 – ராமானுஜர் சமய சீர்திருததிர்காக அரும்பாடு பட்டார் – ஒதுக்கப்பட்டோரை சிஷ்யராக கொண்டார், அவர்களை கோவிலுள் வர அனுமதித்தார், தனுக்கு நரகம் சித்திக்கும் என்ற போதிலும் மற்றவர்க்கு நன்மை உண்டாக்கினார் – அவருக்கு எம்பெருமானார் என்று பெயர் – எங்களுடயா மகா ஆத்மாவே என்று அர்த்தம் [பெரும் – மஹா, மால் – ஆத்மா]
  3- நமது சமயம் தழைக்க மக்களை பக்தி மார்கத்தில் திருப்பினார்
  4 – பிராமணர் அல்லாத ஒருவற்கு தனது மாணவி சரியாக உபசாரம் செய்ய வில்லை என்பதற்காகவே துறவு பூண்டார்

  5 – இவரது சிஷ்யர் சமய வெறுப்பு உள்ள [தன சமயமல்லாத வேறொருவனுக்கு] ஒருவரால் கண் பிடுங்கப்பட்ட பிறகும் அவருக்கு மோக்ஷம் தருமாறு வேண்டினார் – சகல லோகமாம் சஹுனே வந்தே என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்தார்

  இதிலிருந்து [இன்னும் பல உள்ளன] இவர்கள் மனதில் வெறுப்பு என்படர்க்கே இடமில்லை என்பது திண்ணம் – புறம் தொழாடவர்கள் வெறுப்பு கர்டுத்து தான் உள்ளவர்கள் என்பது உடைகிறது

  பல பல ஆயிரம் ஆண்டுகள் முன்னிருந்தே புறம் தொழாமையும் “main stream” ஆகா இருந்து வந்துல்லாது – இன்றும் ஹிந்து மதம் உள்ளது – பார்க்கப்போனால் இந்த புறம் தொழாடவர்கள் இந்த மதத்திற்கு ஆற்றிய தொண்டு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது

  இப்படி சின்ன குழந்தைக்கு கூட புரிந்து விடும் விஷயம் ஏனோ இங்கு சிலருக்கு சிக்கலாய் இருக்கிறது

  //
  நல்ல தன்மை, நேர்மை, நியாயம், அன்பு, தீயவற்றை அழித்து நல்லதை காக்கும் தன்மை ஆகியவற்றை கொள்கையாக செயல் பாடாக கொண்ட, ஆனால் வெவ்வேறு போலக் காட்சி தரும் கடவுள்களுக்கு இடையிலே மோதல் போக்கை உருவாக்கவோ, மோதல் போக்கை சிந்தித்து பார்க்கவோ இல்லை!
  //

  பாகவத புராணம் படிக்கவில்லையா நீங்கள் – இதில் தான் ஒரு கடவுள் மோகினியின் அழகில் மயங்கி தனது தேவி பக்களில் இருப்பதையும் மறந்து பின் தொடர்ந்தார் என்று உள்ளது – இதற்காக வியாசருக்கு உபதேசம் செய்ய நாம் புறப்பட வேண்டாம் – இதே வியாசர் வேத சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தெய்வம் கேசவாத் பரம் என்று சொல்லிவிட்டார் (குறிப்பு இங்கு யார் பெரியவர் என்பதற்காக சொல்லவில்லை) – அப்போ வியாசர் உங்களிடம் தோற்றாரோ?

  இதை விடுங்கள் – நாயன்மார்களும் ,ஆழ்வார்களும் சகட்டு மேனிக்கு மற்ற தெய்வத்தை குறைவாக சொன்னார்களே – அதற்கு உங்கள் பதில் என்ன – உங்கள் உபதேசம் என்ன

  சரி அதுவெனும் போகட்டும் -ஸ்ரீ வைஷ்ணவர்களே அரங்கனை தொழும் நான் அரங்கனை மட்டுமே தொழுவேன் என்று உள்ளவர்கள் இருகிறார்கள் – தொண்டரடி போடி ஆழ்வாரோ – அரங்கனை தொழும் வாயால் குரங்கனை (குரங்குகள் கொண்ட மலையில் வாழும் திருவேங்கடத்தானை) தோழா மாட்டேன் என்றார் – இவருக்கு உங்கள் உபதேசம் என்ன

  என் இனிய அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே என்று ஒரு ஆழ்வார் தலை கட்டுகிறார் – இதற்கும் உங்கள் உபதேசம் உண்டா

  ஒரு ஆழ்வாரோ – கண்ணனை விட காரி மாறப் பிரான் ஆனா இன்னொரு ஆழ்வாரே (தனது குருவே) மேல் என்றார் – கண்ணன் கீதா உபதேசம் சொலிகிறேன் என்ற பேரில் குழப்பி விட்டான் – எனது குரவை பாருங்கள் – மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் – எனக்கு புரியும் படி என்னமா சொன்னார் பாருங்கள் என்றார் – இவருக்கு என்ன உபதேசம் – இதே பாவத்தை கொண்ட ஸ்ரீ வட்சன்கரை பற்றி முன்னமே சொல்லிவிட்டேன்

  நண்பரே – இதெல்லாம் வெறுப்பு இல்லை, த்வேஷம் இல்லை – இது என்ன என்று எனக்கு இதற்க்கு மேல் விளக்க தெரியவில்லை – எவ்வலோவு விளக்கினாலும் உங்களுக்கு புரியுமா புரியாத என்று எனக்கு தெரியவில்லை

  //
  ஒரு கடவுளை மட்டுமே கும்பிட்டு, மற்ற கடவுள் சிலைகளைப் பார்த்தால் கண்ணை மூடிக் கொண்டு, ஐயோ இன்னொரு கடவுளுக்கு இவ்வளவு பெரிய கோபுரமா, என வயிற்றெரிச்சல் பட வேண்டிய அவசியம் என்ன?
  //

  நான் வயிற்று எரிச்சல் என்று சொல்லவில்லை – அது உங்களின் கல்பிடம் – உங்களுக்கு மனதில் இப்படி தான் எண்ணம் உருவாகும் எனில் அப்படியே இருக்கட்டும் – எந்த ஒரு புறம் தொழாடவனும் எரிச்சல் பட மாட்டான் – இதன் அர்த்தத்தை முழுமையாக கூறி உள்ளேன் படியுங்கள், சிந்தியுங்கள்

  கண்ணை மூடிக்கொள்வது அவர் அவர் விருப்பம் – ஏன்இரவில் தூங்குகிறாய், பகலில் முழித்து இருக்கிறாய் என்பது போல் உள்ளது – உங்களுக்கு அடிமை தனம் என்றால் என்ன வென்றே புரியப்போவதில்லை – ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆன்மாவிற்கு ஞானத்தை விட அடிமை தனமே முக்கியமான குணம் என்று கொள்ளப்பட்டுள்ளது – இப்படி அடிமை செய்து விட்ட ஆன்மாவை யாரும் மீட்டு எடுத்து வேறு ஒரு சரணாகதி பண்ண மாட்டாகள்

  தேவை பட்டால் தொழுவதற்கும் சரணாகதி என்று சொல்லப்படும் புறம் தோழமைக்கும் எக்க சக்க வித்யாசம் உண்டு – தேவையே இல்லை உன்னை தவிர வேறேதும் உன்னிடம் வேண்டமாட்டேன் என்பது சரணாகதி – இப்படி இருக்கையில் இவர்களுக்கு மற்றவரிடம் தொழுது வேண்டி பெறுவதென்பது ஏதும் இல்லை

  இந்த சமரச வாதம் பேசுபவர்கள் நான் என்பதை விடவில்லை (மன அபிமானு நா ஜாநேரே) அதனால் தான் நான் இவரை வனுங்குகிறேன் இவரையும் வணகுகிறேன் இதில் என்ன தப்பு என்றெல்லாம் பேச்சு வருகிறது – இத்தை முழுவதும் விட்ட புறம் தொழாதவர்கள் (நீர் நுமதென்றிவை வேர் முதல் சாய்த்து) என்னுமாப்போலே வாழ்கிறார்கள் – அதனால் தான் ஒன்றில் நம்பிக்கை வைக்கிறார்கள், ஒன்றே போதும் என்று இருக்கிறார்கள் – உங்களுக்கு பல தேவைகள் இருந்தால் எல்லோரையும் வணங்குங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை –

  வேதமே எல்லோரையும் பற்றி பறக்க பேசுகிறது – இவரை தொழுதால் இந்த பலன் கிடைக்கும் என்று – அதே வேதம் முமுக்ஷுக்கள் செய்ய வேண்டிய காரியமான – பரமாத்மாவிலேயே ஆழ்ந்து இருப்பார் என்ற வித்தையும் சொல்கிறது

  முமுக்ஷக்கள் அனைவரும் பரமாத்மா த்யானத்தில் இருப்பார், மற்ற பலன்களில் நாட்டம் இல்லாமல் இருப்பார் – இது தான் புறம் தொழாமை (அதாவது ஒரு பலனுக்காக ஒன்று செய்வது)

  இந்த மைய கருத்தை புரிந்து கொள்ளுங்கள் – இல்லை கோபுரம், பூசு மஞ்சள், வெறுப்பு, ஆப்ரிஹாமியம், என்ன குறைச்சல் என்றெல்லாம் பேசியே தீருவேன் என்றால் அதையும் செய்யலாம்

  //
  இந்த முழு முதற்கடவுள் யார் என்பதை எல்லாம் , இப்போதே தீர்மானிக்க வேண்டிய, பார்க்காமலேயே தீர்மானிக்க வேண்டிய அவசியம் என்ன? இராம கிருட்டினர், “அம்மா, காளி உன் சொரூபத்தை இவனுக்கு அடிக்கடி காட்டதே, இவன் இந்த உலகத்தில் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது” என்று சொன்னதாகக் கூறப் படுகிறதே. அது போல அவரவர் கடவுளை நேருக்கு நேர் பார்த்து விட்டு, யார் முழு முதற்கடவுள் என முடிவு செய்து கொள்ளட்டுமே. (நான் இந்த உதாரணம் தருவது கால் மட்டுமே முழுமுதல் கடவுள் என்று சொல்வதற்காக இல்லை)
  //

  இப்படி தான் நீங்கள் புரிந்து கொண்டாதா – அப்படியானால் இந்த தேடுதலினால் தான் நீங்கள் எல்லோரையும் தோழா வேண்டும் என்று கூறுவதா

  இப்படி ஒரு தீர்மானன்மும் இல்லாமல் புரவி புர்வதரம் கிருதம் என்னுமாப்போலே – ஒரு தெய்வத்தை பரமாத்மாவாக பார்த்து அதிலேயே ஸ்திரமாக இருந்து, மனதை ஆழ்த்தி தலை கட்டுபவரே ஸ்திதப் ப்ரஞன் – தேடுதல் வேலை மிச்சம் பாருங்கள்

  ஹிந்து மதம் பெரிய மதம் என்கிறோம் – இதில் தான் எத்தனை எத்தனை கெட்டவர்கள் இருக்கிறார்கள் – ச இந்த கேட்டவன் இருக்கறதனால ஹிந்து மதமே ஒரு அர்த்தமில்லாத மதம் என்பது போல் தான் உள்ளது உங்களது காட்டுமிராண்டி தத்துவம் – இங்கு கெட்டவர்கள் என்று சொன்னதை புறம் தோழமை கேட்டது என்று அர்த்தம் செய்ய வேண்டாம் – புறம் தொழாதவர்களில் த்வேஷம் உள்ளவர்கள் இருக்கிறார்கள், மற்ற தெய்வத்தை குறைவாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள் இதற்காக எல்லோரையும் வெறுப்பு கொண்டவர்கள் காட்டு மிராண்டி என்று கூற இயலாது – இந்த அர்த்தத்தில் தான் ப்ரஹல்லாதனையும், பிஎச்ஷ்மரையும், வியாசரையும், பராசரரையும் சேர்த்தேன் – நாளைக்கே விநாயகர் ஒரு புறம் தொழாடவ வீட்டிற்கு வருகிறார் என வைத்துக்கொள்வோம், இவர் ஒன்னும் கதவடைக்க மாட்டார் மாறாக அவருக்கு தந்த உபசாரங்களை செய்து, அர்க்ய, பாத்யா, ஆச்சமநியங்கள் தந்து – பிரசாதம் செய்தருளி, வந்தனங்களை தெரிவித்து நின்றிருப்பார் – இதற்கும் மேல் எல்ல்லோரும் கட்டு மிராண்டி தான் என்று கூறினால் உங்களுக்கு பாகவத அபசாரம் நேரிட கூடும் – அதற்காக ஸ்ரீ வட்சங்கர் பிறந்த ஊரையே பூர்விகமாக கொண்ட அடியேன் உங்களுக்கு நேரக்கூடிய அபசாரத்தையும் பகவானை மனதில் நிறுத்தி வேண்டி ஏற்றுக் கொள்கிறேன்

  உங்களுக்கு புரிய வைக்கும் திறன் எனக்கு இல்லை

 115. திருச்சிக் காரன் on February 15, 2010 at 9:35 am

  //நாளைக்கே விநாயகர் ஒரு புறம் தொழாடவ வீட்டிற்கு வருகிறார் என வைத்துக்கொள்வோம், இவர் ஒன்னும் கதவடைக்க மாட்டார் மாறாக அவருக்கு தந்த உபசாரங்களை செய்து, அர்க்ய, பாத்யா, ஆச்சமநியங்கள் தந்து – பிரசாதம் செய்தருளி, வந்தனங்களை தெரிவித்து நின்றிருப்பார் //

  நல்லது. முன்னேற்றம் தெரிகிறது. அப்படியே முருகன் தேரோ, சிவன் தேரோ வீதி வழியாக சென்றால் அதற்கும் மரியாதை செலுத்தி வணக்கம் செலுத்தி விடும் பண்பும் வந்து விடும் என நினைக்கிறேன். அதுதான் சமரசம் எனபது.

  //மேலே கந்தர்வன் காட்டிஉள்ள கட்டுரைக்கு தாங்களும் பதில் சொல்லயுலீர்கள் – எங்கே உங்களின் மறுப்பை அங்கே காணோம்//

  அந்தக் கட்டுரையை நான் முவதும் படிக்கவில்லை. சிறிது படித்தேன். அதில் பீதாம்பரம் அணியாதவர் என்ற வகையிலே சிவா பெருமானைக் குறித்து எழுதி இருந்ததால், அது தவறாகப் பொருள் கொள்ளப் படும் என்ற வகையிலே பீதாம்பரம் அணிபவரும் , தோல் அணிபவரும் டபிள் பேரல் கன் என எழுதி வந்து விட்டேன். அப்படி நாராயணரை விட்டுக் கொடுக்காமல் நான் எழுதியதை உணரும் நிலையில் நீங்கள் இல்லை.

  கந்தர்வன் சொன்ன பின் அந்தக் கட்டுரையை வூரிப் படித்து பின்னூட்டம் எழுதி இருக்கிறேன். சமரசம் என்பதை வைணவருக்கு மாத்திரம் சொல்லவில்லை. சைவருக்கும் சொல்லுகிறோம், உலகில் உள்ள எல்லோருக்கும் சொல்லுகிறோம். புறம் தொழாமையை சைவர் பின்பற்றினால் அதுவும் மோதலை உருவாக்கும் கற்காலப் போக்கே.

  //இங்கு கெட்டவர்கள் என்று சொன்னதை புறம் தோழமை கேட்டது என்று அர்த்தம் செய்ய வேண்டாம் – புறம் தொழாதவர்களில் த்வேஷம் உள்ளவர்கள் இருக்கிறார்கள், மற்ற தெய்வத்தை குறைவாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள் இதற்காக எல்லோரையும் வெறுப்பு கொண்டவர்கள் காட்டு மிராண்டி என்று கூற இயலாது //

  நான் மனிதர்களை கெட்டவர்கள் என்று சொல்லவில்லை. ஒரு மனிதன் காதில் கேட்கும் கருத்து தான் அவனை கெட்டவனாகவோ, நல்லவனாகவோ ஆக்குகிறது. ஆப்கானில் வளரும் குழந்தை காதில் ஜிஹாதி கருத்துக்கள் விழுவதால் தான் அது வன்முறைப் பாதைக்கு போகும் வாய்ப்பு உள்ளது. எனவே நாம் குறிப்பிடுவது “மறந்தும் புறம் தொழாமை” என்கிற கான்செப்டை பற்றித்தான். அதை போல்டு லெட்டரில் போட்டு அது நல்ல தத்துவம் போல ஒரு எபெக்ட் குடுக்கப் பட்டு உள்ளது. அதனால் தான் அதன் விளைவுகள் பற்றி தெளிவாக எழுதுகிறோம்.

  //இப்படி தான் நீங்கள் புரிந்து கொண்டாதா – அப்படியானால் இந்த தேடுதலினால் தான் நீங்கள் எல்லோரையும் தோழா வேண்டும் என்று கூறுவதா

  இப்படி ஒரு தீர்மானன்மும் இல்லாமல் புரவி புர்வதரம் கிருதம் என்னுமாப்போலே – ஒரு தெய்வத்தை பரமாத்மாவாக பார்த்து அதிலேயே ஸ்திரமாக இருந்து, மனதை ஆழ்த்தி தலை கட்டுபவரே ஸ்திதப் ப்ரஞன் – தேடுதல் வேலை மிச்சம் பாருங்கள் //

  இதையே தான் இசுலாமியரும் சொல்கின்றனர். கேள்வி கேட்கும் சிரமம் மிச்சம். சொல்வதை அப்படியே ஒத்துக் கொள் பிரச்சினை இல்லை என்கின்றனர்.

  //எங்காவது ஒரு தடவை உங்களால் மற்ற தெய்வத்தை குறைத்து கூறினேன் என்று காட்டுங்கள் பாப்போம் //

  அதை வெளிப்படையாக சொல்ல மாட்டீர்கள். உள்ளுக்குள்ளே வைத்து கோபுரத்தைப் பார்க்க மாட்டேன். அய்யோ என கோவிந்தனுக்கு இப்படி கோபுரம் இல்லையே. உள்ளுக்குள்ளே புகையும் வெறுப்பு எரி மலையின் புகை இப்படி வருகிறது.

  //பாகவத புராணம் படிக்கவில்லையா நீங்கள் – இதில் தான் ஒரு கடவுள் மோகினியின் அழகில் மயங்கி தனது தேவி பக்களில் இருப்பதையும் மறந்து பின் தொடர்ந்தார் என்று உள்ளது – இதற்காக வியாசருக்கு உபதேசம் செய்ய நாம் புறப்பட வேண்டாம் – இதே வியாசர் வேத சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தெய்வம் கேசவாத் பரம் என்று சொல்லிவிட்டார் (குறிப்பு இங்கு யார் பெரியவர் என்பதற்காக சொல்லவில்லை) – அப்போ வியாசர் உங்களிடம் தோற்றாரோ?//

  வியாசர் புராணத்தை நடந்ததாக சொல்லப் படுவதை அப்படியே எழுதி ப்வைத்தார். மத வாதத்துக்காக அதை மேற்கோள் காட்டவில்லை. வியாசரோ, கடவுளோ யாராக இருந்தாலும் சந்தேகம் கேட்கலாம், கேள்விகள் கேட்கலாம், மறுப்புக் கருத்தை வைக்கலாம். இது இந்து மதம். தைரியமாக ஒரு புதுக் கருத்தைக் கூட சொல்லாலாம். அதில் உண்மை இருக்குமானால் எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஆச்சாரியார் சொல்வதை அப்படியே கேட்பதோடு, இன்னும் மேலே சிந்திக்க வேண்டும். அப்படியே கேட்டுக் கொண்டு மண்டையை ஆட்ட எத்தனயோ மார்க்ங்கள் உள்ளன.

  வெறுமனே மரியாதை காட்டும் மாணவனை விட, சொன்னதை அப்படியே ஒப்பிக்கும் மாணவனை விட சிந்த்தித்து கேள்வி கேட்கும் மாணவரையே ஆசிரியர் அதிகம் விரும்புவர். கேள்வி கேட்டால் ஆசிரியரிடம் மரியாதை இல்லை என்று அர்த்தம் இல்லை.

  //அதனால் தான் நான் இவரை வனுங்குகிறேன் இவரையும் வணகுகிறேன் இதில் என்ன தப்பு என்றெல்லாம் பேச்சு வருகிறது //

  நான் என்பதை விட்டு விடும் மனப் பக்குவம் இன்னும் வரவில்லை, விரைவில் வரும் என நம்புகிறேன்.

  //உங்களுக்கு நேரக்கூடிய அபசாரத்தையும் பகவானை மனதில் நிறுத்தி வேண்டி ஏற்றுக் கொள்கிறேன் //

  எனக்கு ஒரு அபச்சாரமும் இல்லை ஐயா, யாரயுமே வெறுக்காத எனக்கு, சமரசப் போக்கை உருவாக்க விரும்பும் எனக்கு, ஒரு அபச்சாரமும் வரவில்லை. நீங்கள் உங்களுக்காகாவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும் , நண்பர்கள், உறவினர்கள் எல்ல்லோருக்காவும் வேண்டிக் கொள்ளுங்கள்.

 116. Sarang on February 15, 2010 at 1:23 pm

  //
  நல்லது. முன்னேற்றம் தெரிகிறது. அப்படியே முருகன் தேரோ, சிவன் தேரோ வீதி வழியாக சென்றால் அதற்கும் மரியாதை செலுத்தி வணக்கம் செலுத்தி விடும் பண்பும் வந்து விடும் என நினைக்கிறேன். அதுதான் சமரசம் எனபது.
  //

  முன்னேற்றம் எல்லாம் இல்லை, இதை தான் முதலிருந்தே சொல் வருகிறேன் – அதே விநாயர் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் ஏதும் இல்லை என்று சொல்லிவிடுவார்கள் – இதை சரியாக புரிந்து கொண்டால் புறம் தொழாமையை புரிந்து கொண்டீர்கள்

  //
  நான் மனிதர்களை கெட்டவர்கள் என்று சொல்லவில்லை. ஒரு மனிதன் காதில் கேட்கும்
  //

  இதை தான் மருதாகிவிட்டதே – நீங்கள் சொல்லும் புறம் தொழாதவர்கள் சமரச வாதிகளைவிட நல்ல பண்புடைவர்களாக இருந்தனர் இருக்கின்றனர், நமது தர்மத்திர்க்கே வாழ்வை அற்பநித்தனர் என்பதை எடுத்து கூறியாகிவிட்டதே

  நீங்கள் அடிப்பது காங்கிரஸ் காரர்களின் ஹிந்துத்வா செகுலர் டமாரம் மட்டுமே – அதில் ஒரு துளி கூட உண்மை இல்லை – உங்களால் இதுவரை எந்த வலுவான் சாட்சியங்களையும் எடுத்து வைக்க முடியவில்லை

  தமிழில் வழிபாடு தமிழில் வழிபாடு எனு இன்று ஹான் கூக்குரல் இடுகிறார்கள் – சாமத்தின் உள்ளும் தமிழ வளர பெரும் தொண்டாற்றியவர்கள் நீங்கள் சொல்லும் இந்தக் கூட்டம்

  என்றைக்காவது நீங்கள் டிவி யில் ப்ரம்மொட்சவமோ அல்லது எதோ ஒன்றோ பார்க்க நேர்ந்தால் – அதில் பெருமாளுக்க் முன்னாடி ஒரு சிலரும் பின்னாடி ஒரு சிலரும் சென்றி கொண்டிருப்பார்கள் – அருகாமையில் சேறு கட்டல் தெரியும் – முன்னாடி தமிழ் சென்று கொண்டிருக்கும் பின்னாடி வேத பாராயணம் சென்று கொண்டிருக்கும் – இறைவன் தமிழை தேடி போகிறான், வேதம் அவனை தேடி வருகிறது
  இதை போல மருமலற்சிகளை எல்லாம் கடும் பிராமணவாதிய மதத்தினுள் கொண்டுவந்தவர்கள் இந்த புறம் தொழாதவர்கள் [ஏன் சைவத்தை பற்றி பேச மாட்டேன் என்றால் எனக்கு அது தெரியாது – ஒன்றை பின் பற்றவே எனக்கு நேரம் போதவில்லை]
  தினமும் கோவில் சென்று ஒரு தாழ்த்தப் பட்டவர் என்று சொல்லப்படும் ஒருவின் திருவடியைத்தான் ஏற்கிறார்கள் அதும் தண்யோச்மி என்று சொல்லிக்கொண்டே – அவரை தான் இந்த மஊக்ஷக்களின் தலைவர் என்று ஏற்றுக்கொள்கிறார்கள்

  இதுவல்லவோ சமரசம் – (showing in action) – வெறும் வறட்டு பேச்சு கிடையாது

  //
  கேள்வி கேட்டால் தான் சிறந்த மாணவன் என்ற எண்ணம் இருந்தால் நான் போகவில்லை என்று தான் அர்த்தம்
  //

  இந்த போல்டு லெட்டர் எல்லாம் சிலர் புறம் தொழாமையை பற்றி தவறாக புரிந்து கொண்டு மண் வாரி தூவுவதர்ற்கு பதில் உரைக்கும் பொருட்டே – இது வெறும் “effect”. “cause” வேறொரு கட்டுரையின் பின்னூட்டத்தில் உள்ளது

  //
  இதையே தான் இசுலாமியரும் சொல்கின்றனர். கேள்வி கேட்கும் சிரமம் மிச்சம். சொல்வதை அப்படியே ஒத்துக் கொள் பிரச்சினை இல்லை என்கின்றனர்.
  //
  நீங்கள் சிந்திக்கும் வேலையைத்தான் இதுவரை மிச்சப் படுத்தி இருக்கிறீர்கள் – நீங்கள் எவ்வளவு தான் முயன்று ஆபிராமிய மதத்திற்கும், நமக்கும் முடிச்சு போட்டாலும் பயன் இல்லை – உங்களுக்கு வித்யாசம் புரியப் போவதில்லை – அல்லவை மட்டுமே தொழுவேன் என்று சொல்வதனால் ஒரு இஸ்லாமியர் குறைந்து போய்விட மாட்டார், அது அவருக்கு வெறுப்பு வளர்கிறது – மாறாக இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்ல்லோரும் அல்லாவைத்தான் தோழா வேடும் இல்லையேல் அவர்கள் காபிர் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பது தான் வெறுப்பு வளர்க்கும்

  ஆனால் இங்கோ அப்படி இல்லை –
  அடுத்தவரின் கஷ்டத்தை அறிந்து அதை ஆற்று, அடுத்தவருக்கு உதவி செய், அபிமனாததை விடு [நான் என்பதை விடு] , எல்லா உயிர்களிடம் அன்பு வை, யாரையும் நிந்திக்காதே (காடு மிராண்டி என்று கூறாதே)
  வார்த்தை , மனம்,காயம் இதை சுத்தமாக வை , சம நோக்கு கொள் [எல்லாவற்றிலும் பரமாத்மா உள்ளான், த்வேஷம் வேண்டாம்] , வேட்கையை விடு, பர ச்த்ரிகளை அன்னையை போல பார் (இல்லை பார்க்கவே பார்க்காதே – அன்னையின் கால் மட்டுமே கண்ட ராமனின் அனுஜனான லஷ்மனரை போல)

  திட வைராக்யத்துடன் இரு, பொய் சொல்லாதே [தப்பான பிரமாணம் காட்டதே உட்பட], அடுத்தவன் சொத்துக்கு ஆசை படாதே, பேராசை, கள்ளம் கொள்ளாதே [இந்த கோபுரம் விஷயத்தை இப்படி தான் பார்க்கணும் ],

  இப்படி இருப்பவரை தான் நீங்கள் வெறுப்பு கருத்து உள்ளவர்கள், காட்டு மிராண்டி என்று சொல்கிறீர்கள் என்ன செய்ய – நண்பரே எல்லோருக்கும் கும்பிடு போட்டால் தீராது விஷயம் மேர்ச்சன்னபடி நடக்க வேண்டும் அவனே ஸ்தித ப்ரஞன் என்ற கண்ணன் கேட்ட சமரசவாதி – நல்ல புறம் தொழாதவர்கள் தங்களின் பாதையில் இதை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்

  //
  நான் என்பதை விட்டு விடும் மனப் பக்குவம் இன்னும் வரவில்லை, விரைவில் வரும் என நம்புகிறேன்.
  //

  சரணாகதி பண்ணினாலே ஒழிய இது வராது – பண்ணியபிரகு அதை கட்டி காதலும் அவசியம் (இதெல்லாம் ஆன்மாவை முன்னிறுத்தி செய்யும் விஷயங்கள் – அதனால் ஆன்மா யார் அதன் தன்மை என்ன என்பதையும் அறிதல் வேண்டும்)

  இதில் இதற்கான விடை அத்தனையும் உள்ளது – எந்த கடவுளையும் முன்னிருத்தி இல்லாத ஒன்று

  உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
  மயர்வற மத்தின் நலம் அருளினான் எவன் அவன்
  அயர்வறு அமரர்கள் அதிபதி எவன் அவன்
  துயர் அரு சுடர் அடி தொழுதேழன் மனனே

  //
  இன்னும் மேலே சிந்திக்க வேண்டும். அப்படியே கேட்டுக் கொண்டு மண்டையை ஆட்ட எத்தனயோ மார்க்ங்கள் உள்ளன.

  வெறுமனே மரியாதை காட்டும் மாணவனை விட, சொன்னதை அப்படியே ஒப்பிக்கும் மாணவனை விட சிந்த்தித்து கேள்வி கேட்கும் மாணவரையே ஆசிரியர் அதிகம் விரும்புவர். கேள்வி கேட்டால் ஆசிரியரிடம் மரியாதை இல்லை என்று அர்த்தம் இல்லை
  //

  யஞவல்கர் கார்கி உரையாடலை படியுங்கள் -கார்கி கேள்வி கேட்டுக்கொண்டே போவார் – ஒரு கட்டம் வந்த பின் – இதை இப்படி சும்மா விதண்டாவாத தானாக கேட்காதே உன் தலை வெடித்து சிதறி விடும் என்பார் – அதை எப்படி கேட்க வேண்டும் என்றும் சொல்லுவார்
  கேள்வி கேட்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை – என்ன கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்று உள்ளது – இதை அத்தனையும் பின்பற்றும் ஒருவனையே குரு விரும்புவார் என கொள்ளலாம் (பொதுவாக குருவிற்கு விருப்பு வெறுப்பு கிடையாது)

  அதே போல் தான் உங்களின் கேள்விகளும் உள்ளன – கேட்கலாம் ஒரு ஆசார்யரிடம் சரணடைந்து கேட்கலாம் அவர் பதில் சொல்வார் – புறம் தொழாமை பற்றியும் கேட்கலாம் அதற்கும் பதில் சொல்வார் (த்வேஷம் மட்டுமே தவறு ஒரு வடிவில் பரமாத்மாவை உபாசிப்பதில் தவறு இல்லை என்று) இங்கு பலர் எவ்வளவு சொன்னாலும் புரியாது – அந்த சரனைந்த ஆசாரியர் சொன்னால் உடனே நம் மனதிற்கு புரியும் (ஏன் என்றால் ஒரு ஞான உள்ள ஆசான் இந்த உடம்பிடம் இந்த புலன்களிடம் பேச மாட்டார் – நேராக மனதையோ, ஆன்மாவையோ ஆட்கொள்வார் – இதையும் உங்களுக்கு தெரியுமா, நீங்கள் பார்த்திருக்கிறீர்கள என்று கேலி செய்ய வேண்டாம் – எனக்கு அனுபவம் உண்டு]

  மேலும் வெறுமனே மரியாதை காட்டுவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல [அப்படி இருப்பவர்களுக்கு இது நன்றாகவே விளங்கும்] – அதற்க்கு நான் என்பதை விட வேண்டும் (இதிவே ஒரு மிக பெரிய ஞானம்) –
  கேள்வி கேட்டால் தான் சிறந்த மாணவன் என்ற எண்ணம் இருந்தால் நான் போகவில்லை என்று தான் அர்த்தம்.

  எனது குரு எனகளுள் கேள்வி கேட்காத ஒருவரை பார்த்து உனக்கு நன்றாக விஷயங்கள் புரிகிறது கொஞ்சம் சமஸ்க்ரித்த ஞானம் கொஞ்சம் மேம்பட வேண்டும் என்று சொன்னார்] – அவர் எப்படி கண்டு பிடித்திருக்க முடியும் என்றால் கொஞ்சம் சிந்தனை செய்து பாருனகல் – கேள்வி கேட்பதால் மட்டுமே ஞானம் வளர்வதில்லை – நமக்கு கிட்டக் கூடிய மிகப்பெரிய ஞானமே பரமாத்மாவின் செஷன் என்ற ஞானம் தான் – இது கேள்வி கேட்டு வரவே வராது – மரியாதை, அடிபணிதல் மூலமே வரும் – இதையும் இஸ்லாமையும் தயவு செய்து முடிச்சு போடாதீர்கள்

  //
  எனக்கு ஒரு அபச்சாரமும் இல்லை ஐயா, யாரயுமே வெறுக்காத எனக்கு, சமரசப் போக்கை உருவாக்க விரும்பும் எனக்கு, ஒரு அபச்சாரமும் வரவில்லை. நீங்கள் உங்களுக்காகாவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும் , நண்பர்கள், உறவினர்கள் எல்ல்லோருக்காவும் வேண்டிக் கொள்ளுங்கள்.
  //

  உங்களுக்கு வெறுப்பு இல்லை என்பதை எப்படி நம்புவது – மற்றவரை வெறியர்கள் என்று கூருவரிடம் வெறுப்பு இல்லை என்று எப்படி நம்புவது

  சமரசம் என்று சொல்லிக்கொண்டே நீ கட்டு மிராண்டி என்கிறீர்கள் – உங்களுக்கும் அந்த ஆபிராமிய மதத்தவருக்கு இப்படி கூறுவதி ஒருமை உள்ளதே

  நீங்கள் ஒன்றை சரியாக கவனத்தில் கொண்டீர்களா என்று தெரியவில்லை – முதலில் இருந்தே நீங்கள் மற்றதின் மேல் குறை கூறியே வாதம் செய்து வந்தீர்கள் – இதுவா காழ்புணர்ச்சி, காட்ட மிராண்டி, வெறியன் … [இப்படி பட்ட வாத உரைக்கு ஒரு பெயர் உண்டு அதை நீங்களே கண்டு பிடித்து கொள்ளுங்கள்] – நான் எதையும் குறை கூறாமல் உங்களின் தவறான கருத்தை மட்டுமே மறுத்து வந்தேன் – குறை கூறி வாதம் செய்வது தான் தீக ஸ்டைல் – இது ரொம்ப எளிது, சும்மாவேனும் ஹிந்து என்றால் திருடன், சூத்திர விரோதி, ராமன் சூத்திரனை கொன்றான் இப்படி அடுக்குவார்கள் – அடுத்தவர் சொல்வதை மனதில் ஏற்றாமலேயே தன மனம் சொல்வதை சொல்வதில் பயனே இல்லை மனதில் வெறுப்பே வளரும் – – தங்களுக்கு ஒன்று ஏற்புடையதாக இல்லாத போதும் வெறுப்பு இல்லாதவர்கள் குறையே சொல்ல மாட்டார்கள் (இதை தான் வாச் காச் மன நிஷ்ச்சல்… குறிக்கிறது)

  நானும் தான் என்னிடம் வெறுப்பு இல்லை, புறம் தொழாதவிரமும் வெறுப்பு இல்லை (இந்த புறம் தொழாம என்பது மாரதேன் மேல் கொண்டால் வெறுப்பால் இல்லை – ஆன்ம ச்வபாவத்தை அறிந்து, ஆத்மாவை கடை தேர்த வேண்டும் என்கிற பொறுப்பால் தான்)

  தான் அடிமை செய்தவரிடம் தன்னை முழுதும் ஆட்படுத்திக்கொண்ட, அவரை தவிர வேறதையும் நினைக்கதவரிடம் கடவுள் தான் குடி இருப்பார் வெறுப்பு இருக்காது – அவர்கள் வேறு கோவிலுக்கு செல்லாமல் இருப்பது அங்கு அவர்கள் வேண்டி பெற பயன் ஏதும் இல்லை என்பதால் மட்டுமே – அப்படி தவறி போய் இந்த உலக விஷயம் ஏதாவது கேட்டுவிடக் கூடாது என்ற எண்ணமே – கேட்டால் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம் – இதை புரிந்து கொள்ள கீதை இரண்டாம் சாப்ட்டர் 54 முதல் 72 வரை உள்ள கீதையையும், சரணாகதி என்றால் என்ன என்ற ஞானத்தையும் பெற்று சரணாகதி செய்து அதை தக்க வைத்தால் வேண்டும் – மொத்தத்தில் முமுக்ஷு ஆக வேண்டும்

  மேலும் நீங்கள் ஒட்டுமொத்தமாக முமுக்ஷுக்களையும் சேர்த்து காட்டுமிராண்டி, வெறியர்கள் என்று சொன்னதால் தான் உங்களுக்கு பாகவத அபசாரம் நேருமோ என்று அஞ்சினேன் – எனக்கென்று வேண்டி பெற ஒன்றும் இல்லை லோக ஷேமத்தை பற்றி கவலை படாதே என்று கண்ணன் கூறிவிட்டான் எனது நண்பர்கள் குடும்பத்தாரை பற்றி நான் கவலை கொள்ள ஏதும் இல்லை, அவசியமும் இல்லை (கவலை மட்டுமே அன்பு என்று சொல்லவில்லை)

  இன்னும் நீங்கள் ஆழ்வார், நாயன்மார்களை பற்றி பதில் சொல்ல வில்லை

  கவலை இல்லாமல் வாழுங்கள் – லோகக் சேமம் அவன் கையில்

 117. கந்தர்வன் on February 15, 2010 at 2:40 pm

  மதிப்பிற்குரிய திருச்சிக் காரரே,

  நீங்கள் நான் சுட்டிய கட்டுரைக்கு மறுப்பு எழுதியதைப் பார்த்தேன். அதற்காக, உங்கள் நேர்மைக்கு பல்லாண்டு பாடுகிறேன்.

  சற்று பொறுமையுடன் இப்பொழுது கூறுவதை ஆலோசியுங்கள்.

  ஆழ்வார் பாடல்களிலும், ஆச்சாரியர்கள் நூல்களிலும் பிரபந்தங்களிலும் புறந்தொழாமை கட்டளையாக இடப்பட்டுள்ளது. இதை விட வேண்டும் என்றால் இப்பொழுது கூறிய நூல்களுக்கு ஜலதர்ப்பணம் செய்து விட வேண்டியது தான். இதை யார் ஏற்பார்கள்? சைவர்களும் நாயன்மார்கள் பாடல்களை விட்டுவிட வேண்டியது தான். இதை அவர்கள் ஏற்பார்களா என்று கூறுங்கள்.

  மேலும், லலிதா சஹாஸ்ரனாமத்தின் 80-வது, 249-வது நாமங்களின் அர்த்தங்களை இந்த சுட்டியில் படியுங்கள். மேலும் இங்குள்ள வரைபடத் தொகுப்பின் (gallery) 59, 60, 61-ஆம் படங்களைக் கூர்ந்து நோக்குங்கள். இதையும் பாருங்கள். “வாசுதேவனே எல்லாம்” என்று இருக்கும் பரம ஏகாந்திகளிடம் எப்படி “எல்லாரையும் ஒன்றாக நினைத்து வழிபடுங்கள்” என்று கோருவது நியாயம்?

  தல புராணங்களையும், மற்ற நூல்களில் வரும் வாக்கியங்களையும், ஓவிய-சிற்பங்களையும் மாற்றி அமைத்தால் தான் நீங்கள் சொல்வது முடியும் என்பது தெளியவில்லையா? அப்படியானால், “தொன்று தொட்டு வழங்கி வந்தவை சரியான மதம் அன்று. இப்பொழுது புதிதாகச் செய்யப்படுவதே சரி.” என்று சொல்வது போல ஆகிவிடுமே? இதை யார் ஏற்பார்கள்? நீங்கள் கூறும் “எல்லாரையும் பாகுபாடின்றி வணங்குவதைக் கொள்கையாகக் கொண்ட ஒரே மதம்” என்பது முயற்கொம்பைத் தேடுவது போல என்பது புரியவில்லையா?

  ஒற்றுமை காண்பதற்கு வழிபாட்டில் ஒற்றுமை வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது தவறு. நான் மேற்கூறிய protocol-ஐக் கடைபிடித்தாலே போதும். எல்லாவற்றையும் போட்டு குழப்பி மறைத்தும் மழுப்பியும் பேசினால், நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருக்காது. இதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 118. கந்தர்வன் on February 15, 2010 at 2:50 pm

  Site moderator-களே,

  நான் நேற்று எழுதிய

  இதற்கும் முன் இன்னொரு கட்டுரையில், “ஆதி சங்கராச்சாரியார் வேண்டும் என்றே என்றோ, அறியாமையாலோ, பொய் கூறுவார்” என்று கூறும் கட்டுரையை பிரசுரிப்பார்.

  என்பதை நீங்கள் “என்று கூறும் மறுமொழிகளையும் இந்தத் தளத்தில் பிரசுரிப்பார்கள்” என்று திரித்து எழுதியது எவ்வகையோ? நான் கூறியது உண்மையே. இக்கட்டுரையில் அவ்வாறு உள்ளது:

  //
  பாஷ்யக்காரர்களுடைய சில கொள்கைகளைக் குறித்து விவேகானந்த சுவாமிகள் பாஷ்யக்காரர்கள் பல தடவைகளில் வேண்டுமென்றே அல்லது அறியாமையினால் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று தாக்கியுள்ளார்.
  //

  ஆகையால் நான் சொன்னதைத் திருத்தி எழுதியது சரி அன்று. சாரங் அவர்கள் சொன்னது போல நேர்மையான நீங்கள், இந்த மறுமொழியையாவது திருத்தி பிரசுரிக்காதீர்கள்.

 119. திருச்சிக் கார‌ன் on February 15, 2010 at 4:10 pm

  //இதை சரியாக புரிந்து கொண்டால் புறம் தொழாமையை புரிந்து கொண்டீர்கள்//

  நீங்க‌ள் முருக‌ரை, சிவ‌னை வ‌ழிப‌டத் த‌யாரான‌ நிலையில் புற‌ம் தொழா என்ற‌ பெய‌ர் ம‌ட்டும் எத‌ற்க்கு? நீங்க‌ள் ச‌ம‌ர‌ச‌ப் பாதைக்கு வ‌ந்து விட்டீர்க‌ள். எல்லாக் க‌ட‌வுள்களையும் அன்புட‌ன் வ‌ண‌ங்கும் ம‌ன‌னிலை வ‌ந்த‌ பின் நீங‌கள் ச‌ம‌ர‌ச‌ வ‌ழி பாட்டு முறைக்கு புற‌ம் தொழா முறை என்று பெய‌ர் வைத்துக் கொண்டால் என‌க்கு ஆட்செப‌ணையில்லை.

  சமரசம் என்று சொல்லிக்கொண்டே நீ கட்டு மிராண்டி என்கிறீர்கள் – உங்களுக்கும் அந்த ஆபிராமிய மதத்தவருக்கு இப்படி கூறுவதி ஒருமை உள்ளதே

  //நீங்கள் ஒன்றை சரியாக கவனத்தில் கொண்டீர்களா என்று தெரியவில்லை – முதலில் இருந்தே நீங்கள் மற்றதின் மேல் குறை கூறியே வாதம் செய்து வந்தீர்கள் – இதுவா காழ்புணர்ச்சி, காட்ட மிராண்டி, வெறியன் … [இப்படி பட்ட வாத உரைக்கு ஒரு பெயர் உண்டு அதை நீங்களே கண்டு பிடித்து கொள்ளுங்கள்] – நான் எதையும் குறை கூறாமல் உங்களின் தவறான கருத்தை மட்டுமே மறுத்து வந்தேன் //

  ஐய‌ன்மீர்,

  நான் க‌ருத்துக்க‌ளை ம‌ட்டுமே காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ள், வெறுப்புக் க‌ருத்துக்க‌ள், காழ்ப்புன‌ர்ச்சிக் க‌ருத்துக்க‌ள் என்று கூறி இருக்கிறேண்.

  யாரையுமே நான் காட்டு மிராண்டி, காழ்ப்புண‌ர்ச்சியாளர் என்று கூற‌வேயில்லை. நான் அப்ப‌டி சொல்லி இருக்க‌ வாய்ப்பே இல்லை.

  என்னுடைய‌ போராட்ட‌ம் க‌ருத்துக்க‌ளுட‌ன் ம‌ட்டுமே, ம‌னித‌ருட‌ன் என‌க்கு எந்த‌ப் போராட்ட‌மும் இல்லையே!

  யாருட‌னும் என‌க்கு எந்த‌ விரோத‌மும் இல்லை, விரோத‌ம் வ‌ர‌ அவ‌சிய‌மும் இல்லை. ஒவ்வொருவ‌ரி ஒவ்வொரு க‌ருத்துக்க‌ளையும் கேட்போம். ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை ந‌ன்றி சொல்லி ஏற்றுக் கொள்வோம். வெறுப்பை உருவாக்கும் க‌ருத்துக்க‌ளை அது த‌வ‌றான‌து என‌ விள‌க்குவோம் – அதைக் கூறிய‌வ‌ன் ஆண்ட‌வ‌னாக‌ இருந்தாலும் ச‌ரி.

  என்னிட‌ம் வெறுப்பு இல்லை. ஆனால் என்னிட‌ம் வெறுப்பு இருக்கிர‌து என்று நீங‌கள் கூறினால் , அத‌ற்காக‌ நான் உங்க‌ளை வெறுக்க‌ப் போவ‌துமில்லை.

  நீங்க‌ள் அத்வேஷ்டா நிலையை அடைய‌ வேண்டும் என்ப‌துதான் என் விருப்ப‌மும். த‌ஞ்சை பெரிய‌ கோவில் கோபுர‌த்தைப் ப‌ர்த்துக் க‌ண்ணில் ஒற்றிக் கொள்ளுங்க‌ள், அத்வேஷ்டா நிலை ஆர‌ம்ப‌மாகி விடும்.

 120. Sarang on February 15, 2010 at 6:35 pm

  //
  நீங்க‌ள் முருக‌ரை, சிவ‌னை வ‌ழிப‌டத் த‌யாரான‌ நிலையில் புற‌ம் தொழா என்ற‌ பெய‌ர் ம‌ட்டும் எத‌ற்க்கு? நீங்க‌ள் ச‌ம‌ர‌ச‌ப் பாதைக்கு வ‌ந்து விட்டீர்க‌ள். எல்லாக் க‌ட‌வுள்களையும் அன்புட‌ன் வ‌ண‌ங்கும் ம‌ன‌னிலை வ‌ந்த‌ பின் நீங‌கள் ச‌ம‌ர‌ச‌ வ‌ழி பாட்டு முறைக்கு புற‌ம் தொழா முறை என்று பெய‌ர் வைத்துக் கொண்டால் என‌க்கு ஆட்செப‌ணையில்லை
  //

  மன்னித்துவிடுங்கள் நான் சமரச வாதி இல்லை – நான் எழுதியதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை – சமரசம் என்று நேரு தொடங்கியது இன்று என்குவந்துள்ளது என்பதை பாருங்கள் – சமரசம் என்பது ஏட்டு சுரைக்காய் மட்டுமே – அதை நடை படுத்த இயலவே இயலாது – இதை பற்றியே இரண்டு கட்டுரைகள் இதே தளத்தில் வண்டு விட்டன – மனிதரில் வித்யாசம் உண்டு அதை புரிந்து கொண்டு சம நோக்குடன் அன்புடன் வாழ்வதே சமரசம் – என்னை பொருத்தமட்டில் சகல லோகமாம் சகுனே வந்தே என்பது தான் சமரச நோக்கு அதாவது சம நோக்கு – சமரசம் என்பது compromise – (தேவை இல்லாமல் compromise செய்வது – compromise is the weakest strategy (loose Win or Win loose) – சம நோக்கு என்பது விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லாவ்ரவர்ரும் சமமாக பார்ப்பது

  win loose என்று சொல்லியதால் நான் போட்டி போடுகிறேன் என்று கொள்ள வேண்டாம் அத ஒரு உதாரணமே

  கண்ணன் கீதையில் உனக்கிட்ட தர்மத்தில் இருந்து சமரசம் செய்யாதே – ஸ்வதர்மமே முக்கியம், பர தர்மம் அல்ல என்கிறான் – ச்வடர்மத்தை விடுவதற்கு பதில் இறப்பதே மேல் என்கிறான் – அர்ஜுனன் செய்ய நினைத்தது compromise – கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னது சம நோக்கு

  என்னை பொறுத்த வரைக்கும் (ஆழ்வார் சொன்னதும்) மறந்தும் புரம்தொழ மாந்தர் என்பதில் – தோழா என்பதற்கு சரணாகதி என்று அர்த்தம் – அடியேன் எறனவே சரணாகதி செய்தாகிவிட்டது – இனி ஒருவருக்கும் செய்ய இயலாது அப்படி செய்தால் அதற்கு பெயர் சரணாகதி கிடையாது – உடல் பொருள் ஆவி அனைத்தையும் அற்பநிப்பதே சரணாகதி என்பதாகும் – யசுர் வேத உபச்தானத்தில் இதே வருகிறது அதிலாவது நான் அர்பணிக்கிறேன் என்று வருகிறது, இங்கு அடியேன் கூறுவது இந்த நிலையே – எனது ஆவி தன்தொழிண்டேன் என்று சொல்ல முற்பட்டு உடனே ஆன்ம நிலையை அறிந்து எனதாவி யார் – நான் யார் தந்த நீ கொண்டாக்கினையே
  அதாவது நான் உன்னை சரண் அடைந்தேன் என்றல்லாமல் – உன்னுடைய சொத்தான ஆத்மாவை நீயே திரும்ப எடுத்துக் கொண்டாய்

  இப்படி பட்ட நிலை தான் புறம் தொழாமை – எனது ஆன்மாவே அவனிடம் உள்ளது அப்படி இருக்கையில் நான் எங்கே, நான் இல்லாத பொது நான் யாரை தொழுவேன் (யாரிடம் சரண் புகுவேன்)

  தயவு செய்து கொஞ்சம் நேரம் செலவழித்து மேலே கூறியதை மனதில் நிறுத்துங்கள் – உங்களுக்கு நான் சொல்லவந்தது புரிய வரலாம்

  நீங்கள் தோழா என்பதை வெறுப்பு, மற்ற தெய்வத்திற்கு வந்தனம் சொல்ல மாட்டார்கள், கீழ் நோக்கி பார்பார்கள் என்றெல்லாம்

  //
  நான் க‌ருத்துக்க‌ளை ம‌ட்டுமே காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ள், வெறுப்புக் க‌ருத்துக்க‌ள், காழ்ப்புன‌ர்ச்சிக் க‌ருத்துக்க‌ள் என்று கூறி இருக்கிறேண்.
  //
  என்னை வீணே நீங்கள் இட்ட பதில்களை எல்லாம் இங்கே மறு படி “cut-paste” செய்ய வைக்காதீர்கள்
  ஜிஹாதி என்று கூட சொல்லியாகிவிட்டது – மனதில் வெறுப்பு உள்ளவர்கள் என்று சொல்லியாகிவிட்டது – காட்டு மிராண்டி கருத்து உள்ளவர்கள் என்றும் சொல்லியாகிவிட்டது
  நீங்கள் பிற கட்டுரையிலும் இட்ட பதில்களை சேர்த்தே பாருங்கள்

  சரி இங்கு கூறியதையே பாப்போம்

  //
  நீங்க‌ள் அத்வேஷ்டா நிலையை அடைய‌ வேண்டும் என்ப‌துதான் என் விருப்ப‌மும்
  //

  அப்படி என்றால் நான் எதோ வெறுப்புடன் இருப்பது போல் தான் நீங்கள் கூறுகிறேர்கள் – சத்திரம் இல்லாத வதம் இப்படியே வெளிவரும்

  //
  நீங்க‌ள் அத்வேஷ்டா நிலையை அடைய‌ வேண்டும் என்ப‌துதான் என் விருப்ப‌மும். த‌ஞ்சை பெரிய‌ கோவில் கோபுர‌த்தைப் ப‌ர்த்துக் க‌ண்ணில் ஒற்றிக் கொள்ளுங்க‌ள், அத்வேஷ்டா நிலை ஆர‌ம்ப‌மாகி விடும்.
  //

  கண்ணில் ஒற்றிக் கொண்டால் தான் வெறுப்பு இல்லை என்பது ஒரு வேறே இல்லாத வாதம் [பிடி வாதம் என்று கூட சொல்லலாம்] – நான் இதுவரை தஞ்சை பெரிய கோபுரத்தை கண்டதில்லை (ஏன் என்றால் அது வழியாக போகும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை) – கண்ணில் படும் கோபுரம் எதையும் மரியாதயுடனே பார்கிறேன் – அதை வெறுப்பதில்லை மேலாக தஞ்சை கோபுரம் புனர் நிர்மாணம் செய்ய வேண்டும் உங்களால் உதவ முடியுமா என்றால் என்னால் முடிந்த உதவியை (உடல், பொருள்) செய்வேன் – அதற்காக அந்த புண்ணியத்தை கட்டிக்கொள்ள மாட்டேன் (இதையும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்)

  அத்வேஷ்ட நிலை அடைந்து விட்டேன் என்று யாரும் எளிதில் அறுதி இட்டு கூற முடியாது – நாம் நெருக்கடி(சோதனை) வரும் பொது என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும் – எனக்கு பல பல சோதனைகள் உண்டு – கொஞ்சம் கொஞ்சமாக சுத்தி அடைந்து கொண்டுதான் இருக்கிறேன் என நினைக்கிறேன்

  நான் கேட்ட பல கேள்விகளுக்கு (ஆழார் நாயன்மார்கள் உட்பட) பதிலே இல்லை – மாறாக கோபுரம் விஷயம் போன்ற சத்தில்லாத வற்றிலே உங்கள் கண் இருக்கிறது – மையக் கருத்தை நீங்கள் இன்னும் புரிந்தபாடில்லை என்றே நினைக்க தோன்றுகிறது

 121. Sarang on February 15, 2010 at 7:09 pm

  அத்வேஷ்டா நிலை அடைந்த சிலரை நான் நேரில் பார்த்து பழகி இருக்கிறேன் – அதில் ஒன்றை பகிந்து கொள்கிறேன்

  கர்நாடகதிதில் உள்ள மேல்கோட்டை நும் ஊரில் வைர முடி சேவை பிரசித்தம் – அங்கு ஒரு முறை சென்றிருக்கும் பொது ஒரு மகானின் இல்லத்தில் தங்கி இருந்தேன் – வைர முடி சேவை காண வரும் எல்லோருக்கு அந்த ஊரில் உள்ளவர்கள் இடம் கொடுத்து உணவு அளிப்பார்கள் – இவர் வீட்டிலோ நிறைய கூட்டம் – அதில் ஒருவர் கழிவறைக்கு செல்லாமலேயே வெளியிலேயே (வீட்டிற்குள் தான்) சிறு நீர் கழித்து விட்டார் – இதை பார்த்த அந்த மகானின் மைத்துனரின் மகள் அவரை கடிந்து கொண்டால், இவரிடம் வந்து புலம்பினாள் – அதற்க்கு அந்த மகான் சரி விடு கழவி விடாலாம் – அவசரம் என்று தானே போயிருப்பார் என்று முகத்தில் கொஞ்சம் கூட வெறுப்போ கோவமோ இல்லாமல் சொன்னார்

  இவர் சத் காரியங்களுக்காக திரட்டி வைத்திருத சுமார் 3 லட்சம் பணத்தை அவரது சிஷ்யர் ஒருவரே களவு செய்து விட்டார் – இவருக்கு திருடியாது யார் என்று தெரிந்த போதிலும் அவரை காட்டிக்கொடுக்காமல் ஏன் என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் – சரி அவருக்கு என்ன முடையோ பணம் தேவை பட்டிருக்கும் எடுத்துக்கொண்டார் என்றார் (திருப்பி அந்த 3 லட்சம் பிரட்டுவது என்பது அவருக்கு ஒரு சாதாரண காரியம் அல்ல)

  தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது

  கிராமத்தில் ஒருவன் இருந்தான் அவனுக்கு விடம் விடாமை காய் சமைத்து உன்ன பிடிக்கும் – அன்று ஒரு நூறு ரூபாய் எடுத்துக் கொண்டு காய் வாங்க சென்றான் – சண்டைக்கு போன பிறகு தன தெரிகிறது அவனது பயில் வித்திருந்த நூறு ரூபாயை யாரோ களவாடி விட்டார்கள் என்று – உடனே அவன் கலவாடினவன் யாரோ அவனுக்கு இது நேரட்டும், அது நேரட்டும் என்று கோபத்தில் சாபம் கொடுக்க ஆரம்பித்து விட்டான்

  மறு நாள் மறுபடியும் நூறு ருபாய் எடுத்துக்கொண்டு சண்டைக்கு செல்கிரார்ன் – வழியில் ஒரு சிறுவன் அழுது கொண்டே செல்வதை பார்கிறான் – அவனிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்க அதற்க்கு அந்த சிறுவன் இன்னிக்கு பள்ளியில் பணம் செலுத்த வேண்டும், கடைசி நாள், செல்த்தாவிடில் என்னால் படிக்க முடியாது என்று – உடனே தான் கொண்டு வந்த நூறு ரூபாயை மகிழ்ச்சியுடன் அந்த சிறுவனுக்கு தருகிறான் – பின்னர் வீடு திர்புகிறான் – அவன் செய்த நல்ல காரியத்தை நினைத்து அவனுக்கோ ஒரே மகிழ்ச்சி

  இரண்டு சந்தர்ப்பதிலும் போன தென்னவோ நூறு ருபாய் ஆனால் ஒன்றில் மகிழ்ச்சி, ஒன்றில் கோவம் – இப்படி இல்லாமால் இரண்டையும் சமமாக பார்க்கும் நிலை தான் அத்வேஷ்ட நிலை, சம நோக்கு, அல்லது கண்ணன் விரும்பும் ஸ்திதப் பிரஜ்யன் என்பவன்

  இதே விஷயத்தை ராமானுஜர் அவரின் சிஷ்யர்களுக்கு பிள்ளை உறங்காவில்லி தாசர் மற்றும் அவரது துணைவியார் கொண்டு உணர்த்துகிறார்

 122. Sarang on February 15, 2010 at 8:32 pm

  திருச்சிகாரரே

  உங்களின் நல்ல மனதை, ஹிந்து மதம் சமரசத்துடன் தழைத்தோங்கி வளர வேண்டும் என்ற என்னத்தை புரியாமல் இவ்வளவையும் எழுடைல்லை – ஒரு நல்ல விஷயத்தை தவறாக அர்த்தம் கொண்டு அது எங்கே நம் மதத்திற்கு ஆபத்து விளைவித்து விடுமோ என்று நினைகிறீர்கள் – நீங்கள் கூறும் surface level விஷயம் அல்ல புறம் தொழாமை – அதன் உட்கருத்து என்ன என்பதையே விளக்க நினைத்தேன்

  இதை இத்தோடு விடுவது சிறந்தது என நினைக்கிறேன் – we can agree to disagree (compromise)

 123. திருச்சிக் கார‌ன் on February 15, 2010 at 9:47 pm

  ம‌திப்பிற்குரிய‌ க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளே,

  நான் முனைவ‌ரின் க‌ட்டுரையை முத‌லில் முழுதாக‌ப் ப‌டைக்க‌வில்லை. அத‌னால் தான் நீங்க‌ள் கூறிய‌ க‌ருத்தை நான் க‌வனித்திருக்க‌வில்லை.

  விட‌ய‌த்திற்க்கு வ‌ருகிறேன். புற‌ம் தொழாமை விட‌ய‌மாக‌ நான் எழுதிய‌ க‌ருத்துக்க‌ளை எல்லாம் நீங்க‌ள் ப‌டித்து இருப்பீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன். நான் எழுதிய‌ க‌ருத்துக்க‌ளில் கொஞ்ச‌ம் கூட‌ நியாய‌ம், ந‌ன்மை, லாஜிக் இருப்ப‌தாக‌ நீங்க‌ள் கருத‌வில்லையா?

  நீங்க‌ள் இப்போது கூறிய‌ க‌ருத்து

  //ஆழ்வார் பாடல்களிலும், ஆச்சாரியர்கள் நூல்களிலும் பிரபந்தங்களிலும் புறந்தொழாமை கட்டளையாக இடப்பட்டுள்ளது. இதை விட வேண்டும் என்றால் இப்பொழுது கூறிய நூல்களுக்கு ஜலதர்ப்பணம் செய்து விட வேண்டியது தான். இதை யார் ஏற்பார்கள்? சைவர்களும் நாயன்மார்கள் பாடல்களை விட்டுவிட வேண்டியது தான். இதை அவர்கள் ஏற்பார்களா என்று கூறுங்கள்.//

  ‍ஆழ்வார்க‌ள், நாய‌ன்மார்க‌ள் யாரையும் நான் விட்டுக் கொடுக்க‌வில்லை. அவ‌ர்க‌ளின் ப‌க்தி,அர்ப்பணிப்பு, ஒழுக்க‌ம், ஆற்ற‌ல், துற‌வு இவை எல்லாம் மிக‌ச் சிற‌ந்த‌வை. அவ‌ர்க‌ளை நான் பாராட்டுகிறேன், பணிகிறேன். ஆனால் அவ‌ர்க‌ளின் எத்த‌னையோ முக்கிய‌ கொள்கைக‌ளை, க‌ருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு இந்த‌ப் புற‌ம் தொழாமை க‌ருத்துதான் அவ‌ர்க‌ளின் மிக‌ முக்கிய‌ க‌ருத்து போல‌ அத‌ற்க்கு இத்த‌னை அழுத்த‌மும் முக்கிய‌த்துவ‌மும் த‌ர‌ வேண்டிய‌து அவ‌சிய‌மா?

  ஆதி ச‌ங்க‌ர‌ர் புற‌ம் தொழாத‌வ‌ராக‌ இல்லையே, விவேகான‌ந்த‌ர் இன்னும் ஒரு ப‌டி மேலே போய் இரூக்கிரார் (இதை நான் ஒரு முந்தைய‌ பின்னூட்ட‌த்தில் ப‌திவு செய்து இருக்கிறேன்). இந்து ம‌த‌ம் புற‌ம் தொழாமை க‌ருத்தை வ‌லியுருத்துகிற‌தா?

  இசுலாம் புற‌ம் தொழாமை க‌ருத்தை வ‌லியுருத்துகிற‌து. லா இலாஹா இல் அல்லாஹு, முஹ‌ம்ம‌து ரசூல் அல்லாஹூ ‍ இல்லை ஒரு க‌ட‌வுள் அல்லாவினைத் த‌விர‌. அல்லாஹ்வைத் த‌விர‌ யாரையும் தொழ‌க் கூடாது, அப்ப‌டி தொழும் புற‌ முறைக‌ளும் ம‌றுக்க‌ப் ப‌ட்டு உள்ள‌து. அத‌னால் தான் தாலிபான் கார‌ர்க‌ள் பாமியான் ப‌குதியில் உள்ள‌ புத்த‌ர் சிலைக‌ளை பீர‌ங்கி வைத்து த‌க‌ர்த்த‌ன‌ர். ம‌ற்ற இட‌ங்க‌ளிலும் த‌க‌ர்க்க‌ வேண்டும் என்ப‌தே அவ‌ர்க‌ள் மத‌க் க‌ட்ட‌ளை.

  ஆனால் இந்து ம‌த‌த்தின் அடிப்ப‌டைக‌ளில் இது போல‌ப் புற‌ந் தொழாமை க‌ருத்து இருக்கிர‌தா? இதில் குழப்பி மறைத்தும் மழுப்பியும் பேசுவ‌து யார்?

  முண்ட‌க‌, க‌ட‌, தைத்திரிய‌, பிருஹாத‌ர‌ண்ய‌ உப‌னிட‌த‌ங்க‌ளில் புற‌ந் தொழாமை க‌ருத்து இருக்கிர‌தா?

  ப‌க‌வ‌த் கீதையில் புற‌ந் தொழாமை க‌ருத்து இருக்கிர‌தா?

  கிருட்டிண‌ர் புற‌ந் தொழ‌க் கூடாது என்று சொன்னாரா?

  இதில் குழப்பி மறைத்தும் மழுப்பியும் பேசுவ‌து யார்?

  இதை நான் ஏன் இவ்வ‌ளவு தூர‌ம் விவாதிக்கிறேன். என‌க்கு உங்களை இடையூறு செய்ய‌ ஆசையா? இந்தப் புற‌ந் தொழாமை கொள்கை, வெறுப்பை, பூச‌லை, மோத‌லை, போரை உருவாக்க‌க் கூடிய‌து.

  நீங்க‌ள் பொறுமையாக‌ சிந்தியுங்க‌ள். சார்பு நீக்கி சிந்தியுங்க‌ள். உங்க‌ளுக்கே உண்மை புல‌ப் ப‌டும்.

  இந்தியாவில் எத்த‌னை இந்துக்க‌ள் புற‌ந் தொழாமை க‌டைப்பிடிக்கிறார்க‌ள்? இந்தியாவில் பெரும்பாலாலான‌ இந்துக்க‌ள் வினாய‌க‌ரையும் தொழுவார்க‌ள், சிவ‌னையும் தொழுவார்க‌ள், வேங்க‌டாச‌ல‌ப‌தியையும் தொழுவார்க‌ள். எந்த‌ இந்துக் கோவுலுக்குள்ளும் சென்று வ‌ண‌ங்க‌ த‌ய‌ங்காத‌வ‌ர்க‌ள். குறிப்பிட்ட‌ இந்துக் கோவிலுக்குள் நுழைய‌வோ, வ‌ண‌ங்க‌வோ கூடாது என‌ விர‌த‌ம் பூணாத‌வ‌ர்க‌ள்

  அப்ப‌டிப் ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌ ப‌ல‌ க‌ட‌வுள்களை தொழுத‌வ‌ர்க‌ளின் ச‌ந்த‌தியின‌ர் தானே இன்று இந்து ம‌த‌த்தில் பெரும்பான்மையின‌ர். இப்ப‌டி இத்த‌னை வ‌ருட‌ம் ச‌ம‌ர‌ச‌ தொழுகை செய்த‌ இந்துக்க‌ள் திடீரென‌ ஆன்மீக‌ நாட்ட‌ம் இழ‌ந்து விடுவார்க‌ள் என‌ எப்ப‌டிக் கூற‌ முடியும்?

  என‌வே ஆபிர‌காமிய‌ க‌ருத்தான‌ புற‌ந்தொழாமையைக் க‌டைப் பிடித்தால் இந்து ம‌த‌ம் த‌ன்னை அறியாம‌லேயே ஆபிர‌காமிய‌ ம‌த‌மாகி விடும்.

  //எல்லாவற்றையும் போட்டு குழப்பி மறைத்தும் மழுப்பியும் பேசி//
  இப்ப‌டி சொல்வ‌து ச‌ரியா? நான் தெளிவாக‌த் தான் பேசுகிரேன். வெளிப்ப‌டையாக‌த்தான் பேசுகிரேன், நேராக‌த்தான் பேசுகிறேன்!

  ம‌ன‌சாட்சியை தொட்டு சொல்லுங்க‌ள், நான் குழ‌ப்பி ம‌ழுப்புகிறேனா?

 124. கந்தர்வன் on February 16, 2010 at 5:21 am

  அன்புள்ள திருச்சிக்கரர் அவர்களுக்கு,

  //
  விட‌ய‌த்திற்க்கு வ‌ருகிறேன். புற‌ம் தொழாமை விட‌ய‌மாக‌ நான் எழுதிய‌ க‌ருத்துக்க‌ளை எல்லாம் நீங்க‌ள் ப‌டித்து இருப்பீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன். நான் எழுதிய‌ க‌ருத்துக்க‌ளில் கொஞ்ச‌ம் கூட‌ நியாய‌ம், ந‌ன்மை, லாஜிக் இருப்ப‌தாக‌ நீங்க‌ள் கருத‌வில்லையா?
  //

  சாரங் சொல்லியது போல நீங்கள் நல்ல எண்ணத்துடன் தான் எழுதியிருக்கிறீர்கள் என்று பூரணமாக நம்புகிறேன். ஆனால், ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்டது அன்று என்று தெரிகிறது. நீங்கள் கூறுவது:

  “இரண்டு பேர் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் கடவுட் கொள்கைகளை ஒருசேர ஒடுக்க வேண்டும்” என்பதே.

  நான் கூறுவது:

  “முரண்பட்ட கடவுட் கொள்கைகள் இரண்டினை ஒருசேர ஒடுக்கினால், அவ்விரு கொள்கைகளும் வலுவிழந்து நிற்கும். ‘கடவுள் என்பது மனிதனின் கற்பனையே’ என்ற நிலைக்கு வந்து சேர வேண்டிவரும். இதனால், இரு தரப்பில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் அவரவர் மதத்தில் ஈடுபாடு குறைந்து விடும். வழிபாட்டிலும் கடவுள் நம்பிக்கையிலும் ஈடுபாடு குறைந்து விடும். மதக் கொள்கைகளை இங்கும் அங்குமாக மாற்றி அமைத்தால் இறுதியில் அது அம்மதத்தை அழித்ததற்குத் துல்லியமாகிவிடும். மாறாக, நான் முன் பதிப்பில் கூறிய protocol-ஐ follow பண்ணினால், நிரந்தரமான ஒற்றுமை நிலவும்.”

  //
  ஆனால் அவ‌ர்க‌ளின் எத்த‌னையோ முக்கிய‌ கொள்கைக‌ளை, க‌ருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு இந்த‌ப் புற‌ம் தொழாமை க‌ருத்துதான் அவ‌ர்க‌ளின் மிக‌ முக்கிய‌ க‌ருத்து போல‌ அத‌ற்க்கு இத்த‌னை அழுத்த‌மும் முக்கிய‌த்துவ‌மும் த‌ர‌ வேண்டிய‌து அவ‌சிய‌மா?
  //

  ஆழ்வார் கூறியவற்றுள் முழுமையையும் ஏற்றுக் கொள்வார்கள் வைணவர்கள். இதில் புறந்தொழாமையும் ஒன்று. மற்ற கொள்கைகளை எல்லாம் நாங்கள் ஒரு பொழுதும் விட்டு விடவில்லை. நீங்கள் தான் அப்படி நினைக்கிறீர்கள். புறந்தொழாமை விஷயத்தில் ‘ஆழ்வார்களை விட நாம் தான் விஷயம் தெரிந்தவர்கள்’ என்று எண்ணுவது முட்டாள்தனம்.

  //
  ஆதி ச‌ங்க‌ர‌ர் புற‌ம் தொழாத‌வ‌ராக‌ இல்லையே
  //

  ஆதி சங்கரர் எழுதிய தத்துவ அடிப்படையிலான நூல்களைப் படித்தால் நீங்கள கூறுவது சரி அன்று என்று விளங்கும். இதற்கு மேல் இதைப் பற்றிய விசாரம் இங்கு வேண்டாம். இந்த விவாதத்தில் உங்களுக்கு இஷ்டம் இருந்தால் ஏன் நண்பரின் http://bhagavatas.blogspot.com என்னும் தளத்தில் “contact us” பேஜ்-இல் தொடர்பு கொள்ளவும்.

  //
  இந்து ம‌த‌ம் புற‌ம் தொழாமை க‌ருத்தை வ‌லியுருத்துகிற‌தா? ….
  ஆனால் இந்து ம‌த‌த்தின் அடிப்ப‌டைக‌ளில் இது போல‌ப் புற‌ந் தொழாமை க‌ருத்து இருக்கிர‌தா?…
  //

  இந்து மதம் என்பது ஒரு தனிப்பட்ட கொள்கை அன்று. ஆகையால் ‘இந்து மதம் இதைக் கூறுகிறதா, அதைக் கூறுகிறதா’ என்று கேட்பதில் அர்த்தம் இல்லை.

  //
  அல்லாஹ்வைத் த‌விர‌ யாரையும் தொழ‌க் கூடாது, அப்ப‌டி தொழும் புற‌ முறைக‌ளும் ம‌றுக்க‌ப் ப‌ட்டு உள்ள‌து. அத‌னால் தான் தாலிபான் கார‌ர்க‌ள் பாமியான் ப‌குதியில் உள்ள‌ புத்த‌ர் சிலைக‌ளை பீர‌ங்கி வைத்து த‌க‌ர்த்த‌ன‌ர்.
  //

  நீங்கள் ‘அதனால் தான்’ என்று கூறுவது தவறு. அவர்கள் கொள்கையில் “மற்ற மதங்களை கடைபிடிப்பவர்கள் காபிர்கள். கயவர்கள். அவர்களைப் போய் கொன்று விடு, அழித்து விடு, அவர்கள் கோயில்களைச் சூறையாடு. அல்லாஹ்வை ஏற்கவில்லை என்றால் அவர்களைக் கொன்று விடு” இப்படி எல்லாம் உள்ளமையே காரணம். அவர்கள் கொள்கையில் கீதையில் வருவதைப் போல், “அத்வேஷ்டா சர்வ பூதானாம்” என்பதும், தாயுமானவர் பாடல்களில் வரும் “எல்லாம் உன் படைப்பு என்பதால் பூசைக்காக பூவைப் பறிக்கவும் என் கை மறுக்கிறது.” என்பது போன்றவையும் அவர்களுடைய பிரச்சாரங்களிலும் பதிப்புகளிலும் சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்காது.

  //
  கிருட்டிண‌ர் புற‌ந் தொழ‌க் கூடாது என்று சொன்னாரா?
  //

  சொன்னார். கீதை 7.17-7.23, 9.23-9.25, 6.47, 13.10 – இவற்றையும் இவற்றின் பாஷ்யங்களையும் படியுங்கள். சரம சுலோகமாகிய 18.66-இல் “மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்று உள்ளது. வெறுமென “மாம் சரணம் வ்ரஜ” என்று இல்லை.

  //
  முண்ட‌க‌, க‌ட‌, தைத்திரிய‌, பிருஹாத‌ர‌ண்ய‌ உப‌னிட‌த‌ங்க‌ளில் புற‌ந் தொழாமை க‌ருத்து இருக்கிர‌தா?
  //

  இல்லை. ஏனெனில் இவ்வுபநிஷத்தில் கூறப்படும் விஷயங்கள் வேறு. வேறு உபநிஷத்தில் “காரணம் து தியேய” (காரண வஸ்து எதுவோ அதையே வழிபடு) என்று உள்ளது. இதன் அடிப்படையில் தான் புறந்தொழாமை அமைந்துள்ளது.

  //
  இந்தப் புற‌ந் தொழாமை கொள்கை, வெறுப்பை, பூச‌லை, மோத‌லை, போரை உருவாக்க‌க் கூடிய‌து.
  //

  வெறுமென “புறந்தொழாமையால் பூசலும் மோதலும் உண்டாகும்” என்று சொல்லிவிட்டால் அது உண்மையாகி விடாது. நிரூபிக்க வேண்டும். ஆபிரகாமிய மதத்தவர்கள் சிலரின் போரை உருவாக்கும் போக்கு புறந்தொழாமையால் அல்ல என்பதை மேற்கூறியதிலிருந்து படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

  //
  நீங்க‌ள் பொறுமையாக‌ சிந்தியுங்க‌ள். சார்பு நீக்கி சிந்தியுங்க‌ள். உங்க‌ளுக்கே உண்மை புல‌ப் ப‌டும்.
  //
  நான் பொறுமையாகத் தான் ஆராய்ந்து இம்முடிவுக்கு வந்துள்ளேன். மேற்கூறியவற்றை படித்து நீங்கள் அதே முடிவுக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன். இவற்றை எல்லாம் எழுதுவதற்கு நான் புறந்தொழாதவனாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நடுநிலையான ஒரு நாத்திகர் கூட இதைத் தான் கூறுவார்.

  //
  அப்ப‌டிப் ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌ ப‌ல‌ க‌ட‌வுள்களை தொழுத‌வ‌ர்க‌ளின் ச‌ந்த‌தியின‌ர் தானே இன்று இந்து ம‌த‌த்தில் பெரும்பான்மையின‌ர். இப்ப‌டி இத்த‌னை வ‌ருட‌ம் ச‌ம‌ர‌ச‌ தொழுகை செய்த‌ இந்துக்க‌ள் திடீரென‌ ஆன்மீக‌ நாட்ட‌ம் இழ‌ந்து விடுவார்க‌ள் என‌ எப்ப‌டிக் கூற‌ முடியும்?
  //

  இன்றைய இந்து மதத்தில் இது தான் பெரும்பான்மையாக இருந்தாலும் வரலாற்று சான்று முற்காலத்தில் எது பெரும்பான்மை என்பது வேறு.

  //
  என‌வே ஆபிர‌காமிய‌ க‌ருத்தான‌ புற‌ந்தொழாமையைக் க‌டைப் பிடித்தால் இந்து ம‌த‌ம் த‌ன்னை அறியாம‌லேயே ஆபிர‌காமிய‌ ம‌த‌மாகி விடும்.
  //

  அரங்கம், வேங்கடம் முதலான இடங்களில் கோயில் கொண்டுள்ள பகவானுடைய திவ்விய மங்களத் திருமேனியிலே காதல் கொண்டு வீடு பெறும் வைணவம், “சிலைகளை வழிபடக் கூடாது” என்று கூறும் ஆபிரகாமியர் மதமாக மாறுமா? “வைஷ்ணவன் என்பவன் மற்றவர்களுடைய கஷ்டத்தை நினைத்து வாடுபவன், ஓடிப்போய் அவர்களுக்கு தொண்டு புரிபவன்; சிருஷ்டி எல்லாம் வைணவ தத்துவமே (புருஷா வைஷ்ணவாஹா)” என்று கூறும் புறன்தொழா மதம் எப்படி கொலை வெறியர்களை உண்டாக்கும் என்று நீங்கள் யோசியுங்கள்.

  //
  இப்ப‌டி சொல்வ‌து ச‌ரியா? நான் தெளிவாக‌த் தான் பேசுகிரேன். வெளிப்ப‌டையாக‌த்தான் பேசுகிரேன், நேராக‌த்தான் பேசுகிறேன்!

  ம‌ன‌சாட்சியை தொட்டு சொல்லுங்க‌ள், நான் குழ‌ப்பி ம‌ழுப்புகிறேனா?
  //

  உங்களைச் சொல்லவில்லை. புரியாதபடி எழுதியதற்கு மன்னிக்கவும். நான் சொல்ல வந்தது: நீங்கள் கூறும் “எல்லாம் ஒன்று தான், எல்லாம் பரம்பொருளே” என்னும் கொள்கையானது, எல்லாவற்றையும் (எல்லா மதத்தையும்) போட்டு குழப்பி மறைத்தும் மழுப்பியும் பேசி வந்தால் தான் சாத்தியம் என்பதே. அப்படி எல்லாக் கொள்கைகளையும் குழப்பிக் கொண்டால் பல கேள்விகளுக்கு பதில் கூற முடியாது. அதன் விளைவாக அடுத்த தலைமுறையினர் நாத்திகத்துக்குச் சென்று விடுவார்கள்.

  இனியாகிலும், “புறந்தொழாமை காட்டுமிராண்டித் தனமான concept” என்று சொல்வதை நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி. விவாதம் இத்துடன் முடிவடையட்டும். இனி, நான் கூறிய protocol-ஐ அனுசரிப்போம். அது தான் சர்ச்சைக்கு இடம் இல்லாத வழி.

 125. S Raman on February 16, 2010 at 9:31 am

  “மறந்தும் புறந்தொழா மாந்தர்கள்” எவர்? மறதி என்றாலே நினைவு என்பதை ஒட்டிய செயலே. மறதி என்று குறிப்பிடப்படுவது எதை? இறைவனைத்தான். அதுவும் நமக்கு நினைவு, மறதி, தொழுதல் எல்லாமே நம் விழிப்பு நிலையில் தான். ஆக தொழும்போது இறைவனை மறந்து விட்டாலும் (ஏனென்றால் அது எதற்கு தொழுகிறோம் என்பதைப் பொறுத்தது -காமிய காரணங்களுக்காக இருக்கலாம்), இறைவன் புறத்தில் இல்லை அகத்தில்தான் உள்ளான்; அவனன்றி நாம் இல்லை என்ற பாவம் அவனைப்பற்றி நினைவு இல்லாவிட்டாலும் நமக்கு எப்போதும் இருக்கும். ஆக எவருமே அப்படிப்பட்டவர்கள்தான். புறம் என்று வந்துவிட்டாலே அதற்கு கண், மூக்கு, பெயர் என்று எல்லாம் வந்து விடுகிறது. அகத்தை விடாதிருத்தாலே முக்கியம். புறத்தில் வருவது ஒரு காலத்தில் போக வேண்டியதே.

 126. Sarang on February 16, 2010 at 1:12 pm

  நண்பரே

  //
  என‌வே ஆபிர‌காமிய‌ க‌ருத்தான‌ புற‌ந்தொழாமையைக் க‌டைப் பிடித்தால் இந்து ம‌த‌ம் த‌ன்னை அறியாம‌லேயே ஆபிர‌காமிய‌ ம‌த‌மாகி விடும்.
  //

  முதலில்
  புறம் தொழாமை எதோ ஆபிராமிய தாக்குதலின் பேரில் வந்ததென்று சொல்லுவது முற்றிலும் தவறு – அது மிக தொன்மையானதே

  இரண்டாவதாக
  இங்கு யாருமே புறம் தொழாமை மட்டுமே சிறந்தது என்று கூறவில்லை, – இதுவும் ஒரு நல்ல நிலையே என்று தான் கூறி வருகிறோம் – இதை குறை கூறுவது தான் குழப்பம் விளைவிக்க நினைப்பதாகும்
  எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தவில்லை – அப்படி கடைபிடுக்கும் இப்போது சிறுபான்மையினரை அவ்வண்ணம் கூடாது அது காட்டு மிராண்டி தனம் என்று சொல்வதை மட்டுமே தவறு என்கிறோம்

  //
  ‍ஆழ்வார்க‌ள், நாய‌ன்மார்க‌ள் யாரையும் நான் விட்டுக் கொடுக்க‌வில்லை. அவ‌ர்க‌ளின் ப‌க்தி,அர்ப்பணிப்பு, ஒழுக்க‌ம், ஆற்ற‌ல், துற‌வு இவை எல்லாம் மிக‌ச் சிற‌ந்த‌வை. அவ‌ர்க‌ளை நான் பாராட்டுகிறேன், பணிகிறேன். ஆனால் அவ‌ர்க‌ளின் எத்த‌னையோ முக்கிய‌ கொள்கைக‌ளை, க‌ருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு இந்த‌ப் புற‌ம் தொழாமை க‌ருத்துதான் அவ‌ர்க‌ளின் மிக‌ முக்கிய‌ க‌ருத்து போல‌ அத‌ற்க்கு இத்த‌னை அழுத்த‌மும் முக்கிய‌த்துவ‌மும் த‌ர‌ வேண்டிய‌து அவ‌சிய‌மா?
  //

  அவர்கள் பக்தியில் மட்டுமல்ல ஞானத்திலும் சிறந்தவர்கள் – திருச்சந்த விருத்தம் என்று ஒரு பிரபந்தம் உண்டும் அது முழுவதும் வேதாந்தம் – அராம்பமே – பூ நிலைய ஐந்துமாய் , புனல் கண் நின்ற நான்குமாய், .. மூன்று முப்பதினாரிநோடோ, ஆறும் ஆறும் ஆருமாய் இப்படி போகிறது – அவர்கள் எதோ அஞ்ஞானத்தில் புறம் தொழாமையை முன் வைத்தனர் என்பது சரி யல்ல

  இதற்க்கு மட்டும் அழுத்தம் தரவில்லை. விஷிச்டாத்வைத்த மதமே உபய வேடான்டம் என கருதப்படும் வாடா மொழி வேதத்தையும், தமிழ் வேடமாம் பிரபந்தத்தையும் ஒருங்கிணைத்து உருவானதே – ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆழ்வார்கள் மேல் கொண்ட காதலை நீங்கள் நேரில் பார்த்தால் தான் புரியும்

  //
  முண்ட‌க‌, க‌ட‌, தைத்திரிய‌, பிருஹாத‌ர‌ண்ய‌ உப‌னிட‌த‌ங்க‌ளில் புற‌ந் தொழாமை க‌ருத்து இருக்கிர‌தா?
  //
  ஆன்ம நிலை என்ன – ஆன்மா என்ன செய்ய வேண்டும் – பரமாத்வையே அடைய வேண்டும் – பலன் தரும் தொழுதல் ஒரு புறம் இருக்க – முக்தி தரும் விசாரமே வலியுறுத்தபடுகிறது – மோக்ஷ சாதனம் என்று பரமாத்மாவையே குறிக்கிறது – மோக்ஷம் விரும்புவோர் பரமாத்மாவை மட்டுமே த்யானம் செய்ய வேண்டும் என்று உள்ளது – இந்த உபநிஷத்களில் சொல்லப்படும் பரமாத்மாவாக யாரை கொள்ள வேண்டும் என்று ஆதி சங்கரர் தெளிவாக சொல்லிவிட்டார் (குறிப்பு – ராமானுஜர் உபட்னிஷட்களுக்கு தனியாக பாஷ்யம் செய்ய வில்லை – மத்வர் செய்த வியாக்யானம் நான் இதுவரை படித்ததில்லை)

  //
  அப்ப‌டிப் ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌ ப‌ல‌ க‌ட‌வுள்களை தொழுத‌வ‌ர்க‌ளின் ச‌ந்த‌தியின‌ர் தானே இன்று இந்து ம‌த‌த்தில் பெரும்பான்மையின‌ர். இப்ப‌டி இத்த‌னை வ‌ருட‌ம் ச‌ம‌ர‌ச‌ தொழுகை செய்த‌ இந்துக்க‌ள் திடீரென‌ ஆன்மீக‌ நாட்ட‌ம் இழ‌ந்து விடுவார்க‌ள் என‌ எப்ப‌டிக் கூற‌ முடியும்?
  //

  இதற்கு வெகு எளிய சான்று காட்ட முடியும் – சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தவர் இருவர் – இருவரின் பிறந்த ஊருக்கும் சித்திரை ஆதிரை நாளில் சென்று என்ன நடக்கிறது என்று பார்த்து தெறிந்து கொள்ளுங்கள் – ஒரு மாஹா புருஷருக்கு நம்மால் செய்ய வேண்டிய தொண்டை தவற விடுகிறோம் என்றே எனக்கு தோன்றியது

  ஆன்மிக நாட்டம் இழந்து விடுவார்கள் என்று கூறவில்லை – இதில் நீங்கள் காண வேண்டிய விஷயம் வேறு

  மறுபடியும் ஒரு முறை இதை படியுங்கள் இந்நிலை நல்ல நிலை என்றே உங்களுக்கு தோன்றும் – அதில் உள்ள ஆழமான பக்தியும் ஞானமும், தத்துவமும் வெளிவரும்


  – என்னை பொறுத்த வரைக்கும் (ஆழ்வார் சொன்னதும்) மறந்தும் புறம் தொழா மாந்தர் என்பதில் – தொழா என்பதற்கு சரணாகதி என்று அர்த்தம் – “அடியேன்” ஏற்கனவே சரணாகதி செய்தாகிவிட்டது – இனி ஒருவருக்கும் செய்ய இயலாது அப்படி செய்தால் அதற்கு பெயர் சரணாகதி கிடையாது – உடல் பொருள் ஆவி அனைத்தையும் அற்பநிப்பதே சரணாகதி என்பதாகும் – யசுர் வேத ப்ராதஸ் சந்த்யா உபஸ்தானத்தில் இந்த கருத்தே வருகிறது அதிலாவது நான் அர்பணிக்கிறேன் என்று வருகிறது, இங்கு அடியேன் கூறுவது இந்த நிலையே – எனது ஆவி தண்டோழிந்தேன் இனி மீல்வதேன்பாடு உளதோ என்று சொல்ல முற்பட்டு உடனே ஆன்ம நிலையை அறிந்து எனதாவி யார் – நான் யார் தந்த நீ கொண்டாக்கினையே
  அதாவது நான் உன்னை சரண் அடைந்தேன் என்றல்லாமல் – உன்னுடைய சொத்தான ஆத்மாவை நீயே திரும்ப எடுத்துக் கொண்டாய் என்பதாகும்

  இப்படி பட்ட நிலை தான் புறம் தொழாமை – எனது ஆன்மாவே அவனிடம் உள்ளது அப்படி இருக்கையில், நான் எங்கே, நான் இல்லாத பொது நான் யாரை தொழுவேன் (யாரிடம் சரண் புகுவேன்)

  தயவு செய்து கொஞ்சம் நேரம் செலவழித்து மேலே கூறியதை மனதில் நிறுத்துங்கள் – உங்களுக்கு நான் சொல்லவந்தது புரிய வரலாம்
  —-

  இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களின் உள்ளத்தில் பகவான் தான் குடி இருப்பான் – வெறுப்பு இருக்காது

 127. Sarang on February 16, 2010 at 1:17 pm

  திரு ராமன் அவர்களே

  இது ஒரு நல்ல interpretation ஆகா உள்ளது

  இந்த காமிய காரணங்கள் கூடாது – ஆன்மாவை அவனுள்ளே ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் புறம் தொழாமை ஒரு நல்ல நிலையாகிறது

  //
  மறந்தும் புறந்தொழா மாந்தர்கள்” எவர்? மறதி என்றாலே நினைவு என்பதை ஒட்டிய செயலே. மறதி என்று குறிப்பிடப்படுவது எதை? இறைவனைத்தான். அதுவும் நமக்கு நினைவு, மறதி, தொழுதல் எல்லாமே நம் விழிப்பு நிலையில் தான். ஆக தொழும்போது இறைவனை மறந்து விட்டாலும் (ஏனென்றால் அது எதற்கு தொழுகிறோம் என்பதைப் பொறுத்தது -காமிய காரணங்களுக்காக இருக்கலாம்), இறைவன் புறத்தில் இல்லை அகத்தில்தான் உள்ளான்; அவனன்றி நாம் இல்லை என்ற பாவம் அவனைப்பற்றி நினைவு இல்லாவிட்டாலும் நமக்கு எப்போதும் இருக்கும். ஆக எவருமே அப்படிப்பட்டவர்கள்தான். புறம் என்று வந்துவிட்டாலே அதற்கு கண், மூக்கு, பெயர் என்று எல்லாம் வந்து விடுகிறது. அகத்தை விடாதிருத்தாலே முக்கியம். புறத்தில் வருவது ஒரு காலத்தில் போக வேண்டியதே.
  //

 128. armchaircritic on February 16, 2010 at 4:49 pm

  மேலே சாரங், கந்தர்வன், திருச்சிக்காரன் ஆகியோருடைய மறுமொழிகளை படிக்கும் போது எனக்கு இப்படி தோன்றியது. அதாவது –
  மறந்தும் புறம்தொழா மாந்தர்கள் = பிறன்மனை நோக்கா பேராண்மை

 129. Sarang on February 16, 2010 at 5:38 pm

  armchaicritic அவர்களே
  //
  மறந்தும் புறம்தொழா மாந்தர்கள் = பிறன்மனை நோக்கா பேராண்மை
  //

  கணவனே கண் கண்ட தெய்வம் போல என்று சொன்னதற்க்கே kargil jai என்னை கடிந்து கொண்டார் 🙂 – கொஞ்சம் தர்க்கம் செய்ய வேண்டியாதாயிற்று

  பிறன்மனை நோக்கா பேராண்மை – இது பிறரை கொஞ்சம் குறை கூறுவது போல ஆகிவிடும் – அத்வைத மார்கத்தை பொதுவாக பின் பற்றுவோர் – தத்வம் ஆசி, அஹம் பிரம்மாஸ்மி, சர்வம் கல்விதம் பிரம்மம், அனைத்தும் ஒரே ஆத்மா தான் என்ற நிலையில் இருந்து தொழும் ஞானிகள், சிவன் முக்தர் போன்றோருக்கு இந்த புறம் தொழமை தேவை இராது – எல்லாமே ஒரே ஆத்மா என்னும் போது எல்லாமே அகம் ஆகிவிடும் புறத்திற்கு அவசியம் இல்லை என்று கொள்ளலாம் அல்லவா – எதற்கும் அபாவம் வராமல், யாருடைய வழிமுறைக்கும் பங்கம் இல்லாமல் “கணவனே கண் கண்ட தெய்வம்” [அதாவது எப்படி தன்னுடைய கணவனையே தெய்வமாக கொண்டு அவன் சேவையிலே ஆழ்ந்து இருப்பாளோ அதே போல ஒரு பகவத் ஸ்வரூபத்தை ஒரே புருஷன் என கருதி, தன்னை ஸ்த்ரி என்று பாவித்து இருப்பது] என்ற உதாரணம் better என்று நினைக்கிறேன் – தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள்

 130. Sarang on February 16, 2010 at 5:42 pm

  ஒரு திருத்தம்

  மேலே – சிவன் முக்தர் என்பதை ஜீவன் முக்தர் என அர்த்தம் கொள்ளவும் – ஜீவன் முக்தி என்பது சங்கர் விரிவாக பேசும் ஒன்று அது சைவ சித்தாந்தில் இருக்க இல்லையா என்று எனக்கு தெரியாது – வைணவத்தில் இல்லை

 131. திருச்சிக் காரன் on February 16, 2010 at 7:19 pm

  ம‌திப்பிற்குரிய‌ க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளே,

  //சரம சுலோகமாகிய 18.66-இல் “மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்று உள்ளது. வெறுமென “மாம் சரணம் வ்ரஜ” என்று இல்லை.//

  “மாம்” என்று அவர் சொல்லுவது யாரை? கிருஷ்ணரையா, நாராயணரையா அல்லது, இப்படி சொல்லும் முன் அர்ஜுனனுக்கு காட்டிய விசுவ ஈஸ்வர ரூபத்தையா (தே ரூபம் ஐச்வரம்)? ஆழ்ந்து சிந்திக்காமல் திருச்சிக்காரன் இப்படி எழுதுகிறானே , கிருஷ்ணர் , நாராயணர், எல்லாமே ஈஸ்வரன் தானே என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

  அப்படியானால் அந்த விஸ்வ ஈஸ்வரனே ருத்ரராக, ஆதித்தராக, மருத்துக்களாக உள்ளதாக காட்டுகிறாரே.

  11.6 பச்யாதித்யான் வசூன், ருத்ர- நச்விநௌ மருத ஸ்ததா

  அந்த விசவ ரூப ஈசவரனுடைய, தன்னுடைய ருத்ர ரூபத்தை தொழாதே கிருஷ்ணர் சொன்னதாக பொருள் கொள்ள முடியுமா?

  அந்த விஸ்வ ஈஸ்வரன் தானே, என்னையே சரணடை என்கிறார். அப்படி சரணடையும் போது, ருத்திர ரூபத்தை எனக்கு காட்டக் கூடாது, நான் சொல்லுகிற ரூபத்தில் மட்டுமே காட்சி தர வேண்டும் எனக் கண்டிசன் போட இயலுமா?

  10.24 சேனானீனா- மஹம் ஸ்கந்த:
  சேனாதிபதிகளுள் நான் ஸ்கந்தன்

  10.31 ராம: சஸ்த்ரபிருதா
  ஆயுதம் பிடித்தவர்களுள் நான் இராமன்

  சமானமெவரு இராமன், தேவ சேனாபதி ஸ்கந்தன்,

  ஸ்கந்தன், இராமன் எல்லாமுமாக இருப்பவன் அதே பரம ஈஸ்வரனா இல்லையா?

  பெருமாளை மட்டும் வணக்கி விட்டு முருகனையோ, சிவனையோ, இராமரையோ (அவர்களின் கோவிலையோ) பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டுமா, அதை தன்னையே சரணடையச் சொன்ன விஸ்வ ஈஸ்வரனுக்கு செய்யும் அவமரியாதை ஆகாதா?

  முருகனையோ, சிவனையோ, இராமரையோ (அவர்களின் கோவிலையோ) பார்த்தால் சிரித்த முகத்துடன் நொடிகளாவது வணங்கி, விசவ ஈசவரனின் “அத்வேஷ்டா” கொள்கையை மனதில் அடைந்தால்தானே, ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்) ஆக முடியும்?

  விஸ்வ ஈஸ்வரனின் சொரூபத்தில் காணும் ஒவ்வொன்றையும் தேடிப் பிடித்து வணங்க வேண்டும் என நான் சொல்லவில்லை. போகிற வழியிலே அவனுடைய ரூபங்களுக்குள் ஒன்றுக்கு கோவில் கட்டி இருந்தால் வணங்கலாம் அல்லவா? அந்தக் கோவிலும் அதே விஸ்வ ஈஸ்வரனுக்கு, பரமேஸ்வரனுக்கு, பெரியசாமிக்குத் தானே கட்டப் பட்டு உள்ளது?

  அவனையே சரணடைவதாக சொல்லி விட்டு, அவனுடைய நிலையையே வணங்க மாட்டேன் என்றால் அதற்குப் பெயர் சரணாகதியா?

  Note:
  //சொன்னார். கீதை 7.17-7.23, 9.23-9.25, 6.47, 13.10 – இவற்றையும் இவற்றின் பாஷ்யங்களையும் படியுங்கள்//

  எண்களை குறிப்பதோடு, பகவத் கீதை சுலோகத்தையே எழுதி மேற்கோள் காட்டினால் ஆராய எளிதாக இருக்கும்.

 132. திருச்சிக் கார‌ன் on February 16, 2010 at 9:24 pm

  ம‌திப்பிற்குரிய‌ க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளே,

  //நீங்கள் கூறுவது:

  “இரண்டு பேர் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் கடவுட் கொள்கைகளை ஒருசேர ஒடுக்க வேண்டும்” என்பதே. //

  நான் கூறிய‌து இதுவா? நான் யாருடைய‌ க‌ட‌வுட் கொள்கையையாவ‌து ஒடுக்குகிறேனா?

  நீங்க‌ள் நாராயண‌ரை தாழ‌ப் ப‌ணிந்தால் நாம் ந‌ம‌ஸ்கரிப்போம், நீங்க‌ள் ந‌ம‌ஸ்கரித்தால் நான் அங்க‌ பிர‌த‌க்ஷின‌ம் செய்வேன் என‌ முன்பே எழுதி இருக்கிறேன். சிவ‌னுக்கு த‌ன் த‌ங்கையை ம‌ண‌ம் முடித்து கொடுத்த‌வ‌ர் நாராய‌ண‌ர் என்று புராண‌ம் சொல்லுகிற‌தே. என‌வே காப்புக் க‌ட‌வுளின் கூடை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு ஆடுவான் என‌ப‌து போல‌ எழுத‌ வேண்டாம், என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். இது உங்க‌ள‌து க‌ட‌வுட் கொள்கையை ஒடுக்குவ‌தா?

  நீங்க‌ள் உங்க‌ள் வ‌ழிபாட்டில் 99% நார‌ய‌ண‌னை வ‌ணங்குங்க‌ள்.எப்போதாவ‌து ஒரு முறை சிவ‌ன் கோவிலுக்கு போக‌ நேரிட்டால் அத‌ற்க்கு த‌ய‌ங்க‌ வேண்டாம் என்றுதான் குறிப்பிடுகிறேன்.

  ச‌ம‌ர‌ச‌வாதிக‌ளான‌ எங்க‌ளுக்கு எல்லோரின் மீதும் அன்புதான். க‌ர்ம‌ யோகிக்கு எடுத்துக்காட்டாக‌ ந‌ம்முடைய‌ ஒவ்வொரு நாள் வாழ்க்கையை ச‌ரியாக‌ ந‌ட‌த்த‌ நாராய‌ண‌னும், யாக்கை நிலையாமையை உண‌ர்த்தி ஆன்மீக‌ முன்னேற்றத்துக்கு உத‌வுப‌வ‌ராக‌ சிவ‌னையும் நாம் பார்க்க‌லாம். இருவ‌ருக்கும் இன்னும் ப‌ல‌ சிற‌ப்புக‌ள் உண்டு.

  இராமனின் கொள்கையானது,

  மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பத்தை அனுபவிக்க தயாராக இருப்பது,

  எவ்வளவு துன்பம் வரும் சூழ்நிலையிலும் தான் பொறுமையைக் கைவிடாமல் கொள்கையில் உறுதியாக நின்று நன்மைப் பாதையில் செல்லல், …

  இப்படியான கொள்கைகளோடு, தன் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் உறவு வைப்பதில்லை என்ற கொள்கையையும் முக்கியக் கொள்கையாக வைத்தவராக இருந்திருக்கிறார் .

  இவ்வாறாக‌ க‌ட‌வுட் கொள‌கையை ஒடுக்குவ‌து என்ப‌தே இல்லை. நாங்க‌ள் சைவ‌த்தையோ, வைண‌வ‌த்தையோ ஒடுக்க‌வோ சிதைக்க‌வோ இல்லை.

  சைவ‌த்த‌வர் நாராய‌ண‌ன் மீதும், வைண‌வ‌த்த‌வ‌ர் சிவ‌ன் மீதும் பிண‌க்கு பாராட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என்ப‌தை தான் நாங்க‌ள் சொல்லுகிறோம். இத‌னால் ஒருவ‌ர் ம‌ற்றவர் க‌ட‌வுளை ம‌றை முக‌மாக‌ ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌தோ, இக‌ழ்வ‌தோ இல்லாம‌ல் போகும்.

  சைவ‌த்தையும் வைண‌வ‌த்தையும் சிதைக்க‌ அல்ல‌, சிற‌ப்பு செய்யவே நாங‌கள் உழைக்கிறோம்.

 133. திருச்சிக் கார‌ன் on February 16, 2010 at 10:39 pm

  எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் போல இருக்கிறது. நாமும் கலக்குவோம்.

  அப்பா வீட்டுக்குள் வந்தால் அவரைப் பார்த்து சிரித்து வணக்கம் சொல்லுவேன். பெரியப்பாவோ, சித்தப்பாவோ, மாமாவோ, வீட்டுக்குள் வந்தால் வணக்கம் சொல்ல மாட்டேன். உம் மென்று முகத்தை வைத்துக் கொண்டு எழுந்து செல்லுவேன் = பிறன்மனை நோக்கா பேராண்மை

  அப்பா வீட்டுக்குள் வந்தால் அவரைப் பார்த்து சிரித்து வணக்கம் சொல்லுவேன். பெரியப்பாவோ, சித்தப்பாவோ, மாமாவோ, வீட்டுக்குள் வந்தால் வணக்கம் சொல்ல மாட்டேன், முகத்தைக் கோணி அழகு காட்டுவேன் = சிறப்பான பிறன்மனை நோக்கா பேராண்மை

 134. திருச்சிக் காரன் on February 17, 2010 at 12:15 am

  //வெறுமென “புறந்தொழாமையால் பூசலும் மோதலும் உண்டாகும்” என்று சொல்லிவிட்டால் அது உண்மையாகி விடாது. நிரூபிக்க வேண்டும். //

  இந்த விடயத்தில் அமரர் கல்கி எனக்கு செய்து இருக்கிறார். .

  நூல்: பொன்னியின் செல்வன்
  பக்கம் 106, 107 , ஏழாம் பதிப்பு : மார்ச் 2001, வர்த்தமானன் பதிப்பகம்

  பன்னிரண்டாம் அத்தியாயம்
  அத்தியாயத் தலைப்பு: நந்தினி

  ஆசிரியர் : அமரர் கல்கி

  //இவ்விதம் தமிழ் நாட்டில் கதை நடந்த காலத்தில் அதாவது சுமார் 980 வருடங்களுக்கு முன் பெரியதொரு சமயக் கொந்தளிப்பு ஏற்ப்பட்டிருந்தது. இந்தக் கொந்தளிப்பிலிருந்து தீங்கு தரும் அம்சங்கள் சிலவும் தோன்றிப் பரவின.

  வீர வைஷ்ணவர்களும், வீர சைவர்களும் ஆங்காங்கு முளைத்தனர். இவர்கள் கண்ட இடங்களில் எல்லாம் சண்டையில் இறங்கினார்கள். இந்த வாதப் போர்களில் அத்வைதிகளும் கலந்து கொண்டார்கள். சமய வாதப் போர்கள். சில சமயம் அடிதடி சண்டையாகப் பரிணமித்தன.

  அந்தக் காலத்து சைவ – வைஷ்ணவப் போரை விளக்கும் அருமையான கதை ஒன்று உண்டு.

  ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர் ஒருவர் திருவானைக் கோவில் ஆலய வெளிச் சுவற்றின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார். தலையில் திடீரென்று ஒரு கல் விழுந்து காயமாகி ரத்தமும் கசிந்தது. வைஷ்ணவர் அண்ணாந்து பார்த்தார். கோபுரத்தில் காக்கை உட்கார்ந்த படியால் அந்தப் பழைய கோபுரத்தின் கல் இடிந்து விழுந்திருக்க வேண்டும் என்று அறிந்தார்.

  உடனே அவருக்கு காயமும் வலியும் மறந்து போய் ஒரே குதூகலம் உண்டாகி விட்டது.

  “ஸ்ரீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்காயே! திருவானைக் காவல் சிவன் கோவிலை நன்றாக இடித்துத் தள்ளு” என்றாராம். //

  இந்த அத்தியாயத்தில் இதே போல சைவ வைணவப் பூசலை விளக்கும் இன்னும் சில பகுதிகளும் உண்டு. அமரர் கல்கி எவ்வளவு பெரிய மேதை, நேர்மையானவர் என நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

  அமரர் கல்கிக்கு நன்றி

 135. திருச்சிக் காரன் on February 17, 2010 at 12:29 am

  ம‌திப்பிற்குரிய‌ க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளே,

  //
  அப்ப‌டிப் ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌ ப‌ல‌ க‌ட‌வுள்களை தொழுத‌வ‌ர்க‌ளின் ச‌ந்த‌தியின‌ர் தானே இன்று இந்து ம‌த‌த்தில் பெரும்பான்மையின‌ர். இப்ப‌டி இத்த‌னை வ‌ருட‌ம் ச‌ம‌ர‌ச‌ தொழுகை செய்த‌ இந்துக்க‌ள் திடீரென‌ ஆன்மீக‌ நாட்ட‌ம் இழ‌ந்து விடுவார்க‌ள் என‌ எப்ப‌டிக் கூற‌ முடியும்?
  //

  //இன்றைய இந்து மதத்தில் இது தான் பெரும்பான்மையாக இருந்தாலும் வரலாற்று சான்று முற்காலத்தில் எது பெரும்பான்மை என்பது வேறு.//

  இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

  அத்ரி, பிருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம காஷ்யப, ஆங்கிரச ரிஷிகள் காலத்தில் எது பெரும்பான்மை? எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

  ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தாயிடம், தபபனிடம், தாத்தாவிடம், பாட்டியிடம் இருந்துதான் தங்கள் முதல் சமய கருத்தைப் பெறுகிறார்கள்.
  பின்னாளில் நூல் பல கற்றாலும் ஆரம்பக் கல்வியின் தாக்கம் இருக்கும்.

  புறன் தொழாமை கருத்து ஒருவருக்கு இளவயிதிலே கற்ப்பிக்கப் பட்டால் அவ்வளவு எளிதாக அவர்கள் மாற மாட்டார்கள். இப்படி இத்தனை பேர் சகஜமாக எல்லாக் கடவுலகளையும் தொழுகிராகள் என்றால், அவர்கள் குடும்பங்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே பல கடவுளையும் வணங்கும் சமரச வழி பாட்டை நடத்தி வந்தவர்களாகவே இருக்க முடியும்.

 136. திருச்சிக் காரன் on February 17, 2010 at 12:37 am

  ம‌திப்பிற்குரிய‌ க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளே,

  //இந்து மதம் என்பது ஒரு தனிப்பட்ட கொள்கை அன்று. ஆகையால் ‘இந்து மதம் இதைக் கூறுகிறதா, அதைக் கூறுகிறதா’ என்று கேட்பதில் அர்த்தம் இல்லை.//

  உங்களைப் பாராட்டுகிறேன்.

  இந்து மதத்தை அவ்வளவு எளிதில் வரையறுத்து விட முடியாது. இந்து மதம் எல்லையற்றது. மிகப் பழங்கலத்தில் இருந்தே பின்பற்றப் பட்டு வருவது, அதே நேரம் எப்போதும் புதுமையானது.

  எந்த ஒரு கருத்தையும் இந்து மதத்தினுள் கொண்டு வர முயற்சி செய்யலாம். அந்தக் கருத்திலே எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ, எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ, எந்த அளவுக்கு அந்தக் கருத்து இந்து மதத்தின் அடிப் படைகளுடன் ஒத்துப் போகிறதோ, அந்த அளவுக்கு அது இந்து மதத்திலே முக்கியத்துவம் பெரும். பெரும்பாலான இந்துக்களால் ஒத்துக் கொள்ளப் பட்டு அனுஷ்டிக்கப் படும்.

 137. Sarang on February 17, 2010 at 12:45 am

  நண்பரே

  தாங்கள் சமரச வாதியாக இருப்பது எந்த தடையும் இல்லை – ஆனால் இந்த கீதைக்கு நீங்கள் கூறும் திருஷ்டாந்தம் பொருந்தாது – இலக்கணப்படியும் இடிக்கும்

  இந்த ஸ்லோகத்திற்கு முன்னும் பின்னும் வரும் நான் நான் என்பதை பாருங்கள் – நீங்கலாக அர்த்தம் கொள்ளாமல் சமரசம் உள்ளார் என்று நீங்கள் கருதும் சங்கர பாஷ்யத்தை வாசியுங்கள்

  மேலும் இந்த விஸ்வரூப தரிசனத்துக்கு வெகு முன்னரே

  நான் வெகு நாட்களாக உங்களிடம் கூறிவரும் 2-54 2-72 பாருங்கள்

  — தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசித மத்பர:
  எல்லாவற்றையும் அடக்கி (எல்லாவற்றையும் விட்டு)மனதில் அசைவுகள் மத்பர – இல்லாமல் என்னையே பரமாத்வாக கருதி …. இதற்கு ஆடி சங்கரர் சொல்லும் வியாக்யானமும் நீங்கள் படித்தால் நன்று

  //
  அந்த விஸ்வ ஈஸ்வரன் தானே, என்னையே சரணடை என்கிறார். அப்படி சரணடையும் போது, ருத்திர ரூபத்தை எனக்கு காட்டக் கூடாது, நான் சொல்லுகிற ரூபத்தில் மட்டுமே காட்சி தர வேண்டும் எனக் கண்டிசன் போட இயலுமா?
  //

  நீங்கள் எழுத்வாதர்க்கு சுவையாக இருந்தாலும் விஷயத்தை விட்டு விடீர்கள்
  – அப்படிப்பட்ட விஸ்வரூப தரிசனம் தந்தவனிடம் சரணாகதி செய்வது தான் புறம் தொழாமை – எல்லா பெருமாள் கோவிலும் காலையில் முதல் தரிசனம் (board paarthaale podhum) விஸ்வரூப தரிசனம் தான்

  மேலும் அந்த விஸ்வரூபத்தில் நானும் நீங்களும்,இவர்களும், ஒபாமா, பெனசிர் புட்டோ, சோனியா, காஸ்ட்ரோ, ராஜபக்ஷ, பிரபாகரன், மு கா அழகிரி, ராமசாமி நாயக்கர், கனிமொழி, சிவாஜி கணேசன், சாக்ரடீஸ், இடி அமீன், சன் ஜூ அடக்கம் – இதன் காரணமாகவும் நீங்கள் சொல்லும் த்ரிஷ்டாந்ததில் தோஷம் வருகிறது

  நண்பரே நீங்கள் தேவை இல்லாமல் சம நோக்கையும், சமரசத்தையும், சரணாகதியையும் குழுப்பி கொண்டால் என்ன செய்ய

  //
  விஸ்வ ஈஸ்வரனின் சொரூபத்தில் காணும் ஒவ்வொன்றையும் தேடிப் பிடித்து வணங்க வேண்டும் என நான் சொல்லவில்லை. போகிற வழியிலே அவனுடைய ரூபங்களுக்குள் ஒன்றுக்கு கோவில் கட்டி இருந்தால் வணங்கலாம் அல்லவா? அந்தக் கோவிலும் அதே விஸ்வ ஈஸ்வரனுக்கு, பரமேஸ்வரனுக்கு, பெரியசாமிக்குத் தானே கட்டப் பட்டு உள்ளது?
  //

  நான் சொல்கிறேன் நீங்கள் இங்கு சொல்வது ஒரு வேதாந்தம் சார்ந்த வாதம் என்று – பிற வேதாந்தம் இரண்டும் இதை ஒப்புக்கொள்ளாததால் நீங்கள் சமரசம் செய்ய வில்லை ஒன்றிலேயே நிற்பவர் என்று

  இப்படி சொல்ல்விட்டு இது ஏன் தவறான ஒன்று சார்ந்த கொள்கை என்று இதை விவரித்து என்னாலும் பக்கம் பக்கமாக நீங்கள் எழுதுவது போல எழுத முடியும்

  நீங்கள் முதலில் வேதாந்த வித்யாசங்களை படியுங்கள் – சித்தாந்த வித்யாசங்களை படியுங்கள் பிறகு எழுதுங்கள் – எல்லா வேதாந்தமும் ஒன்னு, சித்தாந்தமும் ஒன்னு வித்யாசமே இல்லை என்று புது மார்க்கம் தொடங்குவதில் அர்த்தம் இல்லை – அக்பரின் தீன் இலாஹி போன்று ஏட்டு சுரைக்காய் தான் (அது ஒரு நல்ல முயற்சி – ஆனால் வெற்றி பெற வாய்ப்பே இல்லாத முயற்சி) – அக்பர் ஒன்னும் மஹா புருஷன் இல்லை, அவன் காலத்திலேயே வாழ்ந்த மீரா பாய் உத்தமத்தில் குறைவும் இல்லை

  //
  பெருமாளை மட்டும் வணக்கி விட்டு முருகனையோ, சிவனையோ, இராமரையோ (அவர்களின் கோவிலையோ) பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டுமா, அதை தன்னையே சரணடையச் சொன்ன விஸ்வ ஈஸ்வரனுக்கு செய்யும் அவமரியாதை ஆகாதா?
  //

  இதை திருப்பி திருப்பி (உண்மையான விஷயத்தை திரித்து) சொல்லி பயன் இல்லை – இப்படி செய்பவர் உள்ளார்கள் ஆனால் அவர்கள் மட்டும் தான் புறம் தொழாதவர்கள் என்றால் நீங்கள் தீகா காரன் போல தான் பேசுகிறீர்கள் என்று சொல்வேன் – ஒரு ஹிந்து கெட்டவனாக இருந்தால் ஹிந்துத்வா மோசம் என்பது எவ்வளவு பொருந்தாத வாதமோ அப்படியே நீங்கள் சொல்வதும் – ஏன் நீங்கள் சொல்லும் சமரச வாதிகள் எத்தனை பேர் ஒரு தர்காவையோ, சர்ச்சையோ, பாடி கார்ட் முநிஸ்வரரையோ கண்டு முகத்தை திருப்பி கொள்கிறார்கள் அப்படியானால் சமரசவாதிகள் அனைவரும் வெறுப்பு கருத்து கொண்டவர்களா? இதை நீங்கள் தொடர்ந்து செய்வதால் ஒரு agenda driven வாதம் என்றே சொல்ல தோன்றுகிறது

  ஒடுங்குமா இல்லையா என்பதை – நான் மேலே சொன்ன சித்திரையில் ஆதிரை நாள் …. நன்கு விளக்கும்

  //
  சேனாதிபதிகளுள் நான் ஸ்கந்தன்
  //

  நீங்கள் இதை எடுத்ததால் சொல்கிறேன்

  அவர் சொன்னதை நமது இஷ்டம் போல் அர்த்தம் செய்யலாகாது

  10-36 த்யுதம் சலயதம் – வஞ்சனை செய்பவர் செயல்களில் நான் சூதாட்டம்

  10-37 அஸ்மி பாண்டவானாம் தனஞ்சய – பாண்டவர்களில் அர்ஜுனன் நானே

  10-37 கவினாம் உசநா கவி – கவிகளில் சுக்ராச்சாரியார் நான்

  10-38 தண்ட தமயதாம் அஸ்மி – தண்டனை நானே

  ஒன்றை மட்டும் உருவி பொருள் பார்க்கக் கூடாது

 138. திருச்சிக் காரன் on February 17, 2010 at 12:49 am

  நல்லது . இந்த விடயம் குறித்து அதிகமாக எழுதியும் விவாதித்தும் இருக்கிறேன். இது அதிக நேரம் எடுப்பதாக உள்ளதே தவிர அவரவர் நிலப் பாட்டை எப்படியாவது நியாயப் படுத்த வேண்டும் என்ற நினைப்பிலேயே உள்ளனர்.

  நம்மை பொறுத்தவரையிலே நமக்கு வைணவரும், சைவர்களும் நண்பர்களே. நமக்கு அரியும், சிவனும்…. இன்னும் பலரையும் நல்லிணக்க அடிப்படையிலே கடவுளாக கருதி வழி பட எந்த தயக்கமும் இல்லை.

  எல்லோரும் அதே போல செய்ய வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை. பிற தெய்வங்களை காணும் போது இதழிலே புன் முறுவலும், மனதிலே சாந்தமும், மரியாதையும் இருக்கும்படியான நிலையிலே இருந்தால் போதுமானது.

  என்னால் இன்னும் எத்தனையோ வாதம் செய்ய இயலும். பல ஆதாரங்களையும் காட்ட இயலும். ஆனால் நேரம் அதிக இல்லை. .

  நான் இத்துடன் தலை கட்டுகிறேன்.

 139. கந்தர்வன் on February 17, 2010 at 11:02 am

  //
  நம்மை பொறுத்தவரையிலே நமக்கு வைணவரும், சைவர்களும் நண்பர்களே
  //

  நம்மைப் பொறுத்த வரையிலும், நல்லோர்கள் யார் இருந்தாலும் நண்பர்களே.
  //
  எல்லோரும் அதே போல செய்ய வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை.
  //

  நன்றி, அப்படியானால் அக்கொள்கையை இனி “ஆபிரகாமியம், காட்டுமிராண்டித்தனம்” என்று சொல்வதை நிறுத்தலாம்.

  //
  பிற தெய்வங்களை காணும் போது இதழிலே புன் முறுவலும், மனதிலே சாந்தமும், மரியாதையும் இருக்கும்படியான நிலையிலே இருந்தால் போதுமானது.
  //

  கண்டிப்பாக… தெய்வங்கள் மட்டும் ஏன், எல்லா ஜீவா ராசிகளையும் இப்படியே நோக்குவோம்.

  //
  நான் இத்துடன் தலை கட்டுகிறேன்.
  //

  Same here.

  (edited and published).

 140. Sarang on February 17, 2010 at 12:23 pm

  யாருக்கு நேரம் செலவழின்ததோ இல்லையோ site moderator களுக்கு எக்கக்ச்சக்க நேரம் விரயம் ஆகி இருக்கும் – இதற்காக வருந்துகிறேன்

  //
  எல்லோரும் அதே போல செய்ய வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை. பிற தெய்வங்களை காணும் போது இதழிலே புன் முறுவலும், மனதிலே சாந்தமும், மரியாதையும் இருக்கும்படியான நிலையிலே இருந்தால் போதுமானது.
  //

  எல்லா மதத்தினரும் யாரை பார்த்தாலும் மனதில் அன்புடனும் புன்சிரிப்புடனும் மரியாதை உடனும் இருக்க வேண்டும் எப்படி இதன் படி

  – சகல லோகமான் சஹுனே வந்தே

 141. திருச்சிக் கார‌ன் on February 17, 2010 at 12:54 pm

  தி.க‌.கார‌ர் எழுதிய‌ புத்த‌க‌ங்க‌ளைப் ப‌டித்து இருக்கிறீர்க‌ளா?

  தி.க‌ கார‌ருக்கு உதவிய‌து யார்?

  ஒரு சாரார் சிவ‌னை இழிவு செய்து பேசிய‌தையும், இன்னொரு த‌ர‌ப்பார் பெருமாளை இழிவு ப‌டுத்தி எழுதிய‌தையும்

  ஈ.வே.ரா அப்படியே எடுத்து மேற்கோள் காட்டி , “இதுதான் இந்த‌க் க‌ட‌வுள்களின் யோக்கிய‌தை , இதை நான் சொல்ல‌வில்லை, ப‌க்த‌ர்க‌ள் எழுதிய‌ புராண‌ங்க‌ள் சொல்லுகின்ற‌ன‌” என்று எழுதினார்.

  முத‌லில் ஈ.வே.ரா எழுதிய‌ புத்த‌க‌ங்க‌ளை நூல்க‌ளை ப‌டியுங்க‌ள். அப்போதுதான் தி.க‌ கார‌ருக்கு உதவிய‌து யார் என்ப‌து தெரியும்.

 142. Sarang on February 17, 2010 at 1:48 pm

  சமரச வாதிகளும் சேர்த்து தான் தீக காரர்களுக்கு உதவினர் – இதேல்லாம இப்படி எடுத்துக்கொள்வது – கேடு செய்பவர் எங்கும் உளர், கேடு செய்தவர் ஹிந்துக்கள் தானே – போலி செக்குலரிசம் பேசுபவரும் ஹிந்துக்கள் தானே, அதற்காக எதையும் எத்யுமோ முடிச்சு போடுவது நன்று அன்று – ராமானுஜரை கொலை செய்ய நினைத்தது ஒரு சமரசவாதி தான்[அவரது முதல் குரு], ஒரு சமயவாதியும் இருந்தார் [சோழன்], ஒரு வைணவ கும்பலும் இருந்தது (பிக்ஷயில் விஷம் வைக்க நினைத்தவர்) – இப்படி கெட்டவர்கள் எல்லா ரூபத்திலும் உளர்

  ஒரு தேவராஜன் சிக்கினார் என்பதற்காக அனைத்து முறையாகப் பூஜை செய்யும் அர்ச்சகர்களையும் ஒதுக்கி, கடவுள் நம்பிக்கை உள்ளவனின் லக்ஷணம் பார், இனி தீக காரனே நடு நிலையாக பூசை செய்வான் என்றால் என்ன அர்த்தம்

  நான் பேசுவது நல்லவர்கள் பேணும் பழக்கத்தை – நீங்கள் பேசுவது கெட்டவர் கொள்ளும் த்வேஷத்தை – உங்களுக்கு மட்டும் புறம் தொழாதவர்களால் மட்டுமே இந்த கேட்டதெல்லாம் நடப்பதாக ஒரு சிந்தனை கல்பித வலையில் சிக்கயுல்லீர்கள்

  நான் நல்லவர்களை பற்றி எவ்வளோவோ எடுத்து கூறியாயிற்று – நீங்கள் வீணாக கேட்டதையே பார்த்து அதற்க்கு சமரசமே தீர்வு என்கிறீர்கள் – இல்லை சம நோக்கே தீர்வு என்று நான் சொல்கிறேன் [சகல் லோகமான் சஹுனே வந்தே]. நீங்கள் இப்படி மூட்டை மூடையாய் அவிழ்டுவிட்டால் – நாளை சமர்சவாதிகளின் யோக்யதை என்று வேறு பலவும் அவிழும் – அதுவே சண்டையை மூளும் – இதில் சமயம் எங்கே இருக்கிறது – மன அபிமானம் அதிகம் உள்ள இரு கூட்டங்களின் சண்டையாகவே இருக்கும்.

  //
  முத‌லில் ஈ.வே.ரா எழுதிய‌ புத்த‌க‌ங்க‌ளை நூல்க‌ளை ப‌டியுங்க‌ள். அப்போதுதான் தி.க‌ கார‌ருக்கு உதவிய‌து யார் என்ப‌து தெரியும்.
  //
  இது எனக்கு அவசியமில்லாதது இதையும், புறம் தொழாமை காட்டு மிராண்டித்தனம் என்ற இரண்டையும் தவிர வேறு நல்ல உபதேசம் இருந்தால் சொல்லுங்கள் கேட்கிறேன்

  (edited and published)

 143. திருச்சிக் கார‌ன் on February 17, 2010 at 3:52 pm

  ////
  சேனாதிபதிகளுள் நான் ஸ்கந்தன்
  //

  நீங்கள் இதை எடுத்ததால் சொல்கிறேன்

  அவர் சொன்னதை நமது இஷ்டம் போல் அர்த்தம் செய்யலாகாது

  10-36 த்யுதம் சலயதம் – வஞ்சனை செய்பவர் செயல்களில் நான் சூதாட்டம்

  10-37 அஸ்மி பாண்டவானாம் தனஞ்சய – பாண்டவர்களில் அர்ஜுனன் நானே

  10-37 கவினாம் உசநா கவி – கவிகளில் சுக்ராச்சாரியார் நான்

  10-38 தண்ட தமயதாம் அஸ்மி – தண்டனை நானே ////

  இராம‌ரையும் முருக‌ரையும் ஒரெ வ‌கையான‌ இட‌த்தை கொடுத்துதான்‍ அதாவ‌து அவ‌ர்க‌ள் த‌ன்னுடைய‌ அம்ச‌ம் என்ற‌ வ‌கையிலே தான் கிருட்டிண‌ர் குறிப்பிட்டுள்ளார்.

  இராம‌ர் ஆயுத‌ம் ஏந்திய‌வ‌ர்க‌ளுள் இராம‌ர் என்ற‌ ஒரே ஒரு குறிப்பு மாத்திர‌மே உள்ள‌து.அத‌ற்க்கும் மேலாக‌ கீதையில் இராம‌ரைப் ப‌ற்றி வேறு எந்த‌க் குறிப்பும் இல்லை. ஆனால் இராம‌ரைப் ப‌ற்றி ந‌ம‌க்கு ந‌ன்கு தெரியும். இராம‌ருக்கு ப‌ல‌ சிறப்புக‌ள் உள்ள‌ன‌. நாம் இராம‌ரை க‌ட‌வுளாக‌ அல்ல‌, க‌ட‌வுளுக்கும் மேலாக‌ க‌ருதுகிறொம், அவ‌ருடைய‌ கொள்கை தியாக‌ம் ம‌ற்றும் செய‌ல் பாட்டின் அடைப்ப‌டையிலே. இதைப் ப‌ல‌ முறை எழுதி இருக்கிறொம். முருக‌னைப் ப‌ற்றியும் எல்லோருக்கும் ந‌ன்கு தெரியும்.

  //
  சேனாதிபதிகளுள் நான் ஸ்கந்தன்
  //

  நீங்கள் இதை எடுத்ததால் சொல்கிறேன்

  அவர் சொன்னதை நமது இஷ்டம் போல் அர்த்தம் செய்யலாகாது

  10-36 த்யுதம் சலயதம் – வஞ்சனை செய்பவர் செயல்களில் நான் சூதாட்டம்

  10-37 அஸ்மி பாண்டவானாம் தனஞ்சய – பாண்டவர்களில் அர்ஜுனன் நானே

  10-37 கவினாம் உசநா கவி – கவிகளில் சுக்ராச்சாரியார் நான்

  10-38 தண்ட தமயதாம் அஸ்மி – தண்டனை நானே

  ஒன்றை மட்டும் உருவி பொருள் பார்க்கக் கூடாது.

  இதிலே ஸ்கந்த‌னை ம‌ட்டும் த‌னியாக‌ உருவி,
  அட‌ பாண்ட‌வ‌ர்க‌ளில் நான் அர்ஜுன‌ன் என்று சொன்ன‌து போல‌த்தான் என்று போட்டு இருப்ப‌து ஏன்?

  இதிலே ஸ்கந்த‌னை ம‌ட்டும் த‌னியாக‌ உருவி, அட‌ பாண்ட‌வ‌ர்க‌ளில் நான் அர்ஜுன‌ன் என்று சொன்ன‌து போல‌த்தான் ஐயா, சுக்ராசாரியார் போல‌த்தான் என்று போட்டு இருப்ப‌து ஏன்? அறிவுநேர்மை இருந்தால் ஸ்கந்த‌னை உருவிய‌தோடு இராம‌ரையும் சேர்த்து சொல்லி இருக்க‌ வேண்டும் அல்ல‌வா? நாம் இர‌ண்டு உதார‌ண‌ங்க‌ளையும் சேர்த்துதானே எழுதினோம். முருக‌னை ம‌ட்டும் த‌னியாக‌ உருவி ஒரு க‌ண்ணில் ம‌ட்டும் சுண்ணாம்பு வைப்ப‌து ஏன்?

  இதுதான் புறம் தொழாமையால் வ‌ந்த‌ செய‌ல்.

  நாம் இராம‌ர் , முருக‌ர் எல்லோரையும் ப‌ர‌மேச்வ‌ரான‌க‌ப் பார்க்கிரோம்.

  (edited and published)

 144. திருச்சிக் காரன் on February 17, 2010 at 4:55 pm

  //மேலும் அந்த விஸ்வரூபத்தில் நானும் நீங்களும்,இவர்களும், ஒபாமா, பெனசிர் புட்டோ, சோனியா, காஸ்ட்ரோ, ராஜபக்ஷ, பிரபாகரன், மு கா அழகிரி, ராமசாமி நாயக்கர், கனிமொழி, சிவாஜி கணேசன், சாக்ரடீஸ், இடி அமீன், சன் ஜூ அடக்கம் – இதன் காரணமாகவும் நீங்கள் சொல்லும் த்ரிஷ்டாந்ததில் தோஷம் வருகிறது//

  தயவு செய்து இந்து மதத்தின் அடிப்படைக் கருத்துக்களையும், பகவத் கீதையின் அடிப்படைக் கருத்துக்களையும் புரிந்து கொண்டு எழுதுவது நல்லது.

  இன்னும் இன்னும் அதிகமாக ஆபிரகாமிய தத்துவங்களை இந்து மதத்தின் தத்துவம் போலக் காட்ட வேண்டாம்.

  ஒவ்வொரு உயிரும் பல உடல்களை எடுக்கிறது என்பதே-
  ததா சரீராணி விஹாய ஜீர்னான்
  யன்யாணி சம்யாதி நவாணி தேஹி – என்பதே இந்து மதத்தின் அடிப்படை தத்துவம்.

  திருச்சிக்காரன் இறந்து விட்டால் அதோடு திருச்சிக்காரன் கதை முடிந்தது. திருச்சிக்காரானக இருந்த உயிர் அடுத்த ஜென்மத்திலே ராபர்ட்டாகவோ , ரஹீமாகவோ உடல் எடுத்து வரக் கூடும்.

  திருச்சிக் காரன் என்பது பொய், அவனது உயிர்தான் உண்மை,

  //காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா”
  என்பதே இந்து மதத்தின் அடிப்படை தத்துவம்.

  எனவே ஒவ்வொரு உடலமும், இறந்த பின் அவை பரமேஸ்வர சொரூபத்தில் போய் சேர்ந்து கொள்வதில்லை.

  ஆனால் இங்கே சில நண்பர்கள் எழுதுவது போல ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், மோனிகா லிவின்ச்கி இவர்கள் எல்லாம் இறந்த பின் மீண்டும் அதே உடலுடன், குனாதிசயங்களுடம் எழுப்பப் படுவார்கள் என்பது ஆபிரகாமிய தத்துவமே. எனவே இந்து தத்துவத்தின் படி ஒபாமாவோ, ராஜபக்ஷே , பெனாசிர் புட்டோ இவர்கள் பரமேவரனின் சொரூபத்தில் காட்சி தருவார்கள் என்பதை இந்து தத்துவம் மறுக்கிறது.

  எனவே பரமேஸ்வரன் சொரூபத்தில் ஆதித்யர்களும், மருத்துக்களும் காட்சி அளிப்பதைப் போல, நாமும் நம்முடைய உடலுடன் போஸ் கொடுக்கலாம் என்பது கீதையின் கருத்தில் இல்லை .

  கர்ணன், துரியோதனர் இப்படி பலரும் அந்த ஈஸ்வர சொரூபத்தில் வாயிலே விட்டில் பூச்சி போல விழுந்து மடிகின்றன. மடிந்தது பூத உடல் மடிந்ததுதான். ஞானியின் ஆத்மாதான் இறைவனின் ஆதமாவை அடைவதாக சொல்லப் பட்டதே அல்லாமல், கர்ணனோ, துரியோதனோ அவர்களுடைய உடல்கள் பரமாத்மா சொரூபத்தில் காணப் படும் என்பதாக இல்லை.

  பரமாத்மா சொரூபத்தில் காணப் படும், அவருடைய வீபுதியை பற்றியே நாம் பேசுகிறோம்.

  எனவே பகவத் கீதையை ஆழப் படிக்க வேண்டுமாக கோருகிறேன்.

  ஆபிரகாமிய சரக்கை அறிந்தோ அறியாமலோ கலக்க வேண்டாம் எனக் கோருகிறேன்.

 145. Sarang on February 17, 2010 at 5:25 pm

  நண்பரே

  அவசரம் வேண்டாம் – – ராமரையும் சேர்த்துதான் அர்த்தம் சொன்னேன் கட்-பேஸ்ட் பிரச்சினையே அது – அர்த்தம் அர்ஜுனன் போல, சுக்ராச்சாரியார் போல என்று நேரடியானது இல்லை – இதை நீங்கள் அப்படியே புரிந்து கொண்டால் நான் என்ன செய்ய – நீங்கள் இதற்கான பாஷ்யம் படித்திருப்பீர்கள் என்று நம்பி அர்த்தம் கூறாமல் முன்னே சொன்ன பதிலில் விட்டேன்

  இப்போது அர்த்தமும் சொல்லிவிடுகிறேன்

  //
  இராம‌ரையும் முருக‌ரையும் ஒரெ வ‌கையான‌ இட‌த்தை கொடுத்துதான்‍ அதாவ‌து அவ‌ர்க‌ள் த‌ன்னுடைய‌ அம்ச‌ம் என்ற‌ வ‌கையிலே தான் கிருட்டிண‌ர் குறிப்பிட்டுள்ளார்.
  //

  இல்லை – நான் ராமன், நான் வியாசர், நான் ஸ்கந்தன், நான் சுக்ராச்சாரியார் என்று கூறியது எந்தெந்த சக்தி, பலம், ஐஸ்வர்யம், தேஜஸ், வீர்யம்,ஞானம் முதலிய குணங்கள் எங்கெங்கு மேலோங்கி உள்ளதோ அதற்கான இலக்கணங்களாக யார் யார் உளரோ அது என்னாலேயே என்று அறிந்துகொள்

  இப்போது சொல்கிறேன் ராமன், வியாசர் இங்கு வருவதும் இந்த குணங்களை குறிப்பதே அன்றி அவதாரத்தையோ, கடவுளையோ அல்ல

  மேலும் வில்லுக்கு அர்ஜுனன் என்று அனைவருக்கும் தெரியும் – கண்ணன் அர்ஜுனனை சொல்லாமல் ராமனை சொல்வதேன் பாருங்கள் கண்ணனுக்கு தான் என்ன மன அபிமானம் என்று கூட சிலருக்கு கேள்வி வருகிறது? அவன் அர்ஜுனனுக்கு ஒரு special treatment தந்துள்ளான் – ஒரு குணமாக அர்ஜுனனை சொல்லாமல் நட்பை மேன்மை படுத்தி மிக சிறந்த பாண்டவருள் நீயே எனக்கு மிக சிறந்தவன் என்று ஒர் உயரிய ஸ்தானத்தில் ஏற்றினான் – இராமான தன்னையே இதற்கு ஒரு படி கீழே தள்ளி உள்ளதை பாருங்கள்

  நான் குணங்களை குறிப்பதர்க்கே இதை சொன்னேன் – இதை நீங்கள் அப்படிதான் கொண்டிருக்க வேண்டும் அப்படி இல்லாமல் – எதற்கெடுத்தாலும் சாதியம் என்றால் சரி இல்லை
  இது தான் நீங்கள் தீர ஆராயாமல் செய்யும் செயல்

  மேலும் நீங்கள் முறைப்படி ஆச்சர்யரிடம் கீதை கற்று இருந்தால் நான் சொன்னதை இப்படி சாதியமாக கொண்டிருக்க மாட்டீர்கள் – நான் சாடிய போக்கு உடையவன் என்று முயன்று சாதித்து பாருங்கள் இது தான் புறம் தொழாமை என்று கட்டுவது பயன் அற்றது – மாறாக நான் மேலே பல முறை சொன்ன உட்கருத்தை நினைவிற் கொண்டு எழுதுங்கள் – நீங்கள் கூறும் சீரங்கத்துக் காக்கையும், சிதம்பரத்து பூனையும் இன்றும் உண்டு – இது எப்படி உண்மையோ காஞ்சி காக்கையும், சீரங்கத்து பூனையும் உண்மையே

  அய்யா ஒரு மிக தாழ்மையான வேண்டுகோள் – தானே படிப்பது நல்லது தான் – ஆனால் ஒரு ஆச்சர்யரிடம் இவ்விஷயங்களை பயின்றால் தெளிவாக இருக்கும் – சங்கரின் பாஷ்யத்தையே பாருங்கள் அவர் ராமன், ஸ்கந்தன் என்பதற்கு என்ன சொல்கிறார் என்று

  //
  இதிலே ஸ்கந்த‌னை ம‌ட்டும் த‌னியாக‌ உருவி, அட‌ பாண்ட‌வ‌ர்க‌ளில் நான் அர்ஜுன‌ன் என்று சொன்ன‌து போல‌த்தான் ஐயா, சுக்ராசாரியார் போல‌த்தான் என்று போட்டு இருப்ப‌து ஏன்? அறிவுநேர்மை இருந்தால் ஸ்கந்த‌னை உருவிய‌தோடு இராம‌ரையும் சேர்த்து சொல்லி இருக்க‌ வேண்டும் அல்ல‌வா? நாம் இர‌ண்டு உதார‌ண‌ங்க‌ளையும் சேர்த்துதானே எழுதினோம். முருக‌னை ம‌ட்டும் த‌னியாக‌ உருவி ஒரு க‌ண்ணில் ம‌ட்டும் சுண்ணாம்பு வைப்ப‌து ஏன்?

  இதுதான் புறம் தொழாமையால் வ‌ந்த‌ செய‌ல்.

  நாம் இராம‌ர் , முருக‌ர் எல்லோரையும் ப‌ர‌மேச்வ‌ரான‌க‌ப் பார்க்கிரோம்.
  //

 146. கந்தர்வன் on February 17, 2010 at 5:41 pm

  திருச்சிக்காரரே,

  //
  அறிவுநேர்மை இருந்தால் ஸ்கந்த‌னை உருவிய‌தோடு இராம‌ரையும் சேர்த்து சொல்லி இருக்க‌ வேண்டும் அல்ல‌வா
  //

  நீங்கள் சொல்வதில் லாஜிக் இல்லை. நீங்கள் கூறும் ‘அறிவுநேர்மை’ பின்வருமாறு:

  உண்மையில், “ஆயுதம் எந்தியவர்களில் ராமனாக இருக்கிறேன்” என்பதை மட்டும் வைத்துக் கொண்டு “ராமனும், கண்ணனும் ஒருவரே” என்று சொல்ல முடியாது. அதே போல், “சேனாபதிகளுள் ச்கந்தனாக இருக்கின்றேன்” என்று சொல்வதை மட்டும் வைத்துக் கொண்டு “கந்தனும் கண்ணனும் ஒன்று” என்று சொல்ல முடியாது. இவற்றை மாத்திரம் காரணமாக வைத்துக்கொண்டு நீங்கள் கூறும் படி ஏற்றுக் கொண்டால், “கண்ணனும் சுறாமீனும் ஒன்று (10.31)”, “கண்ணனும் இமய மலையும் ஒன்று (10.25)” என்றும் ஏற்க வேண்டும். தயாராக உள்ளீர்களா? அப்படி ஏற்றுக் கொள்ள உங்களது அறிவுநேர்மை இடம்கொடுக்குமோ?

  “இராமன் விஷ்ணுவினுடைய அவதாரமே, ஆகையால் இராமனும் கண்ணனும் ஒன்று” என்பதற்கு இராமாயணம், விஷ்ணு புராணம், பாகவதம் முதலிய வேறு பிரமாணங்களை வைத்துக் கொண்டு முடிவு பண்ணுகிறோம். “விஷ்ணுவினுடைய அவதாரமே கந்தன்” என்று எந்த இதிகாச-புராணத்திலும் இல்லை. முருகனை பிரம்மாவின் மானசபுத்திரர்களுள் ஒருவரான சனத்குமாரரின் அவதாரமாக புராணங்கள் கூறியுள்ளன. ஆதி சங்கரர் சாரீரக பாஷ்யத்தில் (பிரும்ம சூத்திர பாஷ்யத்தில்) III.iii.32 எனும் இடத்தில் இவ்விஷயத்தைக் காட்டியுள்ளார்:

  http://www.sacred-texts.com/hin/sbe38/sbe38175.htm

  “Sanatkumâra also, who likewise was a son of Brahman’s (correction: Brahma’s) mind, was, in consequence of a boon being granted to Rudra, born again as Skanda. And there are similar tales about Daksha, Nârada, and others having, for various reasons, assumed new bodies.”

  //
  இதுதான் புறம் தொழாமையால் வ‌ந்த‌ செய‌ல்.
  //

  நீங்கள் கூறுவது தவறு என்று மேலே நிரூபித்துள்ளேன். ஆகையால், உங்களுடைய ஆராய்ச்சியற்ற சமத்துவப் பிடிவாதமே உங்கள் பகுத்தறிவை மறைக்கின்றது. இதே பிடிவாதத்தால் தான் வரலாற்று முன்னோடியே இல்லாத, வைணவர்களின் stereotype ஒன்றைத் தம் புத்தகத்தில் பண்ணியுள்ளார்.

 147. Sarang on February 17, 2010 at 5:54 pm

  நண்பரே

  இதென்ன புதுசா இருக்கு – நாம் இருவரும் வேறொரு கட்டுரையில் ஆமா நிலை பற்றி விவாதம் செய்தது நினைவில் இல்லையா – ஆன்மா நிலையானது – உடல் அழிவுள்ளது என்று திரும்ப திருபா மேற்கோள் காட்டி பிறப்பு என்பது நாம் வழக்கில் கொள்வது போல் இல்லமால் (அதாவது பகவன் நமக்கு இடும் தண்டனை) அது ஒரு நிலையே என்று சொன்னது நினைவில் இல்லையா

  சரி விடுங்கள் – நீங்கள் ஆபிரகாமியம் நிறைய படித்தடநாள் அந்த நினைவு மாயை உங்களை சுற்றி கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன்

  //ஒவ்வொரு உயிரும் பல உடல்களை எடுக்கிறது என்பதே-
  ததா சரீராணி விஹாய ஜீர்னான்
  யன்யாணி சம்யாதி நவாணி தேஹி – என்பதே இந்து மதத்தின் அடிப்படை தத்துவம்.

  திருச்சிக்காரன் இறந்து விட்டால் அதோடு திருச்சிக்காரன் கதை முடிந்தது. திருச்சிக்காரானக இருந்த உயிர் அடுத்த ஜென்மத்திலே ராபர்ட்டாகவோ , ரஹீமாகவோ உடல் எடுத்து வரக் கூடும்.
  //

  இது விஷிஷ்டாத்வைத்த, த்வைத கருத்து – ஒட்டு மொத்த ஹிந்து கருத்து இல்லை – அத்வைதத்தின் படி இதெல்லாம் மாயை

  //திருச்சிக் காரன் என்பது பொய், அவனது உயிர்தான் உண்மை,

  //காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா”
  என்பதே இந்து மதத்தின் அடிப்படை தத்துவம்.

  எனவே ஒவ்வொரு உடலமும், இறந்த பின் அவை பரமேஸ்வர சொரூபத்தில் போய் சேர்ந்து கொள்வதில்லை.
  //

  நீங்கள் தெரியாமலேயே இன்னொரு வாதத்திற்கு வித்து இடுகிறீர்கள் – அத்வைத வேதாந்தம் படி உயிர் பரமேஸ்வர ஸ்வரூபம் அடைகிறது – எப்படி ஒரு பானையில் உள்ள காத்து பானை உடைந்த உடன் வெளியில் உள்ள மொத்த காற்றுடன் கலக்கிறதோ அது போல என்பது தான் சங்கரரின் வாதம் – அஹம் பிரம்மாஸ்மி – சர்வம் கல்விதம் பிரம்மம் – தத்வமசி, சர்வம் இதம் ததம் – இதற்கெல்லாம் சங்கரரின் பாஷ்யம் படியுங்கள்

  – பரமாத்முடு ஜீவாத்முடு ஒகடை – த்யாகராஜர் நிறைய பாடலில் இதை சொல்கிறாரே

  //
  ஆனால் இங்கே சில நண்பர்கள் எழுதுவது போல ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், மோனிகா லிவின்ச்கி இவர்கள் எல்லாம் இறந்த பின் மீண்டும் அதே உடலுடன், குனாதிசயங்களுடம் எழுப்பப் படுவார்கள் என்பது ஆபிரகாமிய தத்துவமே. எனவே இந்து தத்துவத்தின் படி ஒபாமாவோ, ராஜபக்ஷே , பெனாசிர் புட்டோ இவர்கள் பரமேவரனின் சொரூபத்தில் காட்சி தருவார்கள் என்பதை இந்து தத்துவம் மறுக்கிறது.
  //

  எனக்கு ஆபிராமிய மதம் தெரியாது – நான் சமரச வாதி இல்லை – மேலும் அந்த பரமாத்மா ஸ்வரூபத்தில் எல்லோருமே அடக்கம் விஸ்வரோப்பம் என்று வந்து விட்டால் அது விராட் ரூபம் அதில் நல்லவர் kettavar என்று வித்யாசம் பார்க்காமல் காட்சி தரும் – it is merely a depiction of this manifested cosmos

  நான் சொன்னது மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்ற அர்த்தத்தில் இல்லை – விஸ்வரூபம் என்று சொல்லி இதை சொன்னேன் – விஸ்வம் என்றால் என்ன விஷ்ணு என்றால் என்ன என்று நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்

  இங்கு நான் நீங்கள், இவர்கள் என்று சொன்னது கீதையில் உள்ளது – ந அசம், ந த்வம், ந இமே ஜனாதிப, ந த்வேவா பவிஷ்யாம – அப்போ கண்ணன் என்ன அர்ஜுனா நீ மறுபடியும் இப்படியே உயிர் மீட்பை என்றா சொன்னான்.
  நான் எல்லோரையும் சேர்த்தது எதற்காக என்றால் – அந்த விஸ்வரூபத்தில் வரும் ஒபாமா என்ற ஆன்ம, மோனிக்கா என்ற ஆன்மா, பெனாசிர் புட்டோ என்ற ஆன்மா எல்லோரும் உண்டு அதாவது அந்த ரூபத்தில் (ஒரு சமயத்தில்) நல்ல ஆன்மாவும் (ஒரு சமயத்தில்) கெட்ட ஆன்மாவும் உண்டு என்று சொல்லி, எனவே நீங்கள் கூறிய எல்லோரையும் சரண் புகுந்தால் என்ன தவறு ஏற்படும் என்னும் திருஷ்டாந்தம் தவறு என சுட்டிக்காட்ட இவாறு சொன்னேன்
  – இதற்கும் இப்படி ஒரு அதிசயமான விளக்கும் வரும் என நான் கொஞ்சம் கூட அனுமானிக்கவில்லை

  //
  ராஜபக்ஷே , பெனாசிர் புட்டோ இவர்கள் பரமேவரனின் சொரூபத்தில் காட்சி தருவார்கள் என்பதை இந்து தத்துவம் மறுக்கிறது.
  //

  இதை எழுதும் பூத்து நீங்கள் தீர யோசித்தீர்களா என எனக்கு தெரியாது – ஆனால் இங்கு நீங்கள் சொல்வதில் எக்கக்ச்சக்க அபாவம் வரும் – முதலில், விஸ்வரூபத்தில் வரும் அனைத்தும் ஜீவத்மவே என்று கொள்ளவேண்டி வரும், அப்புறம் அந்த விஸ்வரூபத்தில் வந்த கடவுல்களும் காட்சி தருவார்கள் என்பதும் நிராகரிப்புக்கு உள்ளாகும் – நீங்கள் சொல்லும் சமரசத்திற்கு நீங்கள் மேலே சொல்வதே பங்கம் ஆகும் தவறு நேரும் – எனவே இதற்கு இப்படி அர்த்தம் சாதிக்காமல் வேறு வழியில் நீங்கள் சொல்லலாம்

 148. கந்தர்வன் on February 17, 2010 at 5:57 pm

  திருச்சிக் காரரே,

  //
  எனவே பகவத் கீதையை ஆழப் படிக்க வேண்டுமாக கோருகிறேன்.

  ஆபிரகாமிய சரக்கை அறிந்தோ அறியாமலோ கலக்க வேண்டாம் எனக் கோருகிறேன்.
  //

  ஏதோ பால் தினகரன் போன்றவர்களுடன் காலக்ஷேபம் பண்ணி சாரங் கீதையைக் கற்றுக் கொண்டது போல சொல்கிறீர்கள். ஒருவருடைய background என்ன என்பதை அறியாமல் இப்படி எல்லாம் குற்றம் சாட்டுவது கூடாது. உங்களையும் கேட்டுக் கொள்கிறேன்: பகவத் கீதை நீங்கள் நினைக்கும்படி நேராக படித்து தெளியக்கூடியது அல்ல. சங்கர, ராமானுஜ, மத்வ பாஷ்யன்களைப் படியுங்கள்! இவர்கள் மூவருள் எவராவது “ஆகையால் கண்ணனும் கந்தனும் ஒன்று” என்று கூறினார்களா பாருங்கள்.

 149. கந்தர்வன் on February 17, 2010 at 6:15 pm

  திருச்சிக் காரரே,

  சங்கர கீதா பாஷ்யம் ஆங்கில மொழிபெயர்ப்பை இந்த தளத்திலிருந்து நேராக படிக்கலாம்:

  http://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/n7/mode/2up

  PDF பதிவிறக்கம் பண்ண: http://www.archive.org/download/bhagavadgitawith00maharich/bhagavadgitawith00maharich_bw.pdf

  சங்கர பாஷ்யம் சமஸ்கிருத மூலம்: http://granthamandira.com/download.php?file=bhagavad-gita_-_sankara-bhasya.doc (அதற்கு முன் இந்த எழுத்துருவை install பண்ணவும்: http://granthamandira.com/utilities/balaram.zip)

  இவற்றை வைத்து (சமஸ்கிருத மூலத்துடன் cross check பண்ணவும். ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு சில இடங்களில் அவ்வளவு தெளிவாக இல்லை), நான் கூறின 6.47, 7.17, 7.19, 7.23, 8.16, 9.23-9.25, 11.43, 13.10 இவற்றிற்கு வியாக்கியானத்தைப் படிக்கவும். இதை அனுசரித்து இனி தெளிவீர்கள் என்று நம்புகிறேன்.

 150. கந்தர்வன் on February 17, 2010 at 6:43 pm

  திருச்சிக் காரர், சாரங் அவர்களே,

  //
  அத்வைத வேதாந்தம் படி உயிர் பரமேஸ்வர ஸ்வரூபம் அடைகிறது – எப்படி ஒரு பானையில் உள்ள காத்து பானை உடைந்த உடன் வெளியில் உள்ள மொத்த காற்றுடன் கலக்கிறதோ அது போல என்பது தான் சங்கரரின் வாதம் – அஹம் பிரம்மாஸ்மி – சர்வம் கல்விதம் பிரம்மம் – தத்வமசி, சர்வம் இதம் ததம் – இதற்கெல்லாம் சங்கரரின் பாஷ்யம் படியுங்கள்

  இது விஷிஷ்டாத்வைத்த, த்வைத கருத்து – ஒட்டு மொத்த ஹிந்து கருத்து இல்லை – அத்வைதத்தின் படி இதெல்லாம் மாயை
  //

  இங்கு அத்வைத வாதத்தை கொண்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் படித்த வரையில் ஆதி சங்கரர் ஏற்றுக் கொண்டுள்ள அத்வைதம் வியாவஹாரிக்க நிலையில் விஷிஷ்டாத்வைதத்துடன் உடன்பட்டதே (பிறப்பிறப்புச் சூழலைக் கடந்து பரமபதத்திற்குச் செல்லுதல், பரமபதத்தில் சாலோக்கியம், சாரூப்யம், பகவானுடன் சேர்ந்து சுத்த சத்துவமான போகத்தை அனுபவித்தல் – இவை உட்பட). அந்த வியாவஹாரிக்க நிலையை வைத்தே பேசுவோம். பரமார்த்திக நிலை என்பது நடைமுறைக்கு எட்டாதது என்பது என் தாழ்ந்த அபிப்பிராயம்.

  விசுவரூபத்தைப் பற்றிய இன்னொரு விஷயம்: விசுவரூபம் விகாரமடையும் தத்துவங்களும் அடங்கியவையே. ஆகையால், இப்பொழுது உள்ள விசுவரூபத்தில் ஒபாமா, ஹிலறி, ஜார்ஜ் புஷ், இவர்கள் உண்டு. 1945-க்கு முன் விஸ்வரூபத்தில் ஹிட்லர, ஸ்டாலின் இவர்கள் உண்டு. சங்கரருடைய சிஷ்யரான தொடகாசாரியாரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளார் (இன்று விஷ்ணு சஹஸ்ரநாம கிராமத்தில் “பூஹு பது யஸ்ய” என்று தொடங்கும் தியான சுலோகமாக வழங்கப்படுகிறது):

  “I bow down to Lord Visnu (Vishnu), whose body comprises the three worlds. His feet are the earth, the cavity of His belly is space, his vital breath is the wind, and His eyes are the sun and the moon. His ears are the directions, His head is the heaven, His face is the fire, and His bladder is the ocean. Within Him this universe delights with its variety of gods (divinities created by Supreme Lord), human beings, birds, cows, snakes, celestial beings, and demons. To that Visnu I offer my salutations.” (“shrutisArasamuddharaNa” என்னும் வியாக்கியானம், 179-வது சுலோகம்)

  இது முண்டக உபநிஷத் வாக்கியத்தை ஒட்டி உள்ளது: “The indwelling Self (Atman) of all is surely He of whom the heaven is the head, the moon and sun are the two eyes, the directions are the two ears, the revealed Vedas are the speech, air is the vital force, the whole Universe is the heart, and (It is He) from whose two feet emerged the earth.”

  ஆகையால் விகார தத்துவங்களும் விசுவரூபத்தில் உண்டு என்பது தெளிவு.

 151. Sarang on February 17, 2010 at 7:05 pm

  //
  எனவே பகவத் கீதையை ஆழப் படிக்க வேண்டுமாக கோருகிறேன்.

  ஆபிரகாமிய சரக்கை அறிந்தோ அறியாமலோ கலக்க வேண்டாம் எனக் கோருகிறேன்.
  //

  ஏதோ பால் தினகரன் போன்றவர்களுடன் காலக்ஷேபம் பண்ணி சாரங் கீதையைக் கற்றுக் கொண்டது போல சொல்கிறீர்கள். ஒருவருடைய background என்ன என்பதை அறியாமல் இப்படி எல்லாம் குற்றம் சாட்டுவது கூடாது. உங்களையும் கேட்டுக் கொள்கிறேன்: பகவத் கீதை நீங்கள் நினைக்கும்படி நேராக படித்து தெளியக்கூடியது அல்ல. சங்கர, ராமானுஜ, மத்வ பாஷ்யன்களைப் படியுங்கள்!

  நாம் பரந்த விரிந்த சமரச (compromise) பாவத்துடன் இருந்தால் – சுவிஷேஷ் கூட்டக்கரானும் கீதா படிப்பான் அதற்க்கு திருச்சிகாரர் நான் கூறியதாக சொன்ன அர்த்தத்தையே சொல்வான் – அப்போது சமரசம் மட்டுமே பேச தெரிந்தா நான் – கிறிஸ்தவத்தில் இப்படி தான் நாம்[நமது சந்தததியினர்] அதையும் ஏற்போம் நமக்கு எல்லாம் ஒன்னு தான் என்று சொல்லுவோம்

  (குறிப்பு – இதற்க்கு டி ஏ ஜோசெப் போன்றவர்கள் சரியாக தானே அர்த்தம் சொல்கிறார் என்று சொல்ல நேரும் அதற்காகவே பிறவி கிறிஸ்துவர் என்று சொல்லாமல் சுவிசேஷ கூட்டக்காரன் என்று டி ஏ ஜோசெப் போன்றோரை அதிலி சேர்க்காமல் சொல்லப்பட்டுள்ளது ) – எவ்வளோ கவனமா இருக்கவேண்டி இருக்குப்பா 🙂

  (edited and published)

 152. திருச்சிக் கார‌ன் on February 17, 2010 at 8:26 pm

  கீதையில் கிருட்டிண‌ர் சொன்ன‌ க‌ருத்து என்ன‌? புன‌ர‌பி ஜ‌ன‌ன‌ம், புன‌ரபி ம‌ர‌ன‌ம், புன‌ர‌பி ஜ‌ன‌னெ ஜ‌ட‌ரெ ச‌ய‌ன‌ம் ‍ இது யார் க‌ருத்து? முன்னை அப்ப‌னும் எத்த‌னை அப்ப‌னோ, முன்னை அம்மையும் எத்தனை அம்மையோ…இது யார் க‌ருத்து

 153. Sarang on February 17, 2010 at 8:43 pm

  கந்தர்வன் அவர்களே

  நீங்கள் சொல்வது சரியே – அத்வைத நிலையில் கூட சங்கரர் சத் மட்டுமே உள்ளது என்று கீதா பாஷ்யத்தில் சாதிக்கிறார் (ந அசதோ …) சத் மட்டும் தான் உண்மை என்று விஷிச்டாட்வைதமும் சொல்கிறது – ஜீவாத்மா பரமாத்மா ரெண்டுமே சத் என்று கொண்டால் ரெண்டுமே சத் என்ற ஒன்று தான் – இப்படி தான் நான் புரிந்துகொண்டேன் – நான் புரிந்து கொண்டது தவறாக இருக்கலாம்

 154. Sarang on February 17, 2010 at 9:08 pm

  //
  கீதையில் கிருட்டிண‌ர் சொன்ன‌ க‌ருத்து என்ன‌? புன‌ர‌பி ஜ‌ன‌ன‌ம், புன‌ரபி ம‌ர‌ன‌ம், புன‌ர‌பி ஜ‌ன‌னெ ஜ‌ட‌ரெ ச‌ய‌ன‌ம் ‍ இது யார் க‌ருத்து? முன்னை அப்ப‌னும் எத்த‌னை அப்ப‌னோ, முன்னை அம்மையும் எத்தனை அம்மையோ…இது யார் க‌ருத்து
  //

  ந த்வேவாஹம் அஸ்ய ந அசாம் ந த்வம் ந இமே ஜனாதிப
  ந தைவேவா பவிஷ்யாம: சர்வே வயமதா பரம்

  இதற்க்கு முன் நான் இல்லாமல் இருந்ததில்லை , இதற்க்கு முன் நீ இல்லாமல் இருந்ததில்லை, இதற்க்கு முன் இவர்கள் இல்லாமல் இருந்ததில்லை
  நீ, நான் இவர்கள் எப்போதும் இருக்கிறோம்
  – அப்படி என்றால் பிறப்பு – இறப்பு என்பது ஒரு நிலை மட்டுமே

  இதுவே கண்ணன் சொல்லும் ஆன்மாவை பற்றி முக்கிய கருத்து – மேலும் இதற்க்கு முன்னர் இதையும் சொல்கிறான் – “த்வம் ப்ர்ஞாவாதான் பீபாஷே” – அதனாலேயே ஒரு ஆசிரியர் தேவை என சொல்கிறேன்

  புனரபி ஜனனம் என்பதை எல்லாம் நீங்கள் இந்த கீதா வாக்கியத்தை ஒட்டியே கொள்ள வேண்டும் – மேலும் பஜ கோவிந்தம் ஒரு பக்தி விஷயம் – சாமான்யர்கலியம் போய் மானுடா பிறப்பு இறப்பு என்பது ஒரு நிலையப்பா, நீ உண்மையில் சாவதில்லை, பிறப்பதும் இல்லை சுழன்று கொண்டே இருக்கிறாய் அதனால் இதை நிப்பாட்டு என்று சொல்லாமல் நீ பிறந்து இறந்து கஷ்டப்படுகிராயே அதை விடு என்று எளிதில் புரிவதற்காக சொல்லாபட்டுள்ளது

 155. திருச்சிக் கார‌ன் on February 17, 2010 at 10:27 pm

  நண்ப‌ர்,

  //இராம‌ன் விஷ்ணுவின் அவ‌தார‌ம் என்று இராமாயணம், விஷ்ணு புராணம், பாகவதம் முதலிய பிரமாணங்களை வைத்துக் கொண்டு முடிவு பண்ணுகிறோம் //

  ந‌ல்ல‌து. இவை புராண‌ங்க‌ளே. ப‌க‌வ‌த் கீதை என்ப‌து த‌த்துவ‌ நூல். ப‌க‌வ‌த் கீதை உப நிட‌த‌ங்க‌ளின் சாரமாக‌வே க‌ருத‌ப் ப‌டுகிர‌து. அது ப‌க‌வானின் கீத‌ம் என‌வே சொல்ல‌ப் ப‌டுகிற‌து.

  இராம‌ன் விஷ்ணுவின் அவ‌தார‌ம் என்று இராம‌ய‌ண‌த்தை மேற்கோள் காட்டி சொல்வ‌து போல‌, ஸ்கந்த‌ன் ஈச‌வ‌ர‌னின் அம்ச‌ம் என்று தானெ ஸ்க‌ந்த‌ புராண‌த்தை காட்டி ஆதார‌மாக சொல்லுகிறார்க‌ள்.

  இராம‌ய‌ண‌த்தை ஆதார‌மாக‌ எடுத்துக் கொள்ள த‌யாராக இருக்கும் நீங்க‌ள் ஸ்க‌ந்த‌ புராண‌த்தை ஆதார‌மாக எடுத்துக் கொள்ள‌ த‌யாராக‌ இல்லை.

  இத்த‌னைக்கும் ஸ்கந்த‌ புராண‌த்தின் முக்கிய‌ நிக‌ழ்வு – தேவ‌ர்க‌ளின் சேனாதிப‌தியாக‌ ஸ்கந்த‌ன் சிற‌ப்பாக‌ செய‌ல் ப‌ட்டு சூர‌னை வ‌த‌ம் செய்து வெற்றி கொண்டு அடைக்க‌ல‌ம் த‌ந்த‌து – அதை அப்ப‌டியே கீதையிலே கண்ண‌ன் தெளிவாக‌ சொல்லியும், ஸ்கந்த‌ன் ஒரு ஈஸ்வ‌ர‌ அம்ச‌ம் என‌ ஒத்துக் கொள்ள‌ உங்க‌ள் மன‌ம் ஒப்பவில்லை.

  நீங்க‌ள் ந‌ல்ல‌வ‌ர், க‌ருணை, ப‌க்தி, ஆச்சாரியார் ப‌க்தி, எல்லாம் இருந்தும் ஸ்க‌ந்த‌ன் சிவ‌னின் ம‌க‌னாக‌ சித்த‌ரிக்க‌ப் ப‌டுவ‌தால் அவ‌னை எப்ப‌டியாவ‌து ஏற‌ க‌ட்டி, அர்ஜுன‌ன் ரேஞ்சுக்கு அல்ல‌து சுக்ராச்சாரியார் ரேஞ்சுக்கு இல்லை இன்னும் ஏதாவ‌து உதார‌ண‌ம் காட்ட‌ துடிக்கும் நிலையை, இந்த‌ புற‌ம் தொழா அல்ல‌து சிவ‌ம் தொழா அல்ல‌து சிவ‌ த்வேஷ‌ கோட்பாடு உங்க‌ள் ம‌ன‌தில் உருவாக்கி உள்ள‌து.

  அது எந்த‌ அளவுக்கு இருக்கிற‌து என்றால் கீதையில் கிருட்டிண‌ன் ஒரே வாக்கிய‌த்தில் ஸ்க‌ந்த‌ புராண‌த்தின் மைய‌க் க‌ருத்தை உறுதி செய்த‌ போதும், கிருட்டிண‌ரின் வாக்கையும் உதாசீன‌ம் செய்யும் அள‌வுக்கு உங்க‌ள் மன‌ நில‌யை வைத்து உள்ள‌து.

  இத்த‌னைக்கும் இராம‌ய‌ணத்தின் முக்கிய‌ நிகழ்வான‌- இராம‌ர் ஆட்சியை விட்டுக் கொடுத்து வ‌ன‌ம் செல்லும் தியாக‌ம் அல்ல‌து இராவ‌ண‌ வ‌த‌ம்- பற்றிய‌ குறிப்பு எதையும் உள்ள‌ட‌க்கிய‌தாக‌ ப‌க‌வ‌த் கீதையில் சொல்லும் வாக்கிய‌ம் இல்லை. ஆனாலும் ப‌ரவாயில்லை என்று இராம‌ருக்கு க‌ட‌வுள் ப‌ட்ட‌ம் கொடுத்து விட்டு க‌ந்த‌னைக் க‌ட்ட‌ம் க‌ட்ட‌ கிள‌ம்பி விட்டீர்க‌ள். அதாவ‌து உங்க‌ளுக்கு எது ஒத்து வ‌ருமோ அத‌ற்க்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும் ப‌டியான‌ நிலையை உருவாக்கியுள்ள‌து புற‌ம் தொழா பிடிவாத‌க் கோட்பாடு.

  ந‌ம‌க்கும் இராம‌ருக்கும் உள்ள‌ உற‌வான‌து, குக‌னுக்கும் – இராம‌ருக்கும், அனும‌னுக்கும் -இராம‌னுக்கும்m இடையே உள்ள‌து போன்ற‌ கொள்கை உற‌வாகும்.

  நாராய‌ணாவில‌ உள்ள‌ “ரா” ந‌ம‌ச்சிவாய‌த்தில் உள்ள‌ “ம‌” இர‌ண்டும் செர்ந்த‌தே ராம‌ நாம‌ம் என்கிரார் தியாக‌ ராச‌ர். ஒரு பாட‌லில் ப‌டைத்த‌ல், காத்த‌ல், அழித்த‌ல் ஆகிய‌வ‌ற்றுக்கு மும்மூர்த்திக‌ளை நிய‌மித்து நீ இந்த‌ உல‌கை ப‌ரிபால‌ன‌ம் செய்கிராய் என்கிரார்.

  ஆதி ச‌ங்க‌ர‌ரோ பிர‌ம்மமே இராம‌னாக‌ உள்ள‌து என‌ப் பாடிய‌தாக‌ சில‌ பாட‌ல்க‌ள் உள்ள‌ன‌. ம‌ஹேச‌ர், க‌லைக‌ளுக்கு ஈச‌ர், தேவ‌ர்க‌ளுக்கு ஈச‌ர், ந‌ர‌ர்க‌ளுக்கு ஈச‌ர், பூக்க‌ளுக்கு ஈச‌ர், ஆனால் த‌ன‌க்கு மேல் ஈச‌ர் இல்லாத‌வ‌ர் ஆகிய‌ அந்த‌ ராம‌ரை ச‌ர‌ண‌டைகிறேன் என்ப‌தாகவும் சுலோக‌ம் உள்ள‌து.

  ஒவ்வொரு க‌ட‌வுளுக்கும் எப்படி சிற‌ப்பு செய்ய‌லாம் என்றே நாம் முனைகிறோம்.

  ஆனால் சில‌ருக்கு, பிற‌ தெய்வ‌ங்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌தற்க்கான வ‌கையிலே ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ள் உருவாக்க‌ப் ப‌ட்டு சிறு வ‌ய‌தில் இருந்தே ம‌ன‌தில் ஏற்ற‌ப் ப‌ட்டு விடுகின்ர‌ன‌.

  //முருகனை பிரம்மாவின் மானசபுத்திரர்களுள் ஒருவரான சனத்குமாரரின் அவதாரமாக புராணங்கள் கூறியுள்ளன. ஆதி சங்கரர் சாரீரக பாஷ்யத்தில் (பிரும்ம சூத்திர பாஷ்யத்தில்) III.iii.32 எனும் இடத்தில் இவ்விஷயத்தைக் காட்டியுள்ளார்:

  http://www.sacred-texts.com/hin/sbe38/sbe38175.htm

  “Sanatkumâra also, who likewise was a son of Brahman’s (correction: Brahma’s) mind, was, in consequence of a boon being granted to Rudra, born again as Skanda. And there are similar tales about Daksha, Nârada, and others having, for various reasons, assumed new bodies.”

  //
  இதுதான் புறம் தொழாமையால் வ‌ந்த‌ செய‌ல்.
  //

  நீங்கள் கூறுவது தவறு என்று மேலே நிரூபித்துள்ளேன். /////

  ப‌லே, ப‌லே நெத்திய‌டியாக‌ நிரூபித்து விட்டீர்க‌ள். அதாவ‌து சிவ‌னின் ச‌க்தியில் இருந்து நேராக‌ ஸ்க‌ந்த‌ன் உருவான‌தாக‌ சொல்ல‌ப் ப‌டுவ‌து க‌வுண்ட‌ம‌னி ஜோக். நீங்க‌ள் கூறும் பிர‌ம்ம‌னைன் புத்திர‌ன் ம‌று பிற‌வி எடுத்த‌ க‌தை க‌தை, மின் தூண்ட‌ல் விதி போல‌, நியூட்ட‌னின் விதி போல‌ நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌ ஒன்று.

  அதாவ‌து த‌ச‌ர‌த‌ புத்திர‌னான‌ இராம‌ர் க‌ட‌வுளின் அம்ச‌ம். ஆனால் சிவ‌னின் ம‌க‌னாக‌ இருந்தால் அவ‌ன் ஒன்றுமில்லை‍

  எல்லா சேக்ர‌ட் டெக்ஸ்ட்க‌ளையும் தான் சிதைத்து வைத்து இருக்கிறார்களே. ச‌மீப‌த்தில் ப‌க‌வ‌த் கீதையின் ஒரு ப‌திப்பு பார்க்க‌ கிடைத்த‌து. அதில் எந்த‌ இட‌த்தில் எல்லாம் பிர‌ம்ம‌ம் என்று வ‌ர‌
  வேண்டுமோ அங்கே எல்லாம் ல‌க்ஷ்மி என‌ எழுதி பிரிண்ட் போட்டு இருந்தார்க‌ள்.

  ஸ்க‌ந்த‌ன், ச‌ங்க‌ர‌ர் கால‌த்தில் பாண்டிய‌ நாட்டை ஆண்ட‌ அர‌ச‌ன் என்ப‌தாக‌ கூட‌ சேக்ர‌ட் புக் இருந்தாலும் ஆச்ச‌ரிய‌ம் இல்லை. இதில் நாம் எவ்வ‌ள‌வு எழுதினாலும் ப‌ல‌ன் இருக்காது. நாம் எழுத‌ எழுத‌ ஏதாவ‌து சாக்குப் போக்கு சொல்லி, ஸ்க‌ந்த‌ன் என்னோடு ப‌ள்ளியில் ப‌டித்த‌வ‌ன் என்று கூட‌ சொல்ல‌லாம்.

  க‌ட‌வுளே சொல்லியும் கேட்காத‌வ‌ர் நாம் சொன்னால் கேட்பர்க‌ளா?

  ம‌கிழ்ச்சியோடு உங்க‌ள் இக‌ழ்ச்சிப் பிர‌ச்சார‌த்தை ந‌ட‌த்துங்க‌ள்.

  உங்க‌ளுக்கு பிடித்த‌ தெய்வ‌ங்க‌ள் எல்லாம் தான் உண்மையான‌ தெய்வ‌ம் என்று சாதியுங்க‌ள்.

  உங்க‌ளுக்குப் பிடிக்காத‌ தெய்வ‌ங்க‌ளை எல்லாம், சின்ன‌ம‌லை (little mount) அடையாறு ஆறு, அது போல‌ என்றும் எழுத‌லாம்.

  எத்த‌னையோ புத்த‌க‌ங்க‌ளை மேற்கோள் காட்ட‌ வ‌ச‌தியாக‌ சிதைது வைத்து உள்ள‌ன‌ர்.

  ஆனால் நாம் அமைதியாக‌ அத்வேஷ்டாவாக‌வே இருப்போம். விச‌த்தை எங்க‌ள் வாயிலே வூற்றினாலும் அமைதியாக‌ அதைக் குடிப்போமெய‌ல்லாம‌ல் வெறுப்புக் க‌ருத்தை அக‌ற்றி அன்புக் க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பும் ப‌ணியில் பின் வாங்க‌ மாட்டோம்.

  ஆபிர‌காமிய‌ பிர‌ச்சார‌கர்க‌ள் ப‌ல‌ரிட‌ம் இதே த‌ள‌த்திலே ப‌ல‌முறை வாத‌ம் செய்து இருக்கிறேன். அவ‌ர்க‌ளிட‌ம் கூட‌ இவ்வ‌ள‌வு வெறுப்பையும், பிற‌ தெய்வ‌ங்க‌ளை இக‌ழ்வ‌தில் இவ்வ‌ளவு முனைப்பையும், அத‌ற்க்காக‌ இவ்வ‌ள‌வு திரிப்புக‌ளியும் பார்த்த‌து இல்லை.

  இன்னும் சொல்ல‌ப் போனால் ச‌ம‌ர‌ச‌த்தின் , ச‌க‌ஜ‌ப் போக்கின் அவ‌சிய‌த்தை ஒரு க‌ட்ட‌த்தில் அவ‌ர்க‌ள் கொஞ்ச‌மாவ‌து உண‌ரும் ப‌டிக்கு செய்ய‌ என்னால் முடிந்த‌து.

  நீங்க‌ள் உங்க‌ள் புற‌ம் தொழாமை கோட்பாட்டை ம‌க்களிட‌ம் ப‌ர‌ப்புங்க‌ள்.

  எல்லாத் தெய்வ‌ங்க‌ளையும் வ‌ண‌ங்கி, ஒரு தெய்வ‌த்திட‌ம் விசேச‌ க‌வ‌ன‌ம் செலுத்தும் ச‌ம‌ர‌ச‌ வ‌ழி பாட்டு முறையை நான் ம‌க்க‌ளிட‌ம் ப‌ரப்புவேன்.

  //ம‌ற‌ந்தும் புற‌ம் தொழாமைக்// கோட்ப்பாட்டை கொட்டை எழுத்தில் போட்டு நினைவு ப‌டுத்திய‌ க‌ட்டுரை ஆசிரிய‌ருக்கும்,

  அந்த‌க் கோட்பாடு எவ்வ‌ள‌வு அபாய‌மான‌து என்ப‌தை என‌க்கு உண‌ர்த்திய‌ திரு. க‌ந்த‌ர்வ‌ன், திரு. சார‌ங் ..ம‌ற்றும் பிற‌ ந‌ண்பர்க‌ளுக்கும் என் ந‌ன்றி.

  இந்த‌க் கோட்பாட்டினால் உருவாகும் வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை நாம் ம‌க்க‌ளை ச‌ந்திக்கும் நிக‌ழ்ச்சிக‌ளில் எல்லாம் விளக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌த்தை இந்த‌க் க‌ட்டுரை என‌க்கு அளித்துள்ள‌து, அத‌ற்க்கு க‌ட்டுரை ஆசிரிய‌ருக்கும் ந‌ன்றி.

  I request tamil hindu editor to publish this comment .

 156. jayasree on February 17, 2010 at 11:24 pm

  //Sarang
  17 February 2010 at 8:43 pm

  கந்தர்வன் அவர்களே

  நீங்கள் சொல்வது சரியே – அத்வைத நிலையில் கூட சங்கரர் சத் மட்டுமே உள்ளது என்று கீதா பாஷ்யத்தில் சாதிக்கிறார் (ந அசதோ …) சத் மட்டும் தான் உண்மை என்று விஷிச்டாட்வைதமும் சொல்கிறது – //

  இந்த ‘சத்’ என்னும் விஷயத்தை விட்டு மன அகலக்கூடாது என்பதே புறம் தொழாமையின் மூலக் காரணம் என்பதை, ‘வார்த்தாமாலையில்’ 348 -ஆவது வார்த்தையில் ஸ்ரீ பட்டர் விவரிப்பதைக் காண்க. (பக்கம் 355, குருபரம்பர பிரபாவம். )
  This is for your information, not for debate.

 157. Rama on February 18, 2010 at 5:57 am

  I wish Thirichikaran will write Krishnan instead of Kritinar.
  Kritinan is not Krishnan.

 158. திருச்சிக் காரன் on February 18, 2010 at 9:38 am

  //மேலும் அந்த விஸ்வரூபத்தில் நானும் நீங்களும்,இவர்களும், ஒபாமா, பெனசிர் புட்டோ, சோனியா, காஸ்ட்ரோ, ராஜபக்ஷ, பிரபாகரன், மு கா அழகிரி, ராமசாமி நாயக்கர், கனிமொழி, சிவாஜி கணேசன், சாக்ரடீஸ், இடி அமீன், சன் ஜூ அடக்கம் – இதன் காரணமாகவும் நீங்கள் சொல்லும் த்ரிஷ்டாந்ததில் தோஷம் வருகிறது//

  விசுவரூபத்தைப் பற்றிய இன்னொரு விஷயம்: விசுவரூபம் விகாரமடையும் தத்துவங்களும் அடங்கியவையே. ஆகையால், இப்பொழுது உள்ள விசுவரூபத்தில் ஒபாமா, ஹிலறி, ஜார்ஜ் புஷ், இவர்கள் உண்டு. 1945-க்கு முன் விஸ்வரூபத்தில் ஹிட்லர, ஸ்டாலின் இவர்கள் உண்டு. சங்கரருடைய சிஷ்யரான தொடகாசாரியாரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளார் (இன்று விஷ்ணு சஹஸ்ரநாம கிராமத்தில் “பூஹு பது யஸ்ய” என்று தொடங்கும் தியான சுலோகமாக வழங்கப்படுகிறது):

  “I bow down to Lord Visnu (Vishnu), whose body comprises the three worlds. His feet are the earth, the cavity of His belly is space, his vital breath is the wind, and His eyes are the sun and the moon. His ears are the directions, His head is the heaven, His face is the fire, and His bladder is the ocean. Within Him this universe delights with its variety of gods (divinities created by Supreme Lord), human beings, birds, cows, snakes, celestial beings, and demons. To that Visnu I offer my salutations.” (”shrutisArasamuddharaNa” என்னும் வியாக்கியானம், 179-வது சுலோகம்)//

  எல்லாவற்றையும் தன்னில் அடக்கிய விஸ்வ ஈஸ்வரன் அண்டங்களை தன்னில் கொண்டுள்ள போது, ஜகத் அவரிடம் இல்லாமல் இருக்குமா?

  மண்ணைத் தின்ற கிருட்டிணர் வாயைத் திறந்து காட்டவில்லையா?

  ஆனால் சாக்ரடீசும், சிவாஜி கணேசனும் ஒரே நேரத்தில் தெரியுமா? இது கிட்டத்தட்ட லைவ் டெலி காஸ்ட் போல கொள்ளாலாம்.

  நாம் சொல்ல வந்தது என்ன? பூதங்கள் எல்லாம் எப்போதும் சாஸ்வதமாக விசவ ஈஸ்வரனின் சொரூபத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக இல்லை என்பதே நாம் சொல்ல வந்தது.

  ஆனால் ருத்ரர்களும், ஆதித்யரகளும், மருத்துக்களும் விசவ ஈச்வர சொரூபத்தின் சொரூபமாக எப்போதும் உள்ளனர், என்பதாக கொள்ளலாம் அல்லவா? அந்த மருத்துக்களை, ஆதித்யர்களை, ருத்திரனை, சங்கரனை பார்த்தால் முகம் திருப்புவது ஈஸ்வரனுக்கு செய்யும் அவமானம் ஆகாதா என்பதை நாம் கேட்டபோது, நண்பர் ஆதித்யரகளை, ருத்ரர்களை, சங்கரர், இவர்கள் எல்லாம் பெனாசிர் போட்டோ, சிவாஜி கணேசன், ஒபாமா போலத்தானே என்று அள்ளித் தெளித்து விட்டார்!

  ருத்ரர்களும், ஆதித்யரகளும், மருத்துக்களும் விசவ ஈச்வர சொரூபத்தின் சொரூபமாக எப்போதும் உள்ளனர், என்பதாக கொள்ளலாம் அல்லவா? அந்த மருத்துக்களை, ஆதித்யர்களை, ருத்திரனை, சங்கரனை பார்த்தால் முகம் திருப்புவது ஈஸ்வரனுக்கு செய்யும் அவமானம் ஆகாதா?

 159. திருச்சிக் காரன் on February 18, 2010 at 9:50 am

  //எனக்கு ஆபிராமிய மதம் தெரியாது – நான் சமரச வாதி இல்லை – //

  உங்களுக்கு ஆபிரகாமிய மதம் தெரியுமோ தெரியாதோ, ஆனால் நீங்கள் அறிந்தோ, அறியாமலோ பல ஆபிரகாமிய கருத்துக்கள் உங்கள் பின்பற்றும் சித்தாந்தத்திலே இருக்கிறது. என்னுடைய தளத்திலே கடம்பன் என்ற பெயரிலே ஒரு புறம் தொழாமை சித்தாந்தக் காரர் அவருடைய கருத்துக்களை வெளியிட்டார். அதை கருத்தை நம்முடைய அபிரகாமிய சித்தாந்த வழியை பின்பற்றும் சகோதரர்கள், உடனே வரவேற்று அவருக்கு ஆதரவும் அளித்துள்ளனர்.

 160. திருச்சிக் காரன் on February 18, 2010 at 9:56 am

  //Rama
  18 February 2010 at 5:57 am
  I wish Thirichikaran will write Krishnan instead of Kritinar.
  Kritinan is not Krishnan.//

  ok, சகோதரரே. நாங்கள் சமரச வாதிகள் தானே. நீங்கள் எப்படி எழுத சொன்னாலும் எழுதுகிறோம். நாம் எழுதியதில் உள் நோக்கம் எதுவும் இல்லை. தமிழ் எழுத்துக்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தளங்களில் எழுதி அப்படி வந்து விட்டது .

 161. திருச்சிக் காரன் on February 18, 2010 at 10:01 am

  சத் என்பது என்ன? ஒரு சாரார் வழிபடும் தெய்வங்கள் மட்டும்தான் சத்தா? மற்ற சாரார் வழிபடும் தெய்வங்கள் எல்லாம் அசத்தா?

 162. armchaircritic on February 18, 2010 at 10:25 am

  //திருச்சிக் காரன்
  18 February 2010 at 10:01 am

  சத் என்பது என்ன? ஒரு சாரார் வழிபடும் தெய்வங்கள் மட்டும்தான் சத்தா? மற்ற சாரார் வழிபடும் தெய்வங்கள் எல்லாம் அசத்தா?//
  நீங்கள் திககாரர்களயே மிஞ்சுகிறீர்கள். சத் என்றால் என்ன என்று தெரியாவிட்டால் ‘சத் என்பது என்ன?’ என்பதோடு நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் உங்களுடைய மறுமொழியில் சமரச பாவம் தெரியவில்லை. சில சமயம் உங்கள் கேள்விகளும் வாதங்களும் உங்களை ஒரு adolescentஆக எண்ண வைக்கிறது. By the way எனக்கும் சத் என்றால் என்ன என்று தெரியாது.

 163. Rama on February 18, 2010 at 11:29 am

  My knowldge of tamil is not great, although letters ” sha”, Ja ” were taught at school over 50 years ago,as tamil.
  Anyhow, this is off topic. It is just that it makes it easier to read what is written, instead of trying to figure out what is written. Hope this is taken in the right sprit, thanks.

 164. Sarang on February 18, 2010 at 12:25 pm

  நண்பர் திருச்சிகாரரே

  //
  நீங்க‌ள் ந‌ல்ல‌வ‌ர், க‌ருணை, ப‌க்தி, ஆச்சாரியார் ப‌க்தி, எல்லாம் இருந்தும் ஸ்க‌ந்த‌ன் சிவ‌னின் ம‌க‌னாக‌ சித்த‌ரிக்க‌ப் ப‌டுவ‌தால் அவ‌னை எப்ப‌டியாவ‌து ஏற‌ க‌ட்டி, அர்ஜுன‌ன் ரேஞ்சுக்கு அல்ல‌து சுக்ராச்சாரியார் ரேஞ்சுக்கு இல்லை இன்னும் ஏதாவ‌து உதார‌ண‌ம் காட்ட‌ துடிக்கும் நிலையை, இந்த‌ புற‌ம் தொழா அல்ல‌து சிவ‌ம் தொழா அல்ல‌து சிவ‌ த்வேஷ‌ கோட்பாடு உங்க‌ள் ம‌ன‌தில் உருவாக்கி உள்ள‌து.
  //

  என்னுடைய மறுமொழியை படிக்கவே இல்லையா – இங்கு கண்ணன் குணங்களை பற்றி சொல்கிறான் அப்படியானால் ராமனையும் சுக்ராச்சாரியார் ரேஞ்சுக்க கொண்டு செல்வான் – நீங்கள் சொல்வது உங்களுக்கே முரண்பாடாக இல்லையா – இங்கு த்வேஷம் கருதியே எழுதவில்லை – நீங்கள் எப்பட அவன் அசுருவான், அசந்தா பாரு பாரு த்வேஷம் த்வேஷம் என்று சொல்ல்வது போல் தான் உள்ளது – சாரை விட்டு விட்டு சக்கையை பிடிக்கிறீர்கள் அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்

  – மேலும் என்னுடைய மறுமொழியில் அர்ஜுனனை ராமனை விட ஒரு படி மேலே வைக்கிறான் என்று சொன்னதை படிக்கவில்லையா

  //
  இத்த‌னைக்கும் இராம‌ய‌ணத்தின் முக்கிய‌ நிகழ்வான‌- இராம‌ர் ஆட்சியை விட்டுக் கொடுத்து வ‌ன‌ம் செல்லும் தியாக‌ம் அல்ல‌து இராவ‌ண‌ வ‌த‌ம்- பற்றிய‌ குறிப்பு எதையும் உள்ள‌ட‌க்கிய‌தாக‌ ப‌க‌வ‌த் கீதையில் சொல்லும் வாக்கிய‌ம் இல்லை. ஆனாலும் ப‌ரவாயில்லை என்று இராம‌ருக்கு க‌ட‌வுள் ப‌ட்ட‌ம் கொடுத்து விட்டு க‌ந்த‌னைக் க‌ட்ட‌ம் க‌ட்ட‌ கிள‌ம்பி விட்டீர்க‌ள்.
  //

  பாருங்கள் உங்கள் கற்பனை (உங்களுக்கு புறம் தொழாமை என்ற நல்ல கோட்பாட்டின் மேல் உள்ள த்வேஷம்) எங்கெல்லாம் உங்களை கொண்டு செல்கிறது என்று – கந்தனை கட்டம் கட்டுகிறது நீங்களே என்று தோன்றுகிறது இதற்க்கு நான் மேலே சொன்ன மறுமொழியை திரும்ப சேர்த்து சொல்கிறேன்

  சாரங் //———–
  நண்பரே
  அவசரம் வேண்டாம் – – ராமரையும் சேர்த்துதான் அர்த்தம் சொன்னேன் கட்-பேஸ்ட் பிரச்சினையே அது – அர்த்தம் அர்ஜுனன் போல, சுக்ராச்சாரியார் போல என்று நேரடியானது இல்லை – இதை நீங்கள் அப்படியே புரிந்து கொண்டால் நான் என்ன செய்ய – நீங்கள் இதற்கான பாஷ்யம் படித்திருப்பீர்கள் என்று நம்பி அர்த்தம் கூறாமல் முன்னே சொன்ன பதிலில் விட்டேன்

  இப்போது அர்த்தமும் சொல்லிவிடுகிறேன்

  //
  இராம‌ரையும் முருக‌ரையும் ஒரெ வ‌கையான‌ இட‌த்தை கொடுத்துதான்‍ அதாவ‌து அவ‌ர்க‌ள் த‌ன்னுடைய‌ அம்ச‌ம் என்ற‌ வ‌கையிலே தான் கிருட்டிண‌ர் குறிப்பிட்டுள்ளார்.
  //

  இல்லை – நான் ராமன், நான் வியாசர், நான் ஸ்கந்தன், நான் சுக்ராச்சாரியார் என்று கூறியது எந்தெந்த சக்தி, பலம், ஐஸ்வர்யம், தேஜஸ், வீர்யம்,ஞானம் முதலிய குணங்கள் எங்கெங்கு மேலோங்கி உள்ளதோ அதற்கான இலக்கணங்களாக யார் யார் உளரோ அது என்னாலேயே என்று அறிந்துகொள்

  இப்போது சொல்கிறேன் ராமன், வியாசர் இங்கு வருவதும் இந்த குணங்களை குறிப்பதே அன்றி அவதாரத்தையோ, கடவுளையோ அல்ல

  மேலும் வில்லுக்கு அர்ஜுனன் என்று அனைவருக்கும் தெரியும் – கண்ணன் அர்ஜுனனை சொல்லாமல் ராமனை சொல்வதேன் பாருங்கள் கண்ணனுக்கு தான் என்ன மன அபிமானம் என்று கூட சிலருக்கு கேள்வி வருகிறது? அவன் அர்ஜுனனுக்கு ஒரு special treatment தந்துள்ளான் – ஒரு குணமாக அர்ஜுனனை சொல்லாமல் நட்பை மேன்மை படுத்தி மிக சிறந்த பாண்டவருள் நீயே எனக்கு மிக சிறந்தவன் என்று ஒர் உயரிய ஸ்தானத்தில் ஏற்றினான் – இராமான தன்னையே இதற்கு ஒரு படி கீழே தள்ளி உள்ளதை பாருங்கள்

  நான் குணங்களை குறிப்பதர்க்கே இதை சொன்னேன் – இதை நீங்கள் அப்படிதான் கொண்டிருக்க வேண்டும் அப்படி இல்லாமல் – எதற்கெடுத்தாலும் சாதியம் என்றால் சரி இல்லை
  இது தான் நீங்கள் தீர ஆராயாமல் செய்யும் செயல்
  //———–

  உங்களக்கு எப்படியாவது இந்த புறம் தொழாமையை கொடூரமானது என்று சித்தரித்து காட்டியே தீர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது திண்ணமாகிறது – கந்தர்வன் சொன்ன விஷயத்தை ஏக்க சக்கமா உங்கள் சித்தம் போல திரித்து காட்டுகிறீர்களே – உங்களுக்கு சமரசமாகவே யோசிக்க வரவில்லையே – ஓஹோ ராமன் விஷ்ணு அவதாரம் என்று ராமாயணத்தில் அறிகிறோம் என்று சொன்னால் அதை உடனே விநாயகரும், ஸ்கந்தனும் சிவனின் வம்சம் இல்லை என்று சொன்னாதாக நினைத்து பக்கம் பக்கமாக எழுதுவது ஏன்

  நீங்கள் த்யாகய்யர் பாடல் கேட்பவர் தானே – நாதலோளுடை பாடல் கேட்டதுண்டா – அதில் ஸ்கந்தன் வருகிறார் ஹரி ஹராத்மா பூ சுரபதி ஷர ஜன்ம கணேஷாதி இங்கு முருகன் ஸ்கந்தன் என்று வருகிறதா – ஷர ஜன்ம என்பதற்கு அர்த்தம் தேடுங்கள் – ஸ்கந்தன் எப்படி சிவனுக்கும் பார்வதிக்கும் மகனானார் என்று – அவர் சிவா பார்வதி மைந்தனே ஆனால் கந்தர்வன் கூறியதும் உண்மையே – அவர் சொன்னது என்ன என்று தெரிந்து கொண்டு அப்புறம் ஏசலாம் – நீங்கள் பல முறை இது போல புரிந்து கொள்ளாமல் பிறரை ஏசி ஆகிவிட்டது

  மேலும் இதாவது படித்தீர்கள

  //
  “Sanatkumâra also, who likewise was a son of Brahman’s (correction: Brahma’s) mind, was, in consequence of a boon being granted to Rudra, born again as ஸ்கந்தா
  //

  இங்கே ருத்ரனான சிவ பெருமானின் மகனாக மறு அவதாரம் எடுத்தார் என்று தானே உள்ளது – முருகன் சரவண பொய்கையில் தோன்றினார் என்றே கூறுவார் – வேறேதாவது புராண கோட்பாடு இருந்தால் சொல்லுங்கள்

  இந்த விஷயத்தை முரளிதர சுவாமிகளே உறுதி செய்து சொல்லி இருக்கிறார் மேலும் இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே – உங்களுக்கு தெரியாதது விந்தையாக உள்ளது

  ஸ்கந்தன் கடவுள் அம்சமே – இதை அன்றவன் மறுக்கவில்லை – மாறாக எந்த புராணத்திலும் ஸ்கந்தன் விஷ்ணுவின் அம்சம் இல்லை என்றே சொல்கிறார் – முருகனை – மால் மருகா ஷண்முக, பதுமநாபன் மருகா என்றெலாம் நீங்கள் கேட்டதில்லையா – அதனால் அவர் விஷ்ணு அம்சம் இல்லை என்றே கந்தர்வன் சொன்னார்

  த்வேஷம் த்வேஷம் என்றே சதா ஜபம் செய்துகொண்டிருக்கும் உங்களுக்கு இதுவும் த்வேஷம் போல தெரிகிறது என நினைக்கிறேன்

  தயவு செய்து சற்று பொறுமையாக படியுங்கள் – முன் என்ன சொல்லி இருக்கு பின் என்ன இருக்கு என்று ஒரு logical முடிவுக்கு வாருங்கள்

  மேலும் நீங்கள் புரியாமல் முறைப்படி கற்காமல் செய்யும் வாதத்தை நோக்குவோம்

  //
  எல்லாவற்றையும் தன்னில் அடக்கிய விஸ்வ ஈஸ்வரன் அண்டங்களை தன்னில் கொண்டுள்ள போது, ஜகத் அவரிடம் இல்லாமல் இருக்குமா?
  //

  இது தான் விராட் ரூபம் என்று சொல்லியாகிவிட்டதே அப்புறம் இந்த உலகத்தையும் பிரிப்பதேன்

  //
  மண்ணைத் தின்ற கிருட்டிணர் வாயைத் திறந்து காட்டவில்லையா?

  ஆனால் சாக்ரடீசும், சிவாஜி கணேசனும் ஒரே நேரத்தில் தெரியுமா?
  //
  ஆமாம் இவர்கள் இருவரும் வேறு வேறு ஆத்மாவேனில் ஒரே நேரத்தில் தெரியும் – live telecast தான் – இது இருக்க முடியாது என்று அறிவியல் பூர்வமாகவும் வாதாட முடியாது ஏன் என்றால் அறிவியல் live telecast என்பதை ஒத்துக்கொள்கிறது

  // இது கிட்டத்தட்ட லைவ் டெலி காஸ்ட் போல கொள்ளாலாம்.

  நாம் சொல்ல வந்தது என்ன? பூதங்கள் எல்லாம் எப்போதும் சாஸ்வதமாக விசவ ஈஸ்வரனின் சொரூபத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக இல்லை என்பதே நாம் சொல்ல வந்தது.
  //

  விராட் என்பதில் எல்லாமே அடக்கம் அதென்ன சிலரை மட்டும் அதிலிருந்து பிரிப்பது – அப்படி என்றால் அது விஸ்வரூபம் கிடையாது – விசேஷ விஸ்வரூபம் அல்லது சுத்த சத்வ ஜீவர்களை கொண்ட விஸ்வரூபம்

  மேலேயே கண்ணன் சொன்ன கீதா வாக்கியம் குடுத்தாயிற்று – அதில் ஜனாதிப என்று துர்யோதனனையும் சேர்த்து தான் சொல்கிறார்

  //ஆனால் ருத்ரர்களும், ஆதித்யரகளும், மருத்துக்களும் விசவ ஈச்வர சொரூபத்தின் சொரூபமாக எப்போதும் உள்ளனர், என்பதாக கொள்ளலாம் அல்லவா?
  //

  பாற்கடலை கடைந்த போது நின்ன அசுரர் எங்கு போனார் – ஆத்மா சத் நிலையானது என்கிறோம் – அப்படி இருக்கையில் பரமாத்மாவினுள் எல்லா ஆத்மாவும் இருந்தே தீர வேண்டும் [அசுரர்களுக்கு ஆத்மா இல்லையா] – என்னை போன்ற கீழானவர்களும் அதில் அடக்கமே – இதென்ன இந்திய மேப்பா நினச்ச மாத்தறதுக்கு

  நீங்கள் சொல்வது புது வாதமாக உள்ளதே – அப்போ முப்பத்முகோடி தேவர் மட்டுமே விஸ்வரூபத்தில் மற்றவர் எல்லாம் அந்தரத்திலா – அந்த அந்தரம் எங்குள்ளது?

  சரி – அப்போ எங்கே உங்கள் சமரச வாதம் – இயேசு இதில் இல்லையா – முஹம்மத் இல்லையா

  இவர்களும் அடக்கம் – அவர்கள் கூறும் சாத்தானும் அதில் அடக்கம்

  தன்னுல்ல்லே திரைத்தேழும் தரங்க வெண் தடக்கடல் தனுள்ளே அடங்குகின்ற தன்மை போல்
  நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நில்லுள்ளே அடுங்கு கின்ற நீர்மை நின் கண் நின்றதே

  நிற்பவும் என்று செடி, கல் எல்லாத்தையும் சேர்த்தாயிற்று இதில் அசுரர் என்ன, ஒபமா என்ன விளக்கு

  //
  உங்களுக்கு ஆபிரகாமிய மதம் தெரியுமோ தெரியாதோ, ஆனால் நீங்கள் அறிந்தோ, அறியாமலோ பல ஆபிரகாமிய கருத்துக்கள் உங்கள் பின்பற்றும் சித்தாந்தத்திலே இருக்கிறது. என்னுடைய தளத்திலே கடம்பன் என்ற பெயரிலே ஒரு புறம் தொழாமை சித்தாந்தக் காரர் அவருடைய கருத்துக்களை வெளியிட்டார். அதை கருத்தை நம்முடைய அபிரகாமிய சித்தாந்த வழியை பின்பற்றும் சகோதரர்கள், உடனே வரவேற்று அவருக்கு ஆதரவும் அளித்துள்ளனர்.
  //

  english ல a b c d இருக்கு – தமிழ்ல அ, ஆ இ ஈ இருக்கு – ஆஹா அங்கயும் எழுத்து இங்கயும் எழுத்து அப்போ தமிழ் ஆங்கிலம் தான் தமிழ் எல்லாம் காட்டு மிராண்டி என்பதோ போல ஒரு புது திரிஷ்டாந்தம் உண்டு பண்ணி
  நீங்கள் பக்கம் பக்கமா எழுதினால் என்ன செய்ய

  உங்களுக்கோ ஆபிரஹாமிய மாயா முதலில் விலக வேண்டும் – சமரசம் என்று கூறிக்கொண்டு அவர்கள் விஷயத்தை படித்து விட்டு நம்ம விஷயத்தை படிக்காமலேயே இருந்தால் எப்படி

  நான் எவ்வளவோ சான்றுகள் கூரியாகிவிடாது – மறுபடியும் மறுபடியும் நீன்கள் முடிச்சு போட்டால்

  ஒன்று உங்களுக்கு விஷயம் புரியவில்லை, சொல்வதை படிப்பதில்லை அல்லது புரிவதில்லை அல்லது வேண்டும் என்றே செய்கீர்கள் என்று தான் கொள்ள வேண்டும்

  நீங்கள் சொன்ன தப்பர்த்தங்களை எல்லாம் வரிசையாக தகர்தாகி விட்டது – உண்டனே மீண்டும் ஆபிரஹாமிய விஷயத்திற்கு தாவினால் என்ன சொல்வது

  person 1 – உலகும் உருண்டை இல்லை உருண்டையாக இருந்தால் ஆடிக் கொண்டே இருக்கும் ஆடுவது நமக்கு தெரியா வில்லையே அதனால் உலகம் உருண்டை இல்லை

  person 2 – உலகம் உருண்டை என்பது உண்மை எதனால் என்றால் … நீ விமானத்தில் போகிறாய் அப்போது விமானம் நகர்கிறது ஆனால் நீ தனியாக நகரவில்லை அது போலே …..

  person 1 – உலகம் உருண்டை என்றால் அதில் இருக்கும் எல்லாமே உருண்டையாக தானே இருக்க வேண்டும்

  person 2 – அப்படி இல்லை – ஒரு சதுரமான அல்வா துண்டை உருண்டையான பானை உள்ளே போடு – பார் அல்வா இன்னும் சதுரமாக தான் இருக்கிறது அது போல் தான் உலகமும்

  ….

  person 2 – ……
  அது போல் தான் உலகமும்

  இவ்வளவு பேசிய பிறகும் பாருங்கள்

  person 1
  உலகும் உருண்டை இல்லை உருண்டையாக இருந்தால் ஆடிக் கொண்டே இருக்கும் ஆடுவது நமக்கு தெரியா வில்லையே அதனால் உலகம் உருண்டை இல்லை

  இதெல்லாம் என்னால சமாளிக்க முடியல

  //
  சத் என்பது என்ன? ஒரு சாரார் வழிபடும் தெய்வங்கள் மட்டும்தான் சத்தா? மற்ற சாரார் வழிபடும் தெய்வங்கள் எல்லாம் அசத்தா?
  //

  பாருங்கள் எதையும் எதையுமோ குழப்பி கொண்டால் என்ன செய்ய – ஆன்மா கூடத்தான் சத் எனப்படும் – ஆன்ம வழிபாடு செய்யுங்கள், ஒபாமாவும்,பெனசிரும் ஆன்மாவே

  ஜெயஸ்ரீ அவர்கள் சொல்லவந்தது என்ன நீங்கள் புரிந்து கொண்டது என்ன

  நீங்கள் படித்த காக்கா பூனை கதை மட்டுமே உண்மை என நம்பி இங்கு பேசுகிறீர்கள்

 165. Sarang on February 18, 2010 at 12:29 pm

  //Rama
  18 February 2010 at 5:57 am
  I wish Thirichikaran will write Krishnan instead of Kritinar.
  Kritinan is not Krishnan.//

  ராம அவர்களே திருச்சிகார செய்யும் பயோகத்தில் தவறு இல்லை கிருட்டிணன் என்பது தமிழாக்கம்

  ஆழ்வாரும் இது போல் ஹ்ரிஷிகேசன் என்பதை இருடிகேசன் என்று சொல்கிறார்

  compromise பண்ணாமல் தமிழையும் வளர்க்கலாம் வாடா மொழியையும் வளர்க்கலாம்

 166. Sarang on February 18, 2010 at 1:22 pm

  சத் என்று கண்ணன் கூறுவது மாறாத தன்மை எது உள்ளதோ அது

  சங்கரர் கூறும் உதாரணம் – மண்ணாகி இருந்து, பானையாகி, சிதிலாவதேன்பது மாறுதல் அடைவதென்பதால் அது உண்மை இல்லை – மாறும் எதுவுமே உண்மைகள் இல்லை ஏன் என்றால் அது நிலையற்றது மாறிக்கொண்டே இருக்கும்

  இது சூனியவாதம் போல் உளதே அப்படி என்றால் எதுவுமே உண்மை இல்லையா என்ற கேள்வி (பூர்வபக்ஷின்) வர – சங்கரர் இப்படி சொல்கிறார்

  நாம் இது மண், இது பானை, இது சிதில் என்று தான் சொல்கிறோம் – இங்கு இது என்பது மாறாமல் உள்ளது அதுவே சத் (என்ற பிரம்மம் – அதாவது பகவான் எல்லா ஸ்வரூபத்திலும் உள்ளான் என்பதை வேறு விதமாக சொல்கிறார்)

  திருச்சிகாரர் வேறொரு கட்டுரையில் பிறப்பு இறப்பு பற்றி கேட்ட கேள்விக்கும் இதிலேயே பதில் உண்டு – இதை கொஞ்சம் மாற்றி அமைத்தால் பதில் கிடைக்கும்

  மாறாமல் உள்ளவை ஆன்மா என்பதே (பரமாத்மா, ஜீவாத்மா) – மாறாத ஒன்று பிறந்து, வளர்ந்து, விரிந்து, சுருங்கி, இறந்து கொண்டு இராது – அவன் செய்வதை அவதாரம் என்ற சொல்லால் குறிக்கிறோம் நம் செய்வதை பிறப்பு என்ற சொல்லால் குறிக்கிறோம் – எப்படி சட்டை, புடவை பழசானால் நாம் வேறு சட்டை,புடவை மாற்றி கொள்கிறோமோ அது போல ஆன்மா இந்த உடல் பழசானால் வேறு உடல் கொள்கிறது – இது கீதை இரண்டாம் அத்தியாயத்தில் நேரடியாகவே சொல்லப்படுகிறது

  உடல் பழசானால் என்பதற்கு – அய்யா சின்ன குழந்தையும் இறக்கிறதே அதன் உடல் புதுசு தானே என்று கேட்டால் இதே தோணியில் ஒரு பதிலும் சொல்லலாம் – புது சட்டை சாயம் போகிறதே, புது சட்டை முள்ளில் தைத்து கிழிகிறதே அப்போது நாம் வேறு சட்டை மாற்றுகிறோம் அல்லவா

 167. ram on February 18, 2010 at 4:21 pm

  நண்பர் சாரங் அவர்களே,

  //ஆழ்வாரும் இது போல் ஹ்ரிஷிகேசன் என்பதை இருடிகேசன் என்று சொல்கிறார்//

  இப்படி மற்றவர்கள் பெயரை கொச்சையாகச் சொல்வது அநாகரீகம். புதிதாக ஒரு பெயரை நம் இஷ்டத்திற்கு வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே புழங்கும் மற்றவர்கள் பெயர்களை நம் விருப்பப்படி மாற்றுவது தவறு என்பது என் கருத்து. தாஜ்மஹால் என்பதை தாசுமகால் என்பதும், ஷாஜஹானை சாசகான் என்று உச்சரிப்பதும் அந்த பெயருள்ளவர்களை அவமதிப்பது போன்ற தோற்றமே!.

  தமிழை வளர்க்க நிறைய இடங்கள் இருக்கும் போது பிறரது பெயரிலா வளர்க்க வேண்டும். தமிழை டமில் என்றோ தமில் என்றோ உச்சரித்தால் மட்டும் நாம் பரிகாசம் செய்கிறோமே! அதே போல மற்ற பெயர்களை உச்சரிப்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டாமா?

  மேலும் உச்சரிப்புக்குத் தகுந்த எழுத்துக்கள் இல்லாத மொழியாக தமிழை ஏன் மாற்ற வேண்டும். வட மொழி தென் மொழி என்று கூறி தமிழை குறை மொழியாக்கவே பார்க்கிறார்கள். இந்திய மொழிகள் எல்லாவற்றிர்குமே ஷ், ஜ், ஹ், ஸ் போன்றவைகள் பொருந்தும்.

  இந்திய மொழி என்று பார்க்காமல் தனி மொழி என்று பிரிப்பதால் என்ன நன்மை. சில எழுத்துக்களையும் உச்சரிப்பையும் இழக்கிறோம். அவ்வளவே. அதனால் மொழிக்கு புதிய முன்னேற்றம் ஒன்றும் வந்து விடப்போவதில்லைஇ. மொழி ஒரு ஊடகம் தான். அதில் உணர்ச்சியைத் திணித்து மொழியை சிதைக்க வேண்டிய அவசியம் உண்டா?

 168. திருச்சிக் காரன் on February 18, 2010 at 5:24 pm

  //தஞ்சை கோபுரத்தின் அழகினை பார்த்து – அடடா எவ்வளவு அழகாக உள்ளது – நம் கோவிந்தனுக்கு இப்படி ஒன்று இல்லையே என்று யோசிப்போமே அனால் அந்த எண்ணம் கோவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் பேராசை என்பதால்) //

  //சேனாதிபதிகளுள் நான் ஸ்கந்தன்
  //

  நீங்கள் இதை எடுத்ததால் சொல்கிறேன்

  அவர் சொன்னதை நமது இஷ்டம் போல் அர்த்தம் செய்யலாகாது

  10-36 த்யுதம் சலயதம் – வஞ்சனை செய்பவர் செயல்களில் நான் சூதாட்டம்

  10-37 அஸ்மி பாண்டவானாம் தனஞ்சய – பாண்டவர்களில் அர்ஜுனன் நானே

  10-37 கவினாம் உசநா கவி – கவிகளில் சுக்ராச்சாரியார் நான்

  10-38 தண்ட தமயதாம் அஸ்மி – தண்டனை நானே

  ஒன்றை மட்டும் உருவி பொருள் பார்க்கக் கூடாது//

  நண்பரே
  அவசரம் வேண்டாம் – – ராமரையும் சேர்த்துதான் அர்த்தம் சொன்னேன் கட்-பேஸ்ட் பிரச்சினையே அது –
  இப்போது அர்த்தமும் சொல்லிவிடுகிறேன்

  திரு. சாரங் அவர்களே, இப்படியாக எல்லாவற்றையும் செய்து விட்டு கடைசியில் கட் அண்ட் பேஸ்ட் பண்ணும்போது விட்டு விட்டது என்றால் எப்படி. கட் அன்ட் பேஸ்ட் பண்ணும் போது அது எப்படி ஸ்கந்தன் மட்டும் சரியாக கண்ணில் கிடைத்தான்? உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

 169. Sarang on February 18, 2010 at 5:50 pm

  ராம் அவர்களே

  உங்கள் கருத்தில் உண்மை உள்ளது – எனக்கு மொழி அறிவு கிடையாது அதனால் இலக்கணப்படி வேறேதும் எனக்கு சொல்வதற்கில்லை – உணர்வு பூர்வமான ஒன்றை மட்டும் சொல்கிறேன்

  தமிழ் தம்பட்டம் என்ற பேரில் ஆட்சிக்கு வந்தவர்கள் – ஸ்ரீ முஷ்ணம் என்ற ஊர் பெயரை திரு முட்டினம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்கள் – இதை பார்த்த போது எனக்கு ஒரு புறம் சிரிப்பும் இன்னொருபுறம் மனகஷ்டமும் ஏற்பட்டது – இதனாலேயே நீங்கள் சொல்லவருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது (நன்றாக உரைக்கிறது 🙂 )

  ஆழ்வார் ராமன் (உண்டை வில்லால் கூனியை அடித்தது) செய்ததை கண்ணன் செய்தாகவெல்லாம் பழி போடுவார் – இந்த இருடிகேசன் பிரயோகம் அப்படியே நான் கொள்வேன் (அவர் இஷ்டம் – இந்த பாசுரம் திருமால் நேரே பிரத்யக்ஷமாக இருக்கும் போது பாடியது) – விஷயம் தெரிந்தவர்களிடம் இப்படி ஏன் என்று கேட்டு தெளிவு பெற்ற பின் எழுதுகிறேன்

 170. கந்தர்வன் on February 18, 2010 at 6:18 pm

  திருச்சிக்காரர் அவர்களே,

  //
  எல்லா சேக்ர‌ட் டெக்ஸ்ட்க‌ளையும் தான் சிதைத்து வைத்து இருக்கிறார்களே. ச‌மீப‌த்தில் ப‌க‌வ‌த் கீதையின் ஒரு ப‌திப்பு பார்க்க‌ கிடைத்த‌து. அதில் எந்த‌ இட‌த்தில் எல்லாம் பிர‌ம்ம‌ம் என்று வ‌ர‌
  வேண்டுமோ அங்கே எல்லாம் ல‌க்ஷ்மி என‌ எழுதி பிரிண்ட் போட்டு இருந்தார்க‌ள்.

  ஸ்க‌ந்த‌ன், ச‌ங்க‌ர‌ர் கால‌த்தில் பாண்டிய‌ நாட்டை ஆண்ட‌ அர‌ச‌ன் என்ப‌தாக‌ கூட‌ சேக்ர‌ட் புக் இருந்தாலும் ஆச்ச‌ரிய‌ம் இல்லை. இதில் நாம் எவ்வ‌ள‌வு எழுதினாலும் ப‌ல‌ன் இருக்காது. நாம் எழுத‌ எழுத‌ ஏதாவ‌து சாக்குப் போக்கு சொல்லி, ஸ்க‌ந்த‌ன் என்னோடு ப‌ள்ளியில் ப‌டித்த‌வ‌ன் என்று கூட‌ சொல்ல‌லாம்.
  //

  “சனத்குமாரர் பரமசிவனாருக்கு வரம் தந்து முருகனாகப் பிறந்தார்” என்று ஆதி சங்கரர் சொல்லியுல்லதை ஆங்கில மொழிபெயர்ப்பில் காட்டியுள்ளேன். சமஸ்கிருதத்தில் இதை காட்டுகிறேன். மொழிபெயர்ப்பு சரியாக உள்ளது என்பதை ஒத்துக் கொள்வீர்கள்: “सनत्कुमारो-अपि ब्रह्मण एव मनसः पुत्रः स्वयं रुद्राय वरप्रदानात् स्कन्दत्वेन प्रादुर्बभूव”. சங்கரருடைய சூத்திர பாஷ்யம் இருந்தால் மூன்றாம் அத்தியாயம், மூன்றாம் பாதம், முப்பத்திரண்டாம் சூத்திரத்தின் பாஷ்யத்தில் இது உள்ளமையைக் காணுங்கள். நான் காட்டிய ஆதாரத்தையும், சொல்லியுள்ளவையையும் சரியாகப் படிக்காமல் புரன்தொழாமைக் கொள்கையை எப்படியாவது தகர்க்க வேண்டும் என்ற அவசரத்தால் எழுதி விட்டீர்கள். ஆதி சங்கரருடைய வாக்கையும் பழித்து விட்டீர்கள்.

  //
  அதாவ‌து சிவ‌னின் ச‌க்தியில் இருந்து நேராக‌ ஸ்க‌ந்த‌ன் உருவான‌தாக‌ சொல்ல‌ப் ப‌டுவ‌து க‌வுண்ட‌ம‌னி ஜோக்.
  //

  ‘சிவனின் சக்தியிலிருந்து நேராக உருவானார்’ என்பது என்பதற்கு முரண் ஆகாது. அப்படி சிவனின் சக்தியிலிருந்து உருவானவர் சனற்குமாரருடைய மறுபிறவியே என்று சொல்வதில் தர்க்க ரீதியாக ஒரு பிரச்சனையும் வராது. நீங்கள் ஏனோ “சிவனின் சக்தியிலிருந்து உருவானார்” என்பதிலிருந்து “சிவனும் முருகனும் ஒருவரே” என்று முடிவு பண்ணுகிறீர்கள். சரி, அது உங்கள் இஷ்டம்.

  //
  ஸ்க‌ந்த‌ன் சிவ‌னின் ம‌க‌னாக‌ சித்த‌ரிக்க‌ப் ப‌டுவ‌தால் அவ‌னை எப்ப‌டியாவ‌து ஏற‌ க‌ட்டி, அர்ஜுன‌ன் ரேஞ்சுக்கு அல்ல‌து சுக்ராச்சாரியார் ரேஞ்சுக்கு இல்லை இன்னும் ஏதாவ‌து உதார‌ண‌ம் காட்ட‌ துடிக்கும் நிலையை, இந்த‌ புற‌ம் தொழா அல்ல‌து சிவ‌ம் தொழா அல்ல‌து சிவ‌ த்வேஷ‌ கோட்பாடு உங்க‌ள் ம‌ன‌தில் உருவாக்கி உள்ள‌து.
  ….
  உங்க‌ளுக்குப் பிடிக்காத‌ தெய்வ‌ங்க‌ளை எல்லாம், சின்ன‌ம‌லை (little mount) அடையாறு ஆறு, அது போல‌ என்றும் எழுத‌லாம்.
  //

  சனத்குமாரர் பரம பிரம்ம ஞானி, பரம யோகி, பரம பாகவதர், பரம வைராக்ய நிஷ்டர். இதைப் பரிபூரணமாக ஏற்ற என்னை இப்படிப் பழிப்பது முறை அன்று.

  மிகவும் கடினப்பட்டு, நேரத்தை ஒதுக்கி, நீங்கள் “காட்டுமிராண்டித்தனம், ஆபிரகாமியத்தனம்” என்பவற்றை சரமாரியாக வீசினாலும், மிகவும் restraint-உடன் பொறுமையாக ஆதாரங்களைத் தேடி எடுத்து hyperlink பண்ணுகிறேன். அதை எல்லாம் சரியாக ஒரு முறை கூட படிக்காமல் என்னையும் சாரங்கையும் இப்படி தூற்றுவது நியாயமே இல்லை.

  அது சரி, ஆதி சங்கர கீதா பாஷ்ய நூல்களுக்குச் சுட்டிகள் பலவற்றைக் கொடுத்திருந்தேன் (17 February 2010 at 6:15 pm). அந்த பாஷ்ய நூலை சிறிதாவது, ஒரு முறையாவது படித்தீர்களோ? அதில் சங்கரர் சொல்லியுள்ளவற்றிற்கு என்ன பதில் உரைப்பீர்களோ?

 171. திருச்சிக் காரன் on February 18, 2010 at 6:27 pm

  //ஆனால் ருத்ரர்களும், ஆதித்யரகளும், மருத்துக்களும் விசவ ஈச்வர சொரூபத்தின் சொரூபமாக எப்போதும் உள்ளனர், என்பதாக கொள்ளலாம் அல்லவா?
  //

  பாற்கடலை கடைந்த போது நின்ன அசுரர் எங்கு போனார் – ஆத்மா சத் நிலையானது என்கிறோம் – அப்படி இருக்கையில் பரமாத்மாவினுள் எல்லா ஆத்மாவும் இருந்தே தீர வேண்டும் [அசுரர்களுக்கு ஆத்மா இல்லையா] – என்னை போன்ற கீழானவர்களும் அதில் அடக்கமே – இதென்ன இந்திய மேப்பா நினச்ச மாத்தறதுக்கு

  நீங்கள் சொல்வது புது வாதமாக உள்ளதே – அப்போ முப்பத்முகோடி தேவர் மட்டுமே விஸ்வரூபத்தில் மற்றவர் எல்லாம் அந்தரத்திலா – அந்த அந்தரம் எங்குள்ளது? ////

  // ருத்ரர்களும், ஆதித்யரகளும், மருத்துக்களும் பார் //

  //11.6 பச்யாதித்யான் வசூன், ருத்ர- நச்விநௌ மருத ஸ்ததா
  பஹூன்- யத்ருஷ்ட- பூர்வாணி பச்யாச்ச்சர்யாணி : பாரத//

  இதை சொன்னது நான் இல்லை, கிருஷ்ணர்.

  இது கிருஷ்ணர் சொன்னது. இது விஸ்வ சொரூபம் – ரூபம். ஆதித்யர்கள், ருத்ரர்களின் பார் எனக் கூறியது ரூபத்தை தானே? கூறவில்லையா? அந்த விசவ ரூபம் சாஸ்வதமானது தானே.

  இந்த ரூபத்திலே பெனாசிர் புட்டோவும், ஜாஜ் வாஷிங்டனும் தங்கள் ரூபமாகவே சாஸ்வதமாக இருப்பார்களா? ஆத்மா பரமாத்விலே சேரும் என்பது வேறு விடயம்.

  விசவ ரூபத்திலே ரூபமாக சாஸ்வதமான ரூபமாக இருப்பது எது என்பதுதானே விடயம்?

  //ருத்ரர்களும், ஆதித்யரகளும், மருத்துக்களும் விசவ ஈச்வர சொரூபத்தின் சொரூபமாக எப்போதும் உள்ளனர், என்பதாக கொள்ளலாம் அல்லவா? அந்த மருத்துக்களை, ஆதித்யர்களை, ருத்திரனை, சங்கரனை பார்த்தால் முகம் திருப்புவது ஈஸ்வரனுக்கு செய்யும் அவமானம் ஆகாதா?//

  இந்தக் கேள்விக்கு என்ன விடை?

  இதற்கு விடை சொல்வதற்கு பதிலாக ஒரு கேள்வியை போடுகிறீர்கள். அரக்கர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று.

  யதா ப்ரதீப்தாம் ஜ் வலனம் பதங்கா

  ஸம்ருத்த வேகா நாசாய ,

  ததைவ நாசாய விசந்தி லோகாஸ்-

  ததாபி வக்த்ராணி ஸம்ருத்த வேகா

  (விட்டில் பூச்சிகள் தீயினுள் புகுவதைப் போல உலகரின் உடலங்களும் உன் வாயினுள் புகுந்து நாசமடைகின்றன. )

  அரக்கர்களின் ரூபங்களையும் மருத்துக்களைப் போல , ஆதித் யர்களைப் போல விசவ ரூபத்திலே வைத்துக் கொள்ள ப் பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் , அந்தக் கோரிக்கையை நீங்கள் கண்ணனிடம் தான் வைக்க வேண்டும். என்னிடம் கேட்டு என்ன பலன்?

 172. திருச்சிக் காரன் on February 18, 2010 at 6:41 pm

  ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்துவம் உண்டு.

  ராம என்பதை தெலுகு பேசுவோர் ராமுலு, ராமுடு , ராமையா என வைத்துக் கொள்கின்றனர்.

  தமிழர்கள் வெங்கட ராமன், கல்யாண ராமன், சீதா ராமன் என தமிழிலக்கிய வித்திப்படி அன் விகுதி போட்டு வைத்துக் கொள்கின்றனர். ராம் என்று வைத்தாலும் தவறில்லை. ராமன் என்று வைப்பதுவும் தவறில்லை.

  இந்து மதம் மொழிகளைக் கடந்தது. அதை மொழி வட்டத்துக்குள் அடைக்க முடியாது.

 173. திருச்சிக் காரன் on February 18, 2010 at 6:48 pm

  தமிழிலே இருப்பது உயிரெழுத்து அ, ஆ, இ. ஈ, உ , வூ …..

  கசடதபற ,
  ங ஞ ன ந ம ண.
  ய, ர ள வ ழ ல
  தான் இது இல்லாமல். ஆயுத எழுத்து. அவ்வளவுதான்.

 174. கந்தர்வன் on February 18, 2010 at 7:23 pm

  //
  நீங்கள் படித்த காக்கா பூனை கதை மட்டுமே உண்மை என நம்பி இங்கு பேசுகிறீர்கள்
  //

  rofl

 175. Sarang on February 18, 2010 at 8:39 pm

  நண்பரே

  //
  அவசரம் வேண்டாம் – – ராமரையும் சேர்த்துதான் அர்த்தம் சொன்னேன் கட்-பேஸ்ட் பிரச்சினையே அது –
  இப்போது அர்த்தமும் சொல்லிவிடுகிறேன்

  திரு. சாரங் அவர்களே, இப்படியாக எல்லாவற்றையும் செய்து விட்டு கடைசியில் கட் அண்ட் பேஸ்ட் பண்ணும்போது விட்டு விட்டது என்றால் எப்படி. கட் அன்ட் பேஸ்ட் பண்ணும் போது அது எப்படி ஸ்கந்தன் மட்டும் சரியாக கண்ணில் கிடைத்தான்? உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.
  //

  சுத்தம் – அர்த்தம் இவ்வளவு விரிவாக சொல்லயுல்லேனே – நீங்கள் வஷக்கம் போல யோசிக்க வேண்டாமோ? நாம் ராமனையும் சேர்த்து சொன்னேன் – இவன் என்னவோ கண்ணன் தண்டனை என்கிறான், சூதாட்டம் என்கிறார் ராமனை பற்றி தடித்த வார்த்தை கூறுகிறானே என்று

  இப்படி எல்லாம் சந்தேகப் பட்டால் ஒன்றும் செய்ய முடியாது – அது நான் நான் முன்னமே சொன்னேன் – நீங்கள் எல்லாவற்றையும் மஞ்சளாக பார்கிறீர்கள் என்று – இப்படி சந்தேஹப்படுவதே மகா பாவம் என்று தெரிந்து கொள்ளுங்கள் – முதலில் காட்டுமிராண்டி, அப்புறம் ஜிஹாதி, வெறியன் – இப்போது புளுகன் – தயவு செய்து நிறுத்துங்கள் – இது கொஞ்சம் அநாகரீகமாக செல்கின்றது

  கட் பேஸ்ட் பிரச்சனையை என்றால் நான் ராமனை விட்டு விட்டு சொல்லவேண்டும் என்று வருந்தி, ஸ்கந்தனை மட்டும் சொல்லவேண்டும் என்று காழ்புணர்வு கொண்டு முன்னவே மனதில் இதை அலசி செய்ததல்ல என்று பொருள் – மேலும் நீங்கள் கூறியதில் முதல் வரியை மட்டும் கட் பேஸ்ட் செய்தேன் அதற்க்கபுரம் தான் நீங்கள் ராமன் என்றும் சிவன் பிற கடவுள் என்றெல்லாம் எதோ எழுதினீர்கள்

  அது தான் அடுத்த பதிலில் எழுதி இருந்தேனே – ராமனை அர்ஜுனனனுக்கு ஒரு படி கீழாக சொல்கிறான் என்றும் சொன்னேனே அதை படித்தாவது யோசிக்க வேண்டாமா – இப்படி நாங்கள் எல்லாம் த்வேஷக்காரர்கள் என்று த்வேசத்துடன் சொல்லி என்ன சாதிக்க போகிறீர்களோ தெரியவில்லை

  அர்த்தத்தில் உங்கள் மனம் லயிக்காமல் இப்படி எதொதேதோ விஷயத்தில் லயிக்கிறதே – அதாவது எந்த சாக்கை கொண்டாவது இவனை ட்வேஷக்காரன் என்று பட்டம் கட்ட வேண்டும் – நீங்கள் முயல வேண்டாம் – எவ்வளவோ கீழானவன் நான் த்வேஷக்காரன், காட்டுமிராண்டி என்று நானே ஏற்றுக்கொள்கிறேன் – வேண்டும் என்றால் இனி இடும் பின்னூட்டங்களில் என்னுடைய signature காட்டுமிராண்டி என்று மாற்றி கொள்ளட்டுமா

 176. Sarang on February 18, 2010 at 9:26 pm

  நண்பரே

  நீங்கள் இங்கு சொல்வது எதற்கும் எதற்கும் எல்லாமுமோ முடிச்சு போடுவது போல உள்ளது

  அரக்கர்கள் விஸ்வரூபத்தில் இல்லை என்றால் அவர்கள் தனியாக இருக்க வேண்டும் எப்படி ஆபிராமிய மதத்தில் கர்த்தரும் சாத்தானும் வேற வேறோ அப்படி – நீங்கள்i இப்போது இங்கே ஆபிராமிய மதம் அல்லவே பேசுகிறீர்கள்

  //
  நீங்கள் சொல்வது புது வாதமாக உள்ளதே – அப்போ முப்பத்முகோடி தேவர் மட்டுமே விஸ்வரூபத்தில் மற்றவர் எல்லாம் அந்தரத்திலா – அந்த அந்தரம் எங்குள்ளது? ////

  // ருத்ரர்களும், ஆதித்யரகளும், மருத்துக்களும் பார் //

  //11.6 பச்யாதித்யான் வசூன், ருத்ர- நச்விநௌ மருத ஸ்ததா
  பஹூன்- யத்ருஷ்ட- பூர்வாணி பச்யாச்ச்சர்யாணி : பாரத//

  இதை சொன்னது நான் இல்லை, கிருஷ்ணர்.

  இது கிருஷ்ணர் சொன்னது. இது விஸ்வ சொரூபம் – ரூபம். ஆதித்யர்கள், ருத்ரர்களின் பார் எனக் கூறியது ரூபத்தை தானே? கூறவில்லையா? அந்த விசவ ரூபம் சாஸ்வதமானது தானே.

  இந்த ரூபத்திலே பெனாசிர் புட்டோவும், ஜாஜ் வாஷிங்டனும் தங்கள் ரூபமாகவே சாஸ்வதமாக இருப்பார்களா? ஆத்மா பரமாத்விலே சேரும் என்பது வேறு விடயம்.

  விசவ ரூபத்திலே ரூபமாக சாஸ்வதமான ரூபமாக இருப்பது எது என்பதுதானே விடயம்?
  //

  சரி இதை கஷ்டப்பட்டு விளக்காமல்

  கீதா ஸ்லோகம் 11-26 பாருங்கள்

  அதில் துர்யோனாதிகள் உன்வைக்குள் விழுகின்றனர் என்றும் நேரடியாக உள்ளது

  அப்புறம் நீங்கள் முடிச்சுபோடும் விஷயத்திற்கு வருவோம் – அவர் ருத்ரர், அஸ்வினி இப்படி எல்லோரும் என்னுள் உள்ளார்கள் பார் ஆதாலால் நானே விஸ்வம் என்று சொல்லுகிறான் (பாஷ்யமும் இப்படி தான் வருகிறது )- இதை எடுத்துக்கொண்டு நீங்கள் இவர்கள் மட்டுமே ரூபத்துடன் இருப்பார்கள் என்று சொன்னால் எப்படி – மேலும் கண்ணன் ஒன்னும் இவர்கள் எல்லோரும் இதே ரூபத்தில் சாஸ்வதமாக உள்ளார்கள் என்று பார் என்றும் சொல்லவில்லை – அப்படி சொன்னால் அவன் முன்னே சொன்னதற்கு மாறாக இருக்கும்

  அந்த வந்த இமே தேக – ரூபங்கள் அழியக்கூடியவை – இதை நியாய சித்தாந்த காரனே ஒத்துக்கொண்டு விட்டான் – நீங்கள் இல்லை

  மேலும் நீங்கள் சொல்வதை பார்த்தல் விஸ்வரூபத்தில் உள்ள அனைத்துமே அழியக்கூடியவையே என்று பொருள் கொள்ள நேரிடும்

  மேலும் அடுத்த ஸ்லோகத்தில் – அசைகின்ற அசையாத பொருள் அடங்கிய வற்றை பார் என்கிறான் – அசையாத பொருளாக என்ன இருக்கும் (மரம், களிமண், கரி, குண்டூசி, அரிவாள், வேட்டி, துண்டு, இட்லி, சக்கரை, சாம்பார் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் – கண்ணன் பொதுவாக என்ன சொல்லவருகிறார் என்று பாராமல் நீங்கள் சொல்வது போல் அர்த்தம் கொண்டால் இப்படி தான் ஆகும் – அவன் சொல்லவருவது – அப்பா எல்லாமே என்னுள் அடக்கம் அந்த எல்லாமே என்பது எனது ஒரு சிறிய பகுதியே ஆகும்

  மேலும் கண்ணன் நீ எதெல்லாம் காண வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை காணாலாம் என்று சொல்கிறான் – அதற்க்கு பின்னே ஸ்லோகத்தில் அர்ஜுனன் – நீ சங்கு சக்ர கத தாரியாக உள்ளாய் பார்கிறேன் என்கிறான், மேலும் இந்த விஸ்வரூபம் பயங்கராம இருக்கு- சீக்கிரம் பழைய நிலைக்கு வா என்கிறான் – இதன் படி – அர்ஜுனன் சொன்னபடி நான் சங்கு சக்ர கத தாரியாக பார்கிறேன் – நீங்கள் என்ன வேண்டுமானாலும் பாருங்கள்.

  நான் மோனிக்கா, ஒபாமா என்று கூறியது அவர்கள் அப்படியே ரூபத்துடன் என்று நீங்கள் புரிந்துகொண்ட பதில் எழுதினால் நான் பொறுப்பில்லை – அந்த சந்தேகம் வேண்டாம் என்று மோனிக்கா என்ற ஆத்மா என்றும் எழுதினேன் பார்கவில்லையா – கண்ணன் விஸ்வம் என்றால் அந்த விஸ்வத்துள் எல்லோருமே ஜீவாத்மாக்கள் தான் – ஜீவாத்மாக்களுக்கு நிலையான ரூபம் கிடவே கிடையாது (கண்ணனும் அஸ்வினியின் ஆதியில் எப்படி ரூபம் இருந்ததோ அப்படி அந்த ரூபத்தை இப்போ பார் என்றா சொல்கிறான்) –

  நீங்கள் செய்வது தான் குறுக்கல் வாதமாக உள்ளது – கண்ணன் சொன்ன ஒன்றை திருத்தி கூறுவது சரியல்ல

  //
  விசவ ரூபத்திலே ரூபமாக சாஸ்வதமான ரூபமாக இருப்பது எது என்பதுதானே விடயம்?
  //

  இதை மேலேயே மருத்தாயிர்று – மீண்டும் ஒரு முறை அந்த கீதை படியுங்கள் – அவர் சொல்வது

  ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள், அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள் என்று பலரையும் எனது ரூபத்தில் பார்

  நீங்கள் கவனிக்க வேண்டியது – எனது ரூபத்தில் என்று கண்ணன் சொல்வதையும், பலரையும் (எல்லோரையும்) என்பதையும்

  சரி நீங்கள் சொல்வது போல இந்த ரூபத்தை பார் என்று வைத்துக்கொண்டால் அடுத்த ஸ்லோகத்தில் இதற்க்கு அபாவம் வரும் எப்படி

  அடுத்த ஸ்லோகம்

  இஹ ஏகஸ்தம் ஜகத் குருதஸ்தம் பஷ்யாத்ய சராசரம்
  மாமா தேஹே குடாகேஷ யத் ச அன்யத் திருஷ்டும் இச்சஸி

  உலகும் முழுவதும் அசையும் மற்ற அசையாதவை குவியலாக எனது உடலில் ஒரே பகுதுயில் உள்ளதை பார்

  நீங்கள் கூறுவது போல் பார்த்தல் இதில் இரண்டு தப்பர்த்தம் வரும்
  ஒன்று அவர் முன்னே சொன்ன அஸ்வினி … எல்லோரும் இப்படி குவியலாக உள்ளனர் என்றும்
  அசேதன பொருள்கள் முன்னு சொன்ன மாதிரி எப்படி அஸ்வினி தனது ரூபத்துடன் உளதோ அசெடனமும் ரூபத்துடன் உள்ளது
  என்று ஆகிவிடும்

  ஆதால மீண்டும் யாசிக்கிறேன் – சரியாக புரிந்து கொள்ளுங்கள் – ஆசார்யாராய் அணுகுங்கள்

  //
  அரக்கர்களின் ரூபங்களையும் மருத்துக்களைப் போல , ஆதித் யர்களைப் போல விசவ ரூபத்திலே வைத்துக் கொள்ள ப் பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் , அந்தக் கோரிக்கையை நீங்கள் கண்ணனிடம் தான் வைக்க வேண்டும். என்னிடம் கேட்டு என்ன பலன்?
  //

  இதென்ன அப்போ அரக்கர்கள் எங்கு உளர் – நான் எங்கு உள்ளேன் – நானும் அரக்கர்களும் அவர் உடலில் தான் உள்ளோம் சுவாமி – அப்படி இல்லை என்றால் விஸ்வம் என்பதற்கே அபாவம் வரும் –

  அப்புறம் மறுபடியும் முக்கியமாக அரக்கர்கள் விஸ்வரூபத்தில் இல்லை என்றால் அவர்கள் தனியாக இருக்க வேண்டும் எப்படி ஆபிராமிய மதத்தில் கர்த்தரும் சாத்தானும் வேற வேறோ அப்படி – நீங்கள்i இப்போது இங்கே ஆபிராமிய மதம் அல்லவே பேசுகிறீர்கள்

 177. Sarang on February 18, 2010 at 9:29 pm

  //
  தமிழிலே இருப்பது உயிரெழுத்து அ, ஆ, இ. ஈ, உ , வூ …..

  கசடதபற ,
  ங ஞ ன ந ம ண.
  ய, ர ள வ ழ ல
  தான் இது இல்லாமல். ஆயுத எழுத்து. அவ்வளவுதான்.
  //

  ஆம் பரமாத்மா இல்லாமல் ஜீவாத்மா இல்லை (அகர முதல எழுத்து எது)
  ஜீவாத்மா இல்லாமலும் பரமாத்மா இல்லை

 178. Sarang on February 18, 2010 at 10:14 pm

  //
  //ருத்ரர்களும், ஆதித்யரகளும், மருத்துக்களும் விசவ ஈச்வர சொரூபத்தின் சொரூபமாக எப்போதும் உள்ளனர், என்பதாக கொள்ளலாம் அல்லவா? அந்த மருத்துக்களை, ஆதித்யர்களை, ருத்திரனை, சங்கரனை பார்த்தால் முகம் திருப்புவது ஈஸ்வரனுக்கு செய்யும் அவமானம் ஆகாதா?//

  இந்தக் கேள்விக்கு என்ன விடை?

  இதற்கு விடை சொல்வதற்கு பதிலாக ஒரு கேள்வியை போடுகிறீர்கள். அரக்கர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று.
  //

  இந்த கேள்விக்கு பல பல முறை விடை சொல்லி ஆயிற்று – நான் முகம் திருப்புவது இல்லை – புறம் தொழாதோர் அனைவரும் திருப்புவது இல்லை –

  நான் சரணாகதி பற்றி பேசினால் – நீங்கள் முகம் திருப்புவதை பற்றி பேசுகிறீர்கள் – நான் இந்த அரக்கர், மோனிக்கா எல்லோரையும் சொன்னது – சரணாகதி என்ற தாத்பர்யம் கொண்டே – மீண்டும் நீங்கள் உங்கள் பழைய முகம் திருப்பல், ஆபிராமியம், வெறுப்பு இப்படி போய் விட்டீர்கள் – மறுபடியும் சக்கை தான் உங்கள் கையில் சாறு கீழே ஓடுகிறது

  ஆதித்யருள் ஒருவரான நமக்கு வெளிச்சமும் இருட்டும் தரும் சூரியனை காணாமல் இருக்க முடியுமா – மாத்யாணிகம் செய்கிறோம் அதில் உபஸ்தானம் வருகிறது -அதில் என்ன வருகிறது – நான் மாத்யாணிகம் செய்பவன் அதனால் என்ன செய்வேன் என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம்

  இல்லை இல்லை நீ த்வேஷக்காரன் – நீ அதற்காக உபச்தானத்தையே கட் பண்ணிடுவே என்று கூட நீங்கள் சொல்ல தயங்க மாட்டீற்கள்

  சாயம் சந்த்யாவிலும் வருணன் தானே வருகிறது – சாந்தி மந்த்ரம் சொல்கிறோம் சம்னோ மித்ர சம் வருண சம்னோ பவத் வர்யமா சம்னோ இந்த்ரோ பிருகஸ்பதி: சம்னோ விஷ்ணு ருருக்ரமா
  நமோ வருண நமஸ்தே வாயோ இப்படி தானே போகிறது

  இதை எதையும் நாங்கள் ஸ்கிப் செய்யலா

  நீங்கள் சரணாகதியையும் மரியாதையும், வந்தனத்தையும் குழப்புகிறீர்கள்

 179. armchaircritic on February 18, 2010 at 11:10 pm

  மொத்தத்தில் திருச்சிக்காரன் ஆபிராகாமியர்களுக்கு சமரசம் உபதேசிப்பது = சாரங், கந்தர்வன் திருச்சிக்காரனுக்கு புறம் தொழா conceptஐ பற்றி விளக்கம் அளிப்பது = பக்கம் வளரத்தான் உபயோகப்படுகிறது.
  நீ கும்பிட்டா உனக்கு நான் கும்பிட்டா எனக்கு
  யார கும்பிட்டா என்ன
  கும்பிட்டா சரி!

 180. திருச்சிக் காரன் on February 19, 2010 at 2:04 am

  //அப்புறம் நீங்கள் முடிச்சுபோடும் விஷயத்திற்கு வருவோம் – அவர் ருத்ரர், அஸ்வினி இப்படி எல்லோரும் என்னுள் உள்ளார்கள் பார் ஆதாலால் நானே விஸ்வம் என்று சொல்லுகிறான் (பாஷ்யமும் இப்படி தான் வருகிறது )- இதை எடுத்துக்கொண்டு நீங்கள் இவர்கள் மட்டுமே ரூபத்துடன் இருப்பார்கள் என்று சொன்னால் எப்படி – மேலும் கண்ணன் ஒன்னும் இவர்கள் எல்லோரும் இதே ரூபத்தில் சாஸ்வதமாக உள்ளார்கள் என்று பார் என்றும் சொல்லவில்லை – அப்படி சொன்னால் அவன் முன்னே சொன்னதற்கு மாறாக இருக்கும்//

  விஸ்வரூபம் தரிசனம் சாசவதம் இல்லை என்று நீங்கள் கருதினால் அதை சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. விஸ்வ ரூப தரிசனம் சாஸ்வதம் என்று கண்ணன் எங்கும் சொல்லவில்லை.

  அப்படி விசவ ரூபா தரிசனமே சாஸ்வதம் இல்லை என்றால் சிவன் வடிவம் மாத்திரம் சாஸ்வதமா? நாராயண உருவம் சாஸ்வதமா?

  சிவன் வடிவம் சாஸ்வதம், நாராயண உருவம் சாஸ்வதம் என்று கீதையிலே எந்த இடத்திலாவது சொல்லப் பட்டு இருக்கிறதா?

  கிரீடம் கதை சக்கரம் இவற்றுடன் அதே உருவமுடையவனாக காட்சி தா என, அர்ஜுனன் கேட்கிறான். ஆனால்

  இத்யர்ஜுனம் வாசுதேவஸ் – ததோக்த்வா
  ஸ்வகம் ரூபம் தர்சயாமாஸ பூய:
  ஆச்வாசயா மாச ச பீதமேனம் பூத்வா புன:
  சௌம்யா -வபுர் – மஹாத்மா

  அர்ஜுன உவாச,

  திரிஸ்ட் வேதம் மானுஷம் ரூபம் தவ சௌமியம் ஜனார்த்தன I

  கிரீடம் கதை சக்கர நான்கு கர உருவம் என்று ஒன்று இருப்பதாக எண்ணி அர்ஜுனன் கேட்டாலும், கிருஷ்ணர் அவருடைய வடிவமாகிய மனித வடிவத்துக்கு தான் வருகிறார்.

  அதாவது அப்படிப் பட்ட கிரீடம் கதை சக்கர நான்கு கர ரூபம் இருப்பதாக, கண்ணன் அந்த வடிவம் உருவம் காட்டியதாக இல்லை, நமக்கு நமக்கு தெரிந்த அளவில் இல்லை.

  மேலும் பகவத் கீதையில் “சொர்க்கத்தை அடைந்து புண்ணியம் தீரும் மாட்டும் அங்கே இருப்பார்கள்” என்பது போன்ற வாக்கியங்கள் இருக்கிறதே தவிர, வைகுண்டத்தை அடைவார்கள் என்பது போன்ற என்ற வாக்கியமும் இருப்பதாக நமக்கு தெரிந்த அளவில் இல்லை (அப்படி இருந்தால் காட்டுங்கள், தெரிந்து கொள்வோம். )

  அதே போல கைலாயம் பற்றியும் குறிப்பிடவில்லை. சந்திர சேகர வடிவமும் காட்டவில்லை.

  எனவே விஸ்வ ரூப நிலையே சாவதம் இல்லை எனும் போது, அப்புறம் சிவன், நாராயணன், பிரம்மா இவர்களின் ரூப நிலை சாஸ்வதம் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

  கீதையிலே அப்படிக் குறிப்புகள் இல்லாத பட்சத்திலே, உங்கள் வாதப் படி சிவன், நாராயணர் ஆகியவற்றின் ரூபங்களை வணங்குவதும், எம்.ஜி.ஆர், பெனாசிர், குஸ்பு ஆகியோரின் ரூபங்களை வணங்குவதும் ஒன்றாகிறது- உங்கள் வாதப் படி !

  அப்படி சாஸ்வதம் இல்லாத உருவங்களை வணங்கும் போது ஒரு உருவத்தை மட்டும் வணங்கி விட்டு, பிற ரூபங்களை கூடாது எனக் கூற வேண்டியது ஏன்? அதனால் அமரர் கல்கி சுட்டிக் காட்டியது போல பூசல்களை, அடி தடை சண்டைகளை கொண்டு வரும் கொள்கைகள் ஏன்?

 181. திருச்சிக் காரன் on February 19, 2010 at 2:08 am

  சாறு எது சக்கை எது என்பதெல்லாம் இங்கே எழுதப் பட்டுள்ள கருத்துக்களைப் படிக்கும் சுதந்திரமான சிந்தனையாளருக்கு தெரியும்.

 182. திருச்சிக் காரன் on February 19, 2010 at 2:29 am

  //இந்த கேள்விக்கு பல பல முறை விடை சொல்லி ஆயிற்று – நான் முகம் திருப்புவது இல்லை – புறம் தொழாதோர் அனைவரும் திருப்புவது இல்லை -//

  ஐயா, இதெல்லாம் எனக்கு என்ன தெரியும். சிறு வயதிலே நண்பர்கள் வீட்டுக்கு விளையாட செல்லும்போது, அவர்கள வீட்டிலே பேசுவதைக் கேட்டுதான் சொல்கிறேன். இப்போதும் சில நண்பர்கள் அதற்க்கு நியாயம் கற்பித்து எழுதுவதைப் பார்க்கும் போது கொள்கைப் பிடிப்பு தெரிகிறது.

  // இன்னொரு தெய்வ‌த்தின் கோவிலின் கோபுர‌ம் கூட‌ க‌ண்ணில் ப‌ட‌க் கூடாது – என்ற‌ அளவுக்கு நிலையை உருவாக்கிய‌து இந்த‌ “ம‌ற‌ந்தும்‌ புற‌ம் தொழாமை” க‌ருத்து தானெ?
  //

  இது தான் உங்களுக்கு விஷயம் சரியாக புரியவில்லை என்பதை தெளிவாக்குகிறது – இப்படி நினைப்பவர் யாரும் இன்னொரு கோபுரத்தை இடிக்க வில்லை – இப்படி சொன்னது ( பேரா) ஆசை கூடாது, ஸ்திரமான மனது வேண்டும் என்பதற்காகவே –

  தஞ்சை கோபுரத்தின் அழகினை பார்த்து – அடடா எவ்வளவு அழகாக உள்ளது – நம் கோவிந்தனுக்கு இப்படி ஒன்று இல்லையே என்று யோசிப்போமே அனால் அந்த எண்ணம் கோவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் பேராசை என்பதால்) //
  Courtesy: Mr. Sarang

 183. கந்தர்வன் on February 19, 2010 at 3:52 am

  நண்பர் திருச்சிக்காரரே:

  //ருத்ரர்களும், ஆதித்யரகளும், மருத்துக்களும் விசவ ஈச்வர சொரூபத்தின் சொரூபமாக எப்போதும் உள்ளனர், என்பதாக கொள்ளலாம் அல்லவா? அந்த மருத்துக்களை, ஆதித்யர்களை, ருத்திரனை, சங்கரனை பார்த்தால் முகம் திருப்புவது ஈஸ்வரனுக்கு செய்யும் அவமானம் ஆகாதா?//

  (1) மற்ற தேவதைகள் அங்கங்கள். கண்ணனாக அவதரித்த பகவான் தான் அங்கி (அங்கங்களை உடையவன்). ‘ஸ ஆத்மா அங்கன்யன்ய தேவதா’ என்று வேதம் கூறுகிறது. சாயண-வித்ராயன்யர் ரிக் வேத பாஷ்யத்தில்: “விஷ்ணோஹொ சர்வா தேவதா. அந்ய தேவதா வயா-சாகா” என்று உரைத்துள்ளார்.

  (2) வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் முதலிய தேவதைகள் சாசுவதம் அல்லாதவர்கள், யஞ்யத்தால் போஷிக்கப்படுபவர்கள் என்று சங்கரரும் பிரும்ம சூத்திர பாஷ்யத்தில் கூறியுள்ளார். வாசித்துப் பாருங்கள். கீதா பாஷ்யத்தில் சங்கரர், “பிரும்மா முதலான, புல் ஈறாக பூதங்கள் யாவும் அழிவுள்ளவை; ஆனால் பரமபதமும் பரம புருஷனும் அழிவற்றவர்கள்” என்று கூறியுள்ளார். (எட்டாம் அத்தியாயம், இருபதாம் சுலோகம்)

  சாசுவதம் அல்லாதவர்கள், யஞங்க்களால் போஷிக்கப்படுபவர்கள், – இவை எல்லாம் பரம்பொருளுக்கு ஏற்ற குணங்கள் அன்று. ஆகையால், “விசுவ ரூபத்தின் சாசுவதமான ருத்ர-ஆதித்ய-மருத்துகள்” என்று கூறுவது பிழையாகும். வேதத்திலும், பாஷ்ய நூல்களிலும் பிற தேவதைகளின் (பரமாத்மாவை விட) தாழ்மையைக் காட்டாமல் எழுத வேண்டும் என்று இன்றுவரை உறுதியாக இருந்தேன். நீங்கள் அதைச் செய்ய வைத்து விட்டீர்கள்.

 184. கந்தர்வன் on February 19, 2010 at 4:49 am

  நண்பர்களே,

  //
  வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் முதலிய தேவதைகள் சாசுவதம் அல்லாதவர்கள், யஞ்யத்தால் போஷிக்கப்படுபவர்கள் என்று சங்கரரும் பிரும்ம சூத்திர பாஷ்யத்தில் கூறியுள்ளார். வாசித்துப் பாருங்கள். கீதா பாஷ்யத்தில் சங்கரர், “பிரும்மா முதலான, புல் ஈறாக பூதங்கள் யாவும் அழிவுள்ளவை; ஆனால் பரமபதமும் பரம புருஷனும் அழிவற்றவர்கள்” என்று கூறியுள்ளார். (எட்டாம் அத்தியாயம், இருபதாம் சுலோகம்)
  //

  இதற்கான சமஸ்கிருத மூலம்:

  பிரம்ம சூத்திர சங்கர பாஷ்யம் (I.iii.28): “वसवो रुद्रा आदित्या विश्वेदेवा मरुत इत्येते-अर्था अनित्य एव… तथा देवादिव्यक्तिप्रभवाभ्युपगामो-अपि…”

  பிரம்ம சூத்திர சங்கர பாஷ்யம் (I.iii.31): “वसवो रुद्रा आदित्या मरुतः साध्याश्च पञ्च देवगणाः क्रमेण तत्तादमृतमुपजीवन्तीति इत्युपदिश्य…”

  பகவத் கீதை சங்கர பாஷ்யம் (8.20): सनातनः चिरन्तनः यः सः भावः सर्वेषु भूतेषु ब्रह्मादिषु नश्यत्सु न विनश्यति। ।।8.20।।

 185. கந்தர்வன் on February 19, 2010 at 4:53 am

  //
  பிரம்ம சூத்திர சங்கர பாஷ்யம் (I.iii.31): “वसवो रुद्रा आदित्या मरुतः साध्याश्च पञ्च देवगणाः क्रमेण तत्तादमृतमुपजीवन्तीति इत्युपदिश्य…”
  //

  ஒரு எழுத்துப்பிழை: “तत्तदमृतमुपजीवन्तीति ” என்பதற்கு तत्तादमृतमुपजीवन्तीति என்று தட்டி விட்டேன்.

 186. திருச்சிக் காரன் on February 19, 2010 at 8:08 am

  நான் சமரசம் உபதேசிப்பது ஆபிரகாமியக் காரருக்கு மட்டும் அல்ல. இந்து மதத்தில் உள்ளவர்களுக்கும் தான்- தெளிவாக சொன்னால் இந்து மதத்தில் உள்ள சமரச மறுப்பு சகோதரர்களுக்கும் தான்.

  இந்த விடயத்தில் ஆபிரகாமிய காரருக்கு ஒரு கட்டத்தில் அவர்கள் மதம் சமரசப் போக்கு இல்லாதது என்கிற உறுத்தல் அவர்களுக்கே வந்து விடும்.

  ஏனெனில் பெரும்பாலான இந்துக்கள் சமரசப் போக்கு உடையவர்கள், பிற தெய்வங்களை நிந்திக்காதவர்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

  எனவே சமரசப் போக்கு அமைதிப் போக்கு, நாகரீகத்தின் வழி என்பதை அவர்கள் மனதளவில் உணர்ந்து விடுகின்றனர்.

  சர்ச்க்கு செல்பவன், சர்ச்சை உடைக்க மாட்டான். அதே போல ஒரு கிறிஸ்தவன் சபரி மலைக்கு சென்றால், அதற்க்கு பிறகு ஐயப்பன் கோவில் வேறு எங்காவது பார்த்தாலும் அதற்க்கு எதிராக செயல் பட மாட்டான். சமரசப் போக்கு என்பது நாம் இன்னொருவரைப் பார்க்கும் போது சிரிப்பது, அவரை உண்மையாக மதிப்பது, நேசிப்பது போன்றததாகும்.

  (Edited and published.)

 187. கந்தர்வன் on February 19, 2010 at 8:16 am

  //
  மேலும் பகவத் கீதையில் “சொர்க்கத்தை அடைந்து புண்ணியம் தீரும் மாட்டும் அங்கே இருப்பார்கள்” என்பது போன்ற வாக்கியங்கள் இருக்கிறதே தவிர, வைகுண்டத்தை அடைவார்கள் என்பது போன்ற என்ற வாக்கியமும் இருப்பதாக நமக்கு தெரிந்த அளவில் இல்லை (அப்படி இருந்தால் காட்டுங்கள், தெரிந்து கொள்வோம். )
  //

  வைகுண்டம் (விஷ்ணுவினுடைய பரம பதம்) வேறு, இந்திராதி தேவதைகள் வாழும் சுவர்க்க லோகம் வேறு. சாஸ்திரத்தில் அரிச்சுவடி படித்தவர்க்கும் இது தெரியும். வைகுண்டத்தைப் (பரமபதத்தைப்) பற்றி கீதையில் மறைமுகமாக உள்ளது. சங்கரர் வியாக்கியானத்தில் பல இடங்களில் இதை வெளிப்படையாக “விஷ்ணுவினுடைய பரம பதம்” என்று காட்டியுள்ளார். கீதையை மாத்திரம் வைத்து சாஸ்திரத்தை நிர்ணயம் பண்ணுவதில்லை. கெளஷிதகி பிராம்மணம் எனும் வேத பகுதியில், “விரஜா நதியைக் கடந்து, வைகுண்டம் சென்று, முக்தி அடைந்த ஜீவன் சாஸ்வதமான பரமாத்மா ஆதிசேஷ படுக்கையில் அமர, அங்கு ஸ்ரீதேவி பரமாத்மாவின் பாதத்தின் அருகில் அமர, பரமாத்மாவின் திருக்கொலத்தைப் பார்க்கிறான் என்று தெளிவாக உள்ளது. இவ்வாக்கியங்களை சங்கரர் பிரும்ம சூத்திர பாஷ்யத்தில் எடுத்துள்ளார். இதற்கு அனு-வியாக்கியானம் பண்ணிய வாசஸ்பதி மிஷ்ராரும் எடுத்துள்ளார்.

  //
  அப்புறம் சிவன், நாராயணன், பிரம்மா இவர்களின் ரூப நிலை சாஸ்வதம் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?
  //

  (௧) நாராயண ரூபம் சாச்வதமே என்று சங்கரரும் பிரும்ம சூத்திரத்தில் (IV.iv.19) எழுதியுள்ளார். (௨) நாராயநோபநிஷத், மகோபநிஷத், நாராயண சூக்தம், விஷ்ணு சூக்தம், புருஷ சூக்தம் இவற்றிலிருந்து நாராயண ரூபம் சாஸ்வதம் என்று விளங்கும். (௩) இப்பொழுது காட்டியுள்ள கெளஷிதகி பிராம்மண வாக்கியத்தை வைத்தும் இவ்வுண்மை விளங்கும்.

  ஒரு நூலை மாத்திரம் வைத்துக் கொண்டு நிர்ணயம் பண்ண முடியாது. அனைத்து சாஸ்திர நூல்களை ஒரு சேர படித்து “ஆக மொத்தம் இது தான் உண்மை” என்று தெளிய வேண்டும்.

  பகவானுடைய விஷ்வ-ரூபம் ஆனது, லீலா விபூதி எனப்படும். இது விகாரத் தன்மை உடையது. மகா பிரளயத்தின் பொழுது இந்த லீலா விபூதியை அவ்வியக்த நிலைக்கு மாற்றிக் கொள்கிறான். அடுத்து வரும் பிரம்ம தேவனுடைய பதவியேற்புக்கு முன்பு, இந்த அவ்வியக்த நிலையை மீண்டும் ‘மகான்’, ‘அஹங்காரம்’, ‘பஞ்ச தன்மாத்திரம்’, ‘பஞ்ச பூதம்’, ‘கர்ம-ஞான இந்திரியங்கள்’, என்று விரித்துவிட்டு பண்சீகரணம் பண்ணுகிறான். அதன் விளைவாக ஒரு உடலை உண்டாக்கி, அதற்குள் அடுத்த பிரம்ம பதவிக்கு தகுதி உள்ள ஒரு ஜீவனைப் பொருத்தி, தனது நாபி கமலத்தில் இருந்து பிரம்ம தேவனைப் பிறப்பிக்கிறான். இது பரம சாஸ்திர பிரமாணம். ஆதி சங்கரர் முதலிய எல்லா ஆச்சாரியார்களும் ஏற்றுக்கொண்டுள்ளது. மகோபநிஷத்தில் இது போன்று உள்ளது. மகாபாரதத்திலும் உள்ளது. விஷ்ணு புராணத்திலும் உண்டு. எல்லாவற்றையும் வியாபித்து இருகையால் எல்லாம் அவனுடைய அங்கங்கள் ஆகின்றன.

  இது தவிர, நித்திய விபூதி என்று உள்ளது. இங்கு சுத்த சத்துவமான உடல்களுடன் முக்தி அடைந்த ஜீவர்கள் பகவானுடன் சேர்ந்து சுத்த சத்துவமான போகத்தை அனுபவிப்பர். இது தான் வைகுண்டம். வைகுண்டத்தையும் லீலா விபூதியான பிரபஞ்சத்தையும் பிரிக்கும் பௌன்டரி விரஜா நதி. இது தவிர, பிரபஞ்சத்தில் தன்னிச்சையாக அவதாரம் எடுக்கும் பகவானுடைய ரூபம் சுத்த சத்துவம்; அவையும் சாசுவதமானவையே.

 188. திருச்சிக் காரன் on February 19, 2010 at 8:30 am

  திரு. கந்தர்வன் அவர்களே,

  .கிரிஷ்ணரே, ‘என்னிடத்திலே பார்’ எனக் கட்டிய ருத்ரர்கள் அழிந்து விடுவார்கள் என பாஷ்ய காரர்கள் சொல்வதாக நீங்கள் சொல்கிறீர்களே,

  அப்படி விசவ ரூபா தரிசனமே சாஸ்வதம் இல்லை என்றால் சிவன் வடிவம் மாத்திரம் சாஸ்வதமா? நாராயண உருவம் சாஸ்வதமா?

  சிவன் வடிவம் சாஸ்வதம், நாராயண உருவம் சாஸ்வதம் என்று கீதையிலே எந்த இடத்திலாவது சொல்லப் பட்டு இருக்கிறதா?

  கிரீடம் கதை சக்கரம் இவற்றுடன் அதே உருவமுடையவனாக காட்சி தா என, அர்ஜுனன் கேட்கிறான். ஆனால்

  இத்யர்ஜுனம் வாசுதேவஸ் – ததோக்த்வா
  ஸ்வகம் ரூபம் தர்சயாமாஸ பூய:
  ஆச்வாசயா மாச ச பீதமேனம் பூத்வா புன:
  சௌம்யா -வபுர் – மஹாத்மா

  அர்ஜுன உவாச,

  திரிஸ்ட் வேதம் மானுஷம் ரூபம் தவ சௌமியம் ஜனார்த்தன I

  கிரீடம் கதை சக்கர நான்கு கர உருவம் என்று ஒன்று இருப்பதாக எண்ணி அர்ஜுனன் கேட்டாலும், கிருஷ்ணர் அவருடைய வடிவமாகிய மனித வடிவத்துக்கு தான் வருகிறார், என சொல்லப் பட்டுள்ளது

  அதாவது அப்படிப் பட்ட கிரீடம் கதை சக்கர நான்கு கர ரூபம் இருப்பதாக, கண்ணன் அந்த வடிவம் உருவம் காட்டியதாக கீதையில் இல்லை, நமக்கு தெரிந்த அளவில் இல்லை.

  மேலும் பகவத் கீதையில் “சொர்க்கத்தை அடைந்து புண்ணியம் தீரும் மட்டும் அங்கே இருப்பார்கள்” என்பது போன்ற வாக்கியங்கள் இருக்கிறதே தவிர, வைகுண்டத்தை அடைவார்கள் என்பது போன்ற என்ற வாக்கியமும் இருப்பதாக நமக்கு தெரிந்த அளவில் இல்லை (அப்படி இருந்தால் காட்டுங்கள், தெரிந்து கொள்வோம். )

  அதே போல கைலாயம் பற்றியும் குறிப்பிடவில்லை. சந்திர சேகர வடிவமும் காட்டவில்லை.

  எனவே விஸ்வ ரூப இதோ என்னில் பார் எனக் காட்டிய ரூபங்களே சாஸ்வதம் இல்லை எனும் போது, அப்புறம் சிவன், நாராயணன் இவர்களின் ரூப நிலை சாஸ்வதம் என்பதற்கு கீதையிலே ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

  நம்மைப் பொறுத்தவரையில் சிவன், நாராயணர், …. உள்ளிட்ட எந்த கடவுளின் வழிப்பட்டு முறையிலும் கலந்து கொள்வதிலும் , மனக் குவிப்பு பயிற்ச்சியில் மனப் பூர்வமாக ஈடு படுவதிலும் நமக்கு தயக்கம் இல்லை. ‘ஒரு சில கடவுள் மட்டுமே ஈஸ்வர அம்சம், மற்ற கடவுள்கள் ஈஸ்வர அம்சம் அல்ல , எனவே வணங்க வேண்டியதில்லை’, என்று நாம் குறிப்பிடுவது இல்லை.

  யார் சாஸ்வதம் என்பதை நேருக்கு நேர் பார்த்து தெரிந்து கொள்ளாத வரையில், வெறுமனே பாஷ்ய காரர் எழுதியதை வைத்துக் கொண்டு மத பேத நிலைக்கு வர வேண்டுமா?

  அமைதியாக எல்லாக் கடவுள்களையும் வணங்கி, நமக்கு விருப்பமான கடவுளிடம் விசேட பக்தி செலுத்தலாமே என்பதே எனது நிலைப்பாடு.

 189. திருச்சிக் காரன் on February 19, 2010 at 8:46 am

  சகோதரரே,

  //நீங்கள் படித்த காக்கா பூனை கதை மட்டுமே உண்மை என நம்பி இங்கு பேசுகிறீர்கள்//

  காக்கா, பூனை கதை முதல் பகத் கீதை, உப நிடதம் உட்பட எதையுமே நான் வெறுமனே “நம்புவது” இல்லை.

  ஒவ்வொரு கருத்தையும் படித்து அதை உண்மையின் உரை கல்லில் இட்டு எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, நன்மை இருக்கிறது என்பதை சோதித்து பார்த்தே ஏற்கிறோம்.

  இந்த //அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

  சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

  நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )//

  கருத்தை நான் பல பெரியாரிய தளங்களில் எழுதிய போது கூட, அவர்களால அந்தக் கருது எல்லோருக்கும் நன்மை தரக் கூடியது என்பதை மறுக்க இயலவில்லை.

  அது போலவே உப நிடதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் உணமையின் தொகுப்பாக உள்ளதால் அந்தக் கருத்துக்களுக்கு வலிமை, அது உண்மையின் வலிமை – உள்ளது.

  அதனால் தான் நான் இந்து மதம் பகுத்தறிவு மதம், பகுத்தறிவு அடிப்படையிலே சிந்தத்து இந்து மதத்தின் கருத்துக்கள் உணமையானவை என்பதை உறுதி செய்ய இயலும் என்றே நான் இதே தளத்திலே பல முறை எழுதி உள்ளேன். அப்படி உண்மை இல்லாமல் திணிக்கப் பட்ட ஓரிரு கருத்துக்கள் அதாகவே விலகி விடும்.

  ஏனெனில் உண்மை அல்லாத எதற்கும் இந்து மதத்தில் இடம் இல்லை. எனவே நம்முடைய பாதை சிந்தனைப் பாதையே.

  யாரோ சொல்வதை கை கூப்பி, வாய் பொத்தி , எதிர்கேள்வி கேட்காமல் அப்படி ஒத்துக் கொண்டு வந்து அதை இங்கே நிரூபிக்க பகீரத பிரயத்தனம் செய்வது யார்? நானா ?

 190. கந்தர்வன் on February 19, 2010 at 9:24 am

  //
  கிரீடம் கதை சக்கர நான்கு கர உருவம் என்று ஒன்று இருப்பதாக எண்ணி அர்ஜுனன் கேட்டாலும், கிருஷ்ணர் அவருடைய வடிவமாகிய மனித வடிவத்துக்கு தான் வருகிறார்.

  அதாவது அப்படிப் பட்ட கிரீடம் கதை சக்கர நான்கு கர ரூபம் இருப்பதாக, கண்ணன் அந்த வடிவம் உருவம் காட்டியதாக இல்லை, நமக்கு நமக்கு தெரிந்த அளவில் இல்லை.

  //
  மீண்டும் பாஷ்யங்களை வாசிக்காமல் நீங்களாக கூறுகிறீர்கள். சங்கரருடைய கீதா பாஷ்யத்தை எடுக்கிறேன். நீங்கள் எடுத்த சுலோகத்தின் முந்தைய சுலோகத்தைப் பார்ப்போம்:

  மூல சுலோகம்:

  मा ते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा रूपं घोरमीदृङ्ममेदम्।
  व्यपेतभीः प्रीतमनाः पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य।।11.49।।

  பொருள்: “என்னுடைய இந்த பயங்கரமான விசுவரூபத்தைப் பார்த்து நடுங்காதே. இனி பயத்தை விட்டு விட்டு உனக்குப் பிடித்த இந்த ரூபத்தைப் பார்”.

  சங்கர பாஷ்யம்:

  — मा ते व्यथा मा भूत् ते भयम्, मा च विमूढभावः विमूढचित्तता, दृष्ट्वा उपलभ्य रूपं घोरम् ईदृक् यथादर्शितं मम इदम्। व्यपेतभीः विगतभयः, प्रीतमनाश्च सन् पुनः भूयः त्वं तदेव चतुर्भुजं रूपं शङ्खचक्रगदाधरं तव इष्टं रूपम् इदं प्रपश्य।।संजय उवाच — ।।11.49।।

  இங்கு கண்ணன் “உனக்குப் பிடித்த சங்க-சக்ர கதை முதலியவற்றை ஏந்திய ரூபத்தைக் காட்டுகிறேன்” என்று கூறுவதாக சங்கரரும் பாஷ்யம் இட்டுள்ளார். நீங்கள் சொல்வதைப் போல அர்ஜுனன் கேட்டதற்கு கண்ணன் மறுத்து வேறு காட்சி தரவில்லை.

  இதற்கும் அடுத்த சுலோகத்தில் தான் கண்ணன் மானுடனைப் போன்ற ரூபத்தை எடுக்கிறான்.

 191. கந்தர்வன் on February 19, 2010 at 10:28 am

  //
  அப்படி விசவ ரூபா தரிசனமே சாஸ்வதம் இல்லை என்றால் சிவன் வடிவம் மாத்திரம் சாஸ்வதமா? நாராயண உருவம் சாஸ்வதமா?
  //

  யார் சாசுவதம் என்று இதை வைத்து முடிவு பண்ணுங்கள்:

  (௧) மகோபநிஷ்து சிருஷ்டியைப் பற்றி சொல்கிறது: “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்” என்றும், “ந பிரம்மா ந ஈசானஹ்”, என்று கூறிவிட்டு, “நட்சத்திரங்கள் இல்லை, ஈரேழு உலகமும் இல்லை”, என்றும் கூறிற்று.

  (௨) நாராயண உபநிஷத்: “நாராயணாத் பிரம்மா ஜாயதே, நாராயணாத் ருத்ரோ ஜாயதே” என்று கூறிற்று.

  (௩) தைத்திரீய ஆரண்யகம் (தைத்திரீய உபநிஷத்தின் சிக்ஷா வல்லி, ஆனந்த வல்லி, பிருகு வல்லி, இவற்றிற்கு ஒட்டி அடுத்து வரும்) நாராயண சூக்தம்: “நாராயணனே பர பிரம்மம்”, “நாராயணனே பரம பிரபு”, “பிரம்மன், சிவன், இந்திரன், – இவர்கள் உட்பட அனைத்துமாக இருப்பவன் நாராயணனே”.

  //
  எனக் கட்டிய ருத்ரர்கள் அழிந்து விடுவார்கள் என பாஷ்ய காரர்கள் சொல்வதாக நீங்கள் சொல்கிறீர்களே
  //

  பாஷ்யத்தில் அப்படியே உள்ளது. நேர்மை இருந்தால், “பாஷ்யகாரர்கள் கூறிய